ஆல்பம் ஜோசியம் பாத்திருக்கீங்களா!!!
கல்யாணம் ஆனப்பிறகு முதல் வாரத்தில் (நிஜ) மாமியார் வீட்டுக்குப் போகும் மாப்பிள்ளைகளுக்கு, சாப்பாடு ஆனப்பிறகு செய்ய வேண்டிய வேலை ஒன்று கண்டிப்பாக இருக்கும். அது என்னன்னா, ‘அந்த' குடும்பத்தாரின் பழைய புகைப்பட ஆல்பங்களை தரிசிப்பது.
குறைந்த பட்சம் ஒரு ஐந்து பேர் - எல்லோர் கையிலும் தலா 2 ஆல்பங்கள் சிறிதும், பெரிதுமாக - புது மாப்பிள்ளையை சுற்றி உக்காந்திருப்பாங்க. பக்கத்தில் புது மனைவி. வேறு வழியேயில்லை, தப்பிக்க முடியாதுன்ற பட்சத்தில், ஒவ்வொரு ஆல்பமா பாக்க ஆரம்பிப்பாரு மாப்பிள்ளை. Slumdog கணக்கா ஒவ்வொரு படத்துப் பின்னாடியும் ஒரு பெரிய்ய கதை சொல்லப்படும். எல்லா புகைப்படங்களையும் பாக்க பாக்க, எல்லாரோட வரலாறும் தெரியும். இப்படியே போயிட்டிருக்கும்போது, திடீர் திடீர்னு சில சோதனைகள் வரும். அது என்னன்னு பாப்போம்.
யாராவது ஒரு புகைப்படத்தை கொண்டு வந்து - “உங்க பொண்டாட்டி இதிலே எங்கே இருக்கான்னு கண்டுபிடிங்க பாப்போம்” அப்படின்னுவாங்க. அது நம்ம ஹீரோயின் ரெண்டாவதோ, மூணாவதோ படிக்கும்போது எடுத்த அரதப்பழசான புகைப்படமா இருக்கும். ஒரு 30-40 குழந்தைகள் ஒருத்தரை ஒருத்தர் இடித்துக்கொண்டு நாலு வரிசையில் நவரசங்களையும் காட்டிக்கிட்டு இருப்பாங்க. நடு நாயகமாக குண்டா ஒரு மிஸ் உட்காந்திருப்பாங்க. சாயங்காலம் ஆபீஸ்லேந்து வரும்போது மனைவிமார்கள் மேக்கப் போடாமே இருந்தாலே, வேறே யார் வீட்டுக்கோ வந்துட்டோம் போலிருக்குன்னு கணவன்மார்கள் திரும்பிப்போயிடற சான்ஸ் இருக்கற வேளையிலே - ச்சின்ன வயசு போட்டோவில் பொண்டாட்டியை எப்படி கண்டுபிடிக்கமுடியும்?.
“என்ன, தெரியலியா? க்ளூ குடுக்கட்டா”ன்னு அடுத்த கேள்வி வந்து விழும். வேறே வழியில்லாமே, சுமாரா இருக்கற ஏதாவது ஒரு குழந்தையை காட்டி, “இதுவா?”ன்னு கேட்டா, பக்கத்திலிருந்து இடுப்பில் ஒரு குத்து விழும். அதுக்குப் பிறகு இன்னொரு குழந்தையை காட்டி, “இதுவா?” - மறுபடி ஒரு குத்து. இப்படியே, வகுப்பில் இருக்கும் 40 பேர்களில் அதிக பட்சம் 19 வாய்ப்புகள் (40ல் 20 சிறுவர்கள்) பயன்படுத்தி தம் பொண்டாட்டியை கண்டுபிடிச்சுடுவாரு மாப்பிள்ளை. உடனே எல்லோரும் “ஏஏஏய்.. மாப்பிள்ளை சரியா சொல்லிட்டாருப்பா... பரவாயில்லையே... சரியான ஆள்தான் நமக்கு கிடைச்சிருக்காரு”ன்னு குதிப்பாங்க. பக்கத்திலேந்து செல்லமா ஒரு கிள்ளு கிடைக்கும்.
அடுத்த புகைப்படம் வரும் - நம்ம ஹீரோயின் பள்ளியில் ஏதாவது ஒரு மாறுவேடப் போட்டியில் கலந்துகொண்டு - ஔவையார், குறத்தி இப்படி ஏதாவது ஒரு வேஷம் போட்டபோது எடுத்த படமாயிருக்கும். மாப்பிள்ளையிடம் அவரோட மாமியார் சொல்வாங்க - “மாப்ளே, இது யாருன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்...”. அந்த படத்தை பாத்தவுடன் தன் பொண்டாட்டிதான்னு தெரிஞ்சாலும் - இவளுக்கு குறத்தியா வேஷம் போடத்தேவையேயில்லே, அப்படியே போய் நின்னிருந்தாலும், முதல் பரிசு கொடுத்திருப்பாங்கன்னு நினைச்சாலும் - கொஞ்ச நேரத்துக்கு யாருன்னு தெரியாத மாதிரி முழிப்பாரு.
”என்னங்க, இப்படி முழிக்கிறீங்க? என் பொண்ணுதான் இது. எவ்ளோ அழகா இருக்கா பாருங்க” அப்படின்னு - காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்ற கணக்கா அம்மா தம் பொண்ணை மெச்சிக்குவாங்க. நம்ம ஹீரோ கடுப்பா உக்காந்திருப்பாரு. மாமியார் வீட்லே போய் கடுப்பை காட்ட முடியுமா... ”ஆமாமா. அப்போ அவ அழகாத்தான் இருந்தா”ன்னு ஒரு ஜோக்(!!) அடிச்சவுடனே, மறுபடி பக்கத்திலிருந்து ஒரு கிள்ளு கிடைக்கும்.
இந்த மாதிரி சில பழைய புகைப்படங்கள் ஆனப்பிறகு, நம் மாப்பிள்ளையோட சொந்த கல்யாண ஆல்பம் பிரிக்கப்படும். ”இவரு உங்ககிட்டே வேலை கேட்டாரே?” - “இவரோட பையந்தான் அமெரிக்காலே பெரிய வேலையில் இருக்காரு. உங்ககிட்டேகூட பயோடேட்டா கேட்டாரே?” - ”இவங்கதான் கல்யாண வேலைகள ரொம்ப உதவியாயிருந்தாரு” - அப்படின்னு ஏகப்பட்ட பேர் மறுபடி மாப்பிள்ளைக்கு நினைவூட்டப் படுவார்கள்.
இப்படியே ஒரு அரை நாள் கழிந்தபிறகு, மறுபடி அந்த எல்லா ஆல்பங்களும் கவனமாக பேக் செய்யப்பட்டு - அந்த வீட்டுக்கு அடுத்த மாப்பிள்ளை வரும்வரை - கண்காணாத ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்படும்.
40 comments:
//சாயங்காலம் ஆபீஸ்லேந்து வரும்போது மனைவிமார்கள் மேக்கப் போடாமே இருந்தாலே, வேறே யார் வீட்டுக்கோ வந்துட்டோம் போலிருக்குன்னு கணவன்மார்கள் திரும்பிப்போயிடற சான்ஸ் இருக்கற வேளையிலே - ச்சின்ன வயசு போட்டோவில் பொண்டாட்டியை எப்படி கண்டுபிடிக்கமுடியும்?. //
என்ன தலையில லேசா மேடா தெரியுது?
//அந்த வீட்டுக்கு அடுத்த மாப்பிள்ளை வரும்வரை - கண்காணாத ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்படும்.//
உங்க கதையில வர (!!) மாமியாருக்கு ஒரே பொண்ணா இருந்தா?
இவளுக்கு குறத்தியா வேஷம் போடத்தேவையேயில்லே, அப்படியே போய் நின்னிருந்தாலும், முதல் பரிசு கொடுத்திருப்பாங்கன்னு நினைச்சாலும் - கொஞ்ச நேரத்துக்கு யாருன்னு தெரியாத மாதிரி முழிப்பாரு.
Super.. :)
//குறையொன்றுமில்லை... மறைமூர்த்தி கண்ணா...
//
அருமையான கேப்ஷன்.... வலைஉலகினால் சில பயனும் உண்டு என அறிந்து கேப்ஷன் மாத்திட்டீங்களா???
//சாப்பாடு ஆனப்பிறகு செய்ய வேண்டிய வேலை ஒன்று கண்டிப்பாக இருக்கும்.//
முதல்ல பாரு,அப்புறம்தான் சாப்பாடுன்னுட்டாய்ங்க நம்மகிட்ட :))
நடு நாயகமாக குண்டா ஒரு மிஸ் உட்காந்திருப்பாங்க.
//
ஹா...ஹா...ஹா....
தமிழ்கூறும் நல்லுலகில் எடிக்கப்படும் அனைத்து பள்ளிப்படங்களிலும் அது டீஃபால்ட் போல :))))))
அந்த வீட்டுக்கு அடுத்த மாப்பிள்ளை வரும்வரை - கண்காணாத ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்படும்.
//
இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். மனம் விட்டு சிரிக்க வச்சதுக்கு மிக்க நன்றிண்ணே :))))))
//சாயங்காலம் ஆபீஸ்லேந்து வரும்போது மனைவிமார்கள் மேக்கப் போடாமே இருந்தாலே, வேறே யார் வீட்டுக்கோ வந்துட்டோம் போலிருக்குன்னு கணவன்மார்கள் திரும்பிப்போயிடற சான்ஸ் இருக்கற வேளையிலே//
//இவளுக்கு குறத்தியா வேஷம் போடத்தேவையேயில்லே, அப்படியே போய் நின்னிருந்தாலும், முதல் பரிசு கொடுத்திருப்பாங்கன்னு நினைச்சாலும் //
:-)))
ஹா ஹா எங்க வீட்லயும் இப்படி நடந்தது. ஆனா அரை நாள் எல்லாம் ஆகல. ஜஸ்ட் அரை மணி நேரம் தான்.
ஆழமான ஆராய்ச்சி பதிவு...
ஹய் நாலு மாசத்துக்கு முன்னால என் தங்கச்சி வீட்டுக்காரரையும் இப்படிதான் கொடுமை படுத்தினோம். இப்ப எல்லாம் அவர் வீட்டுக்கு வரும் போது ஆல்பம் எல்லாம் காட்டமாட்டேன் அப்படின்னு ப்ராமிஸ் செஞ்ச பிறகுதான் வர்ராரு.
இந்த மாதிரி சிரிச்சிகிட்டே படிச்சு ரொம்ப நாளாச்சி!
நன்றி!
வீட்ல படிக்க காட்டாதிங்க!
பூரிகட்டை உடையும் வாய்ப்புண்டு!
வழக்கம்போல சூப்பரா இருந்தது.. :)))
சூப்பர் தல,, நல்லா சிரிக்க வைக்கிறீங்க.. ச்சின்னப் பையன்னு சொல்லிக்கிறதுக்கு பதிலா, ச்சிரிப்புப் பையன்னு மாத்திக்கலாம் உங்கள.. :)))
எம்.எம். அப்துல்லாவை என் பரம விரோதி என்று அறிவிக்கிறேன். (நான் போட நினைத்த பின்னூட்டங்களை எல்லாம் வரிசைகட்டிப் போட்டு எனக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார்.)
I love you chchinnappaiyan!
ரெம்பத்தான் கஷ்டப் பட்டுட்டீங்க போல இருக்கு.
ஆனாலும் அந்த மேக்கப் சமாச்சாரம் கொஞ்சம் ஓவர்தான்.
//சாயங்காலம் ஆபீஸ்லேந்து வரும்போது மனைவிமார்கள் மேக்கப் போடாமே இருந்தாலே, வேறே யார் வீட்டுக்கோ வந்துட்டோம் போலிருக்குன்னு கணவன்மார்கள் திரும்பிப்போயிடற சான்ஸ் இருக்கற வேளையிலே - ச்சின்ன வயசு போட்டோவில் பொண்டாட்டியை எப்படி கண்டுபிடிக்கமுடியும்?. //
/அந்த வீட்டுக்கு அடுத்த மாப்பிள்ளை வரும்வரை - கண்காணாத ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்படும்.//
இவளுக்கு குறத்தியா வேஷம் போடத்தேவையேயில்லே, அப்படியே போய் நின்னிருந்தாலும், முதல் பரிசு கொடுத்திருப்பாங்கன்னு நினைச்சாலும் - கொஞ்ச நேரத்துக்கு யாருன்னு தெரியாத மாதிரி முழிப்பாரு.
இந்த மாதிரி சிரிச்சிகிட்டே படிச்சு ரொம்ப நாளாச்சி!
நன்றி!
எப்பா ஒரே சிரிப்பு சிரிப்ப வருது.. எங்கள சிரிக்க வச்சதுக்கு பாவம் இன்னிக்கு வீட்டுல நீங்க அழுவ போறீங்க..
இதுக்கெல்லாம் பழி வாங்கற மாதிரி அவுங்க உங்க வீட்டுக்கு வந்தா ஆல்பங்களைப் போட்டு தாக்குங்க... இதுக்குன்னே மொக்கையா (உங்களுக்கு சொல்லித்தரணுமா?) 100 போட்டோ எடுத்து ஆல்பம் பண்ணி ரெடியா வெச்சுக்கோங்க.. இது எங்க எடுத்தது சொல்லுங்க பாக்கலாம், இது என்னா சொல்லுங்க பாக்கலாம்னு நோகடிச்சுடுங்க :)))
// இவளுக்கு குறத்தியா வேஷம் போடத்தேவையேயில்லே, அப்படியே போய் நின்னிருந்தாலும், முதல் பரிசு கொடுத்திருப்பாங்கன்னு நினைச்சாலும்//
தங்கமணி உங்க பிளாக்கையே படிக்கிறதில்ல போல இருக்கு...
ஒரு வேளை, இந்த லூசு எழுதுறத, யார் படிப்பான்னு நினைச்சிருப்பாங்களோ....
சும்மா ஜோக் அண்ணே.... சீரியசா எடுத்துக்காதீங்க....
// ஹீரோ கடுப்பா உக்காந்திருப்பாரு//
பாவம்... ரொம்ப அனுபவப் பட்ட்ருகீங்க...!
மனசுல நினைக்குறது வெளிய கேக்காததால, தப்பிச்சுகிடு வர்றீங்க....
கேட்டுச்சு நீங்க அம்பேல்...!
very nice one. super
வாங்க பிரேம்ஜி -> அவ்வ்வ்.. அங்கிருந்தே உங்களுக்கு எப்படி தெரியுது இதெல்லாம்!!!!!!
வாங்க ராகி ஐயா -> ஒரே பொண்ணுன்னா அவ்ளோதான். அந்த ஆல்பத்தை இனிமே யாருமே பாக்க மாட்டாங்கன்னு அர்த்தம்!!!
வாங்க ஸ்ரீதர்கண்ணன் -> நன்றி..
வாங்க அப்துல்லாஜி -> உங்கள மாதிரி நண்பர்களை அறிமுகம் செஞ்சி வெச்சிருக்கே இந்த இணையம். அதுக்காகத்தான் கேப்ஷனை மாத்திட்டேன்...
சிரிங்க சிரிங்க.. இந்த மாதிரி சிரிக்க வெக்கணும்றதுக்காகத்தான் நான் பதிவு போடறதே..... :-)))))
வாங்க சரவணகுமரன் -> நன்றி...
வாங்க வித்யா -> அரை மணி நேரமோ, அரை நாளோ - ஆல்பம் பாக்க ஒருத்தர் மாட்னாராயில்லையா????
வாங்க விக்னேஸ்வரன் -> நீங்க ஆல்பம் பாக்கற காலம் ரொம்ப சீக்கிரமே வரணும்ன்றதுதான் என் ஆசை!!!
வாங்க தாரணி பிரியா -> ரொம்ப பாவங்க அவரு... விட்ருங்க.... :-)))
வாங்க வால், முத்துலெட்சுமி அக்கா -> மிக்க நன்றி...
வாங்க ராகவ்ஜி -> ஹிஹி... ச்சி ச்சி பையன்னு மாத்திக்கலாமா???? (ச்சின்ன ச்சிரிப்பு பையன்)
வாங்க ரமேஷ்ஜி -> மிக்க நன்றிங்க...
வாங்க வேலன் ஐயா -> ஆமாங்க. மேக்கப்னா அளவாத்தான் இருக்கணும். ஓவரா இருக்கக்கூடாது?... நீங்க இததானே சொல்றீங்க..!!!! அவ்வ்வ்வ்வ்.....
வாங்க மதுரை நண்பன், வினோத், -> நன்றி..
சிரிப்பு வருகிற விஷயம் நன்றி
இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். மனம் விட்டு சிரிக்க வச்சதுக்கு மிக்க நன்றி.
வாங்க மகேஷ் -> ஹாஹா... வொய் ப்ளட்? சேம் ப்ளட்ன்னு கேக்கறவரைக்கும் போட்டு தாக்கிடவேண்டியதுதான்றீங்க.... சரி சரி. முயற்சி பண்றேன்... :-)))
வாங்க நவ நீதன் -> அவ்வ்வ்... அவங்களும் படிக்கறாங்க என் ப்ளாக்கை. எல்லாத்துக்கும் சேத்து வெச்சி ஒரு நாள் வாங்கப்போறாங்கன்னு நினைக்கறேன்... :-))))
வாங்க முரளிகண்ணன், ஃபெலிக்ஸ் ராஜ், பாஸ்கர் -> நன்றி.. மீண்டும் வருக... :-)))
நல்ல நகைச்சுவை...மிகவும் ரசிதேன்...
hahah- nice one...i just wonder whether ur wife reads all these and how wud be react to ur blogs - funny! - Mona
அனுபவம் பேசுது
வாங்க ராமசுப்ரமணிய ஷர்மா -> நன்றி...
வாங்க மோனா -> Even if she didnt read, she has couple of friends who will read and update her. But I think I am waiting for the big reaction.... :-))))))))))))))
வாங்க அப்சர்வர் -> அவ்வ்வ்.... எது எழுதினாலும் அனுபவம்தானா சாமி??????? கொஞ்சம் கூட கற்பனை இருக்காதா..... :-)))))))))
//
சாயங்காலம் ஆபீஸ்லேந்து வரும்போது மனைவிமார்கள் மேக்கப் போடாமே இருந்தாலே, வேறே யார் வீட்டுக்கோ வந்துட்டோம் போலிருக்குன்னு கணவன்மார்கள் திரும்பிப்போயிடற சான்ஸ் இருக்கற வேளையிலே - ச்சின்ன வயசு போட்டோவில் பொண்டாட்டியை எப்படி கண்டுபிடிக்கமுடியும்?.
//
ஆமா வீட்டுலே தங்ஸ்
இந்த லீலை எல்லாம் படிக்க மாட்டாங்களா ரொம்ப தைரியம் வேணும் இல்லே தலைக்கு மேலே வெள்ளம் போனா ஜான் என்னா முழம் என்னா என்ற பாட்டு நினைவிற்கு வந்து விட்டதா
இல்லே விழுப்புண் அதிகமோ
உங்க தைரியத்தை பாராட்டறேனுங்க.
/*
“மாப்ளே, இது யாருன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்...”. அந்த படத்தை பாத்தவுடன் தன் பொண்டாட்டிதான்னு தெரிஞ்சாலும் - இவளுக்கு குறத்தியா வேஷம் போடத்தேவையேயில்லே, அப்படியே போய் நின்னிருந்தாலும், முதல் பரிசு கொடுத்திருப்பாங்கன்னு நினைச்சாலும் - கொஞ்ச நேரத்துக்கு யாருன்னு தெரியாத மாதிரி முழிப்பாரு.
*/
நீங்க ரொம்ப சொல்லிட்டீங்க.
ட்ரிங் ட்ரிங் தங்கமணி இங்கே
கொஞ்சம் பாருங்க, எப்போ
பாத்தாலும் கிச்சென் தானா ?
அப்பப்போ உங்க வீட்டுக்காரர் மேலேயும் கொஞ்சம் கண் வையுங்கோ அதுவும் குறிப்பா கம்ப்யூட்டர் முன்னாடி
உக்காந்து தலையை அப்படி இப்படி ஆட்டினால் விடாதீங்க.
உஷாரு உஷாரு உஷாரு
படிச்சு ஒரே சிரிப்பு நான் சிரித்ததோட இல்லாமல் எங்க அக்காவையும் போட்டு கஷ்டப்படுத்திடேன்
இன்னும் நினைத்தாலே சிரிப்பு சிரிப்பா வருது ஹையோ ஹையோ ரொம்ப ரந்து பண்ணறீங்க
எதுக்கும் வீட்டுலே பூரி கேக்காதீங்க
வேணும்னா ஹோட்லே போயி சாப்பிடுங்கோ கொஞ்ச நாளைக்கு மட்டும்
அப்துல் :
சிரித்துக் கொண்டே இருக்கிறேன். மனம் விட்டு சிரிக்க வச்சதுக்கு மிக்க நன்றிண்ணே :)))// ரிப்பீட்டேய்ய்..
ஒவ்வொரு வரியும் பிரமாதம், ரசனைக்குரியதாய் இருந்தது.
உங்களுக்கு போட்டோ ஆல்பம் மட்டும்தான்..
எனக்கு வீடியோ வேற...
ஒரு 6 (அ) 7 விடியோ... அத போட்டு காண்பிச்சு, அதுக்கு விவரம் சொல்றதுக்கு ஒரு நாலு பேரு வேற, அந்த நாலு போடும் நாலு பக்கத்தில இருந்து கமெண்ட்ஸ் வேற...
எப்படி இருக்கும் நினைச்சு பாருங்க..
வாங்க ரம்யா -> நல்லா சிரிச்சீங்களா????? அது போதுங்க எனக்கு.... மிக்க நன்றி... :-))
வாங்க சென்ஷி, தாமிரா -> நன்றி..
வாங்க இராகவன் -> அவ்வ்வ்.... வீடியோன்னு ஒரு தனி பதிவே போடலாம்... நீங்க வேணா ட்ரை பண்ணுங்க.... :-)))
/
அந்த படத்தை பாத்தவுடன் தன் பொண்டாட்டிதான்னு தெரிஞ்சாலும் - இவளுக்கு குறத்தியா வேஷம் போடத்தேவையேயில்லே, அப்படியே போய் நின்னிருந்தாலும், முதல் பரிசு கொடுத்திருப்பாங்கன்னு நினைச்சாலும்
/
ஹா ஹா
ROTFL
:))))))))
/
வால்பையன் said...
வீட்ல படிக்க காட்டாதிங்க!
பூரிகட்டை உடையும் வாய்ப்புண்டு!
/
அதே!
Post a Comment