Monday, March 9, 2009

நொறுக்ஸ் - திங்கள் - 09/03/2009


போன வாரம் அலுவலகத்தில் மின் தூக்கியில் போயிட்டிருக்கும்போது - பக்கத்துலே இருந்த ஒரு வெள்ளையம்மா (வார்த்தை உபயம் நன்றி: நசரேயன்) - உங்க வீட்டுலே குழந்தைங்க இருக்கான்னு கேட்டாங்க. அட, இவங்க ஜோசியம் பாக்கறவங்க போலிருக்கே - இப்படி சரியா சொல்லிட்டாங்களே - நம்ம 'அம்மா'க்கு இன்னும் இவங்களை தெரியாது போலன்னு நினைச்சிட்டிருந்தேன். பிறகு எப்படி அவங்க சரியா சொன்னாங்கன்னு தெரிஞ்ச பிறகு - பயங்கர வெக்க வெக்கமா வந்தது... விவரத்திற்கு கீழே பாருங்க... (அட தரையிலே இல்லேங்க... பதிவில் கீழே!!!)


*****


இந்த ஊர்லே கார்லே போகும்போது ஒலிப்பானை பயன்படுத்த அவசியமே வராது. கடந்த மூணு வருடத்தில் நான் ஓரிரு முறையே அதை பயன்படுத்தியிருப்பேன். அதனாலே, அப்படி ஒரு விஷயம் என் கார்லே இருக்குன்றதே எனக்கு மறந்து போச்சு.

ஒரு தடவை என்ன ஆச்சுன்னா, போக்குவரத்து சிக்னல்லே என்னோட முறை வந்தப்புறம்கூட, சடார்னு பக்கத்திலிருந்து இன்னொரு வண்டி என்னை க்ராஸ் பண்ணிடுச்சு. உடனடி ப்ரேக் அடிச்சதாலே, மயிரிழையில் இடிக்காமே போச்சு அந்த வண்டி. அந்த சமயத்திலும் ஒலிப்பானை அடிக்கணும்ற எண்ணமே வரவில்லை. எனக்கு இதுகூட ஆச்சரியத்தை உண்டுபண்ணவில்லை. மேட்டரை கேளுங்க...

நம்ம ஊர்லே இத மாதிரி நாம மத்தவங்களுக்கு ‘கட்' கொடுத்தாலோ, மத்தவங்க நமக்கு ‘கட்' கொடுத்தாலோ - அவங்களை முந்திகிட்டு நாமளே - “ஓய்.. வீட்லே சொல்லிட்டு வந்துட்டியா”ன்னு ஆரம்பிச்சி - படபடன்னு தேர்தல் வாக்குறுதிகளைப் போல் கொட்டக்கூடிய கெட்ட வார்த்தைகளும் மேற்கூறிய சம்பவத்தின்போது எனக்கு வாயில் வரவில்லை. என்னடா இது, அமெரிக்கா வந்து கெட்ட வார்த்தைகளைக் கூட மறந்துட்டேனான்னு ஒரு சந்தேகம் வந்துடுச்சு. ஹிஹி.. அப்புறம் மனசுலேயே ஒரு தடவை சரிபார்த்தபிறகுதான் சந்தேகம் தெளிவாச்சு.... மனசும் நிம்மதியாச்சு.


*****


சட்டை, பேண்டை மேட்சிங்கா போடணும்னு யார்தான் கண்டுபிடிச்சாங்களோ? நமக்கு இதெல்லாம் சரியே படாது. கண்ணை மூடிட்டு அலமாரியில் கைவச்சா, கையில் மாட்டுற சட்டை, பேண்டை போட்டுட்டு போயிடுவேன். வீட்லே கன்னா பின்னான்னு திட்டுவாங்க. நான் சொல்றது என்னன்னா - ‘என்னை தெரிஞ்சவங்களுக்கு என் பழக்கம் பற்றி தெரியும். என்னை தெரியாதவங்களைப் பற்றி எனக்கு என்ன கவலை?”. அப்பவும் வீட்லே ஒத்துக்க மாட்டாங்க. “ஆள் பாதி, ஆடை பாதி”ன்னுவாங்க. “ஆள் பாதி, (மேட்சிங்) ஆடை பாதி”ன்னு யாரும் சொல்லலியேன்னுவேன்.


நீங்களே சொல்லுங்க, மேட்சிங்கா துணி போடலேன்னா, முட்டையும் தக்காளியுமா வீசப்போறாங்க?


*****


ஒரு ஜோக்:

காலை ஆறு மணி:
கணவன்: (மனைவியிடம்): “ நீ மட்டும் இல்லேன்னா....”
மனைவி: “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க....”

காலை ஒன்பது மணி:
கணவன் (மனைவியிடம்): “ நீ மட்டும் இல்லேன்னா... நான்.... ”
மனைவி: “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க....”

மதியம் 12 மணி:
கணவன் (மனைவியிடம்): “ நீ மட்டும் இல்லேன்னா... நான் எப்படி இருக்கப்போறேன்னு தெரியல.... ”
மனைவி: “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க....”

மாலை 4 மணி:
கணவன் (மனைவியிடம்): “ நீ மட்டும் இல்லேன்னா... நான் எப்படி இருக்கப்போறேன்னு தெரியல.... ”
மனைவி: (கண் கலங்கியவாறே) : “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க....”
கணவன்: ”போகும்போது பத்து நாளைக்கு வர்றாப்பல தோசைக்கு மாவு வெச்சிட்டு எங்கே வேணா போயிட்டு வா”..


*****


சினிமாவில் இடைவேளையின்போது தென்படுற நண்பர்கள் - “என்னடா, சினிமாக்கு வந்தியா?”ன்னா எவ்ளோ கோபம் வரும்? அதே மாதிரிதான், ஒரு வாரமா பேசக்கூட முடியாமே தொண்டை கட்டிண்டு ஜலதோஷத்தில் திக்கித் திணறிட்டிருக்கும்போது - பக்கத்து மாநில நண்பர் ஒருவர் சிரிச்சிக்கிட்டே - “என்ன ஜலதோஷமா?”ன்னார்.


ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு நடந்திட்டிருக்கு. இதிலே நான் வேறே அவரைப் பிடிச்சி திட்டிட்டேன்னா, தகராறு இன்னும் முத்திப் போய் - நெய்வேலி வரை ஊர்வலம், தனியா உண்ணாவிரதம்னெல்லாம் ஆயிடும்னு பயத்திலே - “ஆமா. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க்... பில்டிங் வீக்”ன்னேன்.


இன்னும் அந்த ஜோக்கு அவிங்க மொழியிலே வரலே போலிருக்கு.


*****


விடியற்காலையிலே அமைதியான சூழ்நிலையில் ஏதாவது பாட்டு கேட்டேன்னு வைங்க.. அன்னிக்கு நாள்முழுக்க அதே பாட்டை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன். எல்லோரும் அதே மாதிரிதான்னு நினைக்கிறேன்.

உதாரணத்துக்கு ‘அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்...'னு கேட்டுட்டா அன்னிக்கு முழுவதும் அதையே பாடுறாப்போல, ஒரு நாள் என்ன ஆச்சுன்னா, காலங்கார்த்தாலே சஹானாவோட ரைம்ஸ் எதையோ கேட்டுட்டேன். மின் தூக்கியில் போகும்போது, மனசுலே பாடுறேன்னு கொஞ்சம் சத்தமா பாடிட்டேன்னு நினைக்கிறேன்.. அதை அந்தம்மா கேட்டுட்டாங்க. அதான் விஷயம்.

அந்த நிகழ்ச்சிக்கப்புறம் - மனசுலே எதையும் நினைக்கிறதுக்கு முன்னாடி சுத்திமுத்தி யாரும் இருக்காங்களான்னு பாத்துக்கிடுவேன். ஹிஹி.

*****


42 comments:

ஸ்ரீதர்கண்ணன் March 9, 2009 at 9:47 PM  

என்னடா இது, அமெரிக்கா வந்து கெட்ட வார்த்தைகளைக் கூட மறந்துட்டேனான்னு ஒரு சந்தேகம் வந்துடுச்சு. ஹிஹி.. அப்புறம் மனசுலேயே ஒரு தடவை சரிபார்த்தபிறகுதான் சந்தேகம் தெளிவாச்சு.... மனசும் நிம்மதியாச்சு.

:)))))))

ஆளவந்தான் March 9, 2009 at 9:52 PM  

தொடர்ந்து ரெண்டு நாளா மொத ரன் அடிச்சுகிட்டு இருக்கீங்க, ஸ்ரீதர்கண்ணன்...

எதாவது அண்டர்கிரவுண்ட் டீலிங் நடக்குதா?

:))

ஆளவந்தான் March 9, 2009 at 9:53 PM  

//
நீங்களே சொல்லுங்க, மேட்சிங்கா துணி போடலேன்னா, முட்டையும் தக்காளியுமா வீசப்போறாங்க?
//
வீச மாட்டாங்க தான்.. ஆனா தர்மத்தின் தலைவன் கெட்டப்புல போனா.. நாய் விடாது :))

ஆளவந்தான் March 9, 2009 at 9:54 PM  

//
தேர்தல் வாக்குறுதிகளைப் போல் கொட்டக்கூடிய கெட்ட வார்த்தைகளும்
//
உவமை எல்லாம் பயங்கரமா இருக்கு :))

ரவுண்டா 5.. யாராச்சு இருக்கிக்ளா.. மொக்கிடுவோம் :))

ஸ்ரீதர்கண்ணன் March 9, 2009 at 10:10 PM  

தொடர்ந்து ரெண்டு நாளா மொத ரன் அடிச்சுகிட்டு இருக்கீங்க, ஸ்ரீதர்கண்ணன்...

எதாவது அண்டர்கிரவுண்ட் டீலிங் நடக்குதா?

:))

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பாஸ். :)

முரளிகண்ணன் March 9, 2009 at 10:16 PM  

\\நம்ம 'அம்மா'க்கு இன்னும் இவங்களை தெரியாது போலன்னு நினைச்சிட்டிருந்தேன்\\

கலக்கல் கமெண்ட்

நாமக்கல் சிபி March 9, 2009 at 10:20 PM  

//என்னடா இது, அமெரிக்கா வந்து கெட்ட வார்த்தைகளைக் கூட மறந்துட்டேனான்னு ஒரு சந்தேகம் வந்துடுச்சு. ஹிஹி.. அப்புறம் மனசுலேயே ஒரு தடவை சரிபார்த்தபிறகுதான் சந்தேகம் தெளிவாச்சு.... மனசும் நிம்மதியாச்சு.//

அதானே!

//கணவன்: ”போகும்போது பத்து நாளைக்கு வர்றாப்பல தோசைக்கு மாவு வெச்சிட்டு எங்கே வேணா போயிட்டு வா”//

இந்த கவலை அவங்களுக்கெப்படி புரியும்! ஒரு ஆம்பளையோட கஷ்டம் இன்னொரு ஆம்பளைக்குத்தான் தெரியும்! ம்ஹூம்!

வெட்டிப்பயல் March 9, 2009 at 10:25 PM  

//கண்ணை மூடிட்டு அலமாரியில் கைவச்சா, கையில் மாட்டுற சட்டை, பேண்டை போட்டுட்டு போயிடுவேன். வீட்லே கன்னா பின்னான்னு திட்டுவாங்க. //

சேம் ப்ளட் :)

RAMYA March 9, 2009 at 10:39 PM  

நான் மூணாவது, அண்ணா பிஸ்கட் வேணும்!!

RAMYA March 9, 2009 at 10:40 PM  

எப்ப்போ தொடர்ந்து ஸ்ரீதகர் கண்ணன் முதல்லே சரி சரி இருக்கட்டும்....

பரிசல்காரன் March 9, 2009 at 10:41 PM  

1. @$#$@#@#$@$#$#@$#

2. @#$#!%$#@$#

3. %$%@%^%$@*&@%@##

4. $%&^^&%$$%#@%@$%

இப்போ ஞாபகம் வந்துடுச்சா...?

RAMYA March 9, 2009 at 10:47 PM  

நேற்று இரவு தான் பின்னூட்டம் போட்டேன்.

இன்னொரு பதிவா??? அண்ணா நீங்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யவங்கதான் .

மீதி கதைப் படிச்சுட்டு அப்புறம் (ராத்த்ரி) பின்னூட்டம் போடரேன்.

RAMYA March 9, 2009 at 10:48 PM  

//
பரிசல்காரன் said...
1. @$#$@#@#$@$#$#@$#

2. @#$#!%$#@$#

3. %$%@%^%$@*&@%@##

4. $%&^^&%$$%#@%@$%

இப்போ ஞாபகம் வந்துடுச்சா...?

//

ஐயோ எனக்கு லேஅசா தலையை சுத்துது அண்ணா உஷாரு உஷாரு!!

ராம்.CM March 9, 2009 at 11:21 PM  

நல்லாயிருந்தது!

பிரேம்ஜி March 9, 2009 at 11:38 PM  

//என்னடா இது, அமெரிக்கா வந்து கெட்ட வார்த்தைகளைக் கூட மறந்துட்டேனான்னு ஒரு சந்தேகம் வந்துடுச்சு. ஹிஹி.. அப்புறம் மனசுலேயே ஒரு தடவை சரிபார்த்தபிறகுதான் சந்தேகம் தெளிவாச்சு.... மனசும் நிம்மதியாச்சு.//

:-))))))))))))))

இது மாதிரி உங்களோட ஒவ்வொரு பதிவிலும் ஒரு மாஸ்டர் Humorous Punch line ஐ எதிர்பார்ப்பது என் வழக்கம்.இந்த தடவை கொஞ்சம் தூக்கல்.

வால்பையன் March 10, 2009 at 1:49 AM  

//என்னடா இது, அமெரிக்கா வந்து கெட்ட வார்த்தைகளைக் கூட மறந்துட்டேனான்னு ஒரு சந்தேகம் வந்துடுச்சு.//

அதெப்படி!
அமெரிக்கா போனா தமிழக கலாச்சாரதை மறந்துருவிங்களா?

வால்பையன் March 10, 2009 at 1:50 AM  

//நீங்களே சொல்லுங்க, மேட்சிங்கா துணி போடலேன்னா, முட்டையும் தக்காளியுமா வீசப்போறாங்க?//

அப்படி பார்த்தா நம்ம ராமராஜன் எப்பவோ ஆம்லெட் ஆகிறுக்குனுமே!

வால்பையன் March 10, 2009 at 1:51 AM  

// ”போகும்போது பத்து நாளைக்கு வர்றாப்பல தோசைக்கு மாவு வெச்சிட்டு எங்கே வேணா போயிட்டு வா”..//

சுட்டு ஹாட்பாக்ஸ்ல வாங்கி வச்சுக்க வேண்டியது தானே!

Mahesh March 10, 2009 at 2:11 AM  

நொறுக்கிட்டீங்க...

கெட்டவார்த்தைய மறக்கற அளவுக்கு நல்லவரா நீங்க... அவ்வ்வ்வ்வ்....

ராஜ நடராஜன் March 10, 2009 at 8:14 AM  

//சட்டை, பேண்டை மேட்சிங்கா போடணும்னு யார்தான் கண்டுபிடிச்சாங்களோ? நமக்கு இதெல்லாம் சரியே படாது. கண்ணை மூடிட்டு அலமாரியில் கைவச்சா, கையில் மாட்டுற சட்டை, பேண்டை போட்டுட்டு போயிடுவேன்.//

தங்ஸ்கிட்ட நான் அடிக்கடி வாங்கி கட்டிக்கிட்டாலும் கூட நான் உங்க கட்சி:)

ராஜ நடராஜன் March 10, 2009 at 8:16 AM  

//”போகும்போது பத்து நாளைக்கு வர்றாப்பல தோசைக்கு மாவு வெச்சிட்டு எங்கே வேணா போயிட்டு வா”.//

இஃகி!இஃகி (பழமை சிரிப்பு)

ராஜ நடராஜன் March 10, 2009 at 8:19 AM  

// “ஆமா. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க்... பில்டிங் வீக்”ன்னேன்.


இன்னும் அந்த ஜோக்கு அவிங்க மொழியிலே வரலே போலிருக்கு.//

உங்க மாதிரி நகைச்சுவை திலகங்கள்தான் தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்குறாங்களே:)

சின்னப் பையன் March 10, 2009 at 10:30 AM  

வாங்க ஸ்ரீதர்கண்ணன், ஆளவந்தான் -> புலவர்களுக்கிடையில் சர்ச்சை தேவைதான். அதுவே சண்டையாக மாறிவிடக்கூடாது... ஹிஹி...:-))

வாங்க முரளிகண்ணன் -> நன்றி...

வாங்க நாமக்கல் சிபி தல -> சரியா சொன்னீங்க... நம்ம கஷ்டம் யாருக்கு புரியுது சொல்லுங்க...

வாங்க வெட்டி -> சூப்பர்...

சின்னப் பையன் March 10, 2009 at 10:33 AM  

வாங்க ரம்யா தங்கச்சி -> உங்களுக்கில்லாத பிஸ்கட்டா... அச்சச்சோ... அதையெல்லாம் நீங்க படிக்காதீங்க.... :-))

வாங்க பரிசல் -> நல்லவேளை. நினைவூட்டியதற்கு நன்றி.....:-))

வாங்க ராம்.CM -> நன்றி...

வாங்க பிரேம்ஜி -> தங்கள் சித்தம் என் பாக்கியம்... ஹிஹி.. ஏதாவது புரியுதா?????

வாங்க முத்துலெட்சுமி அக்கா -> சிரிச்சதற்கு நன்றிங்க...

சின்னப் பையன் March 10, 2009 at 12:15 PM  

வாங்க வால் -> நன்றி...

வாங்க மகேஷ்ஜி -> அவ்வ்வ்... முடியல...

வாங்க ஸ்ரீமதி, சந்தனமுல்லை, தாமிரா, நட்சத்திர கார்க்கி -> நன்றி...

வாங்க ராஜ நடராஜன் அண்ணே -> மிக்க நன்றி...

pudugaithendral March 10, 2009 at 12:17 PM  

வீச மாட்டாங்க தான்.. ஆனா தர்மத்தின் தலைவன் கெட்டப்புல போனா.. நாய் விடாது :))//

ஹைய்யோ, தாங்க முடியலை.

ரொம்ப நல்ல கமெண்ட்.

நசரேயன் March 10, 2009 at 12:50 PM  

நொறுக்கு தீனி நேத்தே சாப்பிட்டுட்டேன், ஆனா நல்லா இருக்குன்னு இப்பத்தான் சொல்ல முடிந்தது

☀நான் ஆதவன்☀ March 10, 2009 at 1:02 PM  

//வால்பையன் said...

//நீங்களே சொல்லுங்க, மேட்சிங்கா துணி போடலேன்னா, முட்டையும் தக்காளியுமா வீசப்போறாங்க?//

அப்படி பார்த்தா நம்ம ராமராஜன் எப்பவோ ஆம்லெட் ஆகிறுக்குனுமே!//

சந்தடி சாக்கில் என் தலைவனை வம்புக்கிலுத்த வால்பையனை வன்மையாக கண்டிக்கிறேன்

இவண்
அகில பிரபஞ்ச இராமராஜன் ரசிகர் மன்ற ஒரே தலைவரும் ஒரே உறுப்பினருமான ....

நான் ஆதவன்

வால்பையன் March 10, 2009 at 1:03 PM  

இவண்
அகில பிரபஞ்ச இராமராஜன் ரசிகர் மன்ற ஒரே தலைவரும் ஒரே உறுப்பினருமான ....

நான் ஆதவன் //

அப்ப சரி
உங்களுக்கும் ஆம்லெட் தான்!

Kathir March 10, 2009 at 1:29 PM  

//புலவர்களுக்கிடையில் சர்ச்சை தேவைதான். அதுவே சண்டையாக மாறிவிடக்கூடாது... ஹிஹி...:-))//

:)))

RAMYA March 10, 2009 at 1:56 PM  

//
“ஓய்.. வீட்லே சொல்லிட்டு வந்துட்டியா”ன்னு ஆரம்பிச்சி - படபடன்னு தேர்தல் வாக்குறுதிகளைப் போல் கொட்டக்கூடிய கெட்ட வார்த்தைகளும் மேற்கூறிய சம்பவத்தின்போது எனக்கு வாயில் வரவில்லை.
//

சாவு கிராக்கின்னு கூட திட்டுவாங்க சகோதரா!!!

RAMYA March 10, 2009 at 2:00 PM  

//
மாலை 4 மணி:
கணவன் (மனைவியிடம்): “ நீ மட்டும் இல்லேன்னா... நான் எப்படி இருக்கப்போறேன்னு தெரியல.... ”
மனைவி: (கண் கலங்கியவாறே) : “அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க....”
கணவன்: ”போகும்போது பத்து நாளைக்கு வர்றாப்பல தோசைக்கு மாவு வெச்சிட்டு எங்கே வேணா போயிட்டு வா”..

//


கலக்கி போட்டுடீங்க போங்க
ரொம்ப நல்லா சிரிக்க சிரிக்க
எழுதரீங்க அண்ணா!!

சின்னப் பையன் March 10, 2009 at 7:49 PM  

வாங்க புதுகைத் தென்றல் அக்கா -> அவ்வ்வ்... நல்லா சிரிங்க......:-))

வாங்க நசரேயன் -> ஏம்பா.. ஒழுங்கா ஜீரணம் ஆனாத்தான் பின்னூட்டம் போடணும்னு நினைச்சியாப்பா...?????

வாங்க நான் ஆதவன் -> ஹாஹா... பின்னாடி வால் பதில் சொல்லிட்டாரு பாருங்க... :-))

வாங்க கதிர் -> கமெண்டை ரசிச்சீங்களா???? நன்றி...

வாங்க ரம்யா தங்கச்சி மற்றும் பாபாஜி -> மிக்க நன்றி...

வேந்தன் March 11, 2009 at 2:33 AM  

//...“என்னடா, சினிமாக்கு வந்தியா?”...“என்ன ஜலதோஷமா?"...//
அட நீங்க blog எழுதுபவரா? :)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP