30 வகை சாம்பார், ரசம் மற்றும் போராட்டம்...!!!
சென்ற வாரம் இணையத்தில் 30 வகை சாம்பார், ரசம், சப்பாத்தி இன்னும் பலவற்றைப் பார்த்தேன். (ஹிஹி. எதெல்லாம் செய்யலாம்றதுக்கு இல்லே... எதெல்லாம் சாப்பிடலாம்னு ஒரு ஐடியாக்குதான்!!!).
இதே மாதிரி 30 வகை போராட்டம்னு இருந்து, ஒரு நாளைக்கு ஒரு போராட்டம் வீதம் மாசம் முழுக்க என்னென்ன போராட்டம் செய்யலாம்னு ஒரு பட்டியல் போட்டேன். அந்த பட்டியல்தான் இது.
1. கோடிக்கணக்கில் தந்தி அனுப்பும் போராட்டம்
2. கோடிக்கணக்கில் போஸ்ட் கார்ட் அனுப்பும் போராட்டம்
3. கோடிக்கணக்கில் உள்ளூர் தபால் (இன்லாண்ட் லெட்டர்) அனுப்பும் போராட்டம்
4. தொலைபேசியில் பேசி போராட்டம்
5. ஈமெயில் அனுப்பும் போராட்டம்
6. குளிக்காமல் போராட்டம்
7. பச்சைத் தண்ணீர் குளிப்பு போராட்டம்
8. வென்னீர் குளிப்பு போராட்டம்
9. தீக்குளிப்பு போராட்டம்
10. தொலைக்காட்சி பார்க்கும் போராட்டம்
11. தொலைக்காட்சி பார்க்காமல் போராட்டம்
12. திரைப்படம் பார்க்கும் போராட்டம்
13. திரைப்படம் பார்க்காமல் போராட்டம்
14. நடைப்பயிற்சி போராட்டம்
15. மிதிவண்டி ஊர்வலம்
16. பைக் ஊர்வலம்
17. மாட்டு வண்டி ஊர்வலம்
18. மகிழூந்து ஊர்வலம்
19. மூவுருளி ஊர்வலம்
20. சிறைச்சாலை நிரப்பும் போராட்டம்
21. பேருந்து நிரப்பும் போராட்டம்
22. புகைவண்டி நிரப்பும் போராட்டம்
23. விளக்கு எரிக்கும் போராட்டம்
24. விளக்கு அணைக்கும் போராட்டம்
25. சாகும்வரை தண்ணீர் குடிக்கா விரதம்
26. சாகும்வரை காபி/டீ குடிக்கா விரதம்
27. சாகும்வரை உணவு உண்ணா விரதம்
இப்போ ஒரு கேள்வி:
30 நாட்களுக்குண்டான போராட்டம்னு சொல்லிட்டு 27தான் சொல்லியிருக்கேன். அது ஏன்னு சொல்லுங்க. கண்டிப்பா யாராவது பதில் சொல்லிடுவீங்க(!!), இல்லேன்னா நாளைக்கு காலையில் எழுந்து நான் பதில் போடறேன்...
இது பிப்ரவரி மாததுக்கான போராட்டப் பட்டியல், விடுமுறை நாட்களில் போராட்டம் கிடையாது - இதெல்லாம் சரியான பதில் இல்லை(!!!!!!).
கேள்விக்கான பதில்:
27ம் நாள் செய்யும் 'சாகும்வரை உணவு உண்ணா போராட்டம்' நாலு நாள் வரை போகும். அதாவது 27,28,29,30 நாட்கள். இதில் பிஸியாக இருப்பதால், வேறு எந்த போராட்டமும் செய்ய முடியாது.
சரியா சொன்னவங்களுக்கு 1000 பின்னூட்டம் போடலாம்னு பாத்தேன். ஆனா யாருமே சரியா சொல்லலே.. அப்பாடா...!!!
24 comments:
உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி... தொடருங்கள்... நல்ல சிந்தனை..
just miss..me the first.. okie.. me the second
ம்ம்ம் ஒன்னும் சொல்லறமாதிரி இல்லே
தினம் தினம் ஒரே குறும்பு ஜாஸ்தியா போச்சு!!!
28. மொக்கை பதிவு போராட்டம்
29. கும்மி பின்னூட்டம் போராட்டம்
30. Last but not least, "Me the first" போராட்டம்
எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா..
காலையில எழுந்து ரொம்ப யோசிக்க வேணாம் தல ( என்னமோ முன்ன மட்டும் யோச்சிச்ச் மாதிரி :) )
28. தொடர்ந்து பதிவு போடும் போராட்டம்
29. அந்தப் பதிவுகளை அனைவரையும் படிக்க வைக்கும் போராட்டம்
30. படித்து அனைத்து பதிவுகளுக்கும் பின்னூடம் இட வைக்கும் போராட்டம்
9 கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா இருக்கு!!!!
\\Mahesh said...
28. தொடர்ந்து பதிவு போடும் போராட்டம்
29. அந்தப் பதிவுகளை அனைவரையும் படிக்க வைக்கும் போராட்டம்
30. படித்து அனைத்து பதிவுகளுக்கும் பின்னூடம் இட வைக்கும் போராட்டம்\\
ரிப்பீட்டேய்
27ந்தேதி ஆரம்பிச்ச சாகும் வரை உணவு உண்ணா போராட்டம் தொடரும் ?
போராடி போராடி சோர்ந்து போய் மூணு நாட்கள் ஓய்வெடுக்குற போராட்டம்.
உங்களுக்கு மட்டும் எப்படிங்க இப்படியெல்லாம் தோணுது.
:-))))))))0
25,26,27 வது போராட்டத்துலேயே உயிர் போயிரும்,
அதன் பிறகு எரிய மாட்டேன் போராட்டமும், புதைய மாட்டேன் போராட்டமும் தான் நடத்தனும்
பாதிப்புகள் அதிகமா இருக்கும் போல இருக்கே... அடிக்கடி ஐடியா பதிவு போடுறிங்களே?
சூப்பர்ங்கோ ..
//25,26,27 வது போராட்டத்துலேயே உயிர் போயிரும்,
அதன் பிறகு எரிய மாட்டேன் போராட்டமும், புதைய மாட்டேன் போராட்டமும் தான் நடத்தனும்//
இதுவும் பக்கா..
வாங்க கமல் -> முதல் வருகைன்றதால் பதில் சொல்லலேன்னா பரவாயில்லை... நன்றி மீண்டும் வருக... :-))
வாங்க ஆளவந்தான் -> ஹாஹா... ஒரு மாதிரியாத்தான் யோசிக்கிறீங்க... என்னோட பதிலை பதிவுலே போட்டுட்டேன். பாருங்க... :-))
வாங்க ரம்யா -> அவ்வ்வ்... ச்சின்னப் பையன்னாலே குறும்புதானே.... ஹிஹி..
வாங்க மகேஷ் -> ஹாஹா... இதெல்லாம் நீங்க பண்ணுங்க... நான் ஆதரவு தர்றேன்... :-)))
வாங்க துளசி மேடம் -> அவ்வ்வ். இங்கே ஒருத்தன் படாதபட்டு போராட்டம் பண்ணிக்கிட்டிருக்கேன். நீங்க இண்ட்ரஸ்டிங்கா இருக்குன்னு சொல்றீங்க... :-))))))
வாங்க வித்யா -> மகேஷ்ஜிக்கு போட்ட பின்னூட்டமே இங்கு ரிப்பீட்டேய்.... :-)))
வாங்க தாரணி பிரியா -> நீங்க ஒருத்தர்தான் பதிலை சரியா சொல்லியிருக்கீங்க.. (மன்னிச்சிடுங்க. முதல்லே சரியா படிக்கலை நானு!!!). விடுங்க. யாரையாவது விட்டு உங்களுக்கு 1000 பின்னூட்டம் போட வெச்சிடுவோம்... ஹிஹி..
வாங்க பிரேம்ஜி -> ஹாஹா... சரிதான்... ஓய்வெடுங்க.. நன்றி...
:) இந்த போராட்டமா..?நான் கூட எதோ, தினம் வேற வேற மெனு வேணும்ன்ன் வீட்டுல போராட்டம் செய்யறாங்களோஓஒ ... நீங்க சமையக்கட்டுல கஷ்டப்படறீங்களோஓஓன்னு நினைச்சிட்டேன்..
ச்சின்னப்பையன்,
முத்தக்கா உங்களப் பார்த்து ஓஓன்னு சிரிக்கிற அளவுக்கு வச்சிட்டீங்களே?
ஓஹோன்னு சொல்லுற மாதிரி முயற்சி பண்ணுங்க.
உண்மையா நான் கண்டுபிடிச்சிட்டேன்.. அதுக்குள்ள சொல்லிட்டாங்க..
இன்னு ஒன்னையும் சேத்துகோங்க, கோடிக்கணக்கில் பின்னூட்டம் அனுப்பும் போராட்டம்
வாங்க வால் -> ஹாஹா... 'எல்லாம்' முடிஞ்சப்புறம் எங்கேந்து போராட்டம்???? ஒரே பேயாட்டம்தான்...:-))))
வாங்க விக்னேஸ்வரன் -> வாழ்க்கையில் பாதிப்புகள் இருந்தா பரவாயில்லே... பாதிப்பே வாழ்க்கையானா???????
வாங்க வினோத் -> நன்றி...
வாங்க முத்துலெட்சுமி அக்கா -> அவ்வ்வ்.. இதையெல்லாம் விட அது பெரிய போராட்டமுங்க.... தனிப்பதிவு போட்டு விளக்கறேன்.... :-)))))
iNTHA pORATTAM eLLAM NAMAKKU THEVAYA...NAMMA LINE IS DEFFERENT...LET US POST THE USUAL DAY TO DAY ACTIVITIES IN THE WEB...AND GET THE RESPONSE FOR THAT....THAT IS ENOUGH FOR THE TIME BEING...STRIKE ELLAM IPPA THEVAIYILLAI...THIS IS MY OWN IDEAS ONLY....HOWEVER, OPINION DIFFERES...
// :) இந்த போராட்டமா..?நான் கூட எதோ, தினம் வேற வேற மெனு வேணும்ன்ன் வீட்டுல போராட்டம் செய்யறாங்களோஓஒ ... நீங்க சமையக்கட்டுல கஷ்டப்படறீங்களோஓஓன்னு நினைச்சிட்டேன்..
//
அதெல்லாம் தினமும் நடக்குறதால, சின்ன பையனுக்கு பழகிடுச்சு...
அதனால அது ஒரு பெரிய விசயமா (போராட்டமா ) தெரியறது இல்ல....!
நான் சொன்னது சரியா சின்ன பையன் ?
மன்னிப்பு எல்லாம் வேண்டாம் 1000 பின்னூட்டம்தான் வேணும் :)
Hi my name is ubaidullah. Ippathan konja naalaga tamil blogs pakkam visit panren. ungalodadu romba kurumbagavum vithyasamagavum irukku.
/
ஆளவந்தான் said...
28. மொக்கை பதிவு போராட்டம்
29. கும்மி பின்னூட்டம் போராட்டம்
30. Last but not least, "Me the first" போராட்டம்
/
:))))
Post a Comment