அலுவலகம் போகும்போது மறக்கும் விஷயங்கள்...
சாதாரணமா எல்லோரும் அலுவலகம் போகும்போது கைக்கடிகாரம், எழுதுகோல், கைக்குட்டை, கைப்பேசி இந்த மாதிரி விஷயங்களை வீட்டுலேயே மறந்து வைச்சிட்டு போயிடுவாங்க.
எங்க அலுவலகத்திலே, இதையெல்லாம் தாண்டி புனிதமா சிலதை மறந்துருக்காங்க. அவை என்னென்னன்னு பாக்கலாம்.
*****
மடிக்கணிணி:
எங்க குழுவிலே ஒருத்தரு தினமும் ஒரு மணி நேரம் வண்டி ஓட்டிக்கிட்டு அலுவலகம் வர்றவரு. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா, சரியான பனி. அதிலே கஷ்டப்பட்டு ஓட்டிக்கிட்டு
அலுவலகம் வந்துட்டாரு. வந்தபிறகு எதையோ தேடிக்கிட்டே இருந்தாரு. என்னன்னு கேட்டா - மடிக்கணிணியை காணோம்னாரு. அதோட பையை மட்டும் வீட்டிலிருந்து பத்திரமா
கொண்டு வந்துட்டாரு. வீட்டுக்கு தொலைபேசி கேட்டா - மடிக்கணிணி வீட்டிலேயே இருக்குன்னு சொல்லிட்டாங்க.
வேறே வழி? மறுபடி அந்த கொடும் பனியில் போய் அந்த மடிக்கணிணியை கொண்டு வந்தாரு. பனியில் வண்டி ஓட்டறதையே தவிர்க்க நினைக்கும் மக்களுக்கு நடுவில், இவரு மட்டும் காலையில் 8 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் வண்டி ஓட்டிக்கிட்டே இருந்தாரு.
காலுறை (சாக்ஸ்):
வழக்கம்போல் ஒரு நாள் மீட்டிங்கில் உட்கார்ந்து தூக்கக் கலக்கத்தில் சாமியாடிக்கிட்டிருக்கும் போது, குனிந்து என் கால்களை பார்த்தேன். பயங்கர அதிச்சி. என்ன, காலுறையே
போடலையான்னு கேக்கறீங்களா? அதாவது பரவாயில்லையே... ஒரு கால்லே கறுப்பு காலுறையும் இன்னொரு கால்லே வெள்ளை காலுறையும் போட்டிருந்தேன். எப்படி இந்த மாதிரி ஆச்சுன்னே தெரியல. வீட்டுலே இருக்கும்போதும் அலுவலக வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அப்படித்தான் ஆகும் என்று நானே சமாதானம் செய்துகொண்டேன்.
அப்புறம் என்ன... அன்னிக்கு நாள் முழுக்க பேண்டை கீழே கீழே இழுத்து யாருக்கும் காலுறை தெரியாதவாறு மறைத்துக் கொண்டிருந்தேன். எனக்கென்னவோ அன்னிக்கு மட்டும்
எல்லோரும் என் கால்களை பாக்குற மாதிரியே இருந்தது.
சப்பாத்து (ஷு):
அட, நானாவது பரவாயில்லே. இன்னொரு மேட்டர் கேட்டீங்கன்னா, ரொம்பவே டென்சனாயிடுவீங்க. அமெரிக்க நண்பர் ஒருவர் ஒரு நாளு ரெண்டு கால்லேயும் வெவ்வேறே சப்பாத்து போட்டுட்டு வந்துட்டாரு. அதையும் அவரா கவனிக்கலே. நாங்கதான் பாத்து சொன்னோம். அன்னிக்குன்னு பாத்து வரிசையா மீட்டிங் இருந்ததாலே அவராலே வீட்டுக்கும் போக முடியல. மனுசன் நாள் முழுக்க நாற்காலியை விட்டு எழுந்திருக்கலியே... தம் அடிக்கக்கூட போகலேன்னா பாத்துக்குங்க...
அன்னிலேர்ந்து நாங்கல்லாம், காலுறை மட்டுமில்லை, சப்பாத்து போடும்போதுகூட தவறு நேர்ந்துடாமே, கவனமா இருக்கிறோம்.
சட்டை:
இப்படியெல்லாம் கூடவா இருப்பாய்ங்கன்னு நினைக்கிற மாதிரி ஒருத்தரு எங்க அலுவலகத்தில் சட்டையே போடாமே வந்துட்டாருன்னா பாத்துக்குங்க.
வெறும் உள்ளாடையோடவே வந்துட்டாரான்னு கேக்கப்படாது. குளிர் காலம்றதாலே குளிராடை போட்டுட்டிருந்தாரு. அலுவலகம் வந்துட்டு அதை அவுத்தா, உள்ளே, வெறும் உள்ளாடைதான் இருக்கு. அலுவலகத்துக்குள்ளேயே குளிராடையோட சுத்திட்டிருந்த அவரு, அப்புறம் மதியத்துக்கு மேலே வீட்டுக்கு ஓடிப்போய் சட்டையை போட்டுக்கிட்டு வந்தாரு.
*****
இப்படி கண்ணுலே படும்படியான ஆடைகள் / பொருட்கள் மிஸ்ஸானா கண்டுபிடிக்க முடிஞ்ச எங்களாலே, கண்ணுலே படாத ஆடைகள் ஏதாவது மிஸ்ஸானா கண்டுபிடிக்க
முடியறதேயில்லே. பிறவியிலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி துப்பறியும் ஆர்வம் கொண்ட நாங்கள் - பூவே பூச்சூடவா நதியா கண்ணாடி எங்கேயாவது கிடைக்குதான்னு பாத்தோம்.
ஆனா, அதுலே எந்த ஆடைகளுமே கண்ணுலே படாதுன்றதாலே, அதை வாங்கும் முயற்சியை கைவிட்டோம்.
*****
33 comments:
//வெறும் உள்ளாடையோடவே வந்துட்டாரான்னு கேக்கப்படாது. குளிர் காலம்றதாலே குளிராடை போட்டுட்டிருந்தாரு. அலுவலகம் வந்துட்டு அதை அவுத்தா, உள்ளே, வெறும் உள்ளாடைதான் இருக்கு.//
நல்ல தமாஷ் இது.. :-)))))))
சப்பாத்து super eppo than shoe na சப்பாத்து nu therinchikitaen, hmmm nanum nerya maranthu irukan he he
//
வீட்டுலே இருக்கும்போதும் அலுவலக வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அப்படித்தான் ஆகும் என்று நானே சமாதானம் செய்துகொண்டேன்.
//
நம்பிட்டோம்..நம்பிட்டோம் :)
இன்னும் ஒரு மறதி விஷயம்: இந்த மறக்கும் விஷயங்கள் எல்லாமே உங்க சொந்தக் கதை தான்னு சொல்ல மறந்திட்டீங்க:-)))))
:)))))))))))))))))))))))
//வீட்டுலே இருக்கும்போதும் அலுவலக வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அப்படித்தான் ஆகும்//
கர்ம வீரர் காமராஜருக்கு அப்பறம் நீங்கதாண்ணே !!
சப்பாத்து (ஷு).....
இதெல்லாம் என்ன கணக்கு?...
நான் எல்லாம் அதிகபட்சமாக பெல்ட் அணிய மறந்திருக்கிறேன்,அவ்வளவுதான்
உடை,தலை அலங்காரத்துக்கெல்லாம் குறைச்சலில்லை.அடிக்கடி மறப்பது ஜிப் போடுவது அல்லது டை கழுத்துல மாட்டுவது.
குளிர் காலம்ன்னா பரவாயில்ல.சூட் பேண்ட பாதுகாக்கும்.வெயில் காலத்துல வீட்டுலருந்து அலுவலகம் வரை.ரெஸ்ட் ரூம் போனாத்தான் மண்டைல உறைக்கும்.இஃகி!இஃகி
“ந”ச்சின்னைப்பையன்..
பல தடவை நான் மொபைல காணோம்னு வீட்டுக்கு போன் பண்ணி கேட்பேன்..
அதில இருந்துதான கூப்புடுறீங்கனு பதில் வரும்போதே கட்..
//வீட்டுலே இருக்கும்போதும் அலுவலக வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அப்படித்தான் ஆகும் என்று நானே சமாதானம் செய்துகொண்டேன்.//
சாரி... கொஞ்சம் ஓவர்.
ஆபீஸ்ல உக்காந்து பிளாக் வேலை பார்த்துட்டு, மின்னரட்டை அடிக்கிற ஆளு பேசுறதப் பாருங்க.
ஹீ ஹீ இதென்ன? சிலபேர் அலுவலகம் போறதையே மறந்திர்றாங்களாம்!!
//கண்ணுலே படாத ஆடைகள் ஏதாவது மிஸ்ஸானா கண்டுபிடிக்க
முடியறதேயில்லே. பிறவியிலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி துப்பறியும் ஆர்வம் கொண்ட நாங்கள் - பூவே பூச்சூடவா நதியா கண்ணாடி எங்கேயாவது கிடைக்குதான்னு பாத்தோம்.
ஆனா, அதுலே எந்த ஆடைகளுமே கண்ணுலே படாதுன்றதாலே, அதை வாங்கும் முயற்சியை கைவிட்டோம்.//
ஆபீஸ்ல பதிவு மட்டும்தானா?
வேற ஒண்ண்ண்ண்ண்ண்ண்னும்
கெடயாதா?
துப்பறியவே வேண்டாமே...
வாங்க பிரேம்ஜி -> ஆமா... பயங்கர தமாஷ் அன்னிக்கு... சிரிச்சி சிரிச்சி சிரிச்சிட்டேயிருந்தோம்.. :-))
வாங்க சுரேஷ் -> ஓ.. ரொம்ப முன்னாடியே இப்படின்னு தெரியுமா உங்களுக்கு??? ஓஓஓ... எனக்கு இப்பதான் கொஞ்ச நாள் முன்னாடி தெரியும்... :-)
வாங்க ஆளவந்தான் -> நம்பினதுக்கு நன்றி... ஹிஹி..
வாங்க கெக்கே பிக்குணி -> அவ்வ்வ்.....
வாங்க மகேஷ்ஜி -> மிக்க நன்றிங்கண்ணா...
வாங்க ராம்.CM -> பால்காரன் போடுறது பால்கணக்கு... தயிர்காரன் போடுறது தயிர்கணக்கு... இந்த ச்சின்னப்பையன் போடுறது ஹாஹா... ச்சின்னக்கணக்கு.. (அண்ணாமலை ஸ்டைல்லே படிங்க...)..:-))
வாங்க ராகி ஐயா -> நன்றி..
வாங்க பாபு -> ஹாஹா.. அந்த பெல்ட் இல்லாமே பேண்ட் இடுப்புலே நின்னுச்சான்னு சொல்லவேயில்லையே...ஏஏஏஏ......:-)))
வாங்க ராஜ நடராஜன் -> ஹாஹா.... நான்லாம் காத்தோட்டமா இருக்கும்போதே கண்டுபிடிச்சிடுவேன்.... :-)))
வாங்க நர்சிம் -> ஹாஹா... இது சூப்பர்.... :-)))
மடிக்கணினியை வீட்டில் மறந்து விட்டு வந்த அனுபவம் எனக்கும் ஒருதடவை இருக்கு.. என்ன என் வீடு 3 கி.மீ தான்.. உடனே கொண்டு வந்துட்டேன்.. :)
ரொம்ப மோசமான அனுபவம்னா... ஒருதடவை கால்சட்டையின் ஜிப் அறுந்து விட்டது.. அன்று இரவு 8.30 மணிக்குப் பிறகு தான் இருக்கையை விட்டு எழுந்து வீட்டுக்குப் போனேன் :(.. அதுவரை இருக்கையை மேஜைக்குள் தள்ளி உட்கார்ந்து.. நான் பட்ட பாடு இருக்கே.. யப்பா...
/
Mahesh said...
//வீட்டுலே இருக்கும்போதும் அலுவலக வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அப்படித்தான் ஆகும்//
கர்ம வீரர் காமராஜருக்கு அப்பறம் நீங்கதாண்ணே !!
/
ROTFL
:))
//
வேறே வழி? மறுபடி அந்த கொடும் பனியில் போய் அந்த மடிக்கணிணியை கொண்டு வந்தாரு. பனியில் வண்டி ஓட்டறதையே தவிர்க்க நினைக்கும் மக்களுக்கு நடுவில், இவரு மட்டும் காலையில் 8 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் வண்டி ஓட்டிக்கிட்டே இருந்தாரு.
//
IT வேலையிலே இப்போ நிறயை பேர் இப்படிதான் அலையறோம்.
நீங்க நேரே வரும்போது நான் ஒரு மறந்த ஒரு அனுபவத்தை சொல்லறேன் அண்ணா!
//
வீட்டுலே இருக்கும்போதும் அலுவலக வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அப்படித்தான் ஆகும் என்று நானே சமாதானம் செய்துகொண்டேன்.
//
இது கொஞ்சம்............
//
அப்புறம் என்ன... அன்னிக்கு நாள் முழுக்க பேண்டை கீழே கீழே இழுத்து யாருக்கும் காலுறை தெரியாதவாறு மறைத்துக் கொண்டிருந்தேன். எனக்கென்னவோ அன்னிக்கு மட்டும்
எல்லோரும் என் கால்களை பாக்குற மாதிரியே இருந்தது.
//
ஹா ஹா சூப்பர் அண்ணா
நல்லா மாட்டி இருக்கீங்க!!
//
நண்பர் ஒருவர் ஒரு நாளு ரெண்டு கால்லேயும் வெவ்வேறே சப்பாத்து போட்டுட்டு வந்துட்டாரு. அதையும் அவரா கவனிக்கலே. நாங்கதான் பாத்து சொன்னோம். அன்னிக்குன்னு பாத்து வரிசையா மீட்டிங் இருந்ததாலே அவராலே வீட்டுக்கும் போக முடியல.
//
அண்ணா நீங்க சரியான நகைச்சுவை மன்னர் போங்க.
ரொம்ப நல்ல சிரிக்க வைக்கறீங்க
பாவம் அவரு மறந்து போனது ஒரு புறம் இருக்க, தம் அடிக்க போகலையே அதுதான் ரொம்ப சோகம்!!
//
இப்படியெல்லாம் கூடவா இருப்பாய்ங்கன்னு நினைக்கிற மாதிரி ஒருத்தரு எங்க அலுவலகத்தில் சட்டையே போடாமே வந்துட்டாருன்னா பாத்துக்குங்க.
//
உங்க அலுவலகத்திலே இருக்கறவங்களை வச்சு நல்லா கமெடி பண்ணலாம் போல இருக்கே.
இவங்க எல்லாம் நல்லா உங்ககிட்டே மாட்டிகிட்டு இருக்காங்கன்னு நினைக்கின்றேன்.
//
அப்புறம் மதியத்துக்கு மேலே வீட்டுக்கு ஓடிப்போய் சட்டையை போட்டுக்கிட்டு வந்தாரு.
//
அவரை வீட்டுலே சும்மா விட்டாங்களா??
//
இப்படி கண்ணுலே படும்படியான ஆடைகள் / பொருட்கள் மிஸ்ஸானா கண்டுபிடிக்க முடிஞ்ச எங்களாலே, கண்ணுலே படாத ஆடைகள் ஏதாவது மிஸ்ஸானா கண்டுபிடிக்க
முடியறதேயில்லே.
//
ஐயோ பாவம் ரொம்ப கஷ்டம்தான்
என்ன பண்ணறது ??
ரெண்டு நாட்கள் எங்கேயாவது
கொண்டு போயி காட்டுலே
விட்டுட்டா எல்லாம் தெளிஞ்சிடும்.
//
பிறவியிலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி துப்பறியும் ஆர்வம் கொண்ட நாங்கள்
//
பிறவியிலேயே?? சரி சரி இது யோசிச்சுதான் சொல்லறீங்களா??
அப்போ சரி ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லை அண்ணா!!
//
பூவே பூச்சூடவா நதியா கண்ணாடி எங்கேயாவது கிடைக்குதான்னு பாத்தோம்.
ஆனா, அதுலே எந்த ஆடைகளுமே கண்ணுலே படாதுன்றதாலே, அதை வாங்கும் முயற்சியை கைவிட்டோம்.
//
இப்படி எல்லாம் யோசிச்சீங்களா ??
அது சரி அந்த கண்ணாடி S.V. Sekar கிட்டே இருக்காம். இங்கே வரும்போது வாங்கிட்டு போங்க!!
வாங்க வேலன் ஐயா -> ஹிஹி.. இப்படி வெளிப்படையா பேசக்கூடாதுன்னு எவ்ளோ தடவை சொல்றது உங்களுக்கு????? அவ்வ்வ்..
வாங்க சுபாங்கன் -> அவ்வ்.. இதுதான் ரொம்ம்ம்ம்ப ஓவராயிருக்கு... :-))
வாங்க அறிவிலி -> அட... தலைக்கு மேலே வேலை கிடக்குங்க... :-))
வாங்க ராகவ் -> ஹாஹா... ரொம்ப கஷ்டம் 'ஜிப்' அறுந்துபோச்சுன்னா.... :-))
வாங்க சிவா -> நன்றி தல...
சொந்த அனுபவமா?
வெறும் உள்ளாடையோடவே வந்துட்டாரான்னு கேக்கப்படாது. குளிர் காலம்றதாலே குளிராடை போட்டுட்டிருந்தாரு. அலுவலகம் வந்துட்டு அதை அவுத்தா, உள்ளே, வெறும் உள்ளாடைதான் இருக்கு. அலுவலகத்துக்குள்ளேயே குளிராடையோட சுத்திட்டிருந்த அவரு, அப்புறம் மதியத்துக்கு மேலே வீட்டுக்கு ஓடிப்போய் சட்டையை போட்டுக்கிட்டு வந்தாரு.//
உன்மையா இருக்க வாய்ப்பு இருக்கு
வாங்க தங்கச்சி ரம்யா -> என்ன, இது ரொம்ப.... அப்படின்னு நடுவிலேயே நிறுத்திட்டீங்க.... நல்லாயிருக்குன்னு சொல்ல வந்தீங்களா???? ஆஆஆ...
வாங்க நசரேயன் -> ஒண்ணே ஒண்ணுதாங்க சொந்த அனுபவம்...
வாங்க ஜாக்கி -> அட.. நிஜமாவே நடந்ததுதாங்க எல்லாமே.... நன்றி...
செம காமெடி தல!
வழக்கம்போல் ஒரு நாள் மீட்டிங்கில் உட்கார்ந்து தூக்கக் கலக்கத்தில் சாமியாடிக்கிட்டிருக்கும் போது, குனிந்து என் கால்களை பார்த்தேன். பயங்கர அதிச்சி. என்ன, காலுறையே
போடலையான்னு கேக்கறீங்களா? அதாவது பரவாயில்லையே... ஒரு கால்லே கறுப்பு காலுறையும் இன்னொரு கால்லே வெள்ளை காலுறையும் போட்டிருந்தேன்.
:)))))))
ur topic is so nice. but naan konjam marakkura type.. appurama unga padhivaye marandhuduven neenga venumna paarunga...
Post a Comment