Monday, January 12, 2009

தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா...!!!

உ.பாவின் (உற்சாக பானம்) மயக்கத்தால் ஜனகராஜ் திரும்பத் திரும்ப அதையே சொல்வதும், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தலைவர் டென்சனாவதும் அனைவரும் அறிந்ததே. படம் பேரு எனக்குத் தெரியல.


அப்படி உ.பா குடிப்பவரின் பக்கத்தில் உட்கார்ந்து பெப்ஸி, கோக் குடிக்கும்போதும், சைட் டிஷ் கொறிக்கும் போதும், நான் பட்ட அவஸ்தைகளை இந்த பதிவில் சொல்ல முற்பட்டிருக்கிறேன்.


ஒரு சமயம் நோய்டாவில் ஓட்டலில் மூன்று நண்பர்கள் தங்கியிருந்தோம். இரவு பதினோரு மணி. நண்பர்கள் வழக்கம்போல் உ.பாவில். பால்கனி விளக்கை யார்றா போட்டது? என்று கேட்டவாரே நண்பர் ஒருவர் போய் அதை அணைத்து விட்டு வந்தார். ஒரு ஐந்து நிமிடம் கழித்துதான் தெரிந்தது - முன்பு இருந்ததைவிட இப்போது வெளிச்சம் அதிகமாகி விட்டது என்று. நண்பர் புலம்பியவாறே மறுபடி போனார். விளக்கு எரிந்து கொண்டிருந்தது. "அட, இப்பத்தானே அணைச்சிட்டு போனேன்?"ன்னு மறுபடி அதை அணைத்து விட்டு வந்தபிறகுதான் எல்லோருக்கும் தெரிந்தது, முன்பு வெளிச்சம் வந்தது தெரு விளக்கிலிருந்து. எங்கள் அறைப்பக்கத்திலேயே ஒரு தெரு விளக்கு பளிச்சென்று எரிந்து கொன்டிருந்தது. ஸ்டடியா
இருக்கேன், ஸ்டடியா இருக்கேன்னு சொல்லிக்கிட்டு லைட் எங்கே எரியுதுன்னே தெரியலியேன்னு அவரை அடுத்த கொஞ்ச நாளைக்கு ஓட்டிக்கிட்டிருந்தோம்.



சென்னையில் ஒரு தடவை உ.பா கச்சேரி முடிந்தபிறகு சாப்பிட ஆயிரம் விளக்கு சரவண பவனுக்கு போயிருந்தோம். நண்பர் வழக்கம்போல் படு உற்சாகமாயிருந்தார். யாரையாவது கலாய்க்கணும் சத்யான்னு சொல்லிக் கொண்டே, அங்கு வேலை செய்யும் ஒரு நபரை அழைத்தார். கடையில் வைக்கப்பட்டிருந்த - திருமுருக. கிருபானந்த வாரியாரின் படத்தை காட்டி - இவரு யாரு? என்றார். அந்த நபரோ சீரியஸாக - அவர்தான் வாரியார் என்றார். நண்பர் - "இந்த கடை ஓனரா?". "இல்லை". "அப்போ ஏன் அவர் படத்தை இங்கே மாட்டி வெச்சிருக்கீங்க? அதை முதல்லே எடுங்க". அவ்ளோதான். அந்த நபருக்கு புரிந்து விட்டது - நம்ம ஆள் உ.பாவில் இருக்கிறாரென்று. "இங்கேயே இருங்க. ஒரு நிமிஷம் வர்றேன்"னு போய் அவர் மேனேஜரிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். மேனேஜர் வந்தால் நமக்கு டின்னுதாண்டின்னு சொல்லியும், உ.பாவின் ஆசியால் சிரித்துக் கொண்டே நின்ற நண்பரை நெட்டித் தள்ளி வெளியே கொண்டு வருவதற்குள், போதும் போதுமென்றாகிவிட்டது.



மற்றொரு சமயத்தில் தில்லியில் நண்பர்களுடன் (சுமார் 25 பேர்) தங்கியிருந்தபோது, சிறுசிறு குழுக்களாக பிரிந்து மக்கள் வாரயிறுதியை கொண்டாடுவார்கள்(!!!). அதில் ஒரு நண்பருடைய பழக்கம் என்னவென்றால், உ.பா அதிகமாகிவிட்டால் அவருக்கு உற்சாகம் பொங்கிவிடும். பக்கத்தில் இருப்பவர்களுக்கு 'உம்மா' கொடுக்க ஆரம்பித்துவிடுவார். இந்த பழக்கம் தெரிந்த மற்றவர்கள், நிலைமையை சரியாக கணித்து தப்பி ஓடிவிடுவர். புதிதாக கோஷ்டியில் வந்து
சேர்ந்திருக்கும் நபர் யாரையாவது - இவர் நல்லா ஜோக் சொல்வார், சிரித்துக் கொண்டே இருக்கலாம் - என்று சொல்லி, அந்த நண்பர் பக்கத்தில் உட்கார வைத்து விடுவோம். அப்புறமென்ன, சிறிது நேரம் கழித்து நண்பர் ஆரம்பிப்பார். "தம்பி, நீ ரொம்ப கொடுத்து வெச்சவன்". புதிதாக வந்தவர் கேட்பார் "என்ன விஷயம்?". உம்மா கொடுக்க பாய்ந்து கொண்டே இவர் சொல்வார் - "உனக்குதான் இன்னிக்கு நான் முதல்லே உம்மா கொடுக்கப்போறேன்". அடுத்த நாள் காலையில் உம்மா கொடுத்தவர் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டாலும், அடுத்த வாரயிறுதியில் மறுபடி உம்மா கதை தொடரும்.

18 comments:

T.V.ராதாகிருஷ்ணன் January 12, 2009 at 9:55 PM  

///பக்கத்தில் உட்கார்ந்து பெப்ஸி, கோக் குடிக்கும்போதும், சைட் டிஷ் கொறிக்கும் போதும், நான் பட்ட அவஸ்தைகளை இந்த பதிவில் சொல்ல முற்பட்டிருக்கிறேன்///

;-)))))))

dondu(#11168674346665545885) January 12, 2009 at 10:31 PM  

படம்: படிக்காதவன்
டயலாக் இப்படி போகிறதென நினைக்கிறேன்:

தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
வா அண்ணாத்தே, வந்து குந்து. இன்னிக்கு நடந்த கதய கேட்டுகினியா நீயி
காலங்காத்தால, அஞ்சு மணிக்கெல்லாம், நம்ம பய வண்டியை கட்டினிக்கு வியாபாரம் பாக்க கிளம்பிகினம்பா. மார்கழி மாசமா, ஒரே குளுரு. பனியா பொய்து. ராவுல கஞ்சா அடிக்க வசதியாக கீனும்னு நம்ம பேட்டை பசங்ஹ தெரு ட்யூப் லைட்ட எல்லாம் ஒடிச்சி போட்டுனு கிறானுகுகளே, கண்ணே தெரியலப்பா.

ராத்திரி பொண்டாடி மேல கைய போட்ட "ஏய்யா பேமானி, உன்க்கு வேற வேலை எதுவும் கிடியாதா" னு
கண்ட மேனிக்கு திட்டிட்டாப்பா. நானும் அதே சோகத்தில வண்டியை உருட்டிகினு போனாம்பா.

மார்கழி மாசம் ஆச்சா, நம்ம பேட்டை நாயுங்களெல்லாம், மஜாவா சோடியாய் சுத்திகினுகிறதா நான் பாக்காமா, ஒரு சோடி மேல லைட்டா டேஷ் உட்டுகினிம்பா. சும்மா வள் வள்னு கத்தினு என்ன ஒரக் கண்ணால பாத்திகினு நாய்ங்க ஓடிப் போச்சுப்பா.நானும் சரி, உடு, நாய்க்களுக்கு நம்மல மாத்ரி வேற வேலை எதுவும் இல்லனு வியாபாரம் பார்க்க போனேம்பா

தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
சும்ம சாயங்கலாம், நம்ம தமாசு தங்கவேலுவு, நம்ம இரவுடி கபாலியும் அண்ணாத்தே அண்ணாத்தே உனக்கு விச்யம் தெரியுமான்னு கூவிக்கினே பசாருக்கு நம்ம கடையாண்ட வந்தானுங்க.
"இன்னடா, பேமானிகங்களா இன்னாடா விசயம்னு" நானும் கேட்டுகினேம்பா

"அண்ணாத்தே, அண்ணாத்தே, நம்ம தங்கச்சிய நாய் கட்சிச்சிடுப்பா" னானுக்க
"அட பரதேசிங்களா, நம்ம தங்கச்சிதான் முழு ஸைஸ் ஆச்சே, அதுபாட்டுக்கு எங்கனா கக்கூஸாண்டா, வாந்திதானாடா எப்ப பார்த்தாலும் எடுத்துனு இருக்கும் அத எப்பட்றா நாய் கடிச்சிது" ன்னு நானும் கேட்டுகினேம்பா !
"அண்ணாத்தே, வயக்கம்போல வாந்தி எடுக்கசொல்லறப்பதான் நாய் கடிச்சிசு" ன்னானுங்கப்பா

தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.
அப்பால, நானும், கபாலி, தஙகவேலு எல்லாம் கையில குச்சி எடுத்துனினு அந்த நாய் அடிக்க கிளம்பினாம்பா.
எல்லா இடத்திலும் தேடி போய்., கடைசியா, குப்பத்தொட்டிகிட்ட கண்டுபிடிச்சம்பா.,
"அண்ணாத்தே அண்ணாத்தே , அந்த நாய்தான் நம்ம தங்கச்சிய கடிச்சிது " ன்னு பசங்க அடையாளம் காட்டினானுங்கப்பா.
அது எந்த நாய்டானு பார்த்தா, காலையிலே நான் வண்டியில டேஷ் உட்டேன் பாருப்பா, அதே நாய்தான்பா. மவனே என்னையாடா காலையில ஜல்சா பண்றசொல்ல இடிச்சே , இப்ப உன் தஙக்சசி கதிய பார்த்தியா ந்னு நக்கலா போஸ் குடுக்குதுப்பா.
சரின்னு நானும், கபாலியும் தங்கவேலும் நாலு அடிப்போட்டு தொர்த்தி உட்டேன்பா.வூட்டாண்டா வந்து பார்த்தா, தங்கச்சிக்கு வெறி புடிச்சி போச்சு, தொப்புள சுத்தி 48 ஊசி போட்டனும்னு டாக்கரு சொல்லிட்டாருப்பா.
என் தங்கச்சி கதைய பார்த்தியா நைனா. நான் என்னத்த பண்ணுவேன். இனிமே தண்ணியே அவ குடிக்ககூடாதாம்பா. அதான் நான் தண்ணிப் போட்டு பொலம்பினுகிறேன்.

தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா!.

ஜனகராஜ் உட்கார்ந்து புலம்பின இடம் தில்லி பக்கத்தில் உள்ள நாய்டாவாக இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆளவந்தான் January 12, 2009 at 11:46 PM  

டோண்டு அவர்களே,

இது என்ன பின்னூட்டமா இல்ல பதிவா? தெளிவா தான் இருக்கீங்களா???? :)

ஆளவந்தான் January 12, 2009 at 11:47 PM  

நம்மள மாதிரி சைட் டிஸ்ஸை காலி பண்ற் மக்கள பத்தி அவுக எதாவது பதிவு போட்டா சொல்லுங்க..

dondu(#11168674346665545885) January 12, 2009 at 11:51 PM  

@ஆளவந்தான்
நான் தெளிவாத்தான் இருக்கேன். ஆனா பாருப்பா த்தங்காச்சியை நாய் கட்சிச்சுப்பா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சரவணகுமரன் January 12, 2009 at 11:51 PM  

டோண்டு சார், படத்துல வருற அந்த காட்சியின் ஸ்கிரிப்டையே எழுதிட்டாரு.... :-)

T.V.ராதாகிருஷ்ணன் January 13, 2009 at 12:26 AM  

அட' இத பாற்ரா..டோண்டு சாரு இதேய்ப் போய் இத்தினி காபகம் வச்சுக்கிணு இருக்காரு...சும்மா கிரேட்டுப்பா அவரு...தங்கச்சிய நாய் கடிச்சுடுத்தப்பா.

வெண்பூ January 13, 2009 at 2:07 AM  

//
அப்படி உ.பா குடிப்பவரின் பக்கத்தில் உட்கார்ந்து பெப்ஸி, கோக் குடிக்கும்போதும், சைட் டிஷ் கொறிக்கும் போதும், நான் பட்ட அவஸ்தைகளை
//

சேம் பிளட்.. ஒரு மாதிரி அந்நியமா தெரியுவோம்..

கலக்கல் டோண்டு சார்..

சின்னப் பையன் January 13, 2009 at 5:17 AM  

வாங்க sureஷ் -> என்ன, ஒரு தடவை சொல்லி பாத்துக்கறீங்களா??????

வாங்க பிரேம்ஜி, ராகி ஐயா -> நன்றி..

வாங்க டோண்டு ஐயா -> அடடா அடடா... மொத்த வசனத்தையும் எழுதி கலக்கிட்டீங்க... எப்படி இதெல்லாம்???????... ஏதாவது ஹைபர்லிங்க் இருக்கா???? :-))))

பூச்சாண்டியில் தங்கள் முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...

வாங்க ஆளவந்தான் -> பாருங்க. அதேதான் நானும் கேட்டிருக்கேன்...

வாங்க சரவணகுமரன் -> நன்றி...

வாங்க வெண்பூ -> நன்றி...

மணிகண்டன் January 13, 2009 at 5:37 AM  

அந்த உம்மா வாங்கின நண்பர் நீங்க தானா ?

நிஜமா குடிக்காம, உ.பா மக்களோட வெளில போறது கொடுமை தான். திருச்சில நாங்க ஒரு கிரிக்கெட் மேட்ச் ஜெயிச்சதுக்கு ஒரு பார்ட்டிக்கு போனோம்.....குடிச்சுட்டு ஹோட்டல்ல போய் நண்பர்கள் பண்ணின ஆட்டூழியம் சொல்லி மாளாது. நேரா போய் பக்கத்துல சாப்பிட்டுக்கிட்டு இருந்தவங்க தோசைய எடுத்துக்கிட்டு வந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டான் ஒருத்தன். அவங்க கிட்ட போய் apologize பண்ணிட்டு எப்படியோ சமாளிச்சோம். அடிச்சி இழுத்துகிட்டு வீட்டுக்கு போறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு.

வால்பையன் January 13, 2009 at 10:25 AM  

எனகெல்லாம் இதில் டாக்டர் பட்டமே கொடுக்கலாம்!

பக்கத்து டேலிளின் ஆம்லெட் எடுத்து சாப்பிடுவதிலிருந்து, அவர்களையே வீடு வரை கொண்டு வந்து விட செய்து விடுவேன்.

இன்றும் எனக்கு க்ளாஸ்மேட்ஸ் நிறைய இருக்கிறார்கள்

RAMASUBRAMANIA SHARMA January 13, 2009 at 1:27 PM  

"DONDUKKU"...NALLA MEMORY POWER...NALLA COMEDY...

சின்னப் பையன் January 13, 2009 at 1:31 PM  

வாங்க மணிகண்டன் -> ஹிஹி. இப்படி வெளிப்படையா கேக்கலாமா????? :-(((
உங்க அனுபவமும் சூப்பர்... :-)))

வாங்க வால் -> ஹாஹா... டாக்டர் வால் வாழ்க... :-)))

வாங்க நசரேயன் -> நன்றி ஹை..

வாங்க ராமசுப்ரமணிய ஷர்மா -> ஆமாங்க. அந்த வசனகர்த்தாவே அதை மறந்திருப்பாரு. இவரு கரெக்டா அப்படியே எழுதிட்டாரே.... :-))))

dondu(#11168674346665545885) January 13, 2009 at 11:29 PM  

//ஏதாவது ஹைபர்லிங்க் இருக்கா???? :-))))//

ஆம், ஹைப்பர் லிங்க்தான். சில மாதங்களுக்கு முன்னால் எனக்கு மின்னஞ்சலில் என் ந்ண்பர் அனுப்பியிருந்தார். குடிகாரர்கள் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதை வலியுறுத்துவதை குறிக்க இதை அனுப்பியிருந்தார்.

இப்போது “தங்கச்சிய” என்னும் சொல்லை பார்த்ததுமே அது ஞாபகத்துக்கு வந்தது. பிறகு என்ன எனது ஜீமெயில் ஆர்கைவ்ஸில் தேடினேன் கிடைத்தது. ஆக, எனது ஞாபகசக்தி எல்லாம் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் எங்கு பார்த்தோம் என்ற ஞாபகத்துடன் நின்றது.

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சின்னப் பையன் January 14, 2009 at 9:22 AM  

டோண்டு ஐயா -> நெனெச்சேன். இப்படி ஏதாவது ஒரு லிங்க் இருக்கும்னு. கலக்கறீங்க போங்க... :-)))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP