Thursday, March 26, 2009

ஆரம்ப முடிவு.. கவுஜ கவுஜ!!!



என்னதான் கவுஜ எழுதற திறமையை உள்ளுக்குள்ளேயே மறைத்து வைத்திருந்தாலும், ஆயிரக்கணக்கான(!!!) ரசிகர்கள் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியால், தம் கட்டி இழுத்து
அதை வெளியே கொண்டு வந்துடறாங்க.

நேத்திக்கு ராத்திரி வலது பக்கக் காதுலே மருந்து ஊத்திக்கிட்டு, இடது பக்கமா சாஞ்சிக்கிட்டு படுத்து யோசிச்சதுலே உதயமானதுதான் இந்த கவுஜ.

சரவணபவன் இட்லிய தின்றாமாதிரி கடகடன்னு படிச்சிடாமே, ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து அனுபவிச்சி படிங்க.

இப்பவே ஒரு ரகசியத்த சொல்லிப்புடறேன்.. கவுஜயோட கடைசி பத்திலேதான் மேட்டரே அடங்கியிருக்கு. அதுக்காக நேரா அங்கே போயிடாதீங்க மக்கா.. முதல்லேந்தே படிங்க...
எஞ்சாய்.....

*****



ஆரம்பம் சீக்கிரமே
ஆரம்பித்துவிட்டால்
முடிவும் சீக்கிரம்
முடிந்துவிடுமா?


*****

ஆரம்பத்தின் முடிவில்
அதை
ஆரம்ப முடிவென்பதா
முடிவின் ஆரம்பமென்பதா?

இல்லை
முடிவின் ஆரம்பத்தில்
அதை
முடிவாரம்பம் என்றுதான் அழைக்க
முடியுமா?

*****

ஆரம்பிப்பதற்குள்
முடிந்துபோவதை
எப்படி ஆடிவு
என்று சொல்லமுடியாதோ - அதே போல்

முடிந்தபிறகு
மீண்டும் ஆரம்பிப்பதற்கு
மும்பம் என்றும்
சொல்லமுடியாது


*****

ஆரம்பிக்கும்போதே
முடிவை
முடிவெடுத்துடற மாதிரி

முடிந்தபிறகு
ஆரம்பத்தில் இதைத்தான்
முடிவெடுத்தோமான்னு
பாக்கணும்.


*****

ஆரம்பிக்காமலேயே
ஆரவாரம் செய்யறவனவிட
முடிச்சிட்டு
முக்காபுலா பாடுறவந்தான்
முழுமனிதன்

*****

முடிவா ஒண்ணு சொல்லி
முடிச்சிக்கறேன்.
ஆரம்பத்திலிருந்து
ஆராவது இந்த கவுஜய
ஆராய்ஞ்சி எனக்கு விளக்குங்க.

*****


64 comments:

நிகழ்காலத்தில்... March 26, 2009 at 9:55 PM  

\\ஆரம்பிக்கும்போதே
முடிவை
முடிவெடுத்துடற மாதிரி

முடிந்தபிறகு
ஆரம்பத்தில் இதைத்தான்
முடிவெடுத்தோமான்னு
பாக்கணும்.\\


*****

\\ஆரம்பிக்காமலேயே
ஆரவாரம் செய்யறவனவிட
முடிச்சிட்டு
முக்காபுலா பாடுறவந்தான்
முழுமனிதன்\\

கிண்டலாக இல்லை. உண்மையிலேயே பெரிய தத்துவத்தை
நாலு வரியில் சொன்னதற்கு
ஜெ... ச்செ...ஜேஏஏஏ......

ஸ்ரீதர்கண்ணன் March 26, 2009 at 10:21 PM  

ஆரம்பிக்காமலேயே
ஆரவாரம் செய்யறவனவிட
முடிச்சிட்டு
முக்காபுலா பாடுறவந்தான்
முழுமனிதன்

Superu.

RAMYA March 26, 2009 at 10:37 PM  

உள்ளேன் அண்ணா!! அப்புறம் வாரேன்!!

Tech Shankar March 26, 2009 at 10:53 PM  

அடடடா.. இப்பவே கண்ணைக் கட்டுதே...

ஆதவா March 26, 2009 at 10:59 PM  

ஒரு மாதிரியா இருக்கு!!!! சொல்லப் போனா, லோக்கல் பாஷை... உயர்ந்த கருத்து!!! அவ்வளவுதான்!!!

பிரேம்ஜி March 26, 2009 at 11:09 PM  

//ஆரம்பம் சீக்கிரமே
ஆரம்பித்துவிட்டால்
முடிவும் சீக்கிரம்
முடிந்துவிடுமா?//

மறுபடியும் பின் நவீனத்துவம் மாதிரி தெரியுது :-))))

Raghav March 26, 2009 at 11:27 PM  

ஆரம்பிச்சு பாதிலயே விட்டுட்டா.. அத முடிவுன்னு சொல்லலாமா!

Unknown March 26, 2009 at 11:55 PM  

என்னக் கொடுமை அண்ணா இது?? :(( காலங்கார்த்தால எனக்கு இப்படி ஒரு தண்டனையா?? படிச்சதும் இல்லாம அர்த்தம் வேற சொல்லனுமா?? :'(( இனிமே இப்படி என்னைக் கொடுமைபடுத்தினா நான் பூச்சாண்டி அண்ணா கிட்ட புடிச்சு கொடுத்திடுவேன் ஜாக்ரத... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ;))

Mahesh March 27, 2009 at 1:08 AM  

காதுல மருந்து விட்டு உங்க காது வலி போயிடுச்சா? வீட்டுல எல்லாரு நல்லா இருக்காங்களா? க்ளைமேட் எப்பிடி இருக்கு?

கவிதையா? அதெல்லாம் எதோ பெரிய சமாச்சாரம்ணா... எனக்கு எதுக்கு கவிதையும் ஆராய்ச்சியும்?
:)))))))))))))))

அருப்புக்கோட்டை பாஸ்கர் March 27, 2009 at 1:11 AM  

//ஆரம்பத்திலிருந்து
ஆராவது இந்த கவுஜய
ஆராய்ஞ்சி எனக்கு விளக்குங்க.//

அந்த அளவுக்கு திறமை இந்த பிரபஞ்சத்திலியே யாருக்கும் இருக்காது !

மோனி March 27, 2009 at 1:58 AM  

நான் அப்பவே சொன்னேன்
Story Discussion-க்கு கமலஹாசன் கூப்பிடுவாருன்னு ...

இனி முரசொலியில கவுஜ எழுத
கலைஞரே கூப்ட்டாலும் ஆச்சர்யம் இல்ல ...

இதுக்கு மேல எனக்கு
கமென்ட் பண்ண வார்த்தை வரலை
டைப் அடிக்க விரலும் வரமாட்டேங்குது ...

இடது ஒரு
அற்புதமான கவுச்சி ...
சாரி கவுஜ ...

நவநீதன் March 27, 2009 at 2:32 AM  

படிச்சு முடிச்ச உடனே என் கண்ணுல ரத்தம் வருது...!

இது தான் ஆரம்பமா? இல்ல ஆ...ரம்பமா?
இல்ல ஆரம்பத்தோட முடிவா? இல்ல முடிவின் ஆரம்பமா?

எம்.எம்.அப்துல்லா March 27, 2009 at 2:33 AM  

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....அப்பா...
இப்பவே கண்ணக்கட்டுதே

:))

Unknown March 27, 2009 at 3:30 AM  

ச்சின்னப் பையன்!

முடிவு ஆரம்பம் பற்றி
கவிதை போடலாம்
”கவிஜா” போட்டால்
”முடி”யெல்லாம் ஆ”ரம்பம்”த்தால்
ஆ”ரம்ப”ப்பட்டு
”முடி”உதிர்ந்து
’கவி(ஜா)ச்சி” போல் உணர்ந்து
மூக்கை ”மூடி”யும்
மூச்சு “முட்டி”
முடிவும் சீக்கிரம்
முடிந்து விடும்

முடிந்தபிறகு
ஆரம்பத்தில் இதைத்தான்
முடிவெடுத்தோமான்னு
freezer boxல்
மூக்கில பஞ்சோடு
மூடிக்கிட்டு
ஆரம்பத்தில் இதைத்தான்
முடிவெடுத்தோமான்னு
ஒரு முடிவோடு
ஆரம்பிக்கணும்


இது எப்படி இருக்கு?

வெண்பூ March 27, 2009 at 4:20 AM  

உங்கள சொல்லி குத்தமில்லை. எல்லாம் இந்த பரிசலையும் அபி அப்பாவையும் சொல்லணும்... :)))

வால்பையன் March 27, 2009 at 4:56 AM  

//ஆரம்பிப்பதற்குள்
முடிந்துபோவதை
எப்படி ஆடிவு
என்று சொல்லமுடியாதோ - அதே போல்

முடிந்தபிறகு
மீண்டும் ஆரம்பிப்பதற்கு
மும்பம் என்றும்
சொல்லமுடியாது//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் March 27, 2009 at 4:57 AM  

தலை கலக்கலா வந்துருக்கு மொக்கை கவுஜ!
ஆனா இது எனக்கு போட்டின்னு எனக்கு தெரியும்! அதனால என்னோட அடுத்த கவுஜ
“கொலைவெறி கவுஜ”

சின்னப் பையன் March 27, 2009 at 8:15 AM  

வாங்க அறிவே தெய்வம், ஸ்ரீதர்கண்ணன், ரம்யாஜி, ராகி ஐயா -> நன்றி...

வாங்க தமிழ் நெஞ்சம், ஆதவா -> மிக்க நன்றி...

வாங்க பிரேம்ஜி -> அவ்வ்வ். தொடர்ந்து பின்னவீனத்துவ பதிவா வருதா என்ன?????

வாங்க ராகவ் -> குட் கொஸ்டின். நெக்ஸ்ட் கொஸ்டின்?

வாங்க ஸ்ரீமதி -> ஹாஹா... டென்சனாயிட்டீங்களா???? சரி சரி பதிவுலே இதெல்லாம் சாதாரணமப்பா.... :-))

சின்னப் பையன் March 27, 2009 at 8:20 AM  

வாங்க மகேஷ்ஜி -> அதானே.. நமக்கெதுக்கு இந்த கவிதையெல்லாம்.... கவுஜயே போதும்... :-)))

வாங்க பாஸ்கர் -> அவ்வ்வ்.. அப்போ என் கேள்விக்கு பதிலே கிடைக்காதா (வானத்தைப் பாத்து சிவாஜி வாய்ஸில் கேட்பதைப்போல் நினைத்துக்கொள்ளவும்!!)

வாங்க மோனி -> ஹாஹா.... முடியல.... ரொம்ப டென்சனாயிட்டீங்கன்னு நினைக்கிறேன்... கூல் கூல்... :-)))

வாங்க நவநீதன் -> அவ்வ்வ்... தெரியலியேப்பா ( நாயகன்!!).

வாங்க அப்துல்லா அண்ணே -> அவ்வ்வ்வ்...

சின்னப் பையன் March 27, 2009 at 8:26 AM  

வாங்க ரவிஷங்கர் -> ஹாஹா... தொடர்ந்து சிரிச்சிக்கிட்டே இருக்கேன்... முடியல என்னாலே... நன்றி... :-)))

வாங்க வெண்பூ -> ஹாஹா... பரிசல்தான் எனக்கு கவிமடத்துலே சேர சிபாரிசு கடிதம் கொடுக்கறேன்னிருக்காரு... அதான் பழகிக்கறேன்... :-)))

வாங்க வால் -> :-)))) கொலவெறி கவுஜ எழுதினீங்கன்னா -- உடனே குத்திக்கொலவெறி கவுஜ வரும் என்பதை தாஆஆஆழ்மையுடன் சொல்லிக்கொல்கிறேன்... :-))))))))))))

வாங்க மணிகண்டன் -> ஏன் இந்த கொலவெறி????? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியா???? அந்த வாக்கியத்தோட மகிமையையே தூக்கிப் போட்டு விளையாடிட்டீங்களே????.... ஏங்க... இதே மாதிரி ஏதாவது ஒரு ரெயில்வே முன்பதிவு வரிசையில் -- ஒரு 100வது ஆளா நின்னிருந்தாலும் -- மீ த பஷ்ட்னுதான் சொல்வீங்களா???? :-))))))))

Unknown March 27, 2009 at 8:51 AM  

//வாங்க ரவிஷங்கர் -> ஹாஹா... தொடர்ந்து சிரிச்சிக்கிட்டே இருக்கேன்... முடியல என்னாலே... நன்றி... :-)))//

நன்றி ச்சின்னப் பையன்.அது என்ன
“ச்சின்ன”?. ஒரு மாதிரி குறு குறுகுன்னு இருக்கு.(டேய்....அவனா நீயி?)

நம்ம வலைக்கு வாங்க. நம்ம ஒரிஜனல் கவிதை(ஹைக்கூ/சாதா) படிச்சு கருத்துச் சொல்லுங்க. ஒரு திகில் கதை படிங்க.


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
bloggerரே என் bloggerரே

Vinitha March 27, 2009 at 9:05 AM  

புரியாத கவிதை! நன்றி.

பரிசல்காரன் March 27, 2009 at 9:19 AM  

FORWARDED TO..

ஆசிஃப் மீரான் அண்ணாச்சி...

kuma36 March 27, 2009 at 9:23 AM  

///நேத்திக்கு ராத்திரி வலது பக்கக் காதுலே மருந்து ஊத்திக்கிட்டு, இடது பக்கமா சாஞ்சிக்கிட்டு படுத்து யோசிச்சதுலே உதயமானதுதான் இந்த கவுஜ.///

:::::::::::::::::::::::::::::::::
இன்னைக்கு ராத்திரி இடது பக்கக் காதுலே மருந்து ஊத்திக்கிட்டு, வலது பக்கமா சாஞ்சிக்கிட்டு படுத்து யோசிக்காதிங்! ஓகேவா

நையாண்டி நைனா March 27, 2009 at 9:30 AM  

இப்டி ...இப்டி... இப்படி ஒரு கவிதையைத்தான் நான் தேடிகிட்டே இருக்கேன்....
ஆகா... அருமை...

( திருவிளையாடல் தருமி ஸ்டைலில் படிக்கவும்)
ஐயா... நீர் புலவர்.

அறிவிலி March 27, 2009 at 9:52 AM  

//நேத்திக்கு ராத்திரி வலது பக்கக் காதுலே மருந்து ஊத்திக்கிட்டு, இடது பக்கமா சாஞ்சிக்கிட்டு படுத்து யோசிச்சதுலே உதயமானதுதான் இந்த கவுஜ.//


மருந்து எதுக்கு?... யாராவது உங்க பழைய கவுஜய சத்தமா படிச்சு காமிச்சாங்களா...

சின்னப் பையன் March 27, 2009 at 10:21 AM  

வாங்க மீண்டும் வந்த ரவிஷங்கர் -> அந்த 'ச்' இருந்ததாலேதான் பெரிய்ய்ய ஆளு ஒருத்தரு - ஓ நீங்கதானா அது???ன்னு நினைவு வெச்சிக்கிட்டு கேட்டாரு. அதனால் அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன்... வர்றேன் உங்க கடைக்கு....

வாங்க வினிதா -> அப்பாடா... இப்பத்தான் முதல் உண்மையான பின்னூட்டம் வந்திருக்கு. மிக்க நன்றி..:-))

வாங்க பரிசல் -> ஹாஹா....

வாங்க கலை - இராகலை -> ஹாஹா... சரி சரி.. புரிஞ்சிடுச்சு... இனிமே இப்படி நடக்'காது'.. ஓகேவா... :-))

வாங்க நைனா -> ஆஹா... இந்த கவுஜய தேடிக்கிட்டிருந்தீங்களா??? என்கிட்டே இன்னும் நிறைய இருக்கு... தொடர்ச்சியா விட்டேன்னா மக்கள் டென்சனாயிடுவாங்க.. அதனால் சிறிது கேப் விட்டு அனுப்பறேன்... சரிதானே????

RAMYA March 27, 2009 at 12:42 PM  

//
நேத்திக்கு ராத்திரி வலது பக்கக் காதுலே மருந்து ஊத்திக்கிட்டு, இடது பக்கமா சாஞ்சிக்கிட்டு படுத்து யோசிச்சதுலே உதயமானதுதான் இந்த கவுஜ.
//

மருந்து இந்த பக்கமா வரலையா ??

ஆரம்பமே அசத்தல் தான் போங்க அண்ணா :))

RAMYA March 27, 2009 at 12:44 PM  

//
ஆரம்பம் சீக்கிரமே
ஆரம்பித்துவிட்டால்
முடிவும் சீக்கிரம்
முடிந்துவிடுமா?
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA March 27, 2009 at 12:46 PM  

//
ஆரம்பத்தின் முடிவில்
அதை
ஆரம்ப முடிவென்பதா
முடிவின் ஆரம்பமென்பதா?

இல்லை
முடிவின் ஆரம்பத்தில்
அதை
முடிவாரம்பம் என்றுதான் அழைக்க
முடியுமா?
//

ஏற்கனவே ஒருமாதிரிதான் இருந்தேன்.

இப்போ வேறே மாதிரி ஆகிவிட்டேன் அண்ணா !!

RAMYA March 27, 2009 at 12:47 PM  

//
ஆரம்பிப்பதற்குள்
முடிந்துபோவதை
எப்படி ஆடிவு
என்று சொல்லமுடியாதோ - அதே போல்

முடிந்தபிறகு
மீண்டும் ஆரம்பிப்பதற்கு
மும்பம் என்றும்
சொல்லமுடியாது
//


சரியா சொன்னீங்க, எங்க அண்ணா யாரு ம்ம் யாரு :)

அதானே யாரு ?????????

RAMYA March 27, 2009 at 12:51 PM  

//
ஆரம்பிக்கும்போதே
முடிவை
முடிவெடுத்துடற மாதிரி

முடிந்தபிறகு
ஆரம்பத்தில் இதைத்தான்
முடிவெடுத்தோமான்னு
பாக்கணும்.
//

ரொம்ப கண்ணை கட்டுதே
முடுவு எடுக்க முடியாம
திண்டாடுரேனே!!

சொக்கா நீ எங்கேப்பா இருக்கே
சீக்கிரம் வாப்பா!!

RAMYA March 27, 2009 at 12:54 PM  

//
ஆரம்பிக்காமலேயே
ஆரவாரம் செய்யறவனவிட
முடிச்சிட்டு
முக்காபுலா பாடுறவந்தான்
முழுமனிதன்
//

சரி நீங்களே சொல்லிட்டீங்க
நானும் ஒத்துக்கறேன்

அது முக்காபுலாதான் :)

RAMYA March 27, 2009 at 12:55 PM  

//
முடிவா ஒண்ணு சொல்லி
முடிச்சிக்கறேன்.
ஆரம்பத்திலிருந்து
ஆராவது இந்த கவுஜய
ஆராய்ஞ்சி எனக்கு விளக்குங்க.
//

முடியலை முடியலை தாங்க முடியலை :))

மணிகண்டன் March 27, 2009 at 1:34 PM  

*****
வாங்க மணிகண்டன் -> ஏன் இந்த கொலவெறி????? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியா???? அந்த வாக்கியத்தோட மகிமையையே தூக்கிப் போட்டு விளையாடிட்டீங்களே????.... ஏங்க... இதே மாதிரி ஏதாவது ஒரு ரெயில்வே முன்பதிவு வரிசையில் -- ஒரு 100வது ஆளா நின்னிருந்தாலும் -- மீ த பஷ்ட்னுதான் சொல்வீங்களா???? :-))))))))
*****

ஆரம்ப முடிவு கவிதை படிச்சேன். அதுக்கு பின்னூட்டம் ஒண்ணு ஆரம்பிக்கணும் இல்லாட்டி முடிக்கணும். முடிவோட ஆரம்பம் எதுன்னு தெரியாததுன்னால ஆரம்பம் தான் சரின்னு முடிவு பண்ணினேன். அதுனாலயே ஆரம்பத்தோட முடிவா "me the first" போட்டேன்.
அந்த வார்த்தைக்கு மகிமை தான சேர்த்து இருக்கேன் ?

வால்பையன் March 27, 2009 at 1:36 PM  

//ஆரம்ப முடிவு கவிதை படிச்சேன். அதுக்கு பின்னூட்டம் ஒண்ணு ஆரம்பிக்கணும் இல்லாட்டி முடிக்கணும். முடிவோட ஆரம்பம் எதுன்னு தெரியாததுன்னால ஆரம்பம் தான் சரின்னு முடிவு பண்ணினேன். அதுனாலயே ஆரம்பத்தோட முடிவா "me the first" போட்டேன்.
அந்த வார்த்தைக்கு மகிமை தான சேர்த்து இருக்கேன் ?//

இவரு
ச்சின்னபையனை விட சின்னபையன்!

இப்படி எத்தனை பேரு கொலைவெறியோட கிளம்பீறுக்கிங்க!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown March 27, 2009 at 2:10 PM  

enaa vaarthai jallam?
ba ba lemon tree...have you any lemon? Yes Raj yes Raj...three bags full. One for me...one for CP...one for rest of all POOR readers who lives all over the world.....

ஆளவந்தான் March 27, 2009 at 5:39 PM  

அட்டெண்டன்ஸ் மொத :)

ஆளவந்தான் March 27, 2009 at 5:39 PM  

சில பல அலுவல்னால இந்த பக்கம் வர முடியல :)

ஆளவந்தான் March 27, 2009 at 5:39 PM  

ஓகே. இப்பொ ஸ்டார் மூஜிக்

ஆளவந்தான் March 27, 2009 at 5:40 PM  

//
ஆரம்பம் சீக்கிரமே
ஆரம்பித்துவிட்டால்
முடிவும் சீக்கிரம்
முடிந்துவிடுமா?
//
சிம்பு தோத்தான்:)
அடுத்த பட ப்ஞ்ச் டயலாக் இது தானாம்

ஆளவந்தான் March 27, 2009 at 5:41 PM  

//
முடிவாரம்பம் என்றுதான் அழைக்க
முடியுமா?
//
ஒரு முடிவோட தான் இருக்கிற மாதிரி தெரியுது

ஆளவந்தான் March 27, 2009 at 5:41 PM  

//
மும்பம் என்றும்
சொல்லமுடியாது
//
ஓஹோ :)

ஆளவந்தான் March 27, 2009 at 5:42 PM  

//
ஆரம்பிக்காமலேயே
ஆரவாரம் செய்யறவனவிட
முடிச்சிட்டு
முக்காபுலா பாடுறவந்தான்
முழுமனிதன்
//

அரை மனுசன் எங்கெ?

ஆளவந்தான் March 27, 2009 at 5:42 PM  

//
முடிவா ஒண்ணு சொல்லி
முடிச்சிக்கறேன்.
//
இதை தான் ஆரம்பத்திலேயே சொல்லிடீங்களே அப்பு :)

ஆளவந்தான் March 27, 2009 at 5:43 PM  

சரி வந்தது வந்துட்டோம்.. ஒரு 50 அடிச்சுட்டு போயிடலாம்

ஆளவந்தான் March 27, 2009 at 5:43 PM  

அப்போ நான் வரட்டா :)

ஆளவந்தான் March 27, 2009 at 5:44 PM  

//
இன்னைக்கு ராத்திரி இடது பக்கக் காதுலே மருந்து ஊத்திக்கிட்டு, வலது பக்கமா சாஞ்சிக்கிட்டு படுத்து யோசிக்காதிங்! ஓகேவா
//
ரிப்பீட்டேய்

நசரேயன் March 27, 2009 at 5:46 PM  

ஒரு கவுஜை கவுஜை எழுதுது

ஆளவந்தான் March 27, 2009 at 5:49 PM  

//
நசரேயன் said...

ஒரு கவுஜை கவுஜை எழுதுது
//
இதை நீங்க ஒன்னுக்கு கீழ ஒன்னா எழுதி இருக்கனும் :)))))))))))))))))))))

Ramya Deepak,  March 27, 2009 at 7:15 PM  

This is a BIG MOKKAI!!!

Deepak Sadanandan,  March 27, 2009 at 7:28 PM  

குணா ஸ்டைல சொல்லணுனா கவுத கவுத!!!

Anonymous,  March 28, 2009 at 12:35 AM  

உங்களுக்கு கமெண்ட் போட கனேஷ்தான் சரியான் ஆளு. அவருக்கு ஒரு மெயிலப் போடுங்கப்பா. பெரிய பெரிய பதிவுகளையே 50 முறை காப்பி பண்ணிப் போடுவார். இத ஒரு 500 தடவையாவது போடமாட்டாரா என்ன?

அவரு போட்டதுக்கப்புறமாச் சொல்லுறேன். முக்காபுலாவா? ஆரவாரமா?ன்னு.

சின்னப் பையன் March 28, 2009 at 10:44 AM  

வாங்க அறிவிலி -> அவ்வ்வ்... முடியல... யாராவது என்னோட பழைய கவுஜய படிச்சி காட்டினாங்கன்னா, காதே அறுந்து தொங்கியிருக்கும்......:-))

வாங்க தங்கச்சி ரம்யா -> வழக் போட் தாக்.

வாங்க மணிகண்டன் -> அண்ணே... உங்க உள்குத்தை அறியாமே குத்தம் சொல்லிட்டேண்ணே...... ச்சின்னப்பையந்தானேன்னு மன்னிச்சி விட்டுடுங்க.... :-)))

வாங்க வால் -> மணிகண்டனையும், உங்களையும் சேர்த்து நாம மொத்தம் மூணே பேர்தான்.... ஹிஹி..

சின்னப் பையன் March 28, 2009 at 10:45 AM  

வாங்க ராஜ்குமார் -> ஹாஹா... உங்க ரைம்ஸ் அருமையோ அருமை... சிரிச்சிக்கிட்டே இருக்கேன்... :-))))

வாங்க ஆளவந்தான் -> நீங்களும் அரசு இயந்திரம் மாதிரி ஆயிட்டீங்க... புகார் செய்தாதான் பின்னூட்டமே கிடைக்குது... :-))))

வாங்க நசரேயன் -> இது என்ன ஸ்வீட் கடை கவிதையா????

வாங்க ரம்யா, தீபக் -> ஹிஹி... நன்றி...

வாங்க வேலன் ஐயா -> ஐயா. வேணாங்க... ஒழுங்கா நம்ம கடைக்கு வர்ற பத்து, பதினைந்து பின்னூட்டமே போறும். கணேஷ் மாதிரி காபி/பேஸ்ட் கும்மி வேணவே வேணாம்.....

ராம்.CM March 29, 2009 at 10:05 AM  

நல்லாயிருந்தது..

Thamira March 29, 2009 at 1:55 PM  

கொஞ்ச நாள் கழிச்சு பதிவு படிக்கலாம்னு வந்தா.. யோவ்.. ஏதாவது சொல்லிறப்போறேன்.

lavanya,  March 29, 2009 at 7:48 PM  

intha mathiri yaralayum ezhutha mudiyathu

Anonymous,  March 30, 2009 at 10:35 PM  

//ஆரம்பத்தின் முடிவில்
அதை
ஆரம்ப முடிவென்பதா
முடிவின் ஆரம்பமென்பதா?//

ச்சின்னப்பையன்

இப்பதான் நவீனத்துவத்தோட கூறுகளை உங்க கவுஜையில் பாக்குறேன்.

அதியே

ஆரம்பத்தின் முடிவு
ஆரம்ப முடிவா
முடிவின் ஆரம்பமா

அப்படின்னு கேட்டிருந்தீங்கன்னு வைங்க... இன்னேரம் பின்னவீனக் கவுஞனாயிருப்பீங்க. சரி ஒரு முடிவோடத்தான இருக்கீங்க. அடுத்ததையும் ஆரம்பிங்க :-)

பாலராஜன்கீதா April 1, 2009 at 6:56 AM  

//முடிவாரம்பம் என்றுதான் அழைக்க
முடியுமா?//

நீங்களே முடிவா ரம்பம் என்றெல்லாம்ம் சொல்லக்கூடாது.
:-)))

R Sathyamurthy April 1, 2009 at 10:05 AM  

//இல்லை
முடிவின் ஆரம்பத்தில்
அதை
முடிவாரம்பம் என்றுதான் அழைக்க
முடியுமா?//

முடிவா நான் ஒண்ணு சொல்லட்டா? சிலேடை ஒங்களுக்கு ரொம்ப நன்னா வருது! (உன்னி கிருஷ்ணன் - சூப்பர்சிங்கர் குரலில்) ”முடிவாரம்பம் / முடிவா ரம்பம்” ஆஹா அற்புதம்.

நீங்க வாலில்லாத வாலி!
கண்மண் தெரியாத கண்ணதாசன்!
வைரம் வெச்ச கவுஜல வைரமுத்து!

சின்னப் பையன் April 1, 2009 at 11:00 AM  

வாங்க ராம்.CM, லாவண்யா -> நன்றி...

வாங்க ஆதி -> அவ்வ்...

வாங்க அண்ணாச்சி -> ஹாஹா... எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்... :-))

வாங்க பாலராஜன் கீதா ஐயா -> ஹாஹா... முடியல... இது ஆரம்பம்தான்... :-)))

வாங்க சத்யமூர்த்தி -> முடியல முடியவேயில்ல... :-)))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP