Sunday, January 4, 2009

திருமண நாள் இனிப்பு...!!!

முன்னுரை:

இந்த கற்பனைக் கதையில் இரண்டு கதாபாத்திரங்கள். கணவன் மற்றும் மனைவி. எந்த வீட்லேயும் கணவன் பேச்சை யாருமே கேக்கறதில்லைன்றதாலே, இங்கேயும் கதை முழுவதும் மனைவி மட்டுமே பேசப்போறாங்க. நடு நடுவே புள்ளி வெச்ச இடத்திலெல்லாம் கணவன் ஏதோ ஒண்ணு சொல்றமாதிரி கற்பனை பண்ணிக்குங்க.


முக்கியமான டிஸ்கி:

இது என் சொந்தக்கதை இல்லை.

-----

காலை 10 மணி:
(ட்ரிங் ட்ரிங்) என்னங்க, நாந்தான் பேசறேன்

....

நீங்க எப்பவுமே பிஸிதான். ஒரு ரெண்டு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க.

...

நம்ம திருமண நாள் வருது. ஞாபகம் இருக்கா?

...

என்னது அடுத்த வாரமா? பக்கத்துலே இருந்திருந்தீங்கன்னா நடக்கறதே வேறே... என் தலயெழுத்து.. நல்லா கேளுங்க. நாளைக்குத்தான் நம்ம திருமண நாள்.

...

சரி சரி... மன்னிச்சிட்டேன். என்ன ஸ்வீட் பண்ணட்டும்னு சொல்லுங்க.....அப்புறம் அது செய்யலியா இது செய்யலியான்னு கேக்கக்கூடாது.

...

சரி இன்னும் கொஞ்ச நேரத்துலே ஒரு ஸ்வீட் செய்துட்டு உங்களை கூப்பிடறேன். பை....

மதியம் 1 மணி:
(ட்ரிங் ட்ரிங்) என்னங்க, நாந்தான் பேசறேன்.

...

நம்ம வீட்லே இருக்கே ஒரு சின்ன சுத்தியல், அது உடைஞ்சி போச்சு.

...

நான் என்ன பண்ணேன். நம்ம கல்யாண நாளுக்குத்தான் ஸ்வீட் செய்யலாமேன்னு மைசூர் பாக் செஞ்சேன். அது என்னடான்னா, கெட்ட்ட்டியா ஆயிடுச்சு. கத்தியாலே அதை துண்டு துண்டா வெட்டவே முடியல. அதனால், சுத்தியாலே ரெண்டு தட்டு தட்டினேன். அது பொடிப்பொடியா ஆயிடுச்சு. பலமா அடிச்சதுலே சுத்தியும் பிச்சிக்கிட்டு வந்துடுச்சு.

...

சரி சரி கத்தாதீங்க.

...

எனக்கு ஒண்ணும் ஆகலே. சரி விடுங்க. வேறே ஏதாவது ட்ரை பண்ணிட்டு மறுபடி கூப்பிடறேன்.

...

மதியம் 3 மணி:

(ட்ரிங் ட்ரிங்) என்னங்க, நாந்தான்.

...

ஒண்ணும் ஆகலே. தொணதொணங்காமே நான் சொல்றத கேளுங்க.

...

நம்ம வீட்லே ஒரு வாணலி இருக்குதில்லே. அத இனிமே பயன்படுத்த முடியாது.

...

யாரும் தூக்கிட்டெல்லாம் போகலே. நாந்தான் கோதுமை அல்வா பண்ணலாம்னு பாத்தேன். எல்லாம் உங்க திருமண நாளுக்குத்தான். அது வாணலியிலே ஒட்டிக்கிட்டே வரவே மாட்டேங்குது. நானும் என்னென்னவோ பண்ணி பாத்துட்டேன். ம்ஹூம். அல்வா வரவேயில்லே. அதனால், அல்வாவோட வாணலியை குப்பைத்தொட்டியில் போட்டுட்டேன்.

...

ரொம்ப சாரிங்க.

...

சரி. இன்னும் ஒரே ஒரு சான்ஸ்தான். ஈஸியா ஒண்ணு பண்ணப்போறேன். நீங்களே அசந்து போயிடுவீங்க பாருங்க. நான் மறுபடி கூப்பிடறேன்.

...

மாலை 5 மணி:
(ட்ரிங் ட்ரிங்) ஹலோ கேக்குதா.

...

நான் தோத்துட்டேன். எனக்கு ஒண்ணுமே செய்ய வரலை. அழுகை அழுகையா வருது.

...

ஒண்ணுமில்லே. ரொம்ப சிம்பிளா இருக்குமேன்னு குலோப் ஜாமூன் பண்ணேன். அதுவும் சரியாத்தான் வந்துக்கிட்டிருந்தது. ஆனா பாருங்க.

...

சொல்றத கேளுங்க. அது உருண்டையாவே இல்லே. பொடிப்பொடியா ஆயிடுச்சு. உங்களுக்கு பொடி குலோப் ஜாமூன் பிடிக்குமா?

...

சரி அது இருக்கட்டும். வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா கொடுத்துடலாம். நம்ம கல்யாண நாளுக்குத்தான் என்ன பண்றதுன்னே தெரியல. நீங்க எதுக்கும் வீட்டுக்கு வரும்போது சக்கரை வாங்கிட்டு வாங்க. எல்லா சக்கரையும் இன்னிக்கு ஒரே நாள்லே தீந்துடுச்சு.

...

அடுத்த நாள் காலை 7 மணி:

என்னங்க எழுந்திருங்க. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.

...

எங்கே வாய திறங்க பாப்போம். இந்த இனிப்பு சாப்பிடுங்க.

...

சக்கரை.

29 comments:

ஆளவந்தான் January 4, 2009 at 9:28 PM  

என்ன இருந்தாலும் அவங்களோட முயற்சியை பாராட்டியே தீரனும்

Mahesh January 4, 2009 at 11:01 PM  

இதுக்கு பேர்தான் விடாமுயற்சி... உங்க பொறுமை கடலினும் பெரிதுங்க...

திருமண நாள் வாழ்த்துகள் !!!!

இராகவன் நைஜிரியா January 5, 2009 at 12:19 AM  

ஹா...ஹா..

எல்லா வீட்டுகாரர்களுக்கும் உள்ள ஒரு பொறுமைத்தான் இவருக்கு இருக்கு.

... இந்த இடங்களுக்கு எல்லா இடத்த்திற்கும் ஒரே பொருத்தமான பதில் “ம்” மட்டும்தான். அதிலேயே பல மாடுலேஷன்கள் மட்டும் உண்டு அவ்வளவுதான்

வால்பையன் January 5, 2009 at 2:27 AM  

எங்க வீட்டு சட்டி கூட ஒரு தடவை குப்பை தொட்டி போயிற்று

தாரணி பிரியா January 5, 2009 at 2:37 AM  

நாங்க எல்லாம் இந்த மாதிரி இல்லை

முதல்ல பர்மிஷன் எல்லாம் கேட்டதே தப்பு

ரெண்டாவது எதையாவது செஞ்சு அது வர்ற பதத்தை வெச்சு அதுக்கு நாமளே ஒரு பேர் வெச்சுக்கணும்

மூணாவது பெரிய தப்பு தங்கமணி சமைச்சது.

ரங்கமணிக்கு இதை செய்யுங்கன்னு ஆர்டர் போட்டுட்டு வேற வேலை பார்த்து இருக்கணும்.

இராகவன் நைஜிரியா January 5, 2009 at 2:44 AM  

// தாரணி பிரியா said...
நாங்க எல்லாம் இந்த மாதிரி இல்லை

முதல்ல பர்மிஷன் எல்லாம் கேட்டதே தப்பு

ரெண்டாவது எதையாவது செஞ்சு அது வர்ற பதத்தை வெச்சு அதுக்கு நாமளே ஒரு பேர் வெச்சுக்கணும்

மூணாவது பெரிய தப்பு தங்கமணி சமைச்சது.

ரங்கமணிக்கு இதை செய்யுங்கன்னு ஆர்டர் போட்டுட்டு வேற வேலை பார்த்து இருக்கணும்.//

இவங்கதான் ரொம்ப நல்லவங்கப்பா!!
-:)

சின்னப் பையன் January 5, 2009 at 5:58 AM  

வாங்க ஆளவந்தான் -> ஆமா. ஆமா. கண்டிப்பா.. நன்றி....:))

வாங்க மகேஷ்ஜி -> அடடே.. நீங்க டிஸ்கி பாக்கலியா?????... மே மாத நாளுக்கு இன்னிக்கே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி... :-)))

வாங்க இராகவன் -> கரெக்டா சொன்னீங்க... 'ம்' தவிர வேறே எதுவுமே சொல்ல முடியாது எப்பவுமே... ஹிஹி....

Vidhya Chandrasekaran January 5, 2009 at 6:49 AM  

தாரணிபிரியா சொல்றது தான் சரி. எல்லாத்தையும் ரங்கமணிய செய்ய சொல்லனும். இல்லைன்னா ஹோட்டல்ல இருந்து வாங்கிட்டு வந்துடுனும்.

பரிசல்காரன் January 5, 2009 at 6:56 AM  

உங்களை எல்லாம் விட்டுவைத்திருக்கிறார்களே வீட்டில்.. அவங்களைச் சொல்லணும்யா...

ஒரு பழைய ‘கடி’
அந்த அல்வா சிவாஜியைப் போல என்று நினைக்கிறேன்..

பாத்திரத்தோடு ஒன்றிவிட்டது!

சின்னப் பையன் January 5, 2009 at 7:19 AM  

வாங்க வால் -> நீங்க சொல்றது அடுப்புச்சட்டிதானே??? ஹிஹி... அதுவாத்தான் இருக்கும்.... :-))

வாங்க தாரணி பிரியா -> ஹாஹா... நெனெச்சேன்... இப்படி ஏதாவது சொல்வீங்கன்னு... சினிமாக்காரவுங்க மாதிரி சொன்னா ஒத்துப்பீங்களா - சமுதாயத்துலே நடக்கறதுதாங்க நாங்க கதை எழுதறோம்.... :-)))))

வாங்க இராகவன் -> நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவங்கன்னு சொல்லுங்க...:-))

வாங்க SKY -> அது சரிதாங்க.. கு.ப ச(ர்)க்கரைன்னாவது போட்டிருக்கலாம். நன்றி...

Anonymous,  January 5, 2009 at 8:58 AM  

//... இந்த இடங்களுக்கு எல்லா இடத்த்திற்கும் ஒரே பொருத்தமான பதில் “ம்” மட்டும்தான். அதிலேயே பல மாடுலேஷன்கள் மட்டும் உண்டு அவ்வளவுதான்//

அதே அதே. அதையும் கொஞ்சம் சத்தமாக் கூடச் சொல்லக் கூடாது.

நவநீதன் January 5, 2009 at 9:20 AM  

கெளம்பிட்டாருய்யா கெளம்பிட்டாரு....
உங்களுக்கு ரொம்ப தான் தைகிரியம் ஜாஸ்தி....

நாமக்கல் சிபி January 5, 2009 at 9:30 AM  

வடகரையார் கொஞ்சம் அதிகமா பேசிட்டார்னு நினைக்கிறேன்!

சின்னப் பையன் January 5, 2009 at 9:34 AM  

வாங்க வித்யா -> தாரணி பிரியாவோட குரலை தனியா ஒலிக்க விடாமே அவங்க கூட சேர்ந்ததற்கு நன்றிகள் பல. ஹிஹி நானும் உங்க கட்சிதான்....:-))

வாங்க பரிசல் -> அல்வாஜி சூப்பர்... :-))

வாங்க வேலன் ஐயா -> ஹாஹா... ஒரு சாதாரண 'ம்'லியே பெரிய ஆராய்ச்சி செய்திருக்கீங்க போல... :-))))

வாங்க நவ நீதன் -> பொது வாழ்க்கைன்னு வந்திட்டா இதெல்லாம் சாதாரணமப்பா... :-))))

T.V.ராதாகிருஷ்ணன் January 5, 2009 at 9:45 AM  

என்ன இருந்தாலும் உங்க முயற்சியை உங்க பாராட்டியே தீரனும்
:-)))))))))

ஆளவந்தான் January 5, 2009 at 10:58 AM  

//
ரெண்டாவது எதையாவது செஞ்சு அது வர்ற பதத்தை வெச்சு அதுக்கு நாமளே ஒரு பேர் வெச்சுக்கணும்
//

பிரியா,
இப்படியா ஊர் அறிஞ்ச ரகசியங்களை வெளியில சொல்றது.

சின்னப் பையன் January 5, 2009 at 11:57 AM  

வாங்க சிபி -> 'ம்' கூட சொல்லக்கூடாதுன்றீங்களா???? தலைவா, எங்கேயோஓஓஒ போயிட்டீங்க (அபூர்வ சகோதரர்கள் பாணியில் படிக்கவும்!!!).

வாங்க ராகி ஐயா -> ஹிஹி.. நன்றிங்க....

வாங்க ஆளவந்தான் -> ஹாஹா... சட்டுன்னு தெரியாம இந்த மாதிரி உண்மைகளை போட்டு உடைச்சிடறாங்க... :-))

நசரேயன் January 5, 2009 at 12:13 PM  

இது சொந்த கதை இல்லன்னு நம்பிட்டேன், இது சிறுகதை யல்ல தொடர் கதை

Kumky January 5, 2009 at 12:15 PM  

ம்...எல்லாரையும் வாங்க வாங்கன்னு வாயார கூப்ப்ட்டு நன்றி சொல்றார்....நா என்ன பண்றது..>?

Kumky January 5, 2009 at 12:17 PM  

ஹி...ஹி...வீட்ல கூப்ட்டு படிக்க சொல்லி நல்ல பேர் வாங்கிட்டங்ணா../

புதுகை.அப்துல்லா January 5, 2009 at 12:57 PM  

//முக்கியமான டிஸ்கி:

இது என் சொந்தக்கதை இல்லை
//

க்கும்...உங்கள எந்தக் காலத்துல நம்புனோம் நாங்க :))))))

சின்னப் பையன் January 5, 2009 at 4:33 PM  

வாங்க நசரேயன் -> அது சரி. எல்லா வீட்லேயும் நடக்கற தொடர்கதைன்றீங்க... பின்றீங்களே.... :-))

வாங்க கும்க்கி -> ஹாஹா... கலக்கறீங்க போங்க... :-)) (தெளிஞ்சிடுச்சா!!!!)

வாங்க அப்துல்லா -> அவ்வ்வ்...

பிரேம்ஜி January 5, 2009 at 8:00 PM  

//நான் என்ன பண்ணேன். நம்ம கல்யாண நாளுக்குத்தான் ஸ்வீட் செய்யலாமேன்னு மைசூர் பாக் செஞ்சேன். அது என்னடான்னா, கெட்ட்ட்டியா ஆயிடுச்சு. கத்தியாலே அதை துண்டு துண்டா வெட்டவே முடியல. அதனால், சுத்தியாலே ரெண்டு தட்டு தட்டினேன். அது பொடிப்பொடியா ஆயிடுச்சு. பலமா அடிச்சதுலே சுத்தியும் பிச்சிக்கிட்டு வந்துடுச்சு.//

:-))))))))))))))))))))))))))))
சிரித்த சிரிப்பில் வயிற்று வலியே வந்துவிட்டது.கலக்கிட்டீங்க.உங்கள் பதிவுகளில் சிறந்த நகைச்சுவை பதிவு என்று இதை சொல்வேன்.

சதங்கா (Sathanga) January 5, 2009 at 10:08 PM  

//ஒண்ணும் ஆகலே. தொணதொணங்காமே நான் சொல்றத கேளுங்க.

...//

ஹைலைட்டேய்ய்ய்ய்ய்ய் :))))

சரவணகுமரன் January 6, 2009 at 8:00 AM  

கலக்கலா இருக்கு...

சின்னப் பையன் January 6, 2009 at 11:58 AM  

வாங்க பிரேம்ஜி -> நன்றிங்கண்ணா...

வாங்க சதங்கா -> ஹாஹா... அனுபவமோ????? :-)))

வாங்க சரவணகுமரன் -> நன்றி...

மங்களூர் சிவா February 4, 2009 at 3:03 PM  

/
Mahesh said...

இதுக்கு பேர்தான் விடாமுயற்சி... உங்க பொறுமை கடலினும் பெரிதுங்க...

திருமண நாள் வாழ்த்துகள் !!!!
/

ரிப்பீட்டு
வாழ்த்துக்கள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP