நொறுக்ஸ் - வியாழன் - 1/22/2009
போன மாதம் இந்தியாவில் ஒரு நண்பரிடம் 'பூச்சாண்டியை'ப் பற்றி சொன்னேன். ஒரு ரெண்டு நாள் படிச்சிட்டு யாஹூவில் வந்து கேட்டார் - "பதிவெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. இது உன் வொய்ஃப் எழுதறதுதானே?". அடங்கொய்யா.... ஏன்யா நான் இதெல்லாம் எழுத மாட்டேனா என்றால், மறுபடி "எல்லாமே நல்லா இருக்கே. அதனால கேட்டேன்." என்றார். நல்ல புகழ் பெற்ற கவிஞரையே சந்தேகப்பட்ட இந்த சமூகம் என்னையும் இப்படி கேட்பதில் தவறு
ஒன்றுமில்லைதான்... அவ்வ்வ்...
*****
இந்த ஊருக்கு வந்த புதிதில், சஹானா யூட்யூபில் குச் குச் ஹோதா ஹை (இந்தி) பாடல்களை விரும்பி பார்ப்பார். அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் ஷாருக்கான். ஒரு தடவை வீட்டுக்கு வந்திருந்த நண்பரின் மனைவியிடம், "எங்கப்பா ஷாருக்கான் மாதிரியே இருக்காரு" அப்படின்னு சொல்லப்போக, அவங்க ரொம்ப டென்ஷனாயிட்டாங்க. "ஏங்க, ஷாருக்கான் யாருன்னு உங்க பொண்ணுகிட்டே தெளிவா காட்டினீங்களா? இல்லே வையாபுரி காமெடியை காட்டி இதுதான் ஷாருக்கான்னுட்டீங்களான்னு" ரொம்ப நேரம் கேட்டுட்டிருந்தாங்க. குழந்தை சொன்னா உண்மையாத்தான் இருக்கும்னு மக்களுக்கு யாராவது சொல்லுங்கப்பா!!!
*****
ஒரு நாள் மல்லாக்கப் படுத்துக்கிட்டு விட்டத்தை பாத்திட்டிருக்கும்போது இப்படி சொன்னேன் - "கடவுள், எல்லாருக்கும் விரலை வளர்த்துவிடாமே நல்லவேளை நகத்தை மட்டும் வளர்க்கறான்; தலையை பெரிதாக்காமே நல்லவேளை முடியை மட்டும் பெரிதாக்கறான்; பறக்க விட்டா இடிச்சிக்கிட்டு கீழே விழுந்துடுவாங்கன்னு பயந்துதான் மனிதனை பறக்க விடாமே நடக்க மட்டும் விட்டிருக்கான். காட் இஸ் க்ரேட்".
உடனே தங்ஸும், சஹானாவும் டைரியை எடுத்து - ஊருக்குப் போனா போக வேண்டிய இடங்கள் லிஸ்ட்லே - கீழ்த்திருப்பதியை அடிச்சிட்டு அதுக்குப்பதிலா கீழ்ப்பாக்கம்னு எழுதிட்டாங்க.
*****
இந்தியாலே இருந்து அமெரிக்க கம்பெனிகளுக்கு வேலை பாக்கற மக்கள் சாயங்காலம்/இரவுன்னு வேலை செய்யும்போது, அமெரிக்காலே இருக்கற நாங்க விடிகாலையில் எழுந்து வேலை பாக்கவேண்டியதாயிருக்கு. வழக்கமா 6.30 மணிக்கு
ஆரம்பிக்கிற வேலை, இந்த வாரம் 5 மணிக்கே ஆரம்பிச்சிடுச்சு. அதனால், கடந்த 2 நாளா நண்பர்களோட எந்த பதிவையும் படிக்க முடியல. சனிக்கிழமைதான் எல்லாத்தையும் படிச்சி பின்னூட்டம் போடணும்.
அதோட, அடிச்சி வெச்சிருக்கிற பெரிய பதிவுகள் எதையும் முடிக்க முடியாமே போனதாலும், வலைப்பூ ஈ ஓட்டக்கூடாதேயென்றும் இந்த ச்சின்னப் பதிவு... ஹிஹி...
*****
33 comments:
//கீழ்த்திருப்பதியை அடிச்சிட்டு அதுக்குப்பதிலா கீழ்ப்பாக்கம்னு எழுதிட்டாங்க.//
ROFTL!!!!!!!!!!!!!
//உடனே தங்ஸும், சஹானாவும் டைரியை எடுத்து - ஊருக்குப் போனா போக வேண்டிய இடங்கள் லிஸ்ட்லே - கீழ்த்திருப்பதியை அடிச்சிட்டு அதுக்குப்பதிலா கீழ்ப்பாக்கம்னு எழுதிட்டாங்க.
//
அடப்பாவமே...அவ்ளோ நாளா உங்கள சரியாத் தெரியாமயே இருந்தாங்களா?
:)
//"கடவுள், எல்லாருக்கும் விரலை வளர்த்துவிடாமே நல்லவேளை நகத்தை மட்டும் வளர்க்கறான்; தலையை பெரிதாக்காமே நல்லவேளை முடியை மட்டும் பெரிதாக்கறான்; பறக்க விட்டா இடிச்சிக்கிட்டு கீழே விழுந்துடுவாங்கன்னு பயந்துதான் மனிதனை பறக்க விடாமே நடக்க மட்டும் விட்டிருக்கான். காட் இஸ் க்ரேட்".
//
அண்ணே நம்பள மாதிரி அறிவாளிக்கெல்லாம் வாழ்றப்ப விட்டுட்டு செத்த பின்னாடி செல வப்பாய்ங்க :)))
ROFTL!!!!!!!!!!!!!
//ஒரு நாள் மல்லாக்கப் படுத்துக்கிட்டு விட்டத்தை பாத்திட்டிருக்கும்போது இப்படி சொன்னேன் - "கடவுள், எல்லாருக்கும் விரலை வளர்த்துவிடாமே நல்லவேளை நகத்தை மட்டும் வளர்க்கறான்; தலையை பெரிதாக்காமே நல்லவேளை முடியை மட்டும் பெரிதாக்கறான்; பறக்க விட்டா இடிச்சிக்கிட்டு கீழே விழுந்துடுவாங்கன்னு பயந்துதான் மனிதனை பறக்க விடாமே நடக்க மட்டும் விட்டிருக்கான். காட் இஸ் க்ரேட்".//
இதையெல்லாம் தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல எழுதி வெச்சிருங்க. பின்னாடி வர சந்ததிகள் இதை பார்த்து படிச்சு தெளிவா நடந்துப்பாங்க.(நன்றி:கவுண்டமணி)
உங்கள வேலைக்கு ஆள் போட்டுத்தான் கவனிக்கனும் போல.
தனியா சிந்திக்க(!?) ஆரம்பிச்சிட்டீங்களே. எதுக்கு இந்த வீன் விளையாட்டு?
:)) நல்ல காமெடி...
ஆனா ஷாருக் இப்ப இருக்கற ஷாருக்கா .. முன்னாள் ஷாருக்கான்னு கேட்டு தெரிஞ்சுகிட்டீங்களா?
நொறுக்ஸ் நல்லா சிரிக்க வைச்சிடுச்சி. ஆனா உங்க தங்க்ஸ் தான் பாவம். எப்படிதான் மேய்க்கறாங்களோ உங்கள??
//அடப்பாவமே...அவ்ளோ நாளா உங்கள சரியாத் தெரியாமயே இருந்தாங்களா?
:)
//
கஷ்ட்டப்பட்டு எழுதற மேட்டர இந்த அப்துல்லா வந்து பின்னூட்டத்துல நொறுக்கி விட்டுர்றாருயா.. துக்ளக் மகேஷ் இப்ப இங்கிலீஸ் படமே பார்க்குறது இல்ல தெரியுமா??
//இதையெல்லாம் தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல எழுதி வெச்சிருங்க. பின்னாடி வர சந்ததிகள் இதை பார்த்து படிச்சு தெளிவா நடந்துப்பாங்க.(நன்றி:கவுண்டமணி)//
ரிப்பீட்டு..
:))
//நல்ல புகழ் பெற்ற கவிஞரையே சந்தேகப்பட்ட இந்த சமூகம் என்னையும் இப்படி கேட்பதில் தவறு
ஒன்றுமில்லைதான்.//
இதெல்லாம் ஜீரணமே ஆகாது...
narsim said...
//கஷ்ட்டப்பட்டு எழுதற மேட்டர இந்த அப்துல்லா வந்து பின்னூட்டத்துல நொறுக்கி விட்டுர்றாருயா.. துக்ளக் மகேஷ் இப்ப இங்கிலீஸ் படமே பார்க்குறது இல்ல தெரியுமா??//
அ..அ... அவ்வளவு சுலபமா உட்ருவமா.... வருது... வருது.. இங்கிலிபீஸ் சினிமா வருது...
"மல்லாக்கப் படுத்து யோசிச்சு மத்தவங்களைப் படுத்துவோர் சங்க" தலைவர் ச்சின்னப்பையன் வாழ்க !!
நொறுக்கு நன்றாக இருந்தது !
//"ஏங்க, ஷாருக்கான் யாருன்னு உங்க பொண்ணுகிட்டே தெளிவா காட்டினீங்களா? இல்லே வையாபுரி காமெடியை காட்டி இதுதான் ஷாருக்கான்னுட்டீங்களான்னு" //
ஹா ஹா ஹா..:-))
செம்ம கலக்கல்
//"ஏங்க, ஷாருக்கான் யாருன்னு உங்க பொண்ணுகிட்டே தெளிவா காட்டினீங்களா? இல்லே வையாபுரி காமெடியை காட்டி இதுதான் ஷாருக்கான்னுட்டீங்களான்னு" //
சூப்பர்.. :-)
ஹலோ... என் கடைல உங்களை கவுரவிச்சு (!!) பதிவெல்லாம் போட்டிருக்கேன்... நீங்க இங்க என்னமோ நொறுக்கிக்கிட்டு இருக்கீங்களே... போங்க போய் படிங்க...
//கீழ்த்திருப்பதியை அடிச்சிட்டு அதுக்குப்பதிலா கீழ்ப்பாக்கம்னு எழுதிட்டாங்க.//
எல்லார் வீட்லயும் இப்படி தானா!
நம்ம அறிவை புரிஞ்சுக்கவே மாட்டாங்க
ரெம்ப நல்லா இருக்கு
/*வித்யா said...
நொறுக்ஸ் நல்லா சிரிக்க வைச்சிடுச்சி. ஆனா உங்க தங்க்ஸ் தான் பாவம். எப்படிதான் மேய்க்கறாங்களோ உங்கள??
*/
பதிவு உலகில் தான் அவரு பூச்சாண்டி, நேரிலே.. அதை எப்படி என வாயாலே சொல்ல
ரொம்ப நல்லா இருக்கு.
நன்றி நிலா பிரியன்.. கண்டிப்பா சேத்துடறேன்...
வாங்க பரிசல் -> சிரித்ததற்கு நன்றி...
வாங்க அப்துல்லாஜி -> அவ்வ்வ்... இவ்ளோ நாளா 'அரை மனசாவே' இருந்தாங்க. இப்போ 'அரை'ன்னே முடிவு பண்ணிட்டாங்க... :-(((
ஹாஹா... அப்போ எனக்கு பீச்சோரமா ஒரு சிலை இருக்குன்றீங்க... :-))
வாங்க இளா -> நன்றி...
வாங்க பிரேம்ஜி -> அப்போ உடனே ஒரு கல்வெட்டு ஆர்டர் பண்ணிடவேண்டியதுதான்... ஹிஹி...
வாங்க வேலன் அண்ணாச்சி -> சரி வுடுங்க. இனிமே சிந்திக்கலை... ஓகேவா... :-))))
வாங்க முத்துலெட்சுமி அக்கா -> ஆஹா... நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய... குச்குச்லே வந்த ஷாதாங்க.... :-))))
வாங்க வித்யா -> என்னது 'மேய்க்கறாங்களா'... 'அது'ன்னு முடிவே பண்ணிட்டீங்களா??????
வாங்க நர்சிம் -> ஹிஹி. கஷ்டப்பட்டு 'யோசிச்சி'ன்னு சொல்லுங்க தல.... அவ்வ்வ்....
வாங்க கதிர் -> கல்வெட்டு ரெடி பண்ணிட்டு சொல்றேங்க... :-)))
வாங்க மகேஷ்ஜி -> மபயோமப சங்கத்திற்கு ஏதாவது டொனேஷன் கொடுங்க... :-)))))
வாங்க பாஸ்கர், கோபிநாத், சென்ஷி, -> நன்றி..
வாங்க வால் -> மாட்டாங்க மாட்டாங்க... :-((((
வாங்க நசரேயன் -> அவ்வ்வ். 'வாயாலே' சொல்ல முடியாதுன்னா... முடியாதுன்னா.... ஒரு பதிவா போடுங்கன்னு சொல்ல வந்தேன்... :-))))
வாங்க பாலகுமார் -> நன்றி...
//
போன மாதம் இந்தியாவில் ஒரு நண்பரிடம் 'பூச்சாண்டியை'ப் பற்றி சொன்னேன். ஒரு ரெண்டு நாள் படிச்சிட்டு யாஹூவில் வந்து கேட்டார் - "பதிவெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. இது உன் வொய்ஃப் எழுதறதுதானே?". அடங்கொய்யா.... ஏன்யா நான் இதெல்லாம் எழுத மாட்டேனா என்றால், மறுபடி "எல்லாமே நல்லா இருக்கே. அதனால கேட்டேன்." என்றார். நல்ல புகழ் பெற்ற கவிஞரையே சந்தேகப்பட்ட இந்த சமூகம் என்னையும் இப்படி கேட்பதில் தவறு
ஒன்றுமில்லைதான்... அவ்வ்வ்...
//
இதென்ன கொடுமைங்க கஷ்டப்பட்டு யோசிச்சு எம்புட்டு அருமையா
எழுதறீங்க உங்க நண்பருக்கு ஒரே பொறாமைஅதான் அப்படி சொல்லறாரு
ரொம்ப ஒன்னும் பீல் பண்ணாதீங்க
நாங்க நீங்கதான்னு நம்பிட்டோம்மில்லே!!!
//
"எங்கப்பா ஷாருக்கான் மாதிரியே இருக்காரு" அப்படின்னு சொல்லப்போக, அவங்க ரொம்ப டென்ஷனாயிட்டாங்க. "ஏங்க, ஷாருக்கான் யாருன்னு உங்க பொண்ணுகிட்டே தெளிவா காட்டினீங்களா? இல்லே வையாபுரி காமெடியை காட்டி இதுதான் ஷாருக்கான்னுட்டீங்களான்னு" ரொம்ப நேரம் கேட்டுட்டிருந்தாங்க. குழந்தை சொன்னா உண்மையாத்தான் இருக்கும்னு மக்களுக்கு யாராவது சொல்லுங்கப்பா!!!
//
அட குழந்தை அப்படி சொன்னது
மனசுக்குள்ளே ஒரே சந்தோசம் தானே
ஆமா மெய்யாலுமே அப்படித்தான்
இருக்கேன்னு தைரியமா
சொல்ல வேண்டியதுதானே !!!
குழந்தை சொன்னா சரியாதான் இருக்கும்
இது அந்த மேடத்துக்கு தெரியலையே
//
"கடவுள், எல்லாருக்கும் விரலை வளர்த்துவிடாமே நல்லவேளை நகத்தை மட்டும் வளர்க்கறான்; தலையை பெரிதாக்காமே நல்லவேளை முடியை மட்டும் பெரிதாக்கறான்; பறக்க விட்டா இடிச்சிக்கிட்டு கீழே விழுந்துடுவாங்கன்னு பயந்துதான் மனிதனை பறக்க விடாமே நடக்க மட்டும் விட்டிருக்கான். காட் இஸ் க்ரேட்".
//
அய்யய்யோ என்னவெல்லாமோ பேசறீங்களே ஒரே பயமா இல்லே இருக்கு இப்படி எல்லாம் என்னாப்பா யோசிக்கிறீங்க ?
ஒரே பீதியை கிளப்பறீங்களே !!!
//
உடனே தங்ஸும், சஹானாவும் டைரியை எடுத்து - ஊருக்குப் போனா போக வேண்டிய இடங்கள் லிஸ்ட்லே - கீழ்த்திருப்பதியை அடிச்சிட்டு அதுக்குப்பதிலா கீழ்ப்பாக்கம்னு எழுதிட்டாங்க.
//
இப்படி எல்லாம் பயமுறுத்தினா
அவங்கதான் என்னா செய்வாங்க
கொஞ்சம் உஷாரா இருக்கக்கூடாதா
யோசிங்க ஆனா தங்ஸு, சஹானா
கிட்டே சொல்லாதீங்க!!!
//
அதோட, அடிச்சி வெச்சிருக்கிற பெரிய பதிவுகள் எதையும் முடிக்க முடியாமே போனதாலும், வலைப்பூ ஈ ஓட்டக்கூடாதேயென்றும் இந்த ச்சின்னப் பதிவு... ஹிஹி...//
இது போயி சின்ன பதிவா??
பின்னிட்டீங்க போங்க
உங்கள் கற்பனைகள்
வாழ்க வளமுடன் @@@
தெய்வமே.................
இதுக்கு மேல என்ன சொல்ல?
:)
உடனே தங்ஸும், சஹானாவும் டைரியை எடுத்து - ஊருக்குப் போனா போக வேண்டிய இடங்கள் லிஸ்ட்லே - கீழ்த்திருப்பதியை அடிச்சிட்டு அதுக்குப்பதிலா கீழ்ப்பாக்கம்னு எழுதிட்டாங்க.
:))))))))))))))
//கீழ்த்திருப்பதியை அடிச்சிட்டு அதுக்குப்பதிலா கீழ்ப்பாக்கம்னு எழுதிட்டாங்க.//
ROFTL!!!!!!!!!!!!!
மல்லாக்க படுத்து விட்டத்தை பாத்தா இம்புட்டு யோசனை வருமா உங்களுக்கு!
:))
Post a Comment