கு கு கூ க கொ...!!!
இது 'சோளி'ன்னு ஆரம்பிக்கிற இந்தி பாடலைப் பற்றிய பதிவு அல்ல.. சிங்கார வேலன்ல வர்ற பாட்டு பற்றியும் அல்ல.. ஏதாவது கெட்ட வார்த்தையை குறிப்பதும் அல்ல. அப்போ
என்னதாண்டா சொல்ல வர்றேன்றீங்களா ?? (இல்லையா?). சரி சொல்றேன்... தலைப்பின் விரிவாக்கம் படிச்சீங்கன்னா உங்களுக்கே புரிஞ்சிடும்.
குளம்பி குடிக்க கூப்பிட்ட கதைகளின் கொசுவத்தி...
*****
”விசைப்பலகையில் கை பட்டா எனக்கு அலர்ஜி. இன்னொரு பத்து நாளைக்கு அதை தொடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு” - அப்படின்னு சொல்லி ரெண்டு கைகளையும்
தலைக்குப் பின்னால் பின்னிக்கிட்டு சும்மா உக்காந்திருக்கற ஆள் இல்லேங்க நானு.
அலுவலகத்திலே நுழைஞ்சிட்டேன்னா மொத்தம் மூணு விஷயங்கள்தான் எனக்குத் தெரியும். முதலாவது - வேலை, ரெண்டாவது - வேலை, மூணாவது - வேலை. அப்படியே வேலையிலே
மூழ்கிடுவேன். கூட இருக்கிற நண்பர்கள்தான் - ரொம்ப நேரம் மூழ்கியிருந்தேன்னா, எனக்கு மூச்சு முட்டும்னு சொல்லி - அடிக்கடி குளம்பி குடிக்கப் போகலாம்னு இழுத்துட்டுப்
போவாங்க.
சில பேருக்கு அலுவலகத்தில் நுழைஞ்சவுடனே ஒரு கோப்பை குளம்பி குடிச்சாதான் வேலையே ஆரம்பிக்க முடியும். வேறே சில பேருக்கு வெவ்வேறே நேரங்கள்லே குளம்பி
குடிக்கணும்னு தோணும். குடிக்க போறவங்க யாரும் தனியா போகமாட்டாங்க. போரடிக்குமாம். அதனால், எல்லோரும் போகும்போது ஒரு குறிப்பிட்ட ஆளைத்தான் கூட்டிட்டு போவாங்க. இப்படி எல்லாருக்கும் கம்பெனி கொடுக்கிற ஆளு - ஹிஹி அது நாந்தான்னு சொல்லித்தான் தெரியணுமாக்கும்.
*****
பக்கத்து இருக்கையிலேயே உட்காந்திருக்கிற தோழிகிட்டேந்து மின்னஞ்சல் வரும். "மேலே (காண்டீனுக்கு) போலாமா?". அதே நேரத்தில் நண்பன்கிட்டேந்து தொலைபேசியும் வரும். "கீழே
கடைக்கு போலாமா?".
நண்பனிடம் - "ஒரு பத்து நிமிஷம் கழிச்சி கீழே வந்துடு. நானும் வந்துடறேன்"னு சொல்லிட்டு - தோழிக்கு - "முன்னாலே போங்க. ஒரு நிமிஷத்துலே நானும் வர்றேன்"னு கேண்டீனுக்குக்
கிளம்பி போயிட்டே இருக்க வேண்டியதுதான்... அங்கே குளம்பி குடிச்சிட்டு நண்பனைப் பார்க்க கீழே கடைக்கு ஓடணும்.
சில சமயம் என்ன ஆகும்னா, ஒரு குழுவோட குளம்பி குடிச்சிட்டு கடையிலிருந்து கிளம்பும்போது, இன்னொரு குழு வந்து - எங்களோட உக்காரு. பத்து நிமிடத்திலே
போயிடலாம்னுவாங்க. “இல்லேப்பா. வேலையிருக்கு. போகணும்” அப்படின்னா டக்குன்னு மம்முட்டியா மாறி - “ நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா யாரு தெரியுமா?
எங்களுக்காக ஒரு பத்து நிமிடம் செலவழிக்க மாட்டியா?”ன்னு வசனம் பேச ஆரம்பிச்சிடுவாங்க.
எனக்கு சரியான கோபம் வந்துடும். ”நண்பன்றீங்க, உங்களுக்காக பத்து நிமிடமெல்லாம் என்னாலே ஒதுக்க முடியாது - வேணும்னா அரை மணி நேரம் இருக்கறேன்”னு - அடுத்த சுற்று குளம்பிக்காக அந்த குழுவோட கடையிலேயே உக்காந்திடுவேன். வேலை இன்னிக்கு வரும், நாளைக்கு போகும் ஆனா நண்பர்கள் அப்படி இல்லையே?.
இப்படி எல்லாமே நல்லாத்தான் போயிட்டிருந்தது.
*****
ஒரு நாள் எங்க மேனேஜர் திடீர்னு கூப்பிட்டாரு - “கீழே கடைக்குப் போலாமா?”. ஹிஹி. நாமதான் யார்றா கூப்பிடுவாங்கன்னு காத்திருக்கோமே?. “கொஞ்சம் வேலை இருக்கு. சரி
வாங்க, வந்து முடிச்சிக்கறேன்”னு சொல்லி அவரோட போய் கடையில் உக்காந்தேன்.
குளம்பி பரிமாறுபவர் திடீர்னு என்கிட்டே வந்து - “அண்ணா, பத்து நிமிடம் முன்னாலே வந்தீங்கல்ல. அப்போ உங்ககூட வந்தவரு இந்த மூக்கு கண்ணாடியை விட்டுட்டாரு. அவர்கிட்டே கொடுத்திடறீங்களா?”ன்னாரு.
”இத பார்றா. உலகத்திலே ஒருத்தர மாதிரியே இன்னும் ஆறு பேர் இருப்பாங்கன்னு சொல்லக் கேட்டிருக்கேன். அதிலே ஒரு ஆளு, இங்கே பக்கத்துலேயே இருக்கான்னு தெரியாமே
போச்சே”னு வழிஞ்சி, பேச்சை மாற்றி அடுத்த டாபிக்குக்கு போய்விட்டேன்.
*****
அதுக்குப்பிறகு, கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிட்டிருந்தேன். ஆனா அப்படி இருக்க விடுவாங்களா நண்பர்கள்? மறுபடி கடை, கடையா வெவ்வேறே நண்பர்களோட குளம்பி குடிக்க கிளம்பியாச்சு!!!
45 comments:
1
சரி சரி வாங்க குளம்பி குடிக்கப்போலாம்
டக்குன்னு மம்முட்டியா மாறி - “ நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா யாரு தெரியுமா?
எங்களுக்காக ஒரு பத்து நிமிடம் செலவழிக்க மாட்டியா?”ன்னு வசனம் பேச ஆரம்பிச்சிடுவாங்க.
superu :))))))))
இப்போ உள்ளேன் அப்புறம் வாரேன்!!!
நானும் தினமும் இதையேதான் பண்ணுகிறேன்
ஹம்ம்ம்ம் நோ கமெண்ட்ஸ்... :))
//
குளம்பி குடிக்க கூப்பிட்ட கதைகளின் கொசுவத்தி...
//
இது தானா அது :))
//
இப்படி எல்லாருக்கும் கம்பெனி கொடுக்கிற ஆளு - ஹிஹி அது நாந்தான்னு சொல்லித்தான் தெரியணுமாக்கும்.
//
ஹிஹி.. ஸேம் பிளட்..
எத்தனை பேருக்கும் கம்பெனி குடுக்கும் ரொம்ப நல்லவங்க :)
நட்பின் இலக்கணமே நீங்க தான் :)))
Onnu mattum theriyuthu...
Unga Boss Romba Nallavarunga!
//எனக்கு சரியான கோபம் வந்துடும். ”நண்பன்றீங்க, உங்களுக்காக பத்து நிமிடமெல்லாம் என்னாலே ஒதுக்க முடியாது - வேணும்னா அரை மணி நேரம் இருக்கறேன்”னு - அடுத்த சுற்று குளம்பிக்காக அந்த குழுவோட கடையிலேயே உக்காந்திடுவேன்//
:-)))))))))))))
Recession காரணமா இன்னும் குளம்பி இயந்திரத்த தூக்கலயா??
:-)))
\\Recession காரணமா இன்னும் குளம்பி இயந்திரத்த தூக்கலயா??\\
ரிப்பீட்டு
க க க போ !!
சி சி வ வ !!
(ம்ம்ம்... நல்லா அவஸ்தைப் படு....)
இத்தனைப்பேருக்கும் துணைக்குப்போயிட்டு(கம்பெனி குடுத்துட்டு), அப்புறமும், நான் வேலை, வேலைன்னுதான் இருப்பன்னா..சரி, நாங்க நம்பிட்டோம்.
கு கு கூ க கொ...!!!
சூ
//எனக்கு சரியான கோபம் வந்துடும். 'நண்பன்றீங்க, உங்களுக்காக பத்து நிமிடமெல்லாம் என்னாலே ஒதுக்க முடியாது - வேணும்னா அரை மணி நேரம் இருக்கறேன்'னு - அடுத்த சுற்று குளம்பிக்காக அந்த குழுவோட கடையிலேயே உக்காந்திடுவேன்//
அரை மணி நேரமாவது உட்கார்ந்தாதானே அடுத்த குளம்பி குடிக்க மூட் வரும். நல்ல ஐடியாக்கார ஆளா இருக்கியேப்பா. :)
பின்றீங்க குரு..
:-)
வாங்க ஸ்ரீதர்கண்ணன் -> நன்றி...
வாங்க இளா -> சரி சரி வாங்க கு கு போலாம்... :-))
வாங்க சகோ ரம்யா -> தினமும் காலையில் மறக்காமே அட்டென்டென்ஸ் போடுவதற்கு நன்றி.. மெள்ளமா வாங்க... :-))
வாங்க நசரேயன் -> லைக் லைக் சேம் சேம்... :-))
வாப்பா விக்கி தம்பி -> ஏம்பா? ஏன்? ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரியே இல்லையா????? அவ்வ்...
வாங்க ஆளவந்தான் -> ஹிஹி.. நீங்க வேறே ஏதாவது 'சூப்பரா' எதிர்பாத்தீங்களா??
வாங்க மு-க அக்கா -> நன்றி... நன்றி...
வாங்க பரிசல் -> அவர் நல்லவர் இல்லீங்கோ... நல்ல்ல்ல்ல்ல்ல்லவர்... :-))
வாங்க பிரேம்ஜி -> நன்றி..
வாங்க சகோதரி வித்யா -> அட நீங்க வேறே... முன்னாடி ஜூஸ் இயந்திரமெல்லாம் இருந்தது.. இப்போ வெறும் குளம்பிதான்... ;-((
வாங்க ராகி ஐயா -> நன்றி...
வாங்க மு-க அண்ணே -> அவ்வ்வ்...
வாங்க மகேஷ்ஜி -> அவ்வ்வ்... முடியல...
வாங்க முத்துவேல் அண்ணே -> நம்பினதுக்கு நன்றிண்ணே... :-))
வாங்க அறிவிலி -> ந...
வாங்க சுல்தான் ஐயா -> ஆமாங்கையா... அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை குளம்பி குடிக்க மூடு வந்துடுது. என்ன பண்றது சொல்லுங்க... :-))
வாங்க தாமிரா, நவநீதன் -> நன்றி...
தலைப்பே பல கதைகள் சொல்லுதே!
//முதலாவது - வேலை, ரெண்டாவது - வேலை, மூணாவது - வேலை.//
அதிகமா பொய் சொல்ற வேலையில்லைன்னு தெரியுது!
எல்லாத்துக்கும் ஒரே பதில் தானே!
//"மேலே (காண்டீனுக்கு) போலாமா?"//
ஹா ஹா ஹா
செத்து செத்து விளையாடுற மாதிரி இருக்கே!
//கடை, கடையா வெவ்வேறே நண்பர்களோட குளம்பி குடிக்க கிளம்பியாச்சு!!!//
நல்லாவே வேலை செய்யுறிங்க!
//
கு கு கூ க கொ...!!!
//
இந்த தலைப்பை Gmail பார்த்த வுடனே கேட்கவேண்டும் என்று நினைத்தேன் சகோதரா!!!
அலுவலகத்தில் ஆணி மற்றும் கடப்பாரை அதன் உடனே கேட்க முடியவில்லை சரி அப்புறம் பார்க்கலாம்னு வந்தா???
//
இது 'சோளி'ன்னு ஆரம்பிக்கிற இந்தி பாடலைப் பற்றிய பதிவு அல்ல.. சிங்கார வேலன்ல வர்ற பாட்டு பற்றியும் அல்ல.. ஏதாவது கெட்ட வார்த்தையை குறிப்பதும் அல்ல. அப்போ
என்னதாண்டா சொல்ல வர்றேன்றீங்களா ?? (இல்லையா?). சரி சொல்றேன்... தலைப்பின் விரிவாக்கம் படிச்சீங்கன்னா உங்களுக்கே புரிஞ்சிடும்.
//
ச்சே ச்சே எங்க சகோதரன் ஆச்சே அந்த மாதிரி எல்லாம் இருக்காது
ம்ம்ம் படிக்கறோம்!!!
//
”விசைப்பலகையில் கை பட்டா எனக்கு அலர்ஜி. இன்னொரு பத்து நாளைக்கு அதை தொடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு” - அப்படின்னு சொல்லி ரெண்டு கைகளையும்
தலைக்குப் பின்னால் பின்னிக்கிட்டு சும்மா உக்காந்திருக்கற ஆள் இல்லேங்க நானு.
//
உண்மையை அப்படியே புட்டு புட்டு வைக்கிராருப்பா நாங்க நம்பிட்டோம்மில்லே !!!
//எனக்கு சரியான கோபம் வந்துடும். ”நண்பன்றீங்க, உங்களுக்காக பத்து நிமிடமெல்லாம் என்னாலே ஒதுக்க முடியாது - வேணும்னா அரை மணி நேரம் இருக்கறேன்”னு - அடுத்த சுற்று குளம்பிக்காக அந்த குழுவோட கடையிலேயே உக்காந்திடுவேன்
//
இது ரொம்ப சூப்பர், அண்ணி இதெல்லாம் பாக்க மாட்டாங்களா
பாத்தாங்கன்னா நீங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சரி சரி நானும் நம்பீட்டன். வாங்க ஒரு கப் குளம்பி குடிக்கலாம்.
மொத்தத்திலே வரும்போது நல்லா தான் வந்தேன் இப்போ ஒரே குளம்பியா போறேன்!!
சரி உங்க அலுவலகத்திலே ஒரு பத்து பேருக்கு வேலை காலி இருக்கா??
ம்ம்ம், யோசிச்சு சொல்லுங்க.
//
வடகரை வேலன் said...
சரி சரி நானும் நம்பீட்டன். வாங்க ஒரு கப் குளம்பி குடிக்கலாம்
//
ஆஹா நானே அப்படித்தான் ஆகிவிட்டேன் வடகரை வேலன் நீங்களுமா???
“ நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா யாரு தெரியுமா?
//
அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் அப்துல்லாவோட பழகப்போறேன்னு சொல்லிடுங்க
:))
//
எம்.எம்.அப்துல்லா said...
“ நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா யாரு தெரியுமா?
//
அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் அப்துல்லாவோட பழகப்போறேன்னு சொல்லிடுங்க
///
என்னையும் சேத்துக்கங்க லிஸ்ட்ல :))
அண்ணே நான் ”குழம்பி” குடித்த காலம் ஒன்று உண்டு. ஹி...ஹி...ஹி...
வாங்க வால் -> நன்றி...
வாங்க சகோதரி ரம்யா -> ஹாஹா... தலைப்பை பாத்து பயந்துட்டீங்களா?????
வாங்க வேலன் ஐயா -> நான் ரெடி... :-))
வாங்க அப்துல்லா, ஆளவந்தான் -> என்ன இப்படி சொல்லிட்டீங்க... சரி நண்பனா இருக்க வேணாம்னா சொல்லிடுங்க... சகோதரனா இருந்துட்டு போறேன்... :-))
//
என்னையும் சேத்துக்கங்க லிஸ்ட்ல :))
//
:))))))
Labels: டமாஸ் மாதிரி
HI CP
MOST OF YOUR POSTS ARE REALLY GOOD. I FEEL BETTER THAN READING AV OR KUMUDAM. GOOD WORK.
//ஒரு நாள் எங்க மேனேஜர் திடீர்னு கூப்பிட்டாரு - “கீழே கடைக்குப் போலாமா?”.//
While reading it... "Lay off" my mind screamed!
//ஒரு நாள் எங்க மேனேஜர் திடீர்னு கூப்பிட்டாரு - “கீழே கடைக்குப் போலாமா?”.//
While reading it... "Lay off" my mind screamed!
இப்பலாம் மீட்டிங், மேனேஜர் கூப்பிட்டாலே திகிலா இருக்குப்பா
(மன்னன் படத்துல ரஜினி,கவுண்டர் மேடைல பரிசு வாங்கினமாதிரி)
திரு சின்னபையன் இதை விட சிறப்பாக ஒரு கணினி பொறியாளர் வேலை பார்க்க முடியாது. உங்கள் பணி வளர்க!!
வாங்க ராஜ்குமார் -> I am overwhelmed... Thanks very much...
வாங்க ராஜு -> அவ்வ்... இல்லீங்கோ... இது ‘கொசுவத்தி'ங்கோ... அப்போல்லாம் எந்த ஆஃபும் கிடையாதுங்கோ... :-))
வாங்க வாழவந்தான் -> ஹாஹா... மிக்க நன்றிங்கண்ணா..
//அலுவலகத்திலே நுழைஞ்சிட்டேன்னா மொத்தம் மூணு விஷயங்கள்தான் எனக்குத் தெரியும். முதலாவது - வேலை, ரெண்டாவது - வேலை, மூணாவது - வேலை. //
சரி சரி பதிவிற்காக ஏதோ எழுதீட்டீங்க..உண்மைய சொல்லுங்க...
1. நம்ம ப்ளாகுக்கு கமெண்ட் ஏதாச்சும் வந்திருக்கா
2. நம்ம பசங்க படிச்சாங்களா
3. சாயந்தரம் எதபத்தி கிறுக்கலாம்
இந்த மூணுதானே உண்மை? ஒட்திகிட்ட அதே தலைவர் படத்துல ஒரு காரெக்டர் (அவரு ஃப்ரெண்டா). ஓகேவா?
Post a Comment