மெக்ஸிகனுக்கு மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் தெரியுமா?
முடி வெட்டும் தொழில் செய்யும் தொடர்ந்தான் இல்லையேல், நமக்கெல்லாம் ஏது அழகு - அப்படின்னு தலைவர் பாடின பாட்டு எல்லாருக்கும் தெரியும். முடி வெட்டினா மட்டும் அழகு வந்துடும்னா, நானெல்லாம் இந்த நேரத்துக்கு எங்கேயோ போயிருக்கணும். சரி அதை விடுங்க. நான் முடி வெட்டிக்கிட்ட அனுபவத்தை இங்கே சொல்றேன். படிங்க. 'அதுவா' போச்சுன்னு பதிவை படிக்காமே நேரா கடைசி பத்திக்குப் போயிடாதீங்க(!!!).
இந்த ஊருக்கு (தற்காலிகமா) வந்த புதுசுலே - முதல் தடவையா முடிவெட்டிக் கொள்ள நண்பனுடன் போயிருந்தேன். நண்பன் ஒரு அட்டகாசமான முடிவெட்டும் நிலையத்திற்கு கூட்டிப்போனான். கேட்டால் 15 டாலர் என்றார்கள். புதுசா அமெரிக்கா வர்றவங்க எல்லாம் செய்யறா மாதிரி நானும் கணக்கு போட்டுப் பாத்தேன். 15 டாலர்னா, 15 X 45 = 675 ரூபாய். நம்ம ஊர்லே கிட்டத்தட்ட 15 தடவை முடிவெட்டிக்கலாமேன்னு யோசிச்சேன். கடையிலிருந்து
தப்பிச்சி வெளியே ஓடக்கூட முடியாது. ஏன்னா நமக்கு மானம் ரொம்ப முக்கியம். இப்படி பல்வேறு எண்ணங்கள் என் மனசிலே ஆறா பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தபோது, கூட இருந்த நண்பன் படாரென்று தன் முடிவை அறிவித்தான். "ஊருக்குப் போய் அடுத்த ஒரு வருஷத்துக்கு முடி வெட்டிக்கொள்ளவே மாட்டேன். ஏன்னா அவ்ளோ பணத்தை இந்த ஒரு தடவையிலேயே செலவழிச்சிட்டேன்".
அப்புறம் அடுத்த ரெண்டு மூணு வருஷத்துக்கு இந்த ஊர்தான்னு ஆனப்புறம் - இருக்கறதிலியே மலிவா யாரு வெட்டுவாங்கன்னு (தலைமுடியைத்தாங்க) கடைகடையா தேடினேன். பக்கத்தில் இருக்கறவங்க கடைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதிலே போக முடிவானபோது - அந்த கடையில் வெட்டறவங்க எல்லோரும் மெக்ஸிகோ நாட்டுக்காரங்கதான்னு தெரிஞ்சுது. மொதல்லே இவங்களுக்கு மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் தெரியுதான்னு பாத்துட்டு, தெரிஞ்சா அவங்ககிட்டே முடிவெட்டிக்கலாம்னு நினைச்சேன். ஆனா அவங்களுக்கு கண்டிப்பா தெரியாதுன்னு நானே முடிவு பண்ணிட்டேன். ஹிஹி..
காதலுக்கும் முடிவெட்டறதுக்கும் மொழி தேவையேயில்லைன்னு முடிவு செஞ்சி அந்த கடைக்கே போக ஆரம்பிச்சேன். அந்த கடையில் முடிவெட்ட மெக்ஸிகன் ஆணும் பெண்ணுமாக பத்து பேர் இருப்பார்கள். கசமுசகசமுசன்னு ஸ்பானிஷ்லே பேசிக்கிட்டே இருப்பாங்க.
பரிசுச்சீட்டில் ஒரு கோடி ரூபாய் விழுந்தவனை உடனே கூட்டிப்போய் ஒரு பின்னவீனத்துவ கூட்டத்தில் விட்டால் எப்படி இருக்கும்? இவனுக்கு பரிசு விஷயத்தை சொல்லணும் போல் ஆவலா இருக்கும் - ஆனா அவங்க இதை கேக்க மாட்டாங்க. அவங்க சுவாரசியமா பேசிக்கிட்டிருப்பாங்க. ஆனா இவனுக்கு ஒண்ணும் புரியாது.
ஒவ்வொரு தடவையும் கிட்டத்தட்ட இதே மன நிலையில்தான் நான் முடிவெட்டிக்கொள்ள உட்காந்திருப்பேன். எனக்கு வெட்டுபவர் தன் சகாக்களுடன் சிரித்து பேசிக்கொண்டே தன் வேலையை செய்வார். அவர்கள் பேசிக்கொள்வது என் தலையைப் பற்றியா, அது இருக்கும் வடிவத்தைப் பற்றியா அல்லது அதிலிருந்து வரும் பேன், பொடுகு இவற்றைப் பற்றியா - அல்லது நிஜமாகவே வேறு ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றியா என்று எதுவுமே தெரியாமல் - எப்படா முடிப்பாங்க, கிளம்பி போகலாம்னு உக்காந்திருப்பேன்.
ஒரு தடவை எனக்கு முடிவெட்ட புதுசா ஒரு பெண் வந்தார். சஹானாவோட கார்ட்டூன்கள் புண்ணியத்துலே, எனக்கும் ஸ்பானிஷ்லே துளியூண்டு வார்த்தைகள் தெரியும். அந்த தைரியத்துலே என்ன பண்ணேன்னா, 3ஆம் நம்பர் கத்திரி போடுன்றதுக்கு - ஸ்பானிஷ்லே த்ரேஸ் - அப்படின்னுட்டேன். உடனே அவர் எனக்கு ஸ்பானிஷ் தெரியும்னு நினைச்சி - கடகடன்னு பேச ஆரம்பிச்சிட்டார்.
அலுவலகத்தில் ஆங்கிலத்தில் யாராவது வேகமா பேசினாலே, நமக்கு சூப்பர் ஸ்டார்தான் கை கொடுப்பார். (யாயா, நோ நோ அப்படின்னு சொல்றதுக்கு). இதுலே ஸ்பானிஷ் வேறேயா... அவர் ஒரு ரெண்டு நிமிடம் தொடர்ந்து பேசினபிறகு, "ஐ ஆம் சாரி. நோ ஸ்பானிஷ். ஒன்லி இங்க்லிஷ்" அப்படின்னுட்டேன். இதுவே வேறே பொண்ணாக இருந்திருந்தா கோபத்திலே என் தலையை கோழி கொத்தறா மாதிரி கொத்தி விட்டிருப்பாங்க. பாவம் அந்த பொண்ணு மேற்கொண்டு எதுவும் சொல்லாமே - காரியத்துலே கண்ணா இருந்து வேலையை முடிச்சி என்னை வெளியே அனுப்பிச்சாங்க.
ஊருக்கு வந்த புதுசுலே, பொண்ணுங்ககிட்டே முடி வெட்டிக்க வெக்கப்பட்டு ஆம்பளைங்க கடையா தேடிப்போவோம். இப்ப அப்படியே உல்டாவாயிடுச்சு. ஆம்பள முடி வெட்டறவரு திடீர்னு ஃப்ரீயாயிட்டு, உக்காந்திருக்கற நம்மள கூப்பிட்டாக்கா - யாருமேயில்லாத கடையில டீ ஆத்தறா மாதிரி - சும்மா இருக்கற கைபேசியில் யார்கிட்டேயோ அவசரமா பேசறா மாதிரி பேசிட்டு - வரிசையில் இருக்கற அடுத்த ஆளை அனுப்பிடறதுதான். ஹிஹி...
30 comments:
//ஊருக்கு வந்த புதுசுலே, பொண்ணுங்ககிட்டே முடி வெட்டிக்க வெக்கப்பட்டு ஆம்பளைங்க கடையா தேடிப்போவோம். இப்ப அப்படியே உல்டாவாயிடுச்சு. ஆம்பள முடி வெட்டறவரு திடீர்னு ஃப்ரீயாயிட்டு, உக்காந்திருக்கற நம்மள கூப்பிட்டாக்கா - யாருமேயில்லாத கடையில டீ ஆத்தறா மாதிரி - சும்மா இருக்கற கைபேசியில் யார்கிட்டேயோ அவசரமா பேசறா மாதிரி பேசிட்டு - வரிசையில் இருக்கற அடுத்த ஆளை அனுப்பிடறதுதான். ஹிஹி//
:-))))))))))
பூரிக்கட்டை உறுதி
//பரிசுச்சீட்டில் ஒரு கோடி ரூபாய் விழுந்தவனை உடனே கூட்டிப்போய் ஒரு பின்னவீனத்துவ கூட்டத்தில் விட்டால் எப்படி இருக்கும்? இவனுக்கு பரிசு விஷயத்தை சொல்லணும் போல் ஆவலா இருக்கும் - ஆனா அவங்க இதை கேக்க மாட்டாங்க. அவங்க சுவாரசியமா பேசிக்கிட்டிருப்பாங்க. ஆனா இவனுக்கு ஒண்ணும் புரியாது.
//
அவங்க சுவாரஸ்யமா பேசறது அவங்களுக்கே புரியாது.
நானும் பல காலமா இதைதான் பண்ணிக்கிட்டு இருக்கேன்
எஸ்பானியோல் பெசினதனாலா நீங்களா அவங்க மெக்ஸிகோ நாட்டுக்காரங்கன்னு முடிவு பண்ணிட்டிங்கப் போல. வேற எதுனா லத்தீன் அமெரிக்கா நாடா இருக்கப் போகுது. அதனாலதான் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கு தெரியலப் போல. :-))
நமக்கும் அங்க தங்கியிருந்தப்ப ஒரு நாள் முடிவெட்டப்போயிட்டு...அவ கேக்கறதுக்கெல்லாம் யா..யா..னு சொல்லிட்டு..கடைசிலே லாலு தலை ஸ்டைலுக்கு ஆக்கிட்டா..அதுல 2 டாலர் டிப்ஸ் வேறு
அங்க மெக்ஸிகோ... இங்க சீனா...
சலவைக்காரி ஜோக், ஸ்பானிஷ் தவிர மத்ததெல்லாம் சேம் சேம் பப்பி சேம்... :)))))))))))
உங்களுகு அந்த ஜோக் தெரியுமா?
நமக்கு நாமே முடி வெட்டும் திட்டம் சிலர் செயல்படுத்துறாங்கலாமே? அத பத்தி சொல்லுங்க...
நமக்கு இந்த மொழி பிரச்சினை இல்ல்லீங்க. ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு ஒரே ஒரு ஸ்டைலில் தாங்க முடி வெட்டத்தெரியும். அதனால் கவலைப் படாம, தலைய கொடுத்திட்டு உட்கார்ந்துகிட்டு இருக்க வேண்டியதுதான். முடிச்சவுடன் பார்த்த, மொட்ட அடிச்சு, 15 நாள் முடிவளர்ந்த தலை மாதிரி இருக்கும். என்ன ஒரு சௌகர்யம், ஒரு தடவ முடி வெட்டினா, அடுத்த 4 மாசத்திற்கு கவலையில்லை.
// முடி வெட்டினா மட்டும் அழகு வந்துடும்னா, நானெல்லாம் இந்த நேரத்துக்கு எங்கேயோ போயிருக்கணும்.//
சேம் ப்ளட்
// 'அதுவா' போச்சுன்னு பதிவை படிக்காமே நேரா கடைசி பத்திக்குப் போயிடாதீங்க(!!!).//
இந்தனை நாளா அப்படி தானே போறோம்
//கூட இருந்த நண்பன் படாரென்று தன் முடிவை அறிவித்தான். "ஊருக்குப் போய் அடுத்த ஒரு வருஷத்துக்கு முடி வெட்டிக்கொள்ளவே மாட்டேன்.//
நான் கடவுள் படம் எடுத்து முடிச்சிட்டாங்க, இல்லைனா உங்க நண்பர நாயகனா போட்டிருக்கலாம்
//பரிசுச்சீட்டில் ஒரு கோடி ரூபாய் விழுந்தவனை உடனே கூட்டிப்போய் ஒரு பின்னவீனத்துவ கூட்டத்தில் விட்டால் எப்படி இருக்கும்? //
பைத்தியம் பிடிக்கும்
சலவைகாரி ஜோக் எங்கப்பா?
வாங்க பிரேம்ஜி -> அவ்வ்வ். நான் வரல இந்த விளையாட்டுக்கு... :-))
வாங்க நசரேயன் -> ஹிஹி. லைக் லைக் சேம் சேம்....:-)))
வாங்க ஸ்ரீதர்ஜி -> ஹாஹா... ஆமா. கண்டிப்பா அப்படித்தான் இருக்கும்.... நன்றி.
வாங்க ராகி ஐயா -> ஹாஹாஹா... சூப்பர்... அப்போ முழு நேர அரசியல்வாதியாயிட்டீங்கன்னு லல்லுங்க.. ஐ மீன் சொல்லுங்க... :-)))
வாங்க மகேஷ் -> ஓகே ஓகே புரிஞ்சுது. அப்போ அது சீனாக்காரி ஜோக்தானே????
//பரிசுச்சீட்டில் ஒரு கோடி ரூபாய் விழுந்தவனை உடனே கூட்டிப்போய் ஒரு பின்னவீனத்துவ கூட்டத்தில் விட்டால் எப்படி இருக்கும்? //
யோசிக்க வேண்டிய விசயம்:)
/ Mahesh said...
அங்க மெக்ஸிகோ... இங்க சீனா...
சலவைக்காரி ஜோக், ஸ்பானிஷ் தவிர மத்ததெல்லாம் சேம் சேம் பப்பி சேம்... :)))))))))))//
Repeat'ee
வாங்க வித்யா -> அடேடே... உங்களுக்கும் தெரியாதா?.... :-((((
வாங்க சரவணகுமரன் -> ஆமா ஆமா.. இது ஒரு நல்ல பாயிண்ட்... இதை பத்தி வேறே ஒரு பதிவு போட்டுடறேன்.... நன்றி...
வாங்க இராகவன் -> ஹாஹா... அது எவ்வளவோ பரவாயில்லையே.. இங்கே நாங்க மாசா மாசம் 15 டாலர் கொடுத்தாலும், அவங்க இஷ்டத்துக்குதான் வெட்டி விடறாங்க... :-(((
வாங்க வால் -> ஹிஹி.. அந்த ஜோக்கெல்லாம் இந்த கடையிலே கிடைக்காதுங்க... வேறே கடையில் தேடிப்பாருங்க... :-)))
உங்களுக்கு ஸ்பானிஷ் நமக்கு கன்னடம்....
அவ்வளவு தான் வித்தியாசம்....!
அனுபவிங்கோ..:-)
இதுக்கு கமெண்ட் போட்டுட்டேனா.. போடலியா சத்யா...? டவுட்டா கீது!
அது என்னங்க மெக்சிகோ சலவைக்காரி ஜோக்?
எப்ப நமக்கெல்லாம் தெரியும்?
//பரிசுச்சீட்டில் ஒரு கோடி ரூபாய் விழுந்தவனை உடனே கூட்டிப்போய் ஒரு பின்னவீனத்துவ கூட்டத்தில் விட்டால் எப்படி இருக்கும்? இவனுக்கு பரிசு விஷயத்தை சொல்லணும் போல் ஆவலா இருக்கும் - ஆனா அவங்க இதை கேக்க மாட்டாங்க. அவங்க சுவாரசியமா பேசிக்கிட்டிருப்பாங்க. ஆனா இவனுக்கு ஒண்ணும் புரியாது.//
எக்சலண்ட் ! சூப்பர் !
வாங்க ராஜ நடராஜன் -> ஹாஹா.. யோசிங்க யோசிங்க... :-))
வாங்க இராம், நவநீதன், டொன் லீ -> நன்றி...
வாங்க பரிசல் -> அவ்வ்... இதிலென்ன சந்தேகம்... கமெண்ட் போட்டுட்டீங்களே??????
வாங்க இளைய பல்லவன் -> கூகிளாண்டவர்கிட்டே கேட்டீங்களா??????
நீங்களாச்சும் சொல்வீங்கன்னு பாத்தம்.
மெ.ச.ஜோக்தான்...ஹூம்.
\\
காதலுக்கும் முடிவெட்டறதுக்கும் மொழி தேவையேயில்லைன்னு முடிவு செஞ்சி அந்த கடைக்கே போக ஆரம்பிச்சேன்.
\\
:)
வாங்க பாஸ்கர் -> நன்றி...
வாங்க கும்க்கி -> ஹிஹி.. சொல்ல மாட்டம்லே... :-))
வாங்க தமிழன் -> நன்றி..
கடேசியில Gracias -னு சொல்லி அப்டியே டெவலப் பண்ணி இருக்கலாமே.. ஃபிகர் சொல்லிக்கொள்ளும்படி இல்லியா? இல்ல தங்கமணிய நெனச்சு பயமா?
எனக்கு தெரியுமே ஜோக்...
http://beemboy-erode.blogspot.com/2007/10/blog-post_5251.html
/
யாருமேயில்லாத கடையில டீ ஆத்தறா மாதிரி -
/
அசத்துங்க பாஸ்
Post a Comment