Tuesday, January 20, 2009

இந்தியா அமெரிக்காவுக்கிடையே வேறுபாடு!!! (அரசியல் பதிவு அல்ல...)

தலைப்பைப் பாத்து ஏதாவது காரசாரமான அரசியல் பதிவுன்னு நினைச்சி வந்திருந்தீங்கன்னா, என்னெ மன்னிச்சிடுங்க. இது வெறும் தமாசான பதிவுதான். படிச்சிட்டு சிரிச்சிட்டு போங்க...

சில நாட்களுக்கு முன், இங்கிருக்கும் ஒரு அமெரிக்க நண்பருடன் இந்தியா - அமெரிக்காவுக்கிடையே பல விஷயங்களில் உள்ள வேறுபாடுகளைப் பற்றிய பேச்சு வந்தது. அந்த பல வேறுபாடுகளில், சிலவற்றை மட்டும் இங்கே பதிவில் சொல்லியிருக்கேன். அந்த நண்பனிடம் சொன்னது மட்டுமில்லாமல், சொல்ல நினைத்தது கூட இங்கே சொல்லியிருக்கேன். (அடேங்கப்பா.. எவ்வளவு 'சொ'!!!).


அ. நண்பன்: நாங்க சாலையின் வலது பக்கத்தில் வண்டி ஓட்டிக்கிட்டு போவோம்.
நான்: நாங்க இங்கிலாந்து அரசின் முறையை பின்பற்றுவதால், சாலையின் இடது பக்கத்தில் வண்டி ஓட்டிக்கிட்டு போவோம்.
சொல்ல நினைத்தது: எல்லாருமே இடது பக்கமா போனாலும், சில சமயம் போலீஸ்காரங்க இல்லேன்னா, வலது பக்கம் கூட போவோம்.

அ. நண்பன்: எங்க ஊர்லே அதிபருக்குத்தான் எல்லா அதிகாரமும்.
நான்: எங்க ஊர்லே அப்படியில்லே - ஜனாதிபதியைவிட பிரதமருக்குத்தான் அதிகாரம் அதிகம்.
சொல்ல நினைத்தது: எங்க ஊர்லேயும் 'உங்க' அதிபருக்குத்தான் எல்லா அதிகாரமும். அவருக்குப் பிறகு சோனியா காந்தி, பிரதமர் இவங்களுக்கெல்லாம் அடுத்துதான் 'எங்க' ஜனாதிபதிக்கு அதிகாரம்.


அ. நண்பன்: எங்க ஊர் குழாயிலே இடது பக்கம் சுத்தினா சுடு தண்ணீரும், வலது பக்கம் சுத்தினா ஜில் தண்ணீரும் வரும்.
நான்: நான் இதை கவனிச்சதில்லை. ஆனா கண்டிப்பா இதுக்கு எதிர்ப்பதமாத்தான் இருக்கும்னு தோணுது.
சொல்ல நினைத்தது: எங்க வீட்லேல்லாம் பயங்கர வெயில் அடிச்சா, குழாய்லே சுடு தண்ணீர் வரும். (ஏன்னா வீட்டு மேலே இருக்கற டாங்க் சூடாயிடும்). மழை பெஞ்சா அதே குழாய்லே ஜில் தண்ணீர் வரும். அவ்ளோதான். சிம்பிள் டெக்னாலஜி.

அ. நண்பன்: எங்க ஊர் டாய்லட்லே தண்ணீர் ஃப்ளஷ் செய்தா, அது கடிகாரத்தை தலைகீழா சுத்துற மாதிரி (anti-clockwise) சுத்தி ஃப்ளஷ் ஆகும்.
நான்: ஹாஹா. நீ சொல்றத பாத்தா எங்க ஊர்லே இப்படி இருக்காதுன்னு தோணுது.
சொல்ல நினைத்தது: ச்சீச்சீ. அதுக்குள்ளேல்லாம் நான் இன்னும் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கலே. அதனால் எனக்கு தெரியல....


அ. நண்பன்: எங்க ஊர்லே ஸ்விட்ச்சை கீழிருந்து மேலே தூக்கினால் விளக்கு எரியும்.
நான்: அட, அதுக்கு அப்படியே நேரெதிர் எங்க ஊரு. நாங்க கீழே அமுக்கினாத்தான் விளக்கு எரியும், மின்விசிறி சுத்தும்.
சொல்ல நினைத்தது: ஹிஹி. எங்க ஊர்லேல்லாம் (கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும்) ஸ்விட்ச் போட்டா மட்டும் உடனே விளக்கு எரியும்னு சொல்ல முடியாது. ஆற்காட்டார் மனசு வைக்கணும். அப்போதான் எல்லாமே...

அ. நண்பன்: இந்த எல்லா வித்தியாசமுமே இங்கிலாந்து அரசு இங்கேந்து (அமெரிக்காலேந்து) போனபிறகு, அவங்கள மாதிரி நாம இருக்கக்கூடாதுன்ற முடிவிலே செஞ்சது.
நான்: அது சரிப்பா. நாங்க இந்த மாதிரி எதிர்ப்பதமா செய்ய வேண்டிய அவசியமில்லை. இப்ப இருக்கற வழக்கங்களே நல்லாத்தான் இருக்கு.
சொல்ல நினைத்தது: ஏன்யா, எல்லாத்தையும் அவங்களுக்கு எதிர்ப்பதமா பண்ணனும்னு நினைச்சீங்களே, ஒண்ணே ஒண்ணு உங்களாலே மாத்த முடியலியே.. அவங்க சாப்பாட்டை வாயாலே சாப்பிட்டாங்க...


*****

பிகு - 1: கடைசி பாயிண்ட்லே நான் சொல்ல நினைச்சது - நீங்க 'மூக்கிலே' சாப்பிட வேண்டியதுதானேன்னுதாம்பா. யாராவது எதையாவது தப்புத்தப்பா நினைச்சீங்கன்னா, அதுக்கு நான் பொறுப்பில்லே. இப்பவே சொல்லிட்டேன்.

பிகு - 2: இதே மாதிரி இன்னும் பல வித்தியாசங்கள் இருக்கும். தெரிஞ்சவங்க சொல்லுங்க...


29 comments:

முரளிகண்ணன் January 20, 2009 at 9:32 PM  

\\எங்க ஊர்லேயும் 'உங்க' அதிபருக்குத்தான் எல்லா அதிகாரமும்\\

சூப்பர்

பிரேம்ஜி January 20, 2009 at 10:52 PM  

//எங்க ஊர்லேயும் 'உங்க' அதிபருக்குத்தான் எல்லா அதிகாரமும்//

:-)))))))))

வினோத் கெளதம் January 21, 2009 at 1:22 AM  

யப்பா சுபேரு..பின்னிடிங்க..அருமை..

சொல்ல நினைத்தது: எப்ப..அப்பபா..இவரால மட்டும் எப்படி இப்படி எல்லாம்..முடியுல..

தாரணி பிரியா January 21, 2009 at 2:23 AM  

சொன்னதை விட சொல்ல நினைச்சதுதான் சூப்பர். சொல்லியிருக்கலாமுன்னு தோணிச்சி. அதை அவர்கிட்ட சொல்லிட்டு அவர் என்ன சொன்னாருன்னு சொல்லுங்க

Vidhya Chandrasekaran January 21, 2009 at 3:28 AM  

\\எங்க வீட்லேல்லாம் பயங்கர வெயில் அடிச்சா, குழாய்லே சுடு தண்ணீர் வரும். (ஏன்னா வீட்டு மேலே இருக்கற டாங்க் சூடாயிடும்). மழை பெஞ்சா அதே குழாய்லே ஜில் தண்ணீர் வரும்.\\

சில சமயம் காத்துகூட வரும்:)

அருப்புக்கோட்டை பாஸ்கர் January 21, 2009 at 4:23 AM  

//சில சமயம் போலீஸ்காரங்க இல்லேன்னா, வலது பக்கம் கூட போவோம்//

இடது ,வலது இன்னு கிடையாது. சும்மா கன்னா பின்னா இன்னு இப்பல்லாம் ஓட்டுறாங்க !

கார்க்கிபவா January 21, 2009 at 5:05 AM  

லெஃப்ட்ல இன்டிகேட்டர் போடுவோம்.. ரைட்டுல கைய போடுவோம்.. ஆனா நேரா போவோம்னு சொல்லுவாரு விவேக்..

சின்னப் பையன் January 21, 2009 at 6:01 AM  

வாங்க முரளிகண்ணன் -> தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி...

வாங்க பிரேம்ஜி -> நன்றி..

வாங்க வினோத் -> நன்றி... சொல்ல நினைத்தது: எல்லாமே தன்னாலே வருதுப்பா... :-)))

வாங்க தாரணி பிரியா -> அவ்வ்வ். பாஸிடிவ்வான விஷயங்கள்னா சந்தோஷமா சொல்லலாம்.. மத்ததுல்லாம் என்னாலே சொல்ல முடியாது... ஸ்லம்டாக் மாதிரி படங்கள பாத்து அவங்களே தெரிஞ்சிப்பாங்க... :-(((

ராஜ நடராஜன் January 21, 2009 at 6:29 AM  

சொல்ல நினைத்தது முட்டக்கண்ணு எழுத்துக்கள் நல்லாயிருக்குது:)

ராஜ நடராஜன் January 21, 2009 at 6:31 AM  

//அ. நண்பன்: எங்க ஊர் குழாயிலே இடது பக்கம் சுத்தினா சுடு தண்ணீரும், வலது பக்கம் சுத்தினா ஜில் தண்ணீரும் வரும்.//

இந்த ஊருல குழாய்க்குப் பக்கத்திலே கையக் கொண்டு போனாலே தண்ணீர் வரும்.கையை எடுத்து விட்டால் குழாய் வாயை மூடிக்கொள்ளும்.புது டெக்னாலஜி.அரசு மருத்துவ மனையிலும் விமானதளத்திலும் பயன்படுத்துவதைப் பார்த்தேன்.

சின்னப் பையன் January 21, 2009 at 9:45 AM  

வாங்க வித்யா -> ஹாஹா... :-))) நன்றி...

வாங்க பாஸ்கர் -> ரொம்ப குஷ்டமப்பா ச்சீ.. கஷ்டமப்பா.... :-)))

வாங்க கார்க்கி -> ஹிஹி... நிஜத்தைத்தானே சொல்லியிருப்பாரு... :-))

வாங்க ராஜ நடராஜன் -> நன்றி ஹை... :-))

Mahesh January 21, 2009 at 10:00 AM  

நம்ம ஊர்ல பிரதமருக்கு அதிகாரம் இருக்குன்னு சொல்லிட்டீங்களே.... இன்னிக்கு மன்மோகனுக்கு இருக்கு... :)

நசரேயன் January 21, 2009 at 10:43 AM  

/*அ. நண்பன்: எங்க ஊர்லே ஸ்விட்ச்சை கீழிருந்து மேலே தூக்கினால் விளக்கு எரியும்.
நான்: அட, அதுக்கு அப்படியே நேரெதிர் எங்க ஊரு. நாங்க கீழே அமுக்கினாத்தான் விளக்கு எரியும், மின்விசிறி சுத்தும்.
சொல்ல நினைத்தது: ஹிஹி. எங்க ஊர்லேல்லாம் (கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும்) ஸ்விட்ச் போட்டா மட்டும் உடனே விளக்கு எரியும்னு சொல்ல முடியாது. ஆற்காட்டார் மனசு வைக்கணும். அப்போதான் எல்லாமே...
*/
உண்மை

குடுகுடுப்பை January 21, 2009 at 1:30 PM  

சொல்ல நினைத்தது: எங்க ஊர்லேயும் 'உங்க' அதிபருக்குத்தான் எல்லா அதிகாரமும். அவருக்குப் பிறகு சோனியா காந்தி, பிரதமர் இவங்களுக்கெல்லாம் அடுத்துதான் 'எங்க' ஜனாதிபதிக்கு அதிகாரம்.//

இது சூப்பரு. நம்ம ஜனாதிபதிக்கே எங்கே அதிகாரம்.

குடுகுடுப்பை January 21, 2009 at 1:31 PM  

நசரேயன் said...

/*அ. நண்பன்: எங்க ஊர்லே ஸ்விட்ச்சை கீழிருந்து மேலே தூக்கினால் விளக்கு எரியும்.
நான்: அட, அதுக்கு அப்படியே நேரெதிர் எங்க ஊரு. நாங்க கீழே அமுக்கினாத்தான் விளக்கு எரியும், மின்விசிறி சுத்தும்.
சொல்ல நினைத்தது: ஹிஹி. எங்க ஊர்லேல்லாம் (கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும்) ஸ்விட்ச் போட்டா மட்டும் உடனே விளக்கு எரியும்னு சொல்ல முடியாது. ஆற்காட்டார் மனசு வைக்கணும். அப்போதான் எல்லாமே...
*/
உண்மை//

இந்த ஆளு எல்லா இடத்திலேயும் போயி
உண்மை
ஒத்துக்கறேன்
சரிதான்
இப்படி பின்னூட்டம் போடுறார் என்ன ஆச்சு இவருக்கு

ஆளவந்தான் January 21, 2009 at 5:09 PM  

//
தலைப்பைப் பாத்து ஏதாவது காரசாரமான அரசியல் பதிவுன்னு நினைச்சி வந்திருந்தீங்கன்னா, என்னெ மன்னிச்சிடுங்க. இது வெறும் தமாசான பதிவுதான். படிச்சிட்டு சிரிச்சிட்டு போங்க...
//
ஐயர் மெஸ்ஸில் “சிக்கன் கொத்து புரோட்டா” கிடைக்குமா?



//
ஸ்விட்ச் போட்டா மட்டும் உடனே விளக்கு எரியும்னு சொல்ல முடியாது. ஆற்காட்டார் மனசு வைக்கணும். அப்போதான் எல்லாமே..
//

ஸ்விட்ச் போட்டா மட்டும் உடனே விளக்கு எரியும்னு சொல்ல முடியாது. ஆற்காட்டாரை போட்டா கண்டிப்பா எரியும்.

சின்னப் பையன் January 21, 2009 at 6:55 PM  

வாங்க மகேஷ் -> ஹாஹா... வீட்லே காரம் கம்மியா இருக்குன்னாவது சொல்ல முடியுமா அவராலே??????

வாங்க நசரேயன், இராம் -> நன்றி..

வாங்க குகு -> அவர் ஒரு வேளை உண்மை விளம்பியா இருப்பாரோ???

வாங்க ஆளவந்தான் -> அவ்வ்வ்...

RAMYA January 21, 2009 at 9:38 PM  

//*
சொல்ல நினைத்தது: எல்லாருமே இடது பக்கமா போனாலும், சில சமயம் போலீஸ்காரங்க இல்லேன்னா, வலது பக்கம் கூட போவோம்.
*//

அதுதான் எப்பவுமே நடக்குமே
நாங்கல்லாம் போனா தெரியாம வந்துட்டோம்ன்னு சொல்லி
சமாளிச்சுக்குவோம் இல்லே!!

RAMYA January 21, 2009 at 9:39 PM  

//
சொல்ல நினைத்தது: எங்க வீட்லேல்லாம் பயங்கர வெயில் அடிச்சா, குழாய்லே சுடு தண்ணீர் வரும். (ஏன்னா வீட்டு மேலே இருக்கற டாங்க் சூடாயிடும்). மழை பெஞ்சா அதே குழாய்லே ஜில் தண்ணீர் வரும். அவ்ளோதான். சிம்பிள் டெக்னாலஜி.
//

இதுவும் சூப்பர் ஒ சூப்பர் !!!

RAMYA January 21, 2009 at 9:39 PM  

//
சொல்ல நினைத்தது: ச்சீச்சீ. அதுக்குள்ளேல்லாம் நான் இன்னும் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கலே. அதனால் எனக்கு தெரியல....
//

ஆராய்ச்சி பண்ண உடனே சொல்லுங்க
நாங்க எல்லாம் சேர்ந்து பட்டம்
கொடுத்திடறோம்
ஹாஹாஹாஹாஹாஹா

ஆளவந்தான் January 21, 2009 at 9:44 PM  

//
RAMYA said...

ஆராய்ச்சி பண்ண உடனே சொல்லுங்க
நாங்க எல்லாம் சேர்ந்து பட்டம்
கொடுத்திடறோம்
//

இதெல்லாம் டூ மச் ஆமா.. ஆராய்ச்சி பண்ணாதான் பட்டம் குடுப்பீங்களா? அதெல்லாம் முடியாது.. உடனே ஒரு பட்டத்த குடுங்க ஆமா.

கண்டிப்பா டாக்டர் பட்டம் மட்டும் குடுத்துடாதீங்க.. பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அது விஜயை பெரும படுத்தின மாதிரி ஆகிடும்..

RAMYA January 21, 2009 at 9:47 PM  

//
பிகு - 2: இதே மாதிரி இன்னும் பல வித்தியாசங்கள் இருக்கும். தெரிஞ்சவங்க சொல்லுங்க...
//

எல்லாம் சொல்லியாச்சு மத்தவங்க இதுலே

யோசிக்க ஒன்னும் இல்லே
சூப்பர் ஒ சூப்பர்!!!

Anonymous,  January 22, 2009 at 1:25 AM  

லேடஸ்ட்!!!
அ.நண்பன்:எங்க ஊர்ல லோன் திரும்ப கட்டலைன்னா பெரிசா ஒண்ணும் செய்ய முடியாது. கேஸ் வேணும்னா போடலாம். அதுவும் அநேகமா ஜெயிக்காது (ஹி..ஹி..ஹி)
நான்: எங்க ஊர்ல, கலக்‌ஷன் ஏஜண்ட் வீட்டு பெட்ரூம்ல வந்து படுத்துப்பார், ஈவினிங் டிஃபன் தோசை தான் வேணும்னு சொல்லுவார். அதனால நாங்க கட்டிடுவோம்.
சொல்ல நினைத்தது: பாவிங்களா! இப்படி கட்டாமவுட்டு எங்க தாலிய அறுத்துட்டீங்கடா. இந்த எகனாமிக் ரெசஷனுக்கே நீங்க தாண்ட காரணம்.

Muthu January 22, 2009 at 1:39 AM  

ஏம்பா, அரசியல் போஸ்ட் இல்லைண்ணுட்டு

"சொல்ல நினைத்தது: எங்க ஊர்லேயும் 'உங்க' அதிபருக்குத்தான் எல்லா அதிகாரமும். அவருக்குப் பிறகு சோனியா காந்தி, பிரதமர் இவங்களுக்கெல்லாம் அடுத்துதான் 'எங்க' ஜனாதிபதிக்கு அதிகாரம்"

இப்படி சொன்னா என்ன அர்த்தம் ? இல்ல என்ன அர்த்தம்கிறேன் ?

குத்து கொமட்ல !!!!

சின்னப் பையன் January 22, 2009 at 6:30 AM  

வாங்க ரம்யா, ஆளவந்தான் -> ரெண்டு பேரும் ஒரு மார்க்கமாத்தான் திரியறீங்க... நிறைய டாக்டர் பட்டம் கையிலே வெச்சிருக்கீங்களா???? அவ்வ்வ்....

வாங்க மெரினாபீச் -> போட்டு தாக்கறீங்க.. சான்ஸே இல்லை... சூப்பரா இருந்தது. மிக்க நன்றி... :-)))

வாங்க முத்துகுமார் -> அவ்வ்வ். இது முழு அரசியல் போஸ்ட் இல்லேன்னு சொன்னேன் . அதுக்காக போஸ்ட்லே அரசியல் இருக்காதுன்னு சொன்னேனா... ஹிஹி.. ஏதாவது புரியுதா... எனக்கு புரியல... :-)))

Anonymous,  January 22, 2009 at 1:42 PM  

Nice one - very funny...
I liked Merinabeach's comment point too - so true
~ Mona.

Anonymous,  January 23, 2009 at 12:02 PM  

நன்றி ஐயா!!!
இன்னும் சில..தோணிச்சு...

அ.ந: என்ரான்
நான்: சத்யம்
====================

நான்: சரி இவ்ளோ நேரம் நீ கேட்ட..இப்ப நான் கேட்கறேன்...
நான்: லொல்லு ப்ராசாத் யாதவ்
அ.ந: *&)*&#@#@@*#@)@#_!_(#)#@
=========================

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP