Tuesday, January 13, 2009

சஹானாவும் நானும் (அபியும் நானும் effect)



சில வருடங்களுக்கு முன், எங்க வீட்டுக்கு ஊர்லேந்து உறவினர் ஒருத்தர் வருவாரு. அப்போ அவரோட பொண்ணுக்கு 2-3 வயசிருக்கும். எப்பவும் தன் பொண்ணு புராணமே பாடிக்கொண்டிருப்பார். அவ இப்படி பண்றா, அப்படி பேசறா, அவளுக்கு எங்க வீட்டு தொலைபேசி எண் தெரியும், ரைம்ஸ் சொல்றா - இப்படி. நாங்கல்லாம் (நான், என் சகோதரன்) வந்துட்டான்யா வந்துட்டான்யா - இப்போ அந்த பொண்ணோட லேட்டஸ்ட் கதையை சொல்வாரு பாருன்னு கலாட்டால்லாம் செய்திருக்கிறோம்.


இப்போ காலச்சக்கரம் சுத்தி 2009க்கு வந்துடுச்சு.


கடந்த காலத்துலே நான் மத்தவங்களை கலாய்ச்சதால், கொஞ்சம் கவனமா இருக்கலாம் - சஹானாவைப் பற்றி யார்கிட்டேயும் ப்ளேட் போடக்கூடாது என்று நினைத்தாலும், பேச்சு எங்கெங்கோ சுற்றி சஹானாவில் வந்து முடிந்துவிடும். இங்கே ஊரில் தனியாக இருப்பதும் ஒரு காரணம். இந்தியாவில் யார் வீட்டுக்கு தொலைபேசினாலும் - சஹானா என்ன பண்றா, புதுசா என்ன பேசறான்னு கேட்பதால், நாங்களும் சொல்றதுக்கு ஒரு லிஸ்டே நினைவில் வைத்திருப்போம்.


இங்கே கட் பண்றோம். அடுத்த சீன்.


இந்த ஊருக்கு வந்து முதல் ஒன்றரை வருடங்களுக்கு ஒரு நாள் கூட மட்டமே போடாத நிலையில் ஒரு தடவை போய் எங்க தலயிடம் கேட்டேன் - “ரெண்டு நாள் லீவ் வேணும்”. அவர் - “தாராளமா எடுத்துக்கப்பா. எங்கேயாவது வெகேஷன் போறியா?”. நான் - “இல்லே. இங்கேயேதான் இருப்பேன்”. அவர் - “எதுக்கு லீவ்”. நான் - “சஹானா முதல் தடவையா ஸ்கூலுக்குப் போறா. எனக்கு பயமா இருக்கு”.



வீட்லே பேசறது ஆங்கிலம் இல்லேன்ங்கறதால், முதல் தடவையா பள்ளிக்குப் போய் இவ ஒழுங்கா பேசணுமே. பேசலேன்னாக்கூட பரவாயில்லை. ‘மத்த' விஷயங்களுக்கு வாய் விட்டு மிஸ்ஸை கேட்டு, அவங்களுக்குப் புரிஞ்சு இவளை ஓய்வறைக்கு கூட்டிப் போகணுமே, அப்படி போகறதுக்குள்ளே ஏதாவது விபத்து ஆயிட்டா கஷ்டமாச்சே - இப்படியெல்லாம் எங்க கவலை.


மேனேஜரும் வாய் விட்டு சிரிச்சி, சரி சரி, லீவ் போடு என்று அனுமதி கொடுக்க, நாங்க தம்பதி சமேதராய் பள்ளிக்குப் போய் - சஹானாக்கு சில அறிவுரைகள், மிஸ்ஸுக்கு சில வார்த்தைகள்னு எல்லாம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து டென்ஷனாய் உட்கார்ந்திருந்தோம். ஊருக்கெல்லாம் தொலைபேசி - இவ ஸ்கூலுக்குப் போயிட்டா, நாந்தான் ஆபீஸ் மட்டம் போட்டுட்டு வீட்லே உக்காந்திருக்கேன்னு சொன்னேன்.



அவ்ளோ டென்ஷனா நாங்க இருந்தாலும், இவ ஸ்கூல்லேந்து வந்து ‘Kristen is my best buddy', 'Danish is my best friend' அப்படின்னு சொன்னா. நானும் ரெண்டு நாளுக்கப்புறம் ஒழுங்கா ஆபீஸ் போக ஆரம்பிச்சேன்.


மறுபடியும் கட் பண்றோம். அடுத்த சீன்.


அபியும் நானும் விமர்சனம் எழுதும்போது யாரோ ஒருத்தர் எழுதியிருந்தாரு - “முன்னே பின்னே தெரியாத யாரோ ஒருத்தர்கிட்டே பிரகாஷ்ராஜ் தன் கதையை இப்படி சொல்வாரா?”. வெளியூர்லே இருக்கறதால் எனக்கும் இதே மாதிரி ஆயிருக்கிறது.



தங்ஸ் ஜிம்முக்கு போய்விட நான் சஹானாவை பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு கூட்டிப்போவேன். கோடை காலத்துக்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சில பெரிசுகள், பேச்சுத்துணைக்கு அமெரிக்காவில் ஆள் கிடைக்குமான்னு பார்த்துக் கொண்டே இருப்பதால், தயங்கித்தயங்கி பக்கத்தில் வந்து - நீங்க இந்தியாவா?ன்னு முதல் கொக்கி போடுவாங்க. அப்புறம் அந்த கொக்கியே பிரகாஷ்ராஜ் போடறா மாதிரி மொக்கையா மாறிடும்.


இப்போ கடைசி சீன்.


சஹானா கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டால், நாம தனியா என்ன பண்றது? - அப்படின்னு இந்த படம் பாக்கறதுக்கு முன்னாடியே நாங்க பேசிக்குவோம். அதுக்கான பதிலை இந்த படம் பாத்தபிறகு தங்கமணி சொன்னாங்க. - எங்கே வேணா வாக்கிங் போங்க - யாருக்கு வேணா மொக்கை போடுங்க. ஆனா மொக்கை போட்டுட்டு அவரை அங்கேயே விட்டுட்டு வந்துடுங்க. பிரகாஷ்ராஜ் மாதிரி தினமும் காபி சாப்பிட வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடாதீங்க.


பிகு: பாரம்பரியமிக்க தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏத்தபடி - பூச்சாண்டியில் இந்த 200வது பதிவை - சஹானாவுக்கு டெடிகேட் பண்றேன்... அவ்வ்வ்...

24 comments:

பிரேம்ஜி January 13, 2009 at 9:20 PM  

மகளை பற்றி தந்தையின் அருமையான பதிவு. 200 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்.

நசரேயன் January 13, 2009 at 9:42 PM  

வாழ்த்துக்கள் உங்களுக்கும், சஹானாவுக்கும்

முரளிகண்ணன் January 13, 2009 at 9:45 PM  

200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்

சஹானாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் January 13, 2009 at 10:36 PM  

பொங்கல் வாழ்த்துக்கள்

ILA (a) இளா January 13, 2009 at 11:59 PM  

ennathu 200aaaaaaaaaaaaaaaaaaaa?

அருப்புக்கோட்டை பாஸ்கர் January 14, 2009 at 1:08 AM  

200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள்!

வால்பையன் January 14, 2009 at 2:00 AM  

200 வது பதிவா சூப்பரு

வால்பையன் January 14, 2009 at 2:05 AM  

எனது நண்பர்கள் நிறைய பேர் எனக்கு முன்னே திருமணம் செய்து விட்டார்கள், அவர்களும் இப்படி தான் என் பொண்ணு அப்படி பண்ற, என் பையன் இப்படி பண்றான் என்று வறுத்தெடுப்பார்கள்.

எனக்கு குழந்தை பிறந்த பின்னும் அது அவர்களிடம் குறையவில்லை, என்னிடம் கேட்டார்கள். நான் சொன்னேன், எல்லா குழந்தையும் மாதிரி தான் என் குழந்தையும் வளருது, ஒருவேளை உன் குழந்தையை போல் அறிவில்லையோ என்று!

குழந்தையை பற்றி பேசுவது மகிழ்ச்சி தான், ஆனால் அதை கேட்பவர்களுக்கும் அப்படி
இருக்குமா? நான் யாரிடமும் என் குழந்தை புராணம் பாடுவதில்லை.

யாராவது கேட்டால் கூட
யா சீ இஸ் நார்மல் என்பேன்.

Anonymous,  January 14, 2009 at 3:22 AM  

டெடிகேட்டாம் டெடிகேட். என்னவோ 1000 பவுன் போட்டமாதிரி, டெடிகேட் பண்ணுறீகளோ?
200க்கு வாழ்த்துக்கள் சத்யா.

சின்னப் பையன் January 14, 2009 at 6:50 AM  

வாங்க பிரேம்ஜி, நசரேயன், முரளிகண்ணன், ராகி ஐயா -> அனைவருக்கும் நன்றி..

வாங்க இளா -> அவ்வ்வ். நான் என்ன சத்யம் ராஜுவா, நம்பரை ஏற்றி காட்ட??????

வாங்க தூயா, பாஸ்கர் -> நன்றி...

வாங்க வால் -> அது சரிதாங்க. யாராவது கேட்டாதான் எதையுமே சொல்றது. இல்லேன்னா அறுவைன்னுடுவாங்களே....

வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ். என்ன பொங்கல் அதுவுமா இப்படி பேசறீங்க???? எல்லா டிவியிலேயும் எல்லாரும் டெடிகேட் பண்றாங்களேன்னு நானும் பண்ணேன்.... ஹிஹி...

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!!!

Mahesh January 14, 2009 at 8:20 AM  

சஹானாவும் நானும்... என்னப் பத்தின பதிவோன்னு நினச்சுட்டேன்.... :)))

ய்ய்யப்ப்ப்ப்பா... 200 ஆ? சூப்பரப்பு..
வாழ்த்துகள் !!!

ஆளவந்தான் January 14, 2009 at 10:26 AM  

//
இந்த 200வது பதிவை - சஹானாவுக்கு டெடிகேட் பண்றேன்.
//

வாழ்த்துக்கள் பூச்சாண்டி.. சாரி.. ச்சின்னப்பையன்

ஆளவந்தான் January 14, 2009 at 10:29 AM  

//
எங்கே வேணா வாக்கிங் போங்க - யாருக்கு வேணா மொக்கை போடுங்க.
//

இத தான் தெளிவா.. உங்க புரொபைலிலே சொல்லி இருக்கீகளே த்ல... அதுவும் சரி தான்.. அப்பப்போ அசை போட்டு பாத்துக்கணும் :)

”தண்ணி 'தெளிச்சி' விட்டா போறாதுன்னு, குடத்தை அப்படியே தலையிலே கவுத்துட்டாங்க தங்கமணி!!”

கப்பி | Kappi January 14, 2009 at 11:13 AM  

பெரும் ஏமாற்றம்! 'அபியும் நானும்' பார்த்தீங்கதானே?? 'லைஃப்புன்னா', 'யோசிச்சுப் பார்த்தா' ' திரும்பி பார்த்தா'ன்னு நாலு பக்கத்துக்கு கேப் விடாம எழுதியிருக்க வேண்டாமோ? :))

200க்கு வாழ்த்துகள்!

Vidhya Chandrasekaran January 14, 2009 at 11:35 AM  

200 பதிவுக்கு வாழ்த்துக்கள்:)
எனக்கும் இதே அனுபவம் தான். யாராவது தன் குழந்தைகளைப்பற்றி பெருமையாக பேசினால் மொக்கையாகத் தோணும். ஆனா இப்போ என் பையன பத்தி பேசாம இருக்க முடியல. It happens to every parent i guess:)

ஊர்சுற்றி January 14, 2009 at 1:09 PM  

200-வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!

இராகவன் நைஜிரியா January 14, 2009 at 6:16 PM  

வாழ்த்துக்கள் ச்சின்னப் பையன்.

200 மேலும் வளர்ந்து, 2000 ஆகட்டும்.

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

வெண்பூ January 15, 2009 at 1:08 AM  

வாவ்.. 200வது பதிவா.. வாழ்த்துக்கள் ச்சின்னப்பையன்.. கலக்குங்க..

சின்னப் பையன் January 15, 2009 at 9:06 AM  

வாங்க மகேஷ் -> ஹாஹா.. சஹானாவும் நானும் - நீங்களும் ஒரு பதிவு போடுங்க... :-)

வாங்க ஆளவந்தான் -> ஹிஹி.. நான் சொன்னதைத்தான் போடுவேன்.. போடுறதைதான் சொல்வாங்க... :-))

வாங்க கப்பி -> அவ்வ்வ்...

வாங்க வித்யா -> சேம் ப்ளட்... :-))

வாங்க ஊர் சுற்றி, தமிழன், இராகவன், வெண்பூ -> மிக்க நன்றி...

Anonymous,  January 15, 2009 at 7:36 PM  

I often come to ur site - u write so nice with so much humour sense- I really enjoy reading ur blog - Keep it up!
And for this post- my 2 cents: Y dont u go for 2nd kid? ;-)
- Mona

சின்னப் பையன் January 16, 2009 at 5:44 AM  

Hello Friend Mona -> Thanks for your continuous visit and also for that 2 cents... :-)) The first kid is mandatory but the 2nd depends upon lot of factors like other commitments, personal issues, etc etc....., right? :-))

மங்களூர் சிவா February 4, 2009 at 2:37 PM  

/
எங்கே வேணா வாக்கிங் போங்க - யாருக்கு வேணா மொக்கை போடுங்க. ஆனா மொக்கை போட்டுட்டு அவரை அங்கேயே விட்டுட்டு வந்துடுங்க. பிரகாஷ்ராஜ் மாதிரி தினமும் காபி சாப்பிட வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடாதீங்க.
/

:)))

200க்கு வாழ்த்துக்கள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP