அமெரிக்கர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த கதை...
எங்க அமெரிக்க மேனேஜர் உட்பட குழுவில் உள்ள ஐந்து அமெரிக்கர்கள், ஒரு சீனர் எல்லாரும் போன வாரம் slumdog பாத்துட்டாங்க. அன்னிலேர்ந்து தினமும் கொஞ்ச நேரம் அந்த படத்தைப் பற்றி பேசிட்டிருப்பாங்க.
*****
ஆஸ்கர் விழா முடிஞ்சி ஒரு ரெண்டு நாள் கழிச்சி ஒரு மீட்டிங்கில் இருந்தபோது என்கிட்டே மேனேஜர் கேட்டாரு.
”இந்தியாக்காரங்க கலக்கிட்டாங்களே. விருது விழாவை பாத்தியா?”
”பாக்காமே இருக்க முடியுமா? எங்காளு ரெண்டு விருது வாங்கினாரே?”
“ரஹ்மான் உங்க ஊருதானா?”
“ஆமா. எங்களுக்கு என்ன சந்தோஷம்னா விழாலே அவரு தமிழ்லே பேசினதுதான்”.
”நடுவிலே இந்திய மொழியில் ஏதோ பேசினாரு. அதுதான் தமிழா?”
ஆமான்னுட்டு ஒரு நிமிடம் நம்ம தல பேசினத அப்படியே மொத்தமா பேசிக் காட்டினேன்.
மேனேஜர் - ”அதை மனப்பாடமே பண்ணிட்டியா?"
”எங்க தல பேசினதை மறக்க முடியுமா? எந்தெந்த இடத்திலே பாஸ் (pause) கொடுத்தாரு, எப்படி 'மேரேஜ்'னு சொன்னவுடனே சிரிச்சாரு, எல்லாமே மனப்பாடமா இருக்கு". (பின்னே இருக்காதா, படையப்பா நீலாம்பரி கணக்கா, அதே காட்சியை ஏகப்பட்ட தடவை யூட்யூபில் பார்த்து, ஒவ்வொரு தடவையும் உணர்ச்சி வசப்பட்டிருக்கேனே!!!).
*****
நம்ம ஊரு தொலைக்காட்சி காம்பியரர்கள் கணக்கா ‘டமில்'னு சொல்லிட்டிருந்தவங்களை ‘தமிழ்'னு சொல்லுங்கன்னு திருத்தினேன்.
அமெரிக்கர்கள் ஏற்கனவே 'ரா'வுக்குப் பதிலாக 'ழா'வைத்தான் பயன்படுத்துவாங்க. உதாரணத்திற்கு: 'ராரா சரசகு ராரா' பாட்டு பாடச்சொன்னா, அவர்கள் 'ழாழா சழசகு ழாழா'ன்னுதான் பாடுவாங்க.
அதே அனுபவத்துலே ‘தமிழ்'னும் அழகா சொன்னாங்க. கூடவே - “"எல்லாப் புகழும் இறைவனுக்கே" - சொல்லிக்கொடுத்து அதை மொழிபெயர்த்தும் சொன்னேன்.
மேனேஜர் என்ன பண்ணாருன்னா அதை மறக்கக்கூடாதுன்னு எழுதி வெச்சிக்கிட்டாரு. எங்க அலுவலகத்திலே இன்னொரு பெரிய்ய்ய்ய தல ஒருத்தர் இருக்காரு. தமிழர்தான். அவர்கிட்டே போய் இவரு - "எல்லாப் புகழும் இறைவனுக்கே" - அப்படின்னு சரியா சொன்னதும் அவர் ஆடிப்போயிட்டாராம். "உங்களுக்கு யாரு இதை சொல்லிக் கொடுத்தது"ன்னு ஆச்சரியத்தோடு கேட்டிருக்காரு.
அதுக்கப்புறம் ச்சின்னச்சின்ன ப்ராஜெக்டா இருந்தாலும், அது வெற்றிகரமா முடிஞ்சுதுன்னா, என்னைப் பார்த்து - “எல்லாப் புகழும் இறைவனுக்கே”ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.
ஏதோ நம்மாலானது இவ்ளோதான்.
*****
மேற்சொன்ன மீட்டிங்குகளில் ஒரு சீனாக்காரரும் இருந்தாரு. "இந்திய படங்கள்லே திடீர் திடீர்னு பாட்டு போட்டு நூத்துக்கணக்கான பேர் ஆட ஆரம்பிச்சிடறாங்க. கதைக்கு சம்மந்தமில்லாத மாதிரி இருக்குது அது" - அப்படி இப்படின்னு பேசி வெறுப்பேத்திக்கிட்டே இருந்தாரு.
நம்ம சோனியாஜியும், மன்மோகன்ஜியும் - மத்த நாட்டு உள்விவகாரத்துலே தலையிடக்கூடாது, இறையாண்மை மதிக்கப்படணும்னு சொல்லியிருப்பதாலே, நானும் சீன நாட்டு விவகாரம் எதுவும் பேசாமல் அமைதி காத்தேன். அந்த மீட்டிங் முடிவில் - "நல்ல தமிழ் படங்கள் DVD இருந்தா குடு. நான் பாக்கணும்"னு சொன்னாரு.
ங்கொய்யாலே.. எங்க படங்களை/இசையை நல்லா ஓட்டின உன்னை பழிக்குப்பழி வாங்கறேன்னு நினைச்சி, கீழ்க்கண்ட படங்களை அவருக்கு சிபாரிசு செய்யலாம்னு இருக்கேன். "இந்த படம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா"ன்னு பாத்து சொல்லுங்க.
ஏகன், வில்லு, குருவி, அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா.
****
45 comments:
நாந்தான் மொத :)))))))
ரெண்டாவது :)))
நம்ம ஊரு தொலைக்காட்சி காம்பியரர்கள் கணக்கா ‘டமில்'னு சொல்லிட்டிருந்தவங்களை ‘தமிழ்'னு சொல்லுங்கன்னு திருத்தினேன்.
:)))))))))
//
”எங்க தல பேசினதை மறக்க முடியுமா? எந்தெந்த இடத்திலே பாஸ் (pause) கொடுத்தாரு, எப்படி 'மேரேஜ்'னு சொன்னவுடனே சிரிச்சாரு, எல்லாமே மனப்பாடமா இருக்கு". (பின்னே இருக்காதா, படையப்பா நீலாம்பரி கணக்கா, அதே காட்சியை ஏகப்பட்ட தடவை யூட்யூபில் பார்த்து, ஒவ்வொரு தடவையும் உணர்ச்சி வசப்பட்டிருக்கேனே!!!)
//
ஸேம் பிள்ட்
எல்லாப்புகழும் இறைவனுக்கே! செம டச்சிங் :))))
ங்கொய்யாலே.. எங்க படங்களை/இசையை நல்லா ஓட்டின உன்னை பழிக்குப்பழி வாங்கறேன்னு நினைச்சி, கீழ்க்கண்ட படங்களை அவருக்கு சிபாரிசு செய்யலாம்னு இருக்கேன். "இந்த படம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா"ன்னு பாத்து சொல்லுங்க.
ஏகன், வில்லு, குருவி, அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா.
முடியல பாஸ் :)))))))))
//
ஏகன், வில்லு, குருவி, அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா.
//
தெளியவிட்டு மறுபடியும் அடிப்போம். லிஸ்ட்டுக்கா பஞ்சம் :))
_/\_
இஃகிஃகி!!
நல்ல படங்களத்தான் செலக்ட் பண்ணியிருக்கீங்க. குடுக்கும்போதே சொல்லிகுடுங்க "இது படமல்ல... பாடம்"னு. :))))))))
இப்போதைக்கு உள்ளேன் அப்புறமா வாரேன்!!!
:-))))
அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு தமிழ் தொண்டு செய்யும் நீவீர் வாழ்க! வாழ்க!
ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:
அஞ்சேழ் கழஞ்சினெடை யாழாக்குக் கற்பூரம்
கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் விஞ்சாது
நன்றான தண்ணீர்க்கு நாழிபலம் பன்னிரண்டாம்
என்றாயு மேழிரண்டா மென்.
இந்த சூத்திரத்தை வெச்சே, அவன் வாழ்நாள் பூராவும் கற்பூர யாவாரம் செய்துட்டு இருந்தானாம். இஃகிஃகி! இதுக்குப் பொருள்? அமெரிக்க தொழிலதிபரை மணந்த நடிகையின் கதை?? நாளைக்கி வர்ற பள்ளையம் பாருங்க....
எப்பமோ நடந்த போருக்கு இப்ப போய் அந்த சீனாக்காரனைப் பழி வாங்கலாமா? பாவம் பொழச்சு போகட்டும்.. தனுஷ் நடிச்ச படம் நாலு கொடுங்க.... அது போதும்.. ;-)
//நம்ம சோனியாஜியும், மன்மோகன்ஜியும் - மத்த நாட்டு உள்விவகாரத்துலே தலையிடக்கூடாது, இறையாண்மை மதிக்கப்படணும்னு சொல்லியிருப்பதாலே, நானும் சீன நாட்டு விவகாரம் எதுவும் பேசாமல் அமைதி காத்தேன். //
இறையாண்மையிலே தலையிடமாட்டீங்க ஆனால் படம் மட்டும் கொடுப்பீங்களா. ஏதோ சோனியாஜி ஆயுதங்கள் அனுப்பின மாதிரி தானே நீங்க படம் தர்றீங்க..
இனிமே இந்தியா பக்கமே திரும்பி கூட பார்க்கமாட்டாங்களே
//ங்கொய்யாலே.. எங்க படங்களை/இசையை நல்லா ஓட்டின உன்னை பழிக்குப்பழி வாங்கறேன்னு நினைச்சி, கீழ்க்கண்ட படங்களை அவருக்கு சிபாரிசு செய்யலாம்னு இருக்கேன். "இந்த படம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா"ன்னு பாத்து சொல்லுங்க.
ஏகன், வில்லு, குருவி, அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா.//
:-))))))))))))))))
ஏகன், வில்லு, குருவி, அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா.
//
ஒரு ஆள ஒருவாட்டி கொன்னாப் போதும். இதுல ஏதாவது ஒரு டிவிடி குடுங்க...போதும்.
:)
//நம்ம ஊரு தொலைக்காட்சி காம்பியரர்கள் கணக்கா ‘டமில்'னு சொல்லிட்டிருந்தவங்களை ‘தமிழ்'னு சொல்லுங்கன்னு திருத்தினேன்//
ஏன்னா நீங்க தமிலன்.. சரியா?
:))))))))))
//நம்ம சோனியாஜியும், மன்மோகன்ஜியும் - மத்த நாட்டு உள்விவகாரத்துலே தலையிடக்கூடாது, இறையாண்மை மதிக்கப்படணும்னு சொல்லியிருப்பதாலே, நானும் சீன நாட்டு விவகாரம் எதுவும் பேசாமல் அமைதி காத்தேன்//
நாசுக்காக எதை சொல்லனும்னு கிறதை அந்த இடத்துல்ல சொன்னது அருமை நண்பரே... இந்த இரண்டு வரி போதும் ....
// ஏகன், வில்லு, குருவி, அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா.//
ஏன் இதோட நிப்பாட்டிடீங்க ?
திருப்பாச்சி, சிவகாசி, மதுர, ராஜா, ஆழ்வார், நரசிம்மா அப்டீன்னு அடுக்கிகிட்டே போகலாமே....!
அந்த சீனாகாரன் கதி அதோகதி தான்...!
எம்.எம்.அப்துல்லா said...
ஏகன், வில்லு, குருவி, அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா.
//
ஒரு ஆள ஒருவாட்டி கொன்னாப் போதும். இதுல ஏதாவது ஒரு டிவிடி குடுங்க...போதும்.//
ரிப்பீட்டு..
பாவங்க.. சின்ன பிரச்சினைக்கெல்லாம் இத்தாபெரிய தண்டனை குடுக்கக்கூடாது.. ஏதாவது கொலக்கேஸா ஆயிருமா இல்லியா?
ha ha china karan sethan ha ha
bakavathiyum kodunga, apprum unga kita vachikave mattan, mundincha vijayakanth clippings um apprum punch dialogue mattrum eppo vanthu irukira ramarajan stills ellam koduthu avana kali panunga ha ha
arumaiyana pathivu
nanum oru pathivu potu irukan pidicha vote a podunga
வாங்க மகேஷ்ஜி -> ஹாஹா.. ‘பாடம்' என்னதுக்கு? இனிமே தமிழ்/இந்தியா பத்தியே பேசக்கூடாதுன்னா???? :-))))
வாங்க ஆளவந்தான் -> ஒரு தடவை வில்லுல்லாம் பாத்துட்டு மறுபடி தைரியமா அவரு என்கிட்டே வந்தாக்கா, இன்னொரு லிஸ்ட் தரலாம்.... :-)))
வாங்க ஸ்ரீதர்கண்ணன் -> தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி நண்பரே....
வாங்க பழமைபேசி -> அவ்வ்வ். முடியல.... அந்த ‘செய்யுள்' அட்டகாசம்... பள்ளயத்தை எதிர்பார்க்கிறேன்...
வாங்க சகோதரி ரம்யா -> மெதுவா வாங்க... கமெண்ட்லாம் படிச்சி ரொம்ப நேரம் சிரிக்கணுமே...:-))
வாங்க முரளிகண்ணன், ராகி ஐயா -> மிக்க நன்றி...
வாங்க தமிழ் பிரியன் -> ஹாஹா.. தனுஷை எப்படி விட்டேன்???? எதை எடுப்பது, எதை விடுப்பதுன்னே தெரியல.... :-)))
வாங்க சீமாச்சு -> 'வில்லு' ஒரு ஆயுதம்தானே????? அதனால்தான் அதை கொடுத்தேன்... என்ன சரிதானே???? ::-))))))
வாங்க இளா -> அதுதானே நமக்கு வேணும்????
வாங்க பிரேம்ஜி -> நன்றி...
வாங்க அப்துல்லா அண்ணே, கார்க்கி, புதுகைத் தென்றல் அக்கா -> நன்றி...
வாங்க செந்தேள் -> உலகத்துலே யாருமே கண்டுக்க மாட்றாங்கன்ற கஷ்டம் நமக்கு மட்டும்தானே தெரியும்???...:-((((
வாங்க நவநீதன் -> கண்டிப்பா. அடுத்த சுற்றுலே இந்த படங்கள்லாம் கொடுத்திற வேண்டியதுதான்.... :-)))
வாங்க தாமிரா -> கொலவெறியோட நம்ம படங்கள விமர்சனம் செய்தவனுக்கு இதுதாங்க தண்டனை...:-)))
வாங்க சுரேஷ் -> நன்றி...
நன்றாக இருந்தது. எல்லா கமெண்டும் உங்களுக்கே:)
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மறுபடியும் போர் வேண்டாமே.....
//ஏகன், வில்லு, குருவி, அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா.//
இப்போ அந்த சீனாகாரரு எந்த ஆஸ்பத்திரியில இருக்காரு?
vidunga rajiniku japan rasigarpola, vijayku china rasigar kidaikattum
நேத்துதான் 2012-க்குள்ள ஒரு லட்சம் சீனர்கள் (சமமான எண்ணிக்கையில் இந்தியர்களும்) தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பிடுவாங்க-ன்னு ஒரு செய்தி படிச்சேன்.
காரணம் இப்பல்ல வெளங்குது.
போட்டு தாக்குங்க சொல்றேன்.
வாங்க சகோ வித்யா -> நன்றி...
வாங்க பாபு, வால் -> ஹாஹா...
வாங்க பாஷா -> அது சரி... இங்கே பயமுறுத்தறது பத்தாமே, அங்கே போயுமா????
வாங்க முத்துகுமார் -> ஓ. இதுதான் காரணமா இருக்குமா???? முடியல....:-))))
//
”எங்க தல பேசினதை மறக்க முடியுமா? எந்தெந்த இடத்திலே பாஸ் (pause) கொடுத்தாரு, எப்படி 'மேரேஜ்'னு சொன்னவுடனே சிரிச்சாரு, எல்லாமே மனப்பாடமா இருக்கு". (பின்னே இருக்காதா, படையப்பா நீலாம்பரி கணக்கா, அதே காட்சியை ஏகப்பட்ட தடவை யூட்யூபில் பார்த்து, ஒவ்வொரு தடவையும் உணர்ச்சி வசப்பட்டிருக்கேனே!!!).
//
அட இன்னமும் நீலாம்பரியை மறக்கலையே சகோதரா???
வீம்புக்குன்னே யோசிப்பீங்களா? ஒன்னும் விளங்க மாட்டேங்குதே!!!
சொக்கா நீ எங்கேப்பா இருக்கே???
தூள்
அது சரி. ஸாம் ஆண்டர்ஸன், ஜே.கே.ரித்தீஷ் படங்களை லிஸ்டில் சேக்கலையா?
//
அமெரிக்கர்கள் ஏற்கனவே 'ரா'வுக்குப் பதிலாக 'ழா'வைத்தான் பயன்படுத்துவாங்க. உதாரணத்திற்கு: 'ராரா சரசகு ராரா' பாட்டு பாடச்சொன்னா, அவர்கள் 'ழாழா சழசகு ழாழா'ன்னுதான் பாடுவாங்க
//
பாவம் அவங்களை விட்டுடுங்களேன்
உங்ககிட்டே மாட்டிகிட்டு ரொம்ப
கஷ்டப் படறாங்க போல இருக்கே??
பாட்டு எல்லாம் சொல்லிக் கொடுத்து
ம்ம்ம் என்னா செய்யலாம்??
//
அதுக்கப்புறம் ச்சின்னச்சின்ன ப்ராஜெக்டா இருந்தாலும், அது வெற்றிகரமா முடிஞ்சுதுன்னா, என்னைப் பார்த்து - “எல்லாப் புகழும் இறைவனுக்கே”ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.
//
அட, இங்கே தான் நீங்க நின்னுட்டீங்க
ரொம்ப டச்ச்சிங்கா பேச வச்சிட்டீங்களே
நீங்க ச்சின்னப்பையன் இல்லே!!
//
நம்ம சோனியாஜியும், மன்மோகன்ஜியும் - மத்த நாட்டு உள்விவகாரத்துலே தலையிடக்கூடாது, இறையாண்மை மதிக்கப்படணும்னு சொல்லியிருப்பதாலே, நானும் சீன நாட்டு விவகாரம் எதுவும் பேசாமல் அமைதி காத்தேன். அந்த மீட்டிங் முடிவில் - "நல்ல தமிழ் படங்கள் DVD இருந்தா குடு. நான் பாக்கணும்"னு சொன்னாரு.
//
ஏதாவது பழைய படமா கொடுங்க
இல்லேன்னா உங்க பேரு ரிப்பேருதான்.
//
ங்கொய்யாலே.. எங்க படங்களை/இசையை நல்லா ஓட்டின உன்னை பழிக்குப்பழி வாங்கறேன்னு நினைச்சி, கீழ்க்கண்ட படங்களை அவருக்கு சிபாரிசு செய்யலாம்னு இருக்கேன். "இந்த படம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா"ன்னு பாத்து சொல்லுங்க.
(ஏகன், வில்லு, குருவி, அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா)
//
இது கொஞ்சம் விஷமத்தனமான வில்லத்தனமா தெரியலை ??
பாவம் அந்த மேனேஜர்!!
அப்புறம் அவரு இப்போ எங்கே இருக்காரு சகோதரா!!
இல்லே ஒரு பரிதாபத்திலே சந்திச்சு
நல்ல படமா குடுக்கலாமேன்னு தான்....
அதுவும் தெலுங்கு படமா
கொடுக்கலாமான்னு யோசிக்கறேன்
யோசிச்சு நல்லதா ஒரு முடிவு எடுங்க.
ஏகன் பாத்துட்டு நானு நாலு நாளா தூங்கலை பாவம் அவரை விட்டுடுங்க.
:) தமிழ்த்தொண்டு வாழ்க..
போட்டு தள்ளவேண்டியவங்கள லிஸ்ட் பண்ணி வச்சிருப்பாங்க.
ஆனா போட்டு தள்ளவே நீங்க இவ்வளவு பெரீய்ய்ய்ய்யய லிஸ்ட் வச்சிருக்கீங்களே.
கலக்கல்.
///ஏகன், வில்லு, குருவி, அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா.///
எங்கள் தறுதலை ச்சே... வலைதளபதி ஜே.கே.ரித்தீஸ் நடித்த நாயகன் படத்தை இந்த லிஸ்ட்ல சேர்க்காததால் நான் இங்கே வெளி் நடப்பு செய்கிறேன்...
வாங்க சகோ ரம்யா -> பின்னே என்னங்க.. மீட்டிங்லே உக்காந்தா... இங்லிபீஸ் பாடகர்களைப் பத்தியே பேசறாங்க. நமக்கு அதபத்தி சுத்தமா ஒண்ணும் தெரியாது... அதனால் எல்லாருக்கும் தமிழ் பாட்டு சொல்லிக்கொடுக்கலாம்னு.... ஹிஹி....
வாங்க மு-க அக்கா -> மிக்க நன்றி...
வாங்க பட்டாம்பூச்சி -> நன்றி...
வாங்க அணிமா -> ம்ஹும். முடியல.... டாக்டர் படங்களுக்கெல்லாம் அவங்க அசரேலேன்னா... அடுத்து அவர் படம்தான்.... :-)))
அமெரிக்காவிலே தமிழ் வளர்க்கும் அண்ணன் ச்சின்ன பையன் வாழ்க
என்னங்க எல்லாமே பழய ஆயுதமா இருக்கு, புதுசா ஒன்னு போடுங்கபோதும்.
Post a Comment