Wednesday, January 7, 2009

நொறுக்ஸ் - புதன் - 01/07/2008

ரங்கமணிகள் பொய் பேசறதுக்கு காரணமே தங்கமணிகள்தான். என்ன? ஆச்சரியமா இருக்கா?
பதில் கடைசியில்.

--------

பெங்களூரிலிருந்து ஒரு நண்பன் தொலைபேசியிருந்தான். அங்கே புதுசா ஒரு கோயில் கட்டப்படுவதாகவும் அதற்காக நான் ஏதாவது ஒரு தொகை கொடுக்கணும்னு சொன்னான். யாருக்காவது தனிப்பட்ட உதவின்னா சரி, கோயில் கட்டறதுக்கெல்லாம் பணம் கொடுக்கமாட்டேன்றது என் பாலிஸி. அதைத்தவிர, அவங்க தலைவரே - புதுசா கோயிலெல்லாம் கட்டாதீங்க. பூஜையெல்லாம் இல்லாமே ஏற்கனவே இருக்கற ஏதாவது ஒரு கோயிலை சரிபண்ணுங்கன்னு சொல்லியிருக்காரு. அப்படி சொன்னவரோட சிஷ்யரே அந்த புதுகோயிலை திறக்க வரப்போறாராம்.


இதெல்லாம் சொல்லி புரியவெக்கிற நிதானத்துலே அந்த நண்பன் இல்லாததால், சரின்னு ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பிவெச்சேன். அடுத்த நாள்லேந்து இன்னிய வரைக்கும் (ஒரு மாசத்துக்கு மேலாச்சு) அந்த 'நண்பன்' என்கிட்டே பேசவேயில்லை. இப்போ என் கேள்விகள்:

1. இந்தியாவிலே இப்பொல்லாம் ஆயிரம் ரூபாயை ஒரு பொருட்டாகவே மதிக்கறதில்லையா?
2. அமெரிக்காவிலே இருக்கறவந்தானே - கு.ப. ஒரு பெரிய அமௌண்டா கொடுப்பான்னு நண்பன் நினைச்சானா?
3. இனிமே அடுத்த கோயில் கட்டறவரைக்கும் என்கிட்டே அவன் பேசவே மாட்டானா?

இது எதுக்கும் எனக்கு பதில் தெரியல. காலம் பதில் சொல்லும்னு நானும் விட்டுட்டேன். நீங்க என்ன சொல்றீங்க?-----------

'அபியும் நானும்' பட விளம்பரத்தை நான் இந்த வாரம்தான் பார்த்தேன். படத்தலைப்பை ஒரு குழந்தை எழுதியது போல் எழுதியிருந்தது. குழந்தை அபி எழுதினா - 'அப்பாவும் நானும்'னுதானே எழுதியிருக்கணும். அல்லது அபியோட அப்பா (அபிஅப்பா???) எழுதியிருந்தா, அவர் ஏன் குழந்தை மாதிரி எழுதினாரு? அவரோட ச்சின்ன வயசுலேயே எழுதிட்டாரா?

எனக்கு ஒண்ணுமே புரியல. தெரிஞ்சவங்க சொல்லுங்க.


-----------


இதே ஊரில் இருக்கும் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தோம். பேச்சுவாக்கில் நான் சொன்னேன் - "உனக்கென்னப்பா, இந்தியா பக்கத்துலேயே இருக்கறதாலே அப்பப்ப போயிட்டு வந்துடுவே. நாங்கதான் ரொம்ப தூரத்திலே இருக்கோம்"ன்னேன். நண்பன் ஜெர்க்காகி - "என்னது, இந்தியா எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கா? ஏம்பா, நானும் உன்னை மாதிரி அமெரிக்காவில்தானே இருக்கேன்" என்றான்.

நான் சொன்னேன். "உங்க வீட்லேந்து இந்தியா போற தூரத்தைவிட எங்க வீட்லேந்து போறதுக்கு - ரெண்டு மைல் அதிக தூரமாச்சே. அப்போ எங்களைவிட உங்க வீடு இந்தியாக்கு பக்கத்துலேதானே இருக்குன்னு சொல்லணும்".

அடுத்த அஞ்சு நிமிஷத்துக்கு என்கிட்டே யாருமே பேசலை.


----------


முதல்லே கேட்ட கேள்விக்கு பதில்:

தங்கமணிகள் கவனத்தைப் பெறுவதற்காகத்தான் ரங்கமணிகள் பொய் பேசறாங்க. என்ன நம்பமுடியலியா?

ரங்கமணிகள் தொடர்ச்சியாக பேசும்போது(!!!) வழக்கம்போல் தங்கமணிகள் தங்கள் கவனத்தை எங்கேயாவது வெச்சிருப்பாங்க. அப்போ டக்குன்னு நடுவிலே - நீ ரொம்ப நல்லவ, நீ ஒரு பத்து பவுன்லே செயின் வாங்கிக்கோ - அப்படி இப்படின்னு ஏதாவது ஒண்ணு சொல்லி, அவங்க திடுக்கிட்டுத் திரும்பி பாத்தாங்கன்னா, ரங்ஸ் பேசறதை கேக்கறாங்கன்னு அர்த்தம். இல்லேன்னா ரங்ஸ் தனியாத்தான் பேசிக்கிட்டிருக்காருன்னு அர்த்தம்.

என்னப்பா, யாராவது அனுபவத்தை சொல்லுங்க.

30 comments:

ஆளவந்தான் January 7, 2009 at 9:08 PM  

மீ த ஃபர்ஸ்ட்?

ஆளவந்தான் January 7, 2009 at 9:13 PM  

//
அடுத்த அஞ்சு நிமிஷத்துக்கு என்கிட்டே யாருமே பேசலை.
//
நியாயமா பாத்தா அடி குடுத்திருக்கணும்

அதென்ன கு.ப??

ச்சின்னப் பையன் January 7, 2009 at 9:56 PM  

கு.ப = குறைந்த பட்சம்

mvalarpirai January 7, 2009 at 10:17 PM  

"Abhiyun nanumn"u prakashraj abhiyoda(kulanthiyoad) kaiya pudhchitukittu ezhuthi irakuru pa! athanala than appdi iruku !

நசரேயன் January 7, 2009 at 10:29 PM  

நொறுக்ஸ் நல்லா இருக்கு

T.V.Radhakrishnan January 7, 2009 at 10:39 PM  

நானும் ஒரு கோவில் கட்டறதா இருக்கேன்...குறைந்தபட்ச நன்கொடையாக இல்லாமல்..அதிகபட்சம் அனுப்பி வைக்கவும்.உபயதாரர் என கல்வெட்டில் உங்கள் பெயர் செதுக்கப்படும்

ஆளவந்தான் January 7, 2009 at 10:40 PM  

//
நானும் ஒரு கோவில் கட்டறதா இருக்கேன்...குறைந்தபட்ச நன்கொடையாக இல்லாமல்..அதிகபட்சம் அனுப்பி வைக்கவும்.உபயதாரர் என கல்வெட்டில் உங்கள் பெயர் செதுக்கப்படும்
//
ச்சின்னப்பையா,

கோயிலே உங்க பேருல கட்டுறேன், நீங்க பணம் மட்டும் அனுப்புங்க போதும்

சரவணகுமரன் January 8, 2009 at 1:21 AM  

//அவர் ஏன் குழந்தை மாதிரி எழுதினாரு? அவரோட ச்சின்ன வயசுலேயே எழுதிட்டாரா?//

பாஸ், நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க... :-)

அருப்புக்கோட்டை பாஸ்கர் January 8, 2009 at 5:05 AM  

//யாராவது அனுபவத்தை சொல்லுங்க.//

என்னன்னு சொல்ல :?
எப்படி சொல்ல ?
அப்புறம் எப்படி நிம்மதியாய் இருக்க ?

நவநீதன் January 8, 2009 at 5:56 AM  

//யாராவது அனுபவத்தை சொல்லுங்க.//
வீட்ல, உங்க பேச்ச தங்கமணி கேக்குறதே இல்ல போல....!
உங்க அனுபவத்த நீங்க சொல்லிட்டீங்க....

நொறுக்ஸல நொறுக்கி எடுத்திருக்கிறீங்க...!

ச்சின்னப் பையன் January 8, 2009 at 7:24 AM  

வாங்க ஃபஷ்ட் ஆளவந்தான் -> அவ்வ்வ். நீங்களே அடி கொடுக்க அடி எடுத்து கொடுத்து ஆரம்பிச்சி.... (அட அட... எவ்வளவு அ...)

வாங்க சிபி -> நன்றி..

வாங்க வளர்பிறை -> நீங்க சொல்ற மாதிரியும் இருக்க வாய்ப்பிருக்கு. தனியொரு மனிதனாக வந்து என் சந்தேகத்தை தீர்த்து வைத்த உங்களுக்கு 1000 பின்னூட்டங்கள் பரிசு (யாராவது போடுவாங்க.. ஹிஹி).. நன்றி... :-)))

வாங்க நசரேயன் -> நன்றி...

பழையபேட்டை சிவா January 8, 2009 at 8:27 AM  

அது ஒன்னுமில்லங்க... ஒரு கொழந்த தான் இத எழுதி இருக்கு... அபி 'ங்கறது அதோட அப்பா பேர்... இப்போ புரியுதா???

வால்பையன் January 8, 2009 at 8:38 AM  

//இந்தியாவிலே இப்பொல்லாம் ஆயிரம் ரூபாயை ஒரு பொருட்டாகவே மதிக்கறதில்லையா?//

ஆயிரம் ருபாய்ய மொத்தமா பார்த்த அதிர்ச்சியில மயக்கமாயிட்டாரோ என்னவோ!

வால்பையன் January 8, 2009 at 8:45 AM  

//குழந்தை அபி எழுதினா - 'அப்பாவும் நானும்'னுதானே எழுதியிருக்கணும். அல்லது அபியோட அப்பா (அபிஅப்பா???) எழுதியிருந்தா, அவர் ஏன் குழந்தை மாதிரி எழுதினாரு? அவரோட ச்சின்ன வயசுலேயே எழுதிட்டாரா?//

என்ன ஒரு வில்லத்தனம்!

வால்பையன் January 8, 2009 at 8:46 AM  

//நீ ரொம்ப நல்லவ, நீ ஒரு பத்து பவுன்லே செயின் வாங்கிக்கோ - அப்படி இப்படின்னு ஏதாவது ஒண்ணு சொல்லி, அவங்க திடுக்கிட்டுத் திரும்பி பாத்தாங்கன்னா, ரங்ஸ் பேசறதை கேக்கறாங்கன்னு அர்த்தம். இல்லேன்னா ரங்ஸ் தனியாத்தான் பேசிக்கிட்டிருக்காருன்னு அர்த்தம்.//

சரி தான் நான் இத்த்னை நாளா தனியாதான் பேசிகிட்டு இருக்கேனா?

ச்சின்னப் பையன் January 8, 2009 at 8:52 AM  

வாங்க ராகி ஐயா -> அவ்வ்வ்.. வருங்காலத்திலே வர்ற சந்ததியினர் அந்த கல்வெட்ட பாத்து என்னை தெரிஞ்சுக்குவாங்களா???? :-))))

வாங்க ஆளவந்தான் -> இன்னொரு அவ்வ்வ்... குஷ்பூ, தோனிக்குப் பிறகு எனக்குத்தான் கோயிலா?????

வாங்க சரவணகுமரன் -> ஹிஹி.. வேலை எதுவுமில்லைன்னா இப்படித்தான்...:-)))

வாங்க பாஸ்கர் -> புரியுது... புரியுது... சேம் ப்ளட்????? ஹாஹா....

VIKNESHWARAN January 8, 2009 at 9:14 AM  

//எனக்கு ஒண்ணுமே புரியல. தெரிஞ்சவங்க சொல்லுங்க.//

இது புதசெவி ஸ்டைலு... கேஸ் போட்டுற போறாரு பார்த்துக்குங்க...

ச்சின்னப் பையன் January 8, 2009 at 2:19 PM  

வாங்க நவ நீதன் -> நன்றி..

வாங்க பழையபேட்டை சிவா -> ஹிஹி.. இதுகூட நல்லாத்தான் இருக்கு... :-)))

வாங்க வால் -> ஹாஹா... நிறைய பொய் சொல்லி பழகுங்க... உண்மை தானா தெரியும்.... :-)))

வாப்பா விக்னேஸ்வரா -> அதே மாதிரி அர்த்தம் வர்றாப்பல எதுவுமே சொல்லக்கூடாதா????? அவ்வ்வ்வ்..... :-))

புதுகை.அப்துல்லா January 8, 2009 at 9:48 PM  

//குழந்தை அபி எழுதினா - 'அப்பாவும் நானும்'னுதானே எழுதியிருக்கணும். அல்லது அபியோட அப்பா (அபிஅப்பா???) எழுதியிருந்தா, அவர் ஏன் குழந்தை மாதிரி எழுதினாரு? அவரோட ச்சின்ன வயசுலேயே எழுதிட்டாரா?

//

எதயாவது பார்த்தா அணுபவிக்கனும்...ஆராயக்கூடாது.

புதுகை.அப்துல்லா January 8, 2009 at 9:51 PM  

எச்சூஸ்மி...நமிதாவுக்கு கோவில் கட்டலாமுன்னு இருக்கேன். அதுக்கும் நன்கொடை கிடையாதா??

:))

Pattaampoochi January 9, 2009 at 1:59 AM  

வேலை முடிந்த பின் OT-ல இப்படி எல்லாம் யோசிப்பீங்களா?
எப்படிங்க இப்படி எல்லாம்? :-)
நன்றாக உள்ளது.

தாமிரா January 9, 2009 at 7:24 AM  

மூன்றாவது பகுதி ROTFL..!

அபியும் நானும் உண்மையிலேயே சிந்திக்கவேண்டிய விஷயமே.. ஹிஹி.. அப்புறம் அப்துல் கட்டப்போற கோயிலுக்கு நிர்வாகியே நாந்தான் அதனால் பணத்தை என் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிவிடவும். நன்றி.!

பரிசல்காரன் January 9, 2009 at 9:19 AM  

அபியும் நானும் குறித்த உங்கள் கேள்வி அபாரமான க்ரியேடிவிட்டி. அதற்கு வளர்பிறையின் பதில் அதைவிட அபாரமான க்ரியேடிவிட்டி!!!

மிக மிக ரசித்தேன்!!!

NicePyg,  January 9, 2009 at 10:51 AM  

//'அபியும் நானும்' பட விளம்பரத்தை நான் இந்த வாரம்தான் பார்த்தேன். படத்தலைப்பை ஒரு குழந்தை எழுதியது போல் எழுதியிருந்தது. குழந்தை அபி எழுதினா - 'அப்பாவும் நானும்'னுதானே எழுதியிருக்கணும். அல்லது அபியோட அப்பா (அபிஅப்பா???) எழுதியிருந்தா, அவர் ஏன் குழந்தை மாதிரி எழுதினாரு? அவரோட ச்சின்ன வயசுலேயே எழுதிட்டாரா?//

அபியும் நானும்னு எழுதினது அபியோட தம்பி நட்டு...

ச்சின்னப் பையன் January 9, 2009 at 12:22 PM  

வாங்க அப்துல்லாஜி -> ஹிஹி.. நான் எப்போ தரமாட்டேன்னு சொன்னேன்... :-)))

வாங்க பட்டாம்பூச்சி -> மிக்க நன்றி...

வாங்க தாமிரா -> அடடா.. இவ்ளோ பேரு கிளம்பியிருக்கீங்களா... யப்பா. என்னையும் அந்த திருப்பணியில் சேத்துக்குங்கப்பா..... :-))

வாங்க பரிசல், Nicepyg -> நன்றி..

வெண்பூ January 12, 2009 at 7:58 AM  

என்னாச்சு ச்சின்னப்பையன்.. நான் கொஞ்சம் கொஞ்சம் திரும்பி வந்துட்டு இருக்கேன்.. நீங்க இன்னும் வரல போல.. பதிவுகள்லயும், பின்னூட்டத்திலயும் அதிகமா பாக்கவே முடியறதில்ல..

குடுகுடுப்பை January 12, 2009 at 10:09 AM  

உங்க வீட்ல ஒருத்தருக்கு விருது கிடைச்சிருக்கு வந்து பாருங்க

மங்களூர் சிவா February 4, 2009 at 2:45 PM  

/
ரங்கமணிகள் பொய் பேசறதுக்கு காரணமே தங்கமணிகள்தான். என்ன? ஆச்சரியமா இருக்கா?
/

இதுல என்ன ஆச்சர்யம்????

மங்களூர் சிவா February 4, 2009 at 2:46 PM  

/
ரங்கமணிகள் தொடர்ச்சியாக பேசும்போது(!!!) வழக்கம்போல் தங்கமணிகள் தங்கள் கவனத்தை எங்கேயாவது வெச்சிருப்பாங்க. அப்போ டக்குன்னு நடுவிலே - நீ ரொம்ப நல்லவ, நீ ஒரு பத்து பவுன்லே செயின் வாங்கிக்கோ - அப்படி இப்படின்னு ஏதாவது ஒண்ணு சொல்லி, அவங்க திடுக்கிட்டுத் திரும்பி பாத்தாங்கன்னா, ரங்ஸ் பேசறதை கேக்கறாங்கன்னு அர்த்தம். இல்லேன்னா ரங்ஸ் தனியாத்தான் பேசிக்கிட்டிருக்காருன்னு அர்த்தம்.

என்னப்பா, யாராவது அனுபவத்தை சொல்லுங்க.
/

உங்க அனுபவத்தை சொல்லீட்டீங்க இதை சொன்னதுக்கு என்னென்ன அனுபவிச்சீங்களோ அதையும் சொல்லீட்டா உசாரா இருந்துப்போம்!

:)))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP