அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை என்ன?
தினமும் காலையில் அலுவலகத்திற்குப் போனவுடன் சில பேர் தங்கள் இருக்கையில் வைத்திருக்கும் (ஏதாவது) ஒரு கடவுள் படத்திற்கு ஒரு 'குட் மார்னிங்' போட்டபிறகு அன்றைய வேலையை துவக்குவார்கள். அப்போதுதான் அன்றைய வேலை பிரச்சினை எதுவும் இல்லாமல் போகும் என்ற ஒரு சிறு நம்பிக்கை. என்ன சரிதானே???
அப்படி வேலையை துவங்கும் முன் நான் என்ன செய்வேன்னு நினைச்சிப் பாத்தேன்.... ஆமா... அதுதான் இந்த பதிவு... :-))
சுடோகு : காலையில் மூளையை(!!!) சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்த சுடோகுதாங்க உதவுது. கஷ்டமான 'லெவல்' ஏதாவது ஒண்ணு எடுத்துக்கிட்டு, எவ்ளோ நேரமானாலும்(!!!) அந்த விளையாட்டை முடிச்சிட்டுத்தான் அன்றைய அலுவலக வேலையை துவக்கணும்ற உறுதியோடு விளையாடுவேன். அப்படியே வெற்றியோட முடிச்சிட்டேன்னா அன்றைய தினம் மிக அற்புதமா இருக்கும்ன்றது என்னோட நம்பிக்கை.
காபி: காலங்கார்த்தாலே அலுவலகத்தில் காபி குடிக்கிற சுகமே தனி. ஒரு கப் முழுக்க எடுத்துக்கிட்டு, 'சர்ர்ர்ர்ர்'ன்னு சத்தத்தோட கொஞ்சம் கொஞ்சமா அதை உறிஞ்சி குடிப்பேன். அப்படி காபி குடிக்கறதை ஒரு தவமா நினைக்கறதாலே, அதை முடிக்கற வரைக்கும் எந்த வேலையையும் துவக்கறதில்லேன்னு முடிவே பண்ணிட்டேன்...
வீட்டுக்கு தொலைபேசி: அலுவலகம் வந்தபிறகு, நல்லபடியா வந்து சேர்ந்ததை வீட்டுக்கு சொல்லணுமே. மெனக்கெட்டு இந்த ஒரே ஒரு விஷயத்துக்காக தொலைபேசினா நல்லா இருக்காதுன்றதாலே, கூட ஒரு பத்து நிமிடம் தங்ஸிடம் பேசுவேன். அலுவலகத்துலே வேலை எப்பவுமே இருக்கும். அதுக்காக வீட்டுக்கு பேசாமே இருக்கமுடியுமா என்ன?
நடைப்பயிற்சி: வேலையில் மூழ்கிட்டேன்னா சுத்திலும் என்ன நடக்குதுன்னே எனக்குத் தெரியாது. பயங்கர டென்ஷனாயிருக்கும். அதனாலே என்ன செய்வேன்னா - (டென்ஷன்) வரும்முன் காப்போம்ற நல்ல எண்ணத்திலே, காலையிலேயே ஒரு பத்து நிமிடம் அலுவலகத்தில் அப்படியே ஒரு சுற்று நடைப்பயிற்சிக்கு போய்விட்டு வருவேன். வீட்லே வேலை ஜாஸ்தி, நடக்க இடமில்லைன்ற காரணத்தால் இப்படி அலுவலகத்தில் நடக்க வேண்டியிருக்கு அவ்ளோதான் வேற காரணம் ஒண்ணுமில்லே...
நண்பர்கள் நலன்: நம்ம நலனை மட்டும் பாத்துக்கிட்டா போதுமா, நம்ம கூட வேலை பாக்கறவங்களும் நல்லா இருக்கணுமே... அந்த நல்ல எண்ணத்துலே.. தினமும் காலை அலுவலகம் வந்தவுடன் எல்லா நண்பர்கள் இடத்துக்கும் போய்.. நேத்து நல்லா தூங்கினீங்களா?... என்ன ஷாப்பிங் பண்ணீங்க... என்ன படம் பாத்தீங்க... அப்படி இப்படின்னு கொஞ்ஞ்ஞ்ஞ்சமே கொஞ்ச நேரம் பேசிட்டு, டக்குன்னு என் இருக்கைக்கு வந்துடுவேன்... எனக்கு வேலைதான் முக்கியம்....
செய்திகள்: ஒரு இரவு முழுக்க தூங்கியிருக்கோம். அந்த நேரத்துலே உலகத்துலே என்னென்ன நடந்திருக்கோ? -- இதை தெரிஞ்சிக்கறதுக்காக இணையத்தில் சென்னை / தமிழக / இந்திய / உலக செய்திகளை ஒரு முறை படித்துவிடுவேன். அதுக்காக தினமும் ஏதாவது பரபரப்பான நியூஸை எதிர்ப்பார்க்கிறவன்னு நினைச்சிக்காதீங்க. உலக விஷயங்களை தெரிஞ்சிக்கணும்கிற ஆர்வம்தான் காரணம். அதுக்கப்புறம்தான் எப்பவுமே கூட இருக்கிற அலுவலக வேலையெல்லாம்.
இப்படியாக ஒரு வழியா இந்த ச்சின்ன்ன்ன்ன்னச்சின்ன விஷயங்களை முடிச்சிட்டு, அலுவலக வேலைகளை துவக்கி விடுவேன்.
பட்டுவாடா: நேற்று அலுவலகத்தை விட்டு போனபிறகு வந்திருக்கும் மின்னஞ்சல்களை ஒரு முறை பார்த்துவிட்டு, எல்லாவற்றையும், என்னை விட சிறப்பாக வேலை செய்யும் என்கூட வேலை பார்ப்பவர்கள் யாரின் பார்வைக்காவது அனுப்பி வைத்துவிடுவேன். தபால்காரர் எல்லா தபால்களையும் பகுதி வாரியாக பிரிப்பதை நினைத்துக் கொள்ளவும். அதே மாதிரிதான் நான் செய்யும் பட்டுவாடாவும்.
*****
அவ்வளவுதான். இன்னியோட வேலை முடிஞ்சுது. இனிமே இணையத்துலே உக்காந்திர வேண்டியதுதான். நம்ம கடைக்கு வந்திருக்கறவங்களை வரவேற்கணும். நாம போற வழக்கமான கடைகள்லே போய் வருகையை பதியணும். நாளைய பதிவுக்கான வேலையை துவக்கணும். எனக்கு நிறைய வேலை இருக்கு. பிறகு பாப்போம். என்ன? பை பை....சீ யூ.....
56 comments:
ஹையா மீ த ஃபர்ஷ்ட்டு
//அப்போதுதான் அன்றைய வேலை பிரச்சினை எதுவும் இல்லாமல் போகும் என்ற ஒரு சிறு நம்பிக்கை. என்ன சரிதானே???
//
யாருக்கு கடவுளுக்குதான??
இஃகி..இஃகி..இஃகி..
எவ்ளோ நேரமானாலும்(!!!) அந்த விளையாட்டை முடிச்சிட்டுத்தான் //
நம்பளாவது,முடிக்கிறதாவது!!!
சும்மா விளையாடாதீங்கண்ணே :))
//அப்படி காபி குடிக்கறதை ஒரு தவமா நினைக்கறதாலே, //
நீங்க காபி குடிக்கிறத நினைச்ச மாதிரி நான் காப்பி அடிக்கிற நினைச்சதாலதான் ஏதோ டிகிரி வாங்க முடுஞ்சுது
:)))
//வேலையில் மூழ்கிட்டேன்னா சுத்திலும் என்ன நடக்குதுன்னே எனக்குத் தெரியாது
//
எனக்கெல்லாம் தண்ணில மூழ்குனாதான் சுத்தி நடக்குறது தெரியாது (நீச்சல் குளத்த சொன்னேன்)
:)))
"ஸ்லம் டாக் மிலியனர்" திரைப்படத்துக்கு 7 BAFTA விருதுகள்.
இலங்கை மண்ணில் முதல் முதலாக T20 போட்டி.
மேலதிக விபரம்....
http://mytamildiary.blogspot.com/
//
அலுவலகத்தில் அப்படியே ஒரு சுற்று நடைப்பயிற்சிக்கு போய்விட்டு வருவேன்
//
கையில எதாவது ஒரு நோட்புக் எடுத்துகிட்டு போங்க, மீட்டிங் போயிட்டு வர்ற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும். :))
அப்துல்லா அண்ணே -> அவ்வ். காலையிலேயே ஃபார்முக்கு வந்தாச்சா???? நடத்துங்க நடத்துங்க....
:-)))
//
அப்படி காபி குடிக்கறதை ஒரு தவமா நினைக்கறதாலே, அதை முடிக்கற வரைக்கும் எந்த வேலையையும் துவக்கறதில்லேன்னு முடிவே பண்ணிட்டேன்
//
:)
வேலையைத் துவங்கறதே இப்படின்னா, வேலை எப்படி இருக்கும்?
எல்லா இடத்துலயும் ரிசஷன் ப்ராப்ரளமா இருக்குங்க. பார்த்து.....
வீட்லே வேலை ஜாஸ்தி, நடக்க இடமில்லைன்ற காரணத்தால் இப்படி அலுவலகத்தில் நடக்க வேண்டியிருக்கு அவ்ளோதான் வேற காரணம் ஒண்ணுமில்லே...
:)))))))))
வேலைய ஆர்ம்பிக்கறதுக்குள்ளயே எவ்வளவு ப்ராப்ளம்ஸ் பாருங்க? என்னவோ நாமெல்லாம் சும்மனாச்சிக்கு ஆபீஸ் போறமாதிரியும், போய் சும்மா ரெஸ்ட் எடுக்கற மாதிரியும் மத்தவங்க எப்பிடியெல்லாம் தப்பு தப்பா பேசறாங்க? இதை நெனச்சே காலைல ஒருமணி நேரம் போயிடுதுங்க :(
எப்பதான் வேலைய ஆரம்பிப்பீங்க?
நல்லா தெரிஞ்சுக்கங்க. உங்களுக்கு சம்பளம் கொடுக்கறது வீட்டுவேலை செய்யறதுக்கில்ல. ஆபிசுல ஆணி புடுங்கறதுக்கு:)
ஆஹா இந்தப் பதிவ படிச்சிட்டு சிரிச்சுக்கிட்டே இருந்தா நாங்க எப்படி வேலை பார்க்கிறது?
மற்றுமொரு சிறப்பான நகைச்சுவை பதிவு.மிகவும் ரசித்து சிரித்தேன்.
:-)))))))))))))))))))
சூப்பர்ங்கண்ணோவ்....
தபால் பிரிக்கிறதையும் தப்பா பிரிச்சுட்டா யாருக்குமே வேலையாவாதுங்கண்ணா. இந்த மாதிரி டென்ஷனான வேலைக்கு இந்த முன்னேற்பாடு எல்லாம் முக்கியங்தானுங்கண்ணோவ்.:)
உங்க கடமை உணர்ச்சி என்னை புல்லரிக்க வைத்தது... :-)
//சுடோகு : காலையில் மூளையை(!!!) சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்த சுடோகுதாங்க உதவுது. கஷ்டமான 'லெவல்' ஏதாவது ஒண்ணு எடுத்துக்கிட்டு, எவ்ளோ நேரமானாலும்(!!!) //
நான் சுடோகு விளையாடிபிறகுதான் வேலை என்றால் வேலைய ஸ்டார்ட் பண்ணவே பலமாதம் ஆகும்:(
//அலுவலகத்தில் நடக்க வேண்டியிருக்கு அவ்ளோதான் வேற காரணம் ஒண்ணுமில்லே//
அட நீங்க இப்படி சொல்றீங்க உங்க டீம் மெட் அடுத்த டிமீல் இருக்கும் ஸ்னோவாவை சைட் அடிக்க போய் இருப்பதாக சொல்கிறார்!
//அலுவலகத்தில் வேலையை துவக்கும் முன் செய்யவேண்டியவை என்ன?//
தூங்கி எழுந்ததும் முகம் கழுவுவது என் பழக்கம்
//(ஏதாவது) ஒரு கடவுள் படத்திற்கு ஒரு 'குட் மார்னிங்' போட்டபிறகு அன்றைய வேலையை துவக்குவார்கள். //
நான் நமீதா படத்துக்கு குட்மார்னிங் போடுறேனே!
வ்ளோ நேரமானாலும்(!!!) அந்த விளையாட்டை முடிச்சிட்டுத்தான் அன்றைய அலுவலக வேலையை துவக்கணும்ற உறுதியோடு விளையாடுவேன். அப்படியே வெற்றியோட முடிச்சிட்டேன்னா அன்றைய தினம் மிக அற்புதமா இருக்கும்ன்றது என்னோட நம்பிக்கை.//
அன்றைய தினம் நன்றாக இருக்கும் ஆனா வேலை ஒன்னும் நடந்திருக்காதே!
// நேத்து நல்லா தூங்கினீங்களா?..//
நல்லா தூங்கவில்லை என்றால் என்ன தாலாட்டு பாடியா தூங்கவைக்க போறீங்க!:)))
// 'சர்ர்ர்ர்ர்'ன்னு சத்தத்தோட கொஞ்சம் கொஞ்சமா அதை உறிஞ்சி குடிப்பேன். அப்படி காபி குடிக்கறதை ஒரு தவமா நினைக்கறதாலே,//
ஒஷோவோட ஒரு கோப்பை தேநீர் புத்தகம் படிச்சிங்களா?
//ஒரு பத்து நிமிடம் தங்ஸிடம் பேசுவேன்.//
அதற்கு பிறகு யாராவது வேலை செய்யமுடியுமா? என்ன கதை விடுறிங்க
//வீட்லே வேலை ஜாஸ்தி, நடக்க இடமில்லைன்ற காரணத்தால் இப்படி அலுவலகத்தில் நடக்க வேண்டியிருக்கு //
இப்போ புரியுது!
ஏற்கனவே வீட்ல பெண்ட நிமித்தி தான் அனுப்புறாங்களா?
// தினமும் காலையில் அலுவலகத்திற்குப் போனவுடன் //
காலயிலேயே போயிடுறீங்களா..
எப்படிங்க இதெல்லாம்..
// சுடோகு : காலையில் மூளையை(!!!) சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்த சுடோகுதாங்க உதவுது. //
அது சரி... இருக்குரவங்க கவலைப்பட்டு சுறு சுறுப்பா வச்சுக்கணும்.
உங்களுக்கும், எனக்கு அந்த கவலை கிடையதில்ல
// காபி: காலங்கார்த்தாலே அலுவலகத்தில் காபி குடிக்கிற சுகமே தனி. ஒரு கப் முழுக்க எடுத்துக்கிட்டு, 'சர்ர்ர்ர்ர்'ன்னு சத்தத்தோட கொஞ்சம் கொஞ்சமா அதை உறிஞ்சி குடிப்பேன். அப்படி காபி குடிக்கறதை ஒரு தவமா நினைக்கறதாலே, அதை முடிக்கற வரைக்கும் எந்த வேலையையும் துவக்கறதில்லேன்னு முடிவே பண்ணிட்டேன்... //
காபி சீட்டுக்கு யாரவது கொண்டு வந்து கொடுப்பாங்களா.. இல்ல நீங்களேதான் போய் எடுத்துகணுமா
// வீட்டுக்கு தொலைபேசி: அலுவலகம் வந்தபிறகு, நல்லபடியா வந்து சேர்ந்ததை வீட்டுக்கு சொல்லணுமே. //
இது ரொம்ப முக்கியம்.. வீட்டுக்கு தொலைபேசல்லன்னா...
சாயங்காலம் வீட்டுக்கு திரும்பியவுடன், உடையும் பொருட்களுக்கு யார் பொருப்பாக முடியும்..
நடைப்பயிற்சி:
ரொம்ப முக்கியமான் ஒன்று..
நடைப் பயிற்சி இல்லை என்றால், கொழுப்பு ரொம்ப ஏறிடும்..
நிச்சயமாக செய்ய வேண்டும்
யோசிச்சி பாத்தா நானும் நிஜமாவே ரெண்டு மூணு நாளா இதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்.. :(
அண்ணாத்தே,
சென்னையில இருந்து அமெரிக்காவுல உங்க எடத்துக்கு வர டிரான்ஸ் அப்ராக்ஸி எவ்ளோ ஆகும்?
அது எப்படீங்க ? எல்லாம் ஜெராக்ஸ் எடுத்தது போல எல்லா எடத்துலயும் நடக்குறத சரியா சொல்றீங்க.
வாங்க ஆளவந்தான் -> ஹிஹி... ஏற்கனவே நான் ‘ஸுஸ்ஸூ'க்கு போனாக்கூட கையில் ஒரு நோட்புக் எடுத்துக்கிட்டுதான் போறேன்... :-)))))
வாங்க பரிசல் -> அதான் எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பிட்டோமே? அவங்க பாத்துக்குவாங்க.... இல்லேன்னா கடவுள் இருக்கவே இருக்காரு... அவ்வ்வ்...
வாங்க ஸ்ரீதர்கண்ணன், மகேஷ் -> நன்றி..... :-))))
வாங்க வித்யா -> ஹாஹா.. இப்படித்தான் எல்லாருமே கேப்பாங்க... எப்ப வேலைய ஆரம்பிப்பீங்க? எப்ப வேலைய ஆரம்பிப்பீங்கன்னு?.... நான் ‘தெரியலியேப்பா'ன்னு நாயகன் ஸ்டைல்லே சொல்லிடுவேன்... :-))))
அமெரிக்காவா என்னா கோயமுத்தூரா இருந்தா என்ன எல்லா இடத்திலும் மக்கள் ஒரே மாதிரிதான் இருக்கோம். நான் இதை தவிர டி.வி.சீரியல், மாமியார் நாத்தனார் கதை, ஆபிஸ் கிசு கிசு எல்லாம் பேசிட்டு அப்புறம் மீதி இருக்கிற நேரத்தில எல்லாம் ஆபிஸ் வேலைதான் செய்வேன் :)
வாங்க முரளிகண்ணன் -> ஹாஹா... நீங்களும் இதே மாதிரி செய்யணும்றதுக்காகத்தான் இந்த பதிவே போடறது..... :-))))
வாங்க பிரேம்ஜி -> நன்றி...
வாங்க சுல்தான் ஜி -> பாருங்க. உங்களுக்கு மட்டும்தான் என் கஷ்டம் புரியுது... :-))))))
வாங்க சரவணகுமரன் -> நன்றி...
வாங்க குசும்பன்ஜி -> முதல்லே எனக்கும் வேலை ஆரம்பிக்கறதுக்கு மாசக்கணக்குலே ஆயிடுச்சு... அப்புறம் சுடோகு போடப்போட இப்பல்லாம் சில மணி நேரங்களிலேயே முடிச்சிடறேன்... அவ்வ்வ்வ்......
ROTFL!!
கவர்மெண்ட் ஆபிஸிலே நான் அப்ரண்டியா இருந்தப்போ ஒருத்தங்க வேலை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு exe ஓட விடுவாங்க..e-poojai!!!
மணி அடிக்கும், தீபம் காட்டும்! மொதநாள் நானும் என் ப்ரெண்டும் பார்த்துட்டு வெளிலே வந்து சிரிச்ச சிரிப்பு மறக்க முடியாதது..அப்பூறம் பழகி போய்டுச்சு!
//ஆபிஸ் கிசு கிசு எல்லாம் பேசிட்டு அப்புறம் மீதி இருக்கிற நேரத்தில எல்லாம் ஆபிஸ் வேலைதான் செய்வேன்//
என்ன வேலை செய்றீங்கணு சொல்லாதீங்க. திட்டி தீர்த்துடுவாங்க..
வாங்க வால் -> அவ்வ். ஆபீஸ்லே தூங்கிடுவீங்களா???? ஹிஹி.. நான் இன்னும் அதை மட்டும்தான் பண்ணலை.... :-))))
வாங்க இராகவன் -> //
உங்களுக்கும், எனக்கு அந்த கவலை கிடையதில்ல//
நான் ஓகேங்க... உங்களை ஏன் சேத்துக்கிட்டீங்க?????? அவ்வ்வ்வ்....
வாங்க வெண்பூ -> ஹிஹி... யோசிச்சே யோச்சே இன்னிக்கும் அப்படித்தான் ஓட்டிட்டீங்கன்னு நினைக்கறேன்.... :-)))))
வாங்க ரமேஷ் வைத்யாஜி -> ஏங்க... தேடி வந்து உதைக்கப் போறீங்களா???? ஆஆஆஆ!!! 24 மணி நேரமும் ஒரு நாப்பதாயிரம் ரூபாயும் இருந்தா நாளைக்கு எங்க வீட்லே உங்களுக்கு சாப்பாடு!!!! ஓகேயா.... :-))
வாங்க அசோசியேட் -> ஹிஹி... எல்லாம் கேள்வி ஞானம்தான்... :-)))
வாங்க தாரணி பிரியா -> சரி சரி. கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லிட்டீங்க... நேத்து 'கோலங்கள்'லே என்ன ஆச்சுன்னு சொல்லுங்க.... ஹிஹி...
வாங்க சந்தனமுல்லை -> ஈ-பூஜையெல்லாம் ரொம்பவே ஓவருங்க... கொஞ்ச நாள் கழிச்சி நீங்களும் அந்த exe ஓட்டினீங்களான்னு சொல்லவேயில்லையே!!!!!!!! :-))))))
வாங்க கார்க்கி -> நான் பயந்துட்டேன்.. இந்த மாதிரி நான் சொல்லவேயில்லையேன்னு. பிறகு பாத்தா, நீங்க தாரணி பிரியாவுக்கு பதில் சொல்லிட்டிருக்கீங்க... :-)))))
நல்லா இருங்க, இப்படியெல்லாம் சபையிலே உண்மையைப் போட்டு உடைக்க புடாது
Hi
உங்களது வலைப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
சின்ன பையன் உங்க பதிவு நல்லா இருந்ததுனால உங்களோட அனுமதியோட நான் வேறொரு இடத்துல உங்க பெயரிலேயே போஸ்ட் போட்டுகிறேன். பெரிய மனசோட அனுமதி தரணும்.
-- கிருஷ்ணகுமார்.
வாங்க நசரேயன் -> :-)))) நன்றி...
வாங்க கிருஷ்ணகுமார் -> தாராளமா போட்டுக்குங்க... அங்கிருந்து பூச்சாண்டிக்கு உரலும், எங்கே போட்டிருக்கிறீங்கன்னு எனக்கும் சொன்னா சந்தோஷப்பட்டுக்குவேன்... அவ்ளோதான்... நன்றி... :-))
என்ன நடக்குது இங்கே. கொஞ்சம் அசந்தா இவ்வளவு நடக்குதா இங்கே!!!
சுடோகு
=======
இதென்னாங்க வழக்கொழிந்த சொற்களா
ஏன்னா நான் இப்போதான் எழுதிட்டு வந்தேன். அதான் ஒரே சந்தேகமா போச்சுதுங்க
//
எவ்ளோ நேரமானாலும்(!!!) அந்த விளையாட்டை முடிச்சிட்டுத்தான்
//
எப்போ முடியும், எனக்கு தெரிஞ்சு
ஒரு ஐந்து மணி நேரமாவது ஆகும்
//அப்போதுதான் அன்றைய வேலை பிரச்சினை எதுவும் இல்லாமல் போகும் என்ற ஒரு சிறு நம்பிக்கை. என்ன சரிதானே???
//
இதெல்லாம் இருக்க வேண்டியதுதானே
ஆனா இப்போ எல்லாருக்கும் சொல்லி
கொடுத்துட்டீங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ரொம்ப நல்ல கற்பனை
எல்லாம் அருமையா
எழுதி இருக்கீங்க
சிரிப்பா வந்தது!!!
//
RAMYA said...
ரொம்ப நல்ல கற்பனை
எல்லாம் அருமையா
எழுதி இருக்கீங்க
சிரிப்பா வந்தது!!!
//
என்னது கற்பனையா? ஏங்க அவரோட சொந்தகதையை மிக நேர்த்தியா சொல்லியிருக்கார். கற்பனை’னு சொல்லி காயபடுத்திறீங்களே :))))))))
50வது பின்னூட்டத்துக்கு வாழ்த்துக்கள்..
51வதா என்னோட மொய் :))))
வாங்க ரம்யா -> நன்றி...
ஆளவந்தான் -> அவ்வ்வ்வ்.....ஏன் இந்த கொல வெறி உங்களுக்கு???????...:-)))
எவ்ளோ நேரமானாலும்(!!!) அந்த விளையாட்டை முடிச்சிட்டுத்தான் //
Athae mudikave evening ayudumae apprum eppadi mathathae :-) ha ha lol
Seri neenga intelligent mudichitinga
Nanga ellam antha pakkam porathe ellai, morning wife ku attendance koduka call panama thitu vangi na anubavam palarukum irukum endru nenaikiran :-)
//கவர்மெண்ட் ஆபிஸிலே நான் அப்ரண்டியா இருந்தப்போ ஒருத்தங்க வேலை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு exe ஓட விடுவாங்க..e-poojai!!!
மணி அடிக்கும், தீபம் காட்டும்! மொதநாள் நானும் என் ப்ரெண்டும் பார்த்துட்டு வெளிலே வந்து சிரிச்ச சிரிப்பு மறக்க முடியாதது..அப்பூறம் பழகி போய்டுச்சு!// ha ha nanum serichitan unga comments a padichi :-)
[B]NZBsRus.com[/B]
No More Laggin Downloads With NZB Downloads You Can Quickly Search HD Movies, PC Games, Music, Applications and Download Them at Maxed Out Rates
[URL=http://www.nzbsrus.com][B]Newsgroup[/B][/URL]
Infatuation casinos? separate this roomy [url=http://www.realcazinoz.com]casino[/url] advisor and actuate come up with creditable online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also into our blooming [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] recommendation at http://freecasinogames2010.webs.com and attainment to precise to heyday alteration !
another braggart [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] arbitrator is www.ttittancasino.com , as opposed to of german gamblers, interval unrestrained online casino bonus.
Post a Comment