Sunday, January 18, 2009

இரு விரல் கிருஷ்ணாராவ்!!!



Pla Pleass Pleasse Pleea Please mp movee move t the rew requu requess request ahw ahea ahead b4 bef befoo beforr before end of daa day todd todaa today.

மேலே இருப்பதை படிக்க முடியுதா. கடுப்பாயில்லே? எங்க மேனேஜர் திரு. இரு விரல் கிருஷ்ணாராவ் - அதாவது தன் இரண்டு விரலால் மட்டுமே தட்டச்சுபவர் - ஒரு ச்சின்ன வாக்கியத்தை இப்படி தப்பும் தவறுமா தட்டச்சும்போது - அவருடன் மீட்டிங்கில் உட்காந்திருக்கும் எனக்கு பொறுமை போய் பயங்கர கடுப்பாயிருக்கும். மெதுவாக அவரிடம் - உங்க வயர்லெஸ் கீபோர்டை குடுங்க, நான் வேணா தட்டச்சறேன்னு சொல்லிவிடுவேன். அவரும் சிரித்துக்கொண்டே கொடுத்துவிடுவார்.

****

அப்போல்லாம் பத்தாவது முடித்தவுடனே எல்லோரும் போய் சேருவது ஒரு தட்டச்சு பயிற்சிப்பள்ளியில்தான். அதே போல், என் தந்தையின் நண்பரின் இன்ஸ்டிட்யூடில் நானும் போய் சேர்ந்தேன். தட்டச்சு கற்பதற்காகவும் கற்பவர்களை பார்ப்பதற்காகவும், காலை 6-7 வகுப்பிற்கு, 5.45க்கே போய் 7.30 மணி மேல் திரும்ப வருவது பழக்கமாயிற்று. பேசிய நேரம் போக கொஞ்சம் ஆங்கில தட்டச்சும் கற்றதனால், லோயர், ஹையர், ஹை ஸ்பீடு என்று எல்லாவற்றிலும் தேறி, கடமுட கடமுடவென தட்டச்ச கற்றுக்கொண்டேன்.

அதே போல், வருடத்திற்கொருமுறை கோத்ரெஜ் நிறுவனம் நடத்தும் தட்டச்சுப் போட்டியில் கலந்துகொள்ள எங்கள் பயிற்சிப்பள்ளி சார்பாக சிலரை அனுப்பி வைப்பார்கள். அதில் இரண்டு தடவை நானும் போய் தட்டினேன். ஒரு பெரிய ஹாலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் தங்கள் மெஷினோடு டென்ஷனாய் உட்கார்ந்திருப்பார்கள். போட்டி துவங்கியவுடன் ஆயிரம்வாலா சரவெடி போல் அனைவரும் தட்டச்ச, அந்த ஏரியாவே பயங்கர சத்தத்துடன் அதகளப்படும். அந்த சத்தத்தை கண்டு பயப்படாது, ஒருசாய்ந்துவிடாமல் (நன்றி: நர்சிம்) கவனமாக ஒரு நிமிடத்தில் 90 வார்த்தைகள் தட்டச்சி, ஒரு சான்றிதழும் வாங்கினேன்.

****

சிறிது காலம் கழித்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்திருந்தபோது, எங்காவது வேலை இருக்குன்னு தெரிந்தால் சொல்லுங்கன்னு அந்த பயிற்சிப்பள்ளியில் சொல்லியிருந்தேன். அப்படி அவர்கள் சொல்லி, ஒரு தடவை ஒரு பெரிய நிறுவனத்தில் தற்காலிக வேலை இருப்பதென சொல்லப்பட்டபோது நானும் இன்னொரு நண்பனும் அங்கே போய் சேர்ந்தோம். முதல் சம்பளம் ரூபாய் 650.

சரி நமக்குத்தான் வேஏஏகமாக தட்டச்ச தெரியுமே, வேலையில் சேர்ந்து ஜமாய்ச்சிப்புடலாம்னு நினைச்சி போனா, அங்கே தட்டச்சற வேலை கம்மியாகவும், மத்த குமாஸ்தா (தமிழில்?) வேலைகள் அதிகமாகவும் இருந்தது. எப்போதாவது தட்டச்சினாலும் வேகமால்லாம் அடிக்க தேவையில்லாமே இருந்தது. என்னடா இது, சிங்கத்தை இப்படி குகையிலே போட்டு அடிச்சி கொடுமை படுத்தறாங்களேன்னு நினைத்திருப்பேன்.

****

இப்போதெல்லாம், இரு விரல் கிருஷ்ணாராவ் என் இருக்கைக்குப் பக்கத்தில் வரும்போது மட்டும் கடகடவென ஏதாவது ஒரு மெயில் தட்டறா மாதிரி தட்டுவேன். சில சமயம் அந்த மெயில் எனக்கே அனுப்பிக்குவேன். (பின்னே, சம்மாந்தா சம்மந்தமில்லாமல் அடிச்சதை வேறே யாருக்காவது அனுப்ப முடியுமா?). அப்படி அவர் பக்கத்தில் இல்லாதபோது, பதிவுகளை படிப்பதற்கும், பின்னூட்டம் போடுவதற்கும் வேகமா தட்டச்ச தேவையில்லையே!!!

15 comments:

ஆளவந்தான் January 18, 2009 at 9:05 PM  

me the first :)

wait lemme read the post :)

Mahesh January 18, 2009 at 9:07 PM  

வ்வ்வ்வ்வ்வ்வ்வேக்க்க்க்க்க்க்கமாஆஆ பின்னூட்டம் போட்டேன்... ஆனாலும் ஆளவந்தான் முந்திக்கிட்டாரு..

ஆளவந்தான் January 18, 2009 at 9:08 PM  

//
கற்பவர்களை பார்ப்பதற்காகவும்
//
இதை கொஞ்சம் போல்ட் பண்ணியிருக்கலாம்.

கோவி.கண்ணன் January 18, 2009 at 9:44 PM  

//இப்போதெல்லாம், இரு விரல் கிருஷ்ணாராவ் என் இருக்கைக்குப் பக்கத்தில் வரும்போது மட்டும் கடகடவென ஏதாவது ஒரு மெயில் தட்டறா மாதிரி தட்டுவேன். சில சமயம் அந்த மெயில் எனக்கே அனுப்பிக்குவேன். (பின்னே, சம்மாந்தா சம்மந்தமில்லாமல் அடிச்சதை வேறே யாருக்காவது அனுப்ப முடியுமா?).//

:) சொந்த ஆப்பு !

பிரேம்ஜி January 18, 2009 at 10:03 PM  

//பின்னே, சம்மாந்தா சம்மந்தமில்லாமல் அடிச்சதை வேறே யாருக்காவது அனுப்ப முடியுமா?).//
:-)))))))

Anonymous,  January 18, 2009 at 10:37 PM  

வேலை செய்யாமலே செய்யுற மாதிரி பில்டப் பண்ண உங்ககிட்டதான் கத்துகிடனும் போல.

உங்க mgr மெயில் ஐடி குடுங்க.

Vidhya Chandrasekaran January 18, 2009 at 11:07 PM  

நான் கூட கொஞ்ச நாளைக்கு தட்டச்சு கத்துகிட்டேன். அப்புறமா அந்த பள்ளியில தீ விபத்து ஏற்பட்டு மூடிட்டாங்க:)

வெண்பூ January 19, 2009 at 12:22 AM  

தட்டச்சு திலகம் ச்சின்னப்பையன் வாழ்க வாழ்க..

//
(பின்னே, சம்மாந்தா சம்மந்தமில்லாமல் அடிச்சதை வேறே யாருக்காவது அனுப்ப முடியுமா?).
//

ஏன்.. பூச்சாண்டில போட்டுறலாமே.. :)))

Unknown January 19, 2009 at 12:48 AM  

Super, Nallaa sirichen.. :)))

சின்னப் பையன் January 19, 2009 at 7:44 AM  

வாங்க ஆளவந்தான் -> ஹிஹி... ரொம்பதான் குறும்பு உங்களுக்கு... :-)))

வாங்க மகேஷ் -> அவ்வ்வ்... பதிவப்பத்தி ஒண்ணுமே சொல்றதுக்கில்லையா???????

வாங்க கண்ணன் -ஜி -> ஹாஹா... நான் இவ்ளோ பெரிச்ச்ச்ச்ச்ச்சா எழுதினத ரெண்டே வார்த்தைலே விளக்கிட்டீங்களே... நீங்க ரெண்டு வார்த்தை கிருஷ்ணாராவா??????... :-)))

வாங்க பிரேம்ஜி -> நன்றி..

சின்னப் பையன் January 19, 2009 at 7:46 AM  

வாங்க வேலன் ஐயா -> இதுக்குத்தான் உண்மைய சபையிலே சொல்லக்கூடாதுன்றது... அவ்வ்வ்....

வாங்க வித்யா -> அச்சச்சோ... விபத்தா? உயிர்ச்சேதம் ஒண்ணுமில்லையே??? :-(((

வாங்க வெண்பூ -> ஹிஹி ஏற்கனவே பூச்சாண்டியில் அப்படித்தான் பதிவு வருது... அவ்வ்

வாங்க ஸ்ரீமதி -> மிக்க நன்றி... :-))

Mahesh January 19, 2009 at 8:51 AM  

ஹலோ நானே இருவிரல க்ருஷ்ணாராவ்டன்.. அதான்... ஹி ஹி

Thamira January 19, 2009 at 9:47 AM  

என்னடா இது, சிங்கத்தை இப்படி குகையிலே போட்டு அடிச்சி கொடுமை படுத்தறாங்களேன்னு நினைத்திருப்பேன்// ஹா ஹா.. ரசித்தேன்.! (இப்படித்தான் அநேகருக்கு ஆகிவிடுகிறது..)

வால்பையன் January 20, 2009 at 11:46 AM  

தட்டச்சு மன்னர்ன்னு உங்களுக்கு பட்டம் கொடுத்துரலாம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP