Wednesday, January 14, 2009

கிபி 2030 - மதுரை மேற்கு - இடைத்தேர்தல்

பத்திரிக்கையில் வந்த தலைப்புச் செய்திகள்:

தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து பொதுத்துறை, தனியார்துறை மக்கள் - மதுரைக்கு மாற்றல் வேண்டி விண்ணப்பம்.


தமிழகத்திலிருந்து, குறிப்பாக மதுரையிலிருந்து டெபாசிட் வரவு அதிகரிப்பு - ஸ்விஸ் வங்கி அறிவிப்பு


இடைத்தேர்தலை முன்னிட்டு நார்வே தூதுக்குழு, ஐ.நா அமைதிப்படை மதுரை வருகை


மதுரை பேருந்து, ரயில் நிலையங்களில் அமைதி நிலவுகிறது. பயணத்திற்கு மக்கள் விமானங்களை பயன்படுத்துகின்றனர்.


இடைத்தேர்தலை முன்னிட்டு மதுரையில் துவக்கப்பட்ட ரிலையன்ஸ் டீக்கடைகளுக்கு நல்ல லாபம்.


வாடிக்கையாளர் நலனுக்காக புடவை, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடைகள் 24x7 திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.


நேற்று அமைதியாக நடைபெற்ற தேர்தலில் 110% வாக்குப்பதிவு.


ஜனநாயக முறைப்படி மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர் - வெற்றி பெற்ற வேட்பாளர் மகிழ்ச்சி


மதுரை கிழக்கில் ஒரு யாகம்

மதுரை கிழக்கில் அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஆயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். உள்ளூர் எம்.எல்.ஏ பூஜையில் பங்குபெற்று சிறப்புரையாற்றினார்.

அர்ச்சனை செய்யும்போது குருக்கள் எம்.எல்.ஏவிடம் "இந்த யாகத்தை எதுக்கு பண்றோமோ, அந்த நல்லது நடக்கணும்னு அம்மன்கிட்டே வேண்டிக்கோங்கோ. அம்மன் நல்லதே செய்வா" என்று கூறினார்.

"இந்த யாகத்தை பண்றதே உலக நலனுக்காகத்தான்" என்று எம்.எல்.ஏ சொல்லி முடிப்பதற்குள், கோயில் தர்மகர்த்தா அவரை இடைமறித்து "சாமி, இந்த யாகத்தை பண்றது நமக்கும் இடைத்தேர்தல் வரணும்றதுக்காகத்தான். நல்லா பூஜை பண்ணுங்க. சீக்கிரம் தேர்தல் வரட்டும்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

17 comments:

Mahesh January 14, 2009 at 10:30 PM  

2030 வரைக்கும் வெய்ட் பண்ண வேண்டாமே? 2011 லயே இதெல்லாம் பாக்கலாம்.

இராகவன் நைஜிரியா January 15, 2009 at 1:44 AM  

// "சாமி, இந்த யாகத்தை பண்றது நமக்கும் இடைத்தேர்தல் வரணும்றதுக்காகத்தான். நல்லா பூஜை பண்ணுங்க. சீக்கிரம் தேர்தல் வரட்டும்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார் //

நல்லாயிருங்கப்பூ..

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வச்ச கதையால்ல இருக்கு

வால்பையன் January 15, 2009 at 4:21 AM  

ஹா ஹா ஹா

ஒரே சந்தோசம்,
அந்த ஒரு வாரம் மக்கள் பண வெள்ளத்தில் மிதந்திருப்பார்கள்

ச்சின்னப் பையன் January 15, 2009 at 8:43 AM  

வாங்க தமிழன், துளசி மேடம், இராகவன், பாஸ்கர் -> நன்றி..

வாங்க மகேஷ் -> அவ்வ்வ்... அப்போ சரி..... :-))

வாங்க கார்த்திக், வால், முரளிகண்ணன் -> நன்றி...

Anonymous,  January 15, 2009 at 9:49 AM  

//நேற்று அமைதியாக நடைபெற்ற தேர்தலில் 110% வாக்குப்பதிவு.//

இதுதான் டாப்பு.

அபி அப்பா January 15, 2009 at 10:21 AM  

சூப்பர் ச்சின்ன பையா! சரியான நக்கல் பார்ட்டியா இருக்கியலே!

களப்பிரர் January 15, 2009 at 10:43 AM  

யோவ் ... நீ அநியாத்துக்கு நல்ல எழுதுற ... சூப்பர் ..!!

ச்சின்னப் பையன் January 15, 2009 at 4:37 PM  

வாங்க வேலன் ஐயா, நசரேயன் -> மிக்க நன்றி..

வாங்க அபி அப்பா -> அப்பப்பா... முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...

வாங்க களப்பிரர் -> ஆஹா.. ரொம்ப ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு...

பாஸ்கர் January 16, 2009 at 2:00 AM  

//சரியான நக்கல் பார்ட்டியா இருக்கியலே!//

வஷிஸ்டர் வாயாலேயே பிரம்மரிஷி பட்டம் !

வாழ்த்துக்கள் !

ச்சின்னப் பையன் January 16, 2009 at 5:46 AM  

வாங்க பாஸ்கர் -> அடடா. இந்த வசனம் எனக்கு முன்னாலேயே தோணாமெ போயிடுச்சே... அதுக்குத்தான் இப்படி நண்பர்கள் இருக்கணும்றது.... நன்றி... :-)

cheena (சீனா) January 16, 2009 at 7:13 PM  

ம்ம்ம்ம் நானும் மதுரைல தான் இருக்கேன் - ஆமா

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP