Template for நகைச்சுவை பதிவுகள்:
இது ஒரு டெம்ப்ளேட் பதிவு. கவுண்டமணி-செந்தில், பார்த்திபன்-வடிவேலு நகைச்சுவை பதிவுகள எப்படி எழுதலாம்னு யோசிச்சப்ப தோணிணதுதான் இது. படிச்சி பாத்து சரியா இருக்கான்னு சொல்லுங்க.
கவுண்டமணி - செந்தில்:
மொத்தல்லே உங்களுக்கு பதில் தெரியாத 10 கேள்விகளை தயார் செய்துக்கங்க. உதாரணத்துக்கு சில:
அ. சுரைக்காயிலே ஏண்ணே உப்பு இல்லே?
ஆ. நம்ம தலையிலே எண்ணை போடறோம், முடி வளருது. சைக்கிளுக்கும் எண்ணை போடறோம். ஆனா ஏண்ணே முடியே வளரல?
இ. வீட்லே தொலைக்காட்சியை அணைச்சேண்ணே (கட்டிப் பிடித்தல்) ஆனா அது ஆஃப் ஆகவேயில்லேண்ணே. ஏன்னே தெரியல?
மொத்த பதிவுலே அங்கங்கே செந்தில் கவுண்டரிடம் கேட்பது போல் இந்த சந்தேகங்களை செட் பண்ணிடணும். கவுண்டருடைய பதிலில் அவர் செந்திலை திட்டுவது எல்லாருக்கும் தெரிந்ததே. அதில் அந்த மண்டையா, இந்த மண்டையான்ற வார்த்தைகள் கண்டிப்பா இருக்கணும்.
வழக்கம்போல் பேரிக்கா, மாங்கா இப்படியில்லாமே வயர்லெஸ் மண்டையா, LCD தலையா அப்படி இப்படின்னு புதுசா புதுசா ஏதாவது எழுதணும்.
இவங்களோட பதிவை முடிக்கறதும் சுலபம்தான். ஏதாவது ஒரு கேள்வியில் கவுண்டர் கடுப்பாகி, செந்திலை துரத்திக்கொண்டே ஓடுவதாக பதிவை முடித்து விடலாம்.
வடிவேலு - பார்த்திபன்:
இந்த நகைச்சுவைக்கு தேவையானவை சொல்வழக்கில் உள்ள சில வார்த்தைகள் மட்டும். உதாரணத்திற்கு: கோக்குமாக்கு, எகணெமொகணெ, அமுக்கறாங்கிழங்கு இந்த மாதிரி. உங்களுக்கு தெரியலேன்னா நண்பர் பழமைபேசியிடம் தெரிந்து கொள்ளுங்க.
வடிவேலு பேசும்போது இந்த வார்த்தைகளை பயன்படுத்தி பார்த்திபனிடம் பேசுவதும், பார்த்திபன் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டு வடிவேலுவை 'அவ்வ்வ்' சொல்ல வைப்பதும் கண்டிப்பா செய்யணும்.
விவேக்:
விவேக்கை வைத்து நகைச்சுவை பதிவுகள் எழுதுவதற்கு கண்டிப்பா தேவையான ஒன்று - திரு.அப்துல் கலாம் ஐயா எழுதிய ஏதாவது ஒரு புத்தகம்.
விவேக் நகரத்திலிருந்து கிராமத்திற்கோ, வெளிநாட்டிலிருந்து சென்னைக்கோ வர்றா மாதிரி செட் பண்ணணும். புத்தகத்தில் நாம் படித்ததற்கு எதிராக ஏதாவது சம்பவங்கள் அந்த இடத்தில் நடைபெறுமாறு எழுதிவிட்டு, விவேக் அதை கலாம் ஐயா இப்படியா சொன்னாரு - அப்படின்னு கொஞ்ச நேரத்துக்கு பேசறா மாதிரி நீளமா வசனம் எழுதி தப்பு செய்யறவங்களை திருத்தணும்.
சந்தானம்:
சந்தானம் காமெடி செய்யறா மாதிரி எழுதறதுக்கு முன்னாடி ரெண்டுக்கு மூணு தடவை யோசிச்சுக்கோங்க. ஏன்னா, அதுக்கு டபிள் அல்லது ட்ரிபிள் மீனிங் வசனங்கள் நிறைய தெரிஞ்சிருக்கணும். அந்த மாதிரி நமக்கு நிறைய தெரிஞ்சிருந்தாலும்(!!), அதை பொதுவிலே ஒரு பதிவுலே சொல்றதுக்கு ரொம்ம்ம்ம்ப தைரியம் இருக்கணும். மத்தபடி நீங்க உங்க நண்பர்களை(!!!) திட்டறதையெல்லாம் அப்படியே சந்தானம் தன் கூட்டாளிகளை திட்டறா மாதிரியே பதிவு எழுதிடணும். அவ்வளவுதான்.
23 comments:
ஆழ்ந்த ஆராய்ச்சிக்கப்பறம் டெம்ப்ளேட் பண்ணியிருக்கீங்க போல இருக்கே !!
சந்தானம்- கு*, குண்*-இப்படி செட் பண்ணனும்
டாக்டர் ச்சின்னபையன் வாழ்க வாழ்க
//மொத்தல்லே உங்களுக்கு பதில் தெரியாத 10 கேள்விகளை தயார் செய்துக்கங்க. //
அவ்வ்வ்'
;-))))))))
அசத்தல்
கலக்கல்...
:-))
நெறய பேரோட பொழப்புல மண்
கவுண்டமணீ மாதிரி எனது நண்பர் மாதேஷ் நல்லா எழுதுவார்!
எனக்கு ஏர்டெக்கான் மண்டையான்னு ஒரு பதவி கொடுத்துருக்கார்னா பார்த்துகோங்களேன்
எல்லா காமெடிக்கும் 200 டெசிபல்ல கத்தனும் அதை மறந்துட்டிங்களே!
சந்தானம் மற்றும் விவேக் பற்றிய Template சூப்பர்:)
கிகிகிகிகி
செம ஜோரு...
இஃகி..இஃகி...இஃகி (நன்றி நண்பர் பழமைபேசி)
டெம்ப்ளேட்.. நல்லா உருவாக்கியிருக்கீங்க..
திரைத்துறையில் முயற்ச்சி செய்தால், நல்ல எதிர்காலம் உண்டு.
ச்சின்னப்பையனா இருக்கும் போதே இவ்வளவு மூளை என்றால், ப்பெரியப்பையனாக ஆனால் என்னா ஆகும்..
கவுண்டமணி - செந்தில் - பகுதிக்கு உங்க template கரெக்டாக பொருந்துது....
இனிமே கவுண்டமணி - செந்தில் காமெடின்னு யாரவது எழுதினா உங்க கலரா தூக்கி விட்டுக்கலாம்....
வடிவேலு பார்த்திபன் கூட நல்லாருக்கு ... இன்னும் நிறைய எடுத்துக்காட்டு கொடுத்திருக்கலாம்....
நல்ல பதிவு ....
நன்றி மகேஷ் -> ஹிஹி அதெல்லாம் இல்லீங்க. எல்லாம் தன்னாலே வருது.. :-))
நன்றி இளா -> அவ்வ்வ்.
வாங்க தாரணி பிரியா, ராகி ஐயா, முரளிகண்ணன், இராம் -> நன்றி
வாங்க தாமிரா, ஆளவந்தான், வால், வித்யா, ரமேஷ், ஷாஜி -> நன்றி...
வாங்க இராகவன் -> அவ்வ்வ்...
வாங்க நவநீதன் -> நன்றி.
:-))
//ச்சின்னப்பையனா இருக்கும் போதே இவ்வளவு மூளை என்றால், ப்பெரியப்பையனாக ஆனால் என்னா ஆகும்..//
நெனைக்கவே பயமா இருக்கு.
இளைய கலைவாணர் ச்சின்னப்பையன் வாழ்க
வாங்க சரவணகுமரன் -> நன்றி...
வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ்....
வாங்க நசரேயன் -> ரொம்பதான் குறும்பு உங்களுக்கு... :-))
ச்ச்ச்சின்னப்பையா - நல்லாவே இருக்கு - சூப்பர் டெம்ப்ளேட்
Post a Comment