Monday, January 19, 2009

ஒரு மீட்டிங்கில் நடந்ததும், நிஜம்ம்மா நடந்ததும்!!!

ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஒரு மீட்டிங். மேனேஜர் அவரது 5 சகாக்களுடன் ஒரு அறையில்.


மேனேஜர் : நான் சிறிது வேலை செய்து இந்த மென்பொருளின் டிசைனை உருவாக்கியிருக்கிறேன். இப்போ அதை உங்களுக்கு விளக்கறேன். ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலோ குறைகள் இருந்தாலோ, அதை தயங்காம சொல்லுங்க.


*****

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த அறையில் நடந்தது இது:

சுரேஷ்: கவனத்துடன் மேனேஜர் சொல்வதை கேட்கிறார். பரபரவென்று தன் மடிக்கணிணியில் ஏதோ டைப்புகிறார்.

மாலா: மேனேஜர் சொல்வதை அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொள்கிறார்.

ரமேஷ்: தன் கைப்பேசியை மேஜைக்கு அடியில் வைத்துக் கொண்டு அடிக்கடி அதில் ஏதோ தட்டுகிறார்.

கலா: பென்சிலால் தன் கன்னத்தில் தட்டியபடியே முழு மீட்டிங்கிலும் மேனேஜரையே கவனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஹிதேஷ்: ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவை ‘எக்ஸ்யூஸ் மீ' என்று சொல்லி அறைக்கு வெளியே போய் வருகிறார்.


*****


அந்த அரை மணி நேரத்தில் நிஜம்ம்மா நடந்தது இது:

சுரேஷ்: காலங்கார்த்தாலேந்து இணையத்தையே பாக்கலை. இவர் வேறே மீட்டிங்னு கூட்டிட்டு வந்துட்டாரு. இந்த மீட்டிங்கின் குறிப்புகள் எடுக்கறா மாதிரி மடிக்கணிணியில் தமிழ்மணத்தைப் பாப்போம். அங்கங்கே பின்னூட்டம் போட்டு வைப்போம். அப்பத்தான் காத்து வாங்கிட்டிருக்கிற நம்ம கடைக்கு யாராவது வருவாங்க.


மாலா: இன்னிக்கு சாயங்காலம் ஷாப்பிங் போகும்போது என்னென்ன வாங்கணும்னு ஒரு லிஸ்ட் எழுதுவோம். ரொம்ப நாளா ஒரு வெள்ளை சுடிதார் வாங்கணும்னு நினைச்சிட்டிருக்கேன். இன்னிக்கு எப்படியாவது வாங்கிடணும். இவருக்கு ஒரு கர்சீப் வாங்கி கொடுத்துடலாம்.


ரமேஷ்: இந்த டிசைன் எல்லாம் சரியாத்தான் இருக்கும். அதான் மத்தவங்க கேட்டுக்கிட்டிருக்காங்களே. நான் என் வேலையை பாக்கறேன். இந்த அரை மணி நேரத்திலே ஒரு பத்து மெசேஜாவது ட்விட்டர்லே போடணும். ட்விட்டர் கண்டுபிடிச்சவன் எங்கிருந்தாலும் வாழ்க!!!


கலா: நேத்து கரண்ட் கட் ஆனதால, எந்த சீரியலும் பாக்கவே முடியல. இந்த மீட்டிங் முடிஞ்சதும், தோழிக்கு தொலைபேசி எல்லா சீரியலிலும் என்ன நடந்ததுன்னு கேக்கணும். முக்கியமா கோலங்கள். பாவம் அந்த தேவயானி. ரொம்ப வருஷமா துன்பத்தையே அனுபவிச்சிட்டுருக்கா. அவளுக்கு சீக்கிரத்தில் ஒரு நல்ல காலம் பொறந்தா தெருக்கோடி பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கணும்.


ஹிதேஷ்: இந்த அபிஅப்பா எப்படி இப்படியெல்லாம் எழுதறாரு. ரூம் போட்டு யோசிப்பாரா. என்னாலே சிரிப்பை அடக்கவே முடியல. இப்பத்தான் வெளியே போய் சிரிச்சிட்டு வந்தேன். மறுபடி போனா மேனேஜர் என்ன நினைப்பாரோ? சரி. என்ன நினைச்சா எனக்கென்ன? ஒரு நிமிஷம் வெளியே போய் சிரிச்சிட்டு வந்துடறேன் - சார். எக்ஸ்யூஸ் மீ..


*****


மேனேஜர்: இவ்ளோதான் நான் சொல்ல வந்தது. இப்போ இந்த டிசைன் ஓகேவா, இல்லே ஏதாவது பிரச்சனை வருமான்னு சொல்லுங்க.

சுரேஷ்: இது ரொம்ப அற்புதமான டிசைன்.

மாலா: அரை மணி நேரம் போனதே தெரியல.

ரமேஷ்: நாங்க இவ்ளோ நேரம் உன்னிப்பா கவனிச்சி கேட்டதிலே, எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

கலா: நாம இந்த டிசைனை வெச்சே மென்பொருளை தொடருவோம்.

ஹிதேஷ்: இதை அப்படியே க்ளையண்டுக்கு அனுப்பிடலாம்.


*****


அவ்ளோதான் பதிவு. படிக்கற உங்க கம்பெனியில் நடக்கிற மீட்டிங், இது மாதிரியில்லாமெ வித்தியாசமா இருந்தா, அதை தயங்காமே பின்னூட்டத்தில் சொல்லுங்க...!!!

31 comments:

சரவணகுமரன் January 19, 2009 at 10:01 PM  

ஹா ஹா ஹா...

இதுல நீங்க எங்க இருக்கீங்க?

சரவணகுமரன் January 19, 2009 at 10:02 PM  

அந்த மென்பொருள் எப்படி வந்துச்சுன்னு சொல்லுங்க. அதுவும் காமெடியாத்தான் இருக்கும்.

ஆளவந்தான் January 19, 2009 at 10:16 PM  

மீட்டிங் மினிட்ஸ்-னு ஒன்னு இருக்கே.. அது யாரு பண்ணுவா?

cheena (சீனா) January 19, 2009 at 10:29 PM  

இப்படீ எல்லாம் வாரப்டாது - முன் ஜாக்கிரத முத்தண்ணானு ஒருத்தன் எல்லா டீமுலேயும் இருப்பான் - அவன் கேக்கற சந்தேகத்துக்குப் பதில் சொல்லி மாளாது - ஆமா

Mahesh January 19, 2009 at 10:36 PM  

நீங்களேதானெ அந்த ரமெஷும் சுரெஷும் ஹிதேஷும்... ட்ரிபிள் ஆக்டா?

துளசி கோபால் January 19, 2009 at 10:40 PM  

இன்னிக்கு வரட்டும்.ரெண்டுலே ஒன்னு பார்த்துறலாம்.

Vidhya Chandrasekaran January 19, 2009 at 11:21 PM  

நீங்க தான அந்த டேமஜர்??
நமக்கு மீட்டிங்ல போய் உட்கார்ந்தா ஏதோ இங்கிலீஷ் படம் பார்க்க போன மாதிரி ஒன்னுமே புரியாது. யெஸ், நோவைத் தவிர வாயே திறக்கமுடியாது.

Unknown January 19, 2009 at 11:34 PM  

உங்க மீட்டிங்ல எல்லாம் டேமேஜர் தான் பேசுவாரா?? எங்க மீட்டிங்ல எல்லாம் நாங்க பேசுவோம்.. அவரு கேள்வி மட்டும் தான் கேட்பாரு.. (தருமி பரம்பர)... :((

வினோத் கெளதம் January 20, 2009 at 3:34 AM  

//அங்கங்கே பின்னூட்டம் போட்டு வைப்போம். அப்பத்தான் காத்து வாங்கிட்டிருக்கிற நம்ம கடைக்கு யாராவது வருவாங்க.//

இந்த விஷயம் தான் எங்கயோ இடிக்கிது..

சின்னப் பையன் January 20, 2009 at 5:45 AM  

வாங்க பிரேம்ஜி -> நன்றி...

வாங்க சரவணகுமரன் -> ஹிஹி. இதிலே நான் எங்கேயுமே இல்லீங்க... இது கற்பனைதான்... :-)))

வாங்க ஆளவந்தான் -> ஒரு வேளை பார்ட்-2 வந்தா, மினிட்ஸ் அதில் வருமாயிருக்கும்... :-))))

வாங்க சீனா ஐயா -> அது சரிதாங்க. அந்த ‘ஆறாவது' ஆள் இந்த பதிவுலே வரலே.... :-))))

சின்னப் பையன் January 20, 2009 at 5:47 AM  

வாங்க மகேஷ் -> ஹிஹி. நான் என்ன உலக நாயகனா, இவ்ளோ ஆக்ட் கொடுக்க???? நான் இதிலே இல்லவே இல்லீங்கோ... :-)))

வாங்க துளசி மேடம் -> ஹாஹா... பாத்துட்டு சொல்லுங்க.... :-)))

வாங்க ராகி ஐயா -> நன்றி...

வாங்க வித்யா -> ஹிஹி... லைக் லைக் சேம் சேம்... :-)))

Anonymous,  January 20, 2009 at 7:08 AM  

அண்ணே நம்ப பிளாக்கை யாரோ கடத்திட்டாங்க. அதான் உங்களுக்கு பின்னூட்டம் போடல. வேற ஒன்னு ஆரமிச்சிட்டு அப்புறம் வர்றேன் :(

ராஜ நடராஜன் January 20, 2009 at 7:51 AM  

கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே பார்த்தா வலது பக்கமா நின்னீங்க.இப்ப இடது பக்கமா நிற்கிறீங்க மீட்டிங்ல:)

அன்புடன் அருணா January 20, 2009 at 8:49 AM  

நீங்கதானே அந்த டேமேஜர்????
hahahahaha....nice fun.
anbudan aruNaa

சின்னப் பையன் January 20, 2009 at 9:01 AM  

வாங்க அப்பு சிவா -> இது ' நிஜம்ம்ம்மாவே' கற்பனைதாண்ணே... :-))))

வாங்க ஸ்ரீமதி -> ஹிஹி. எங்களுக்கு தூக்கம் வர்றா மாதிரி இருந்ததுன்னா, அவர பேச விட்டுடுவோம்... :-))

வாங்க வினோத் கௌதம் -> அட.. உண்மையத்தாங்க சொல்றேன்... :-))

வாங்க புதுகைத் தென்றல் -> மிக்க நன்றி...

நசரேயன் January 20, 2009 at 9:57 AM  

இன்னும் சிரிச்சு கிட்டு தான் இருக்கேன்

Veera January 20, 2009 at 10:28 AM  

என்ன இது!? தொழில் ரகசியத்த எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு!!? :-))

narsim January 20, 2009 at 11:18 AM  

இந்த நேரத்துல இங்க வந்தது தப்பாய்ய்ய்யா....பிரமாதக் கடி..பகடி..

வால்பையன் January 20, 2009 at 11:28 AM  

இதுல நீங்க எங்க வர்ரிங்க?
அத முதல்ல சொல்லுங்க

சின்னப் பையன் January 20, 2009 at 11:58 AM  

வாங்க அப்துல்லாஜி -> அடடா... ப்ளக்கை கடத்திட்டாங்களா.... :-((((((

வாங்க ராஜ நடராஜன் -> ஹிஹி.. நீங்களும் அங்கேயேதான் இருந்தீங்களா!!!!!!

வாங்க அருணா -> அவ்வ்வ்... நான் இல்லீங்கோ..... :-)))

வாங்க நசரேயன் -> சிரிங்க... சிரிங்க... நல்லா சிரிங்க... நன்றி... :-))

சின்னப் பையன் January 20, 2009 at 4:45 PM  

வாங்க வ்ரா, விபூஷ், நர்சிம், வால் மற்றும் இராம் -> மிக்க நன்றி... :-))) மீண்டும் வருக...

RAMYA January 21, 2009 at 9:28 PM  

//*
ஹிதேஷ்: ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவை ‘எக்ஸ்யூஸ் மீ' என்று சொல்லி அறைக்கு வெளியே போய் வருகிறார்.
*//

உண்மையை சொல்லுங்க இது நீங்க தானே !!!

RAMYA January 21, 2009 at 9:29 PM  

//*
ஹிதேஷ்: இதை அப்படியே க்ளையண்டுக்கு அனுப்பிடலாம்.
*//

நீங்களே தான் இல்லே அந்த பாவப்பட்ட மானேஜர் நீங்களா இருக்கணும்.

எது நீங்க சீக்கிரம் சொல்லுங்க
எல்லாரும் காத்திருக்காங்க!!!

RAMYA January 21, 2009 at 9:29 PM  

தாமதாமா படிச்சாலும் ஒரே சிரிப்பா வந்தது!!!

வெண்பூ January 31, 2009 at 5:41 AM  

உண்மையெல்லாம் இப்படி போட்டு ஒடச்சிட்டீங்களே ச்சின்னப்பையன்.. :)))

மங்களூர் சிவா February 4, 2009 at 2:27 PM  

/
உங்க கம்பெனியில் நடக்கிற மீட்டிங், இது மாதிரியில்லாமெ வித்தியாசமா இருந்தா, அதை தயங்காமே பின்னூட்டத்தில் சொல்லுங்க...!!!
/

எங்க கம்பெனி சீக்ரெட்டெல்லாம் எப்பிடி உங்களுக்கு தெரிஞ்சது!?!?!?

:)))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP