Sunday, January 25, 2009

படுக்கை நேரத்துக் கதைகள்...



தினமும் படுக்கும்போது சஹானாவுக்கு ஏதாவது ஒரு கதை சொன்னாத்தான் தூக்கமே வருது. ஆரம்பத்துலே புத்தகத்தை வைத்துக் கதை சொல்லிக் கொண்டிருந்தோம். கொஞ்ச நாள்
ஆனப்பிறகு பல கதைகள் 'ரிப்பீட்டே...' ஆகிக்கொண்டிருந்தது. இப்பல்லாம் நமக்கு பயங்கர டயர்டா இருக்கும்போது, ஏதாவது ஒரு மொக்கைக் கதை சொல்லி ‘குட் நைட்'
சொல்லிடுவேன்.

தினமும் இந்த மாதிரி சொல்றதில்லீங்க.... வாரத்தில் ஏழு நாட்கள் மட்டும்தான்.

அப்படி நான் சொன்ன மொக்கைக் கதைகளில் சில இங்கே.

1. ஒரு ஊர்லே டாம் அண்ட் ஜெர்ரி இருந்துச்சாம். அதோட கதை முடிஞ்சி போச்சாம். The end.

2. டாமும் ஜெர்ரியும் சண்டை போட்டுட்டிருந்தாங்க. ஓடினாங்க. ஆடினாங்க. சறுக்கினாங்க. விழுந்தாங்க. கடைசியில் ரெண்டு பேரும் நண்பர்களாயிட்டாங்க. அவ்ளோதான் கதை. The
end.

3. ஒரு ஊர்லே... யாருமே இல்லியாம். அதனால் கதையும் இல்லையாம். The end.

4. ஒரு ஊர்லே எல்லோரும் தூங்கிக்கிட்டிருந்தாங்களாம்.... இப்போ கதை சொன்னா எல்லோரும் எழுந்துடுவாங்க. அதனால் நாளைக்கு சொல்றேன். அவ்ளோதான். The end.

5. ஒரு ஊர்லே சஹானா சஹானான்னு ஒரு பொண்ணு இருந்தாளாம். அவளோட கதைதான் உனக்கு தெரியுமே... அவ்ளோதான்... The end.

6. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா... என்ன ஆச்சுன்னா... ஒண்ணுமே ஆகலியாம். அவ்ளோதான் கதை... The end.

7. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா... ரெண்டு நாள் என்ன ஆச்சுன்னா... மூணு நாள் என்ன ஆச்சுன்னா.... பத்து... The end.

8. ஒரு ஊர்லே ஒரு பாப்பா இருந்துச்சாம். அவ பேரு சஹானா. அவளுக்கு அவங்கப்பா தினமும் கதைகள் சொல்வாராம். ஒரு நாள் என்ன கதை சொன்னாருன்னா... ஒரு ஊர்லே ஒரு
பாப்பா இருந்துச்சாம்... (தொடரும்...) The end.

9. ஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிங்கம் இருந்ததாம். அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம். அவ்ளோதான். The end.

10. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா... என்ன ஆச்சுன்னா.. என்ன ஆச்சுன்னா.. என்ன ஆச்சுன்னா... (10-15 தடவை)... The end.

இந்த கதைகளில் எந்த கதை பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க..

இதே மாதிரி இன்னும் என்னென்ன கதைகள் சொல்லலாம்னும் ஐடியா கொடுங்க...


41 comments:

Mahesh January 25, 2009 at 10:39 PM  

ஹய்யோ... நீங்க பெரிய கதாசிரியர்ணே.. எவ்ளோ கதை வெச்சுருக்கீங்க... எனக்கு நல்ல ஐடியாக்கள்... எங்க சஹானாவுக்கு கதை சொல்ல... நன்றி..

ஆளவந்தான் January 25, 2009 at 11:13 PM  

இதுக்கெல்லாம் பின்னூட்டம் போட முடியாது ஆமா...

ஆளவந்தான் January 25, 2009 at 11:13 PM  

ஒரு ஊர்ல ஒரு வாத்தாம்.. அதோட ஒரே கூத்தாம். The End.

ஆளவந்தான் January 25, 2009 at 11:14 PM  

ஒரு ஊர்ல ஒரு நரியாம். அதோட கதை சரியாம்.. The End.

ஆளவந்தான் January 25, 2009 at 11:15 PM  

test comment ( to subscribe for an email )

எம்.எம்.அப்துல்லா January 25, 2009 at 11:31 PM  

ஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிங்கம் இருந்ததாம். அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம். //

ஒரு ஊர்லே ஒரு ச்சின்ன(பையன்) சிங்கம் இருந்ததாம்.அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம் :))))

சரவணகுமரன் January 25, 2009 at 11:48 PM  

ஒரு ஊர்ல தம், தும்ன்னு ரெண்டு பிரெண்ட்ஸ் இருந்தாங்களாம். தம் தும்மை வர சொல்லுறதுக்கு "வா தும்"ன்னு சொல்லுவானாம். அப்ப, போக சொல்லுறதுக்கு என்ன சொல்லுவான்?

"போ தும்"

"சரி. குட் நைட்"

RAMYA January 26, 2009 at 3:14 AM  

//
ஒரு நாள் என்ன ஆச்சுன்னா... என்ன ஆச்சுன்னா.. என்ன ஆச்சுன்னா.. என்ன ஆச்சுன்னா...
//

இது வரை ஒன்னும் அகலை அது சகானாவுக்கு.

இது வரை எங்களுக்கு ஆனது எனாஆஆஆஆஆஆ?

RAMYA January 26, 2009 at 3:16 AM  

ஒரு ஊரிலே ஒருத்தர் வீட்டுக்கு
எல்லாரும் சாப்பிட போனாங்களாம்.

அவங்களுக்கு சாப்பாடே போடாமே
ஒருத்தர் கதை சொல்லியே அனுபிட்டாராம்
The End........

RAMYA January 26, 2009 at 3:19 AM  

ஒரு ஊரிலே சஹானா சஹானா
என்ற ஒரு பாப்பா இருந்திச்சாம்.

அப்பா கிட்டே கதை கேட்டு கேட்டு
கதையே சொல்லாமே அழும்பு பண்னினதாலே தானே கதை எழுத ஆரம்பிச்சுடுச்சாம்
The End.......................

Anonymous,  January 26, 2009 at 4:38 AM  

இந்த கதைக்கெல்லாம் காப்புரிமை கேட்டு வைச்சுக்கோங்க. வேற யாராச்சும் திருடிருவாங்க. மோசமான உலகம் இது. :)

Anonymous,  January 26, 2009 at 4:40 AM  

இந்தக்கதையெல்லாம் கேட்டு சஹானாவோட காதுல இருந்து ரத்தம் வராம இருக்கணும்னு கடவுள வேண்டிக்கறேன். :)

MADURAI NETBIRD January 26, 2009 at 5:01 AM  

ஒரு ஊருல ஒரு பெரிய யானை இருந்துன்ச்சா அப்புறம் இந்த மாதிரி கதை எல்லாம் கேட்டு அதுக்கு காது செவிடா போச்சாம் .....................................

MADURAI NETBIRD January 26, 2009 at 5:06 AM  

சஹானா சாரல் துறுதோ. விண்வெளி தலைக்குமேல் சுத்துதோ. இந்த கதையை கேட்டதும் தலையே சுத்துதோ
அடடா.....................

*********************

வெப் சைட் காப்பியர்
visit http://madurainanpan.blogspot.com/

இராகவன் நைஜிரியா January 26, 2009 at 5:07 AM  

வலையுலகத்தில நாங்கதான் இப்படி எல்லாம் கடிபட்டு இருக்கோம் அப்படின்னு நினைச்சேன்..

பாவம் சின்ன குழந்தை அதை விட்டு விடுங்க..

உங்க கடியெல்லாம் அது தாங்காது..

MADURAI NETBIRD January 26, 2009 at 5:14 AM  

"படுக்கை நேரத்துக் கதைகள்..."
.
.
.
.
"படு பயங்கர கதைகள் "
"கொலை வெறி கதைகள்"

Unknown January 26, 2009 at 5:15 AM  

ஒரு நாள் ரெண்டு நண்பர்கள் பேரு ஒன்ஸ்மோர், டூஸ்மோர் ஒரு மலை உச்சிக்கு போனாங்களாம்..

அப்போ டூஸ்மோர் கீழ விழுந்துட்டானாம்.. இப்போ யார் மிச்சம் இருக்கா??

ஒன்ஸ்மோர்..

ஒரு நாள் ரெண்டு நண்பர்கள் பேரு ஒன்ஸ்மோர், டூஸ்மோர் ஒரு மலை உச்சிக்கு போனாங்களாம்..

அப்போ டூஸ்மோர் கீழ விழுந்துட்டானாம்.. இப்போ யார் மிச்சம் இருக்கா??

ஒன்ஸ்மோர் ...

நாங்களும் சொல்வோம்ல...

MADURAI NETBIRD January 26, 2009 at 5:26 AM  

அடி(கடி)பட்ட காயம்கூட ஆரழ. ஆறுதல் சொல்ல வந்திங்கன்னு பாத்தா .ராஜா நீங்களுமா

தேவன் மாயம் January 26, 2009 at 8:27 AM  

ஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிங்கம் இருந்ததாம். அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம். அவ்ளோதான். The end.///

குழந்தைய இப்படி ஏமாத்தாதிங்க...

வால்பையன் January 26, 2009 at 8:59 AM  

எட்டாவது கதை தான் டாப்

சின்னப் பையன் January 26, 2009 at 9:23 AM  

வாங்க மகேஷ்ஜி -> ஹாஹா... நீங்களும் இதே மாதிரி சொல்லப்போறீங்களா?????... பாவம் அந்த சஹானா...:-)))

வாங்க ஆளவந்தான் -> இதுக்கெல்லாம் பின்னூட்டம் போடமுடியாதுன்னு சொல்லிட்டு பூந்து விளையாடியிருக்கீங்க......

ஆமா அது என்ன? (to subscribe for an email)... எனக்கு புரியல...

வாங்க அப்துல்லாஜி -> அவ்வ்வ்வ்....

வாங்க சரவணகுமரன் -> ஹாஹா.... அனுபவமா???????

சின்னப் பையன் January 26, 2009 at 9:27 AM  

வாங்க ரம்யா -> அவ்வ்வ்... இதே மாதிரி நிறைய கதைகள் வெச்சிருப்பீங்க போலிருக்கே கையிலே... :-)))

வாங்க சின்ன அம்மிணி -> அப்ப உடனே காப்பிரைட் வாங்கிடவேண்டியதுதான்....:-)))

வாங்க மதுரை நண்பன் -> ஹாஹா... நன்றி... :-))

வாங்க இராகவன் -> சரிங்க.. கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கறேன்.... :-)))

வாங்க ராஜா -> ம்ஹூம். இது வேலைக்காகாது... இவ்ளோ பெரிய கதையா!!!!!!!!!

கைப்புள்ள January 26, 2009 at 9:51 AM  

எல்லாமே அருமையான கதைகள். என் பொண்ணு வளர்ந்து கதை கேக்க ஆரம்பிக்கும் போது கண்டிப்பா உபயோகப்படும்.

//9. ஒரு ஊர்லே ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சிங்கம் இருந்ததாம். அதோட கதை அசிங்கமா ஆயிடுச்சாம். அவ்ளோதான். The end.//

இது நான் குழந்தையா இருக்கற காலத்துலேருந்து சொல்லிட்டு இருக்கற கதை.
:)

கைப்புள்ள January 26, 2009 at 11:05 AM  

உங்க பதிவைப் பாத்து தங்கமணியும் இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க. :)

இப்ப எனக்கு தோனுன இன்னொரு கதை.

ஒரு ஊர்ல ஒரு குருவி இருந்துச்சாம். அதுக்கு ரொம்ப பசிச்சுச்சாம். சாப்பாட்டுக்காக அங்கேயும் இங்கேயும் பறந்து திரிஞ்சு தேடிக்கிட்டு இருந்துச்சாம். அப்போ அங்க ஒரு சட்டியில கொஞ்சம் அரிசி இருந்துச்சாம். குருவியும் அரிசியை ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...தூக்கிட்டு வந்து கூட்டுல சேர்த்து வச்சுதாம்.

அதுக்கப்புறம்னு குழந்தை கேட்டுச்சுன்னா...மறுபடியும் ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ஒன்னொன்னா...ன்னு ஆரம்பிச்சிட வேண்டியது தான். இதையே குழந்தை தூங்கற வரைக்கோ இல்லை நாம தூங்கற வரைக்கோ கண்டினியூ பண்ணிக்கனும்.
:)

நசரேயன் January 26, 2009 at 11:05 AM  

எங்க வீட்டுலேயும் இதே கதைகள் தான் ஓடுது

கப்பி | Kappi January 26, 2009 at 11:26 AM  

அவ்வ்வ்வ்வ்வ்...ம்ம்ம்முடியல :))

இதெல்லாம் கதையில்ல...பெரிய வதை!! பாவம் பார்த்து விடக்கூடாதா?? :))



@கைப்புள்ள

தல...இளையதளபதியின் குருவி கதையை விட உங்க குருவி கதை டெரரா இருக்கு :))

ஆளவந்தான் January 26, 2009 at 11:45 AM  

//
வாங்க ஆளவந்தான் -> இதுக்கெல்லாம் பின்னூட்டம் போடமுடியாதுன்னு சொல்லிட்டு பூந்து விளையாடியிருக்கீங்க......
//

என்ன பண்ற்து தல.. மனசு கேக்கல :)

//
ஆமா அது என்ன? (to subscribe for an email)... எனக்கு புரியல...
//

I used to subscribe to get the follow-up comments in my mail.. I forgot to do that .. thats why i put one test comment while subscribing ..

தாரணி பிரியா January 26, 2009 at 11:58 AM  

//இதே மாதிரி இன்னும் என்னென்ன கதைகள் சொல்லலாம்னும் ஐடியா கொடுங்க...//

எதுக்கு சஹானா எங்களையும் திட்டறதுக்கா?

சின்னப் பையன் January 26, 2009 at 12:01 PM  

வாங்க தேவன்மயம், வால் -> நன்றிங்க...

வாங்க கைப்புள்ள -> ஹாஹா... :-)))) ஒண்ணொண்ணா, ஒண்ணொண்ணா... சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.... :-))

வாங்க நசரேயன் -> ஹிஹி... எஞ்சாய்... :-)))

வாங்க கப்பி -> ஹிஹி... என்னாலேயும் முடியலேன்றதால்தான் இந்த மாதிரி கதை சொல்றது..... :-)))

தாரணி பிரியா January 26, 2009 at 12:06 PM  

//தினமும் இந்த மாதிரி சொல்றதில்லீங்க.... வாரத்தில் ஏழு நாட்கள் மட்டும்தான்.//

சஹானாவோட கஷ்டம் இன்னிக்குதான் புரியது

தாரணி பிரியா January 26, 2009 at 12:07 PM  

மாயாஜால கதைகள் சொல்லுங்க. நமக்கு தெரியாம ஃபுளோ சூப்பரா வரும்

ARV Loshan January 27, 2009 at 12:21 AM  

எங்களுக்கே காதால இரத்தமும்,கண்ணால கண்ணீரும் வடியுதே அந்த சகானா எப்படியோ.. பாவம் புள்ளை..

நீங்க சின்னப்பையனாவே இருக்கீங்க.. ;)

//ஒரு ஊர்ல ஒரு வாத்தாம்.. அதோட ஒரே கூத்தாம். The End.//

hahahaha ;)

முத்துலெட்சுமி/muthuletchumi January 27, 2009 at 1:22 AM  

பாவம் சஹானா ரொம்ப அப்பாவியா இருக்கா... (அம்மாவைப்போலயோ?)
இப்படி ஏமாத்துறீங்களே.. இங்க அந்த கதையெல்லாம் நடக்காது.. பழயகதையில் விட்ட இடத்தை எல்லாம் திரும்ப கேட்டுருவாங்க..

அதுக்கெல்லாம் ஒரு டெக்னிக் இருக்கு .. அவங்கப்பா சொல்ற கதை தான் அது.. அவங்க கதைய எடுத்துவிட்டாங்கன்னா.. போதும் உங்க கதை வேணாம் நானே தூங்கிக்கறேனு சொல்லிடுவா பொண்ணு.. :))

சின்னப் பையன் January 27, 2009 at 10:32 AM  

வாங்க தாரணி பிரியா -> ஹாஹா... ச்சேச்சே.. அப்படியெல்லாம் நடக்காது. ச்சும்மா தைரியமா கதை சொல்லுங்க... :-)))

வாங்க புதுகைச் சாரல் -> அவ்வ்வ்... என்னங்க இது? எல்லாமே ஏடாகூடமான தலைப்பா இருக்கே!!!! இதெல்லாம் ச்சின்ன பாப்பாவுக்கு சொல்லி அது என்னய பிடிச்சி திட்டவா????? :-)))

வாங்க லோஷன் அண்ணே -> ஹாஹா.... நன்றிண்ணே.... :-)))

வாங்க முத்துலெட்சுமி அக்கா -> ஹாஹா... அது என்ன கதைன்னு சொல்லுங்க. நானும் அதையே ட்ரை பண்றேன்... :-)))))

பரிசல்காரன் January 27, 2009 at 11:12 AM  

ங்கொய்ய்ய்ய்ய்யால..

ஒரு ஊர்ல ப்ளேடுன்னு ஒருத்தன் இருந்தானாம். அவன் தம்பி பேரு ப்ளேடுப்ளேடு. ...

அந்தக் கதையைச் சொல்லுங்களேன்.. (இது உங்களைப் பத்தின கதையாப்பான்னு சஹானா கேட்டா நான் பொறுப்பில்ல!)

சரவணகுமரன் கதைய ரசிச்சேங்க!

சென்ஷி January 27, 2009 at 11:19 AM  

அசத்தல் கதைகள்...

எனக்குப்பிடிச்சது

///4. ஒரு ஊர்லே எல்லோரும் தூங்கிக்கிட்டிருந்தாங்களாம்.... இப்போ கதை சொன்னா எல்லோரும் எழுந்துடுவாங்க. அதனால் நாளைக்கு சொல்றேன். அவ்ளோதான். The end.
///

சூப்பர் :-))

சின்னப் பையன் January 27, 2009 at 8:19 PM  

வாங்க பரிசல் -> அவ்வ்வ்.. எதுக்கு இப்போ ங்கொய்யாலா... டென்சனாயிட்டீங்களா???? ஹாஹா...

வாங்க சென்ஷி -> நன்றி..

Thamira January 28, 2009 at 8:02 AM  

யோவ்.. இருந்தாலும் பிள்ளையை இவ்வ‌ள‌வு கொடுமைப்ப‌டுத்த‌ப்பிடாது..!

மங்களூர் சிவா February 4, 2009 at 2:08 PM  

/
இராகவன் நைஜிரியா said...

வலையுலகத்தில நாங்கதான் இப்படி எல்லாம் கடிபட்டு இருக்கோம் அப்படின்னு நினைச்சேன்..

பாவம் சின்ன குழந்தை அதை விட்டு விடுங்க..

உங்க கடியெல்லாம் அது தாங்காது..
/

ஆமாங் பாவம் பச்ச புள்ள

Admin January 21, 2013 at 12:29 PM  

எனக்கு நாலாவது கதை பிடிச்சிருக்கு... :)

Unknown January 26, 2013 at 10:57 PM  

என்ன உலகமடா இது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP