செய்யறதுக்கு வேலை இல்லேன்னா வரக்கூடிய பிரச்சினைகள்...
காலங்கார்த்தாலே அலுவலகம் வந்து - தமிழ்மணம், தமிலிஷ் மற்றும் நமக்குத் தெரிந்த கடைகளுக்கெல்லாம் சென்று விசாரித்துவிட்டு, பிறகு வேலை ஏதாவது இருந்தா ஒண்ணும் பிரச்சினையேயில்லை. அதை செய்து நாளை ஓட்டிவிடலாம்.
இந்த வேலை, வேலைன்னு ஏதோ சொல்றாங்களே, அது மட்டும் இல்லேன்னா, எவ்ளோ பிரச்சினை தெரியுமா? அதைத்தான் இந்த பதிவுலே பாக்கப் போறோம்.
*****
அக்கம் பக்கத்துலே இருக்கறவங்ககிட்டே அதிகபட்சமா ஒரு ஐந்து நிமிடம்தான் பேசமுடியுது. ஏன்னா, அவங்களுக்கு ஏதோ ஒரு வேலை இருந்துகிட்டே இருக்கு. அதுக்கு மேலே பேசிக்கிட்டிருந்தோம்னா, என் மேனேஜர் கிட்டே போட்டுக் கொடுத்துடுவாங்க. அப்புறம் அது பெரிய பிரச்சினை ஆயிடும். அதனால், வேறே ஏதாவதுதான் செய்யணும்.
சரி, இந்தியாவிலே இப்போ மாலை நேரம்தானேன்னு, நண்பர்கள் / சொந்தக்காரங்க யார் வீட்டுக்கு தொலைபேசி மொக்கை போடலாம்னாலும் - சரியா 'கஸ்தூரி' (அல்லது குங்குமம் - இல்லே வேறே ஏதோ ஒண்ணு) பாக்கற நேரத்துக்குத்தான் பேசணுமான்னு திட்டு விழும். காசு செலவு பண்ணி திட்டு வாங்கணுமான்னு யோசிப்பேன். அதனால், இதுவும் முடியாது.
உக்காந்து வேலை செய்யறதுக்கு, அலுவலகத்துலே சக்கரம் வைச்ச நாற்காலி ஒண்ணு குடுத்திருக்காங்க. அதிலே சுத்தி சுத்தி வந்தேங்க அப்படின்னு பாடிக்கிட்டே வேகமா (ஒரே இடத்துலே) சுத்திக்கிட்டு இருக்கலாம்னு பாத்தா - ஒரு பத்து நிமிடத்திலே தலை சுத்துது. இதிலே இன்னொரு பிரச்சினை - கீழே விழுந்து மண்டையில் அடிபடும் அபாயமும் இருக்கு.
எங்க அலுவலகம் ஒரு நாலு மாடி கட்டிடம். வெவ்வேறே இடங்களில் ஏறி-இறங்க மாடிப்படிகள் கட்டி வெச்சிருக்காங்க. கொஞ்ச நேரம் நடக்கலாம்னு ஒரு மாடியிலே ஏறி, கட்டிடத்தின் இன்னொரு பக்கம் போய், மற்றொரு மாடியில் இறங்கி... மறுபடி இந்த பக்கம் ஏறி...இறங்கி...ஏறி... இப்படி செய்துக்கிட்டிருந்தா ஒரு அரை மணி நேரத்துலே காலெல்லாம் பயங்கரமா வலிக்குது... அதனால், இதுவும் நோ.
சரி.. எங்கேயும் போகவேண்டாம். அலுவலகத்தின் சாப்பாட்டுக் கூடத்தில் நிறைய மக்கள் இருப்பாங்க. அங்கே சும்மா போய் கொஞ்ச நேரம் நின்னு வேடிக்கை பாக்கலாம் அப்படின்னா, மக்களை(?!) பாக்க ஆரம்பிச்ச நிமிடத்தில் மனசுலே கவிதை அருவி மாதிரி கொட்டுது (குணா எஃபெக்டில் படிக்கவும்!). ஆனா, அதையெல்லாம் வார்த்தையா வடிக்கிறேன் பேர்வழின்னு ஆரம்பிச்சேன்னா, இருக்கிற சில நண்பர்களும் காணாமே போய்விடுவாங்கன்ற அபாயம் இருப்பதால் அதையும் தவிர்க்க வேண்டியிருக்கிறது.
நம்ம ச்சின்ன அறையில்தானே இருக்கோம்னு கொஞ்சம் கத்திப் பாடக்கூட முடியாது. அப்பப்போ நம்மிடத்துக்கு வர்ற மேனேஜர் - என்ன இப்படி கண்றாவியா பாடறே? வீட்டுக்குப் போய் ஒழுங்கா பாட்டு கத்துக்கிட்டு அப்புறம் வேலைக்கு வா - அப்படின்னு 'ஒரேடியா' அனுப்பிட்டா - அப்புறம் எல்லாமே பிரச்சினைதான்.
சரி இப்போ வேலையில்லாமே சும்மாதானே இருக்கோம்னு வீட்டுக்கு தொலைபேசி தங்கமணியிடம் பேசலாம்னு பாத்தா - "நீங்க வெட்டியா இருக்கீங்கன்னா, நானும் வெட்டியா இருக்கேன்னு அர்த்தமா? தொலைபேசியை வைங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு"ன்னு 'டொக்'. அதனால், இதையும் பண்ணமுடியாது.
இப்படி எதையுமே செய்யக்கூடாதுன்னு ஒரு மனுசனோட கைகளைக் கட்டிப்போட்டா, நான் என்னதான் செய்யறது?
யாராச்சும் ஒரு நல்ல ஆலோசனையை வழங்குங்க.
44 comments:
ஃபர்ஸ்டே :)
தமிழிஷ்’ல ஓட்டும் போட்டேன்..
அப்பாலிக்கா பதிவ படிக்கிறேன்.. வரலாறு மாதிரி, சாப்பாடும் முக்கியம் அமைச்சரே :)))
இதெல்லாம் ஒரு கவலையா? இது மாதிரி பத்து பதிவு எழுதலாமில்ல? சும்மா வெட்டியா உக்காந்துக்கிட்டு...ம்ம்ம்ம்ம்? என்ன பதிவு போடலாம்னு ஒரு பதிவு, எப்பிடி போடலாம்னு ஒரு பதிவு, எப்ப போடலாம்னு ஒரு பதிவு, பின்னூட்டம் எப்பிடி வரும்னு ஒரு பதிவு, அதுக்கு பதில்னு ஒரு பதிவு... எழுதித் தள்ளுப்பா... :)))))))))))))))))))))
அவனவனுக்கு வேலையே போயிருமேன்னு டவுசரை இருக்கமா புடிச்சுகிட்டு இருக்கான். இதுல இப்படி ஒரு கவலை:))
//உக்காந்து வேலை செய்யறதுக்கு, அலுவலகத்துலே சக்கரம் வைச்ச நாற்காலி ஒண்ணு குடுத்திருக்காங்க. அதிலே சுத்தி சுத்தி வந்தேங்க அப்படின்னு பாடிக்கிட்டே வேகமா (ஒரே இடத்துலே) சுத்திக்கிட்டு இருக்கலாம்னு பாத்தா - ஒரு பத்து நிமிடத்திலே தலை சுத்துது. இதிலே இன்னொரு பிரச்சினை - கீழே விழுந்து மண்டையில் அடிபடும் அபாயமும் இருக்கு.//
இதை வேற நீங்க செஞ்சு பார்த்துருக்கீங்களா? ஹா ஹா ஹா
:-)))))))))
அட என்னங்க நீங்க, எங்கிட்ட ஒரு வார்த்த கேட்டிருக்கலாம்ல.. என்கிட்ட சூப்பர் ஐடியா (ஐடியாவ சொல்லு மொத, சூப்பரா இல்லியானு நாங்க சொல்றோம்) ஒன்னு இருக்கு.
பெரிய வான சாஸ்திரம் எல்லாம் இல்ல.. Outlook Express'a முழு ஸ்கிரீன்ல Open பண்ணி வச்சுகிட்டு, சின்னதா ஒரு notepad, open பண்ணி, அந்த Outlook’ல உங்களுக்கு தெரியிற (New, Edit, View, Tools, Inbox, From, To, Sent) எல்லா வார்த்தையும் முகத்தை சீரியஸா வச்சுகிட்டு காப்பி அடிங்க.. சுத்தி இருக்கிற மக்க, நீங்க அநியாயத்துக்கு பிஸியா இருக்கிறதா நெனச்சுப்பாக..
ஆர்வக்கோளாறில் இதெல்லாம் ctrl+c ctrl+v பண்ணமுடியாதா என யோசிச்சு மாட்டிக்காதீக
மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள், எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது.. பனகல் பார்க் அருகில்..தி.....சரி போதும்.. நான் வரட்டா :))
மக்களை(?!) பாக்க ஆரம்பிச்ச நிமிடத்தில் மனசுலே கவிதை அருவி மாதிரி கொட்டுது
என்ன கொடுமை சார் இது :)
வேலை இல்லேன்னு பதிவைப்படிச்சு.. போரடிக்குதேன்னு தமிழ்மணத்துக்கு ஓட்டுப்போடப் பார்த்தேன்.. அதுவும் வேலை செய்யல..:)
:-)))
ஆணியே புடுங்க வேணாம்...
//"நீங்க வெட்டியா இருக்கீங்கன்னா, நானும் வெட்டியா இருக்கேன்னு அர்த்தமா? தொலைபேசியை வைங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு"ன்னு 'டொக்'//
இதுக்குப் பேருதான் வாயக் குடுது வாங்கிக்கட்டிக்கிடறது.
அட உங்களுக்கும் இதே பிரச்சினைதானா? :))))
எனக்கு வேலை இருக்கு.. நான் போறேன் அண்ணா.. ;))))))
___//காலங்கார்த்தாலே அலுவலகம் வந்து - தமிழ்மணம், தமிலிஷ் மற்றும் நமக்குத் தெரிந்த கடைகளுக்கெல்லாம் சென்று விசாரித்துவிட்டு, பிறகு வேலை ஏதாவது இருந்தா ஒண்ணும் பிரச்சினையேயில்லை. அதை செய்து நாளை ஓட்டிவிடலாம்.
//___
இதுக்கு ஒரே வழி நம்ம சோம்பேறி-கிட்ட ஐடியா கேக்க வேண்டியதுதான் ...
நேரம் இருந்தா, எல்லா பதிவுலயும் போயி பின்னூட்டத்துல வெறும் ஸ்மைலி மட்டும் போடாம எதாவது எழுதலாம் இல்ல...
ஒரு சீட்டு கட்டு வாங்கிட்டு போய் உங்க மேனேஜரோட ரம்மி ஆடலாம்!
எல்லாரையும் கைதட்டி கூப்பிட்டு நேற்று இரவு ஸ்டார்மூவிஸில் பார்த்த படத்தை பற்றி சிலாகிச்சி கதை சொல்லலாம்.
நமது பதிவுலக அரசியலை விளக்கலாம்
(கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்)
நான் ஏன் ப்ளாக்கரானேன்னு ஒரு செமினார் எடுக்கலாம்.
மேனேஜருக்கு ஐஸ் வைப்பது எப்படின்னு புத்தகம் எழுதலாம்
(உங்களால முடியும்)
உட்கார்ந்து அடுத்த மாச பட்ஜெட் போடலாம்
இந்தியாவுல வரும் தேர்தலில் யார் பிரதமரா வருவாங்கன்னு மினி கருத்து கணிப்பு நடத்தலாம்
(பதிவுக்கும் ஒரு மேட்டராச்சு)
பக்கத்து டேபிளில் தமிழ் பெண்கள் இருந்தால் அவுங்க வீட்டு மோர் குழம்பு என்ன ஸ்டைல்னு கேட்கலாம்
ச்சின்னபையன் அழகின் ரகசியம் புத்தகம் எழுதலாம்
என்னை ஏன் யாருக்கும் பிடிப்பதில்லைன்னு சர்வே எடுக்கலாம்
எவ்வளவோ வேலை இருக்கு!
சும்மா மச மசன்னு உட்காராம எந்திரிச்சி வேலைய பாருங்க
If opened ur blog, have to laugh for a minute loudly....
Tell me sir how to control this.
Raja - Bgl
//
எங்க அலுவலகம் ஒரு நாலு மாடி கட்டிடம். வெவ்வேறே இடங்களில் ஏறி-இறங்க மாடிப்படிகள் கட்டி வெச்சிருக்காங்க. கொஞ்ச நேரம் நடக்கலாம்னு ஒரு மாடியிலே ஏறி, கட்டிடத்தின் இன்னொரு பக்கம் போய், மற்றொரு மாடியில் இறங்கி
//
இது நல்ல வேலை, கால் வழியை பார்க்காமே தினமும் நாலஞ்சு தடவை ஏறி, இறங்குங்க!
செம காமெடி..
வாங்க ஆளவந்தான் -> அவ்வ்வ். இந்த மாதிரி எவ்ளோ நாளா பண்ணிட்டிருக்கீங்க?????
வாங்க மகேஷ்ஜி -> ஹாஹா... சரி சரி... போட்டு தாக்கிடலாம் விடுங்க..
வாங்க இளா -> டவுசர் கீழே போனபிறகு முட்டி என்ன, முழங்கால் என்ன????... எப்படி புதுமொழி????
வாங்க பிரேம்ஜி -> எல்லாத்தையுமே முயற்சி செய்து பாத்துடுவோமே!!!!!!!!
வாங்க ஸ்ரீதர்கண்ணன் -> அதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்ணே!!!... :-))))
வாங்க மு-க அக்கா -> அவ்வ்... அப்போ ஓட்டு போடலியா??????.... :-))
வாங்க ராகி ஐயா, டக்ளஸ் -> நன்றி...
வாங்க வேலன் ஐயா -> சரியா பாயிண்டை புடிக்கிறீங்க.... அவ்வ்வ்...
வாங்க வெண்பூ -> அட... வந்துட்டீங்களா????
வாங்க சகோ ஸ்ரீமதி -> அவ்வ்வ்... போறேன்னு சொல்லாதீங்க... போயிட்டு வர்றேஏஏன்னு சொல்லுங்களேன்.... (ஏதோ ஒரு பழைய பட டயலாக் மாதிரி பேசுங்க!!!)
வாங்க மோனி -> நானே ஒரு சோ___... நானே அவர்கிட்டே போய் எப்படி?????
வாங்க அறிவிலி -> சரி சரி... இனிமே ஏதாவது டைப் பண்ணமுடியுதான்னு பாக்கறேன்... :-))
வாங்க வால் -> கொஞ்ச நாள் கழிச்சி மறுபடி ஃபார்ம்லே வந்துட்டீங்க.... கலக்குங்க...
வாங்க சுரேஷ், ராஜா, வினோத் -> நன்றி...
வாங்க ஜோ -> ஆமாங்க.. அதான் செய்யணும்... :-)
நிஜம்மாவே உங்க தமிழ்மணப்பட்டையில் சில கோட் மிஸ்ஸிங்க் போல செக் செய்யுங்க...ஓட்டுயாருமே போட்டாமாதிரி தெரியலயே..
வாங்க மு-க அக்கா -> மீண்டும் வந்ததுக்கு நன்றிங்க... நான் சும்மாதான் கேட்டேன்... ஓட்டு விழுந்துதா இல்லையான்னு நான் பாக்கறதேயில்ல.. அதான் தெரியல... அந்த பட்டையை சரி செய்ய முடியுதான்னு பாக்கறேன்....
:-)
படிச்சிகிட்டேயிருக்கும் போது கணக்குவழக்கு டிபார்ட்மெண்ட்கார வந்து மொக்கை போட்டுகிட்டிருக்கான்.நான் உங்க பதிவப் பார்த்து சிரிச்சிகிட்டிருந்தா அவன் மொக்கை கேட்டுத்தான் சிரிக்கிறான்னு பேசிகிட்டே இருக்கான்.இருங்க ஒரு நிமிசன் ஆளை அனுப்பிட்டு வந்துடறேன்.
நேத்தைக்குத்தான் உங்களைப் பற்றி நினச்சுகிட்டிருந்தேன்.எப்படித்தான் இப்படியெல்லாம் உங்களுக்குப் பிரச்சினைகள் வருகிறதோன்னு.சொன்னப்புல செய்யறதுக்கு வேலையில்லன்னா சிரமம்தான் இல்ல:)
//அவ்வ்வ்... போறேன்னு சொல்லாதீங்க... போயிட்டு வர்றேஏஏன்னு சொல்லுங்களேன்.... (ஏதோ ஒரு பழைய பட டயலாக் மாதிரி பேசுங்க!!!)//
அண்ணா இப்போ தான் கவனிக்கிறேன்.. சாரி. :(( இப்போ சரியா சொல்றேன் போயிட்டு வரேன் அண்ணா... ஆனா, இப்போ வேலைக்கு இல்ல வீட்டுக்கு.. :)) டாட்டா பை பாய்... :))))
ஆஹா உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை ஆரம்பிக்கும்ன்னு நான் எதிர் பார்க்கவே இல்லையே. ரொம்ப சோகம்தான்.
என்னடா நம்ப அண்ணனை காணோமேன்னு யோசிச்சா இந்த பதிவையா ரூம் போட்டு யோசிச்சீங்க.
ஹையோ ஹையோ, சிரிச்சு சிரிச்சு ஒரே வயிறு வலிதான் போங்க. வித்தியாசமா யோசிக்கறீங்க.
//
இப்படி எதையுமே செய்யக்கூடாதுன்னு ஒரு மனுசனோட கைகலைக் கட்டிப்போட்டா, நான் என்னதான் செய்யறது?
யாராச்சும் ஒரு நல்ல ஆலோசனையை வழங்குங்க.
//
உங்க இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல தெரியலை. அதுக்காக என்னை fail பண்ணிடாதீங்க.
சரி நான் வரேன் அண்ணா. அலுவலகத்திலே ஒரே வேலை எனக்கு :))
அடடே இப்படியெல்லாம் எழுதியும் கூட நேரம் போகலையா? கலிகாலம்....
நானும் இதைத்தான் பண்ணுறேன் எனக்கும் யோசனை வேண்டும்
//அவனவனுக்கு வேலையே போயிருமேன்னு டவுசரை இருக்கமா புடிச்சுகிட்டு இருக்கான். இதுல இப்படி ஒரு கவலை:))//
Repeat
எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுதோ.....கலக்கல் :)
வாங்க ராஜ நடராஜன் -> நினைச்சதுக்கு நன்றிங்க... ஆமா... வேலையில்லேன்னா ரொம்ம்ம்ப சிரமம்தான்...
வாங்க ஸ்ரீமதிஜி -> குட் நைட்..
வாங்க சிஸ்டர் ரம்யா -> சரி சரி. வேலைய பாருங்க... :-))
வாங்க சாரதி, அப்துல்லா அண்ணே, நசரேயன், வழிப்போக்கன், பட்டாம்பூச்சி -> எல்லாருக்கும் நன்றி...
Post a Comment