Friday, July 18, 2008

நண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள்!!!

ஒரு நண்பனை கழற்றி விடணும்னு ஒருத்தர் நினைக்கிறார். அதுக்கு என்ன காரணம் சொல்லலாம்னு நினைச்சப்போ, சமீபத்திலே ஒரு கட்சி இன்னொரு கட்சியை கழற்றி விட்டதற்கு சொன்ன காரணத்தையே சொல்லிடலாம்னு முடிவு பண்றாரு.


அதாவது - எப்போவோ நடந்த ஒரு நிகழ்ச்சியை அல்லது பேச்சை காரணம் காட்டி - நண்பனை கழற்றி விட்டுடலாம்னு நினைக்கிறாரு.


கீழ்க்கண்ட காரணங்களை பாருங்க. இதைத்தவிர வேறே ஏதாவது ஒரு காரணம் உங்களுக்குத் தெரிஞ்சா அதையும் சொல்லுங்க...அவ்வ்வ்...


10 மாசத்துக்கு முன்னாடி - எங்கள் வீட்டுக்கு வந்தபோது இரண்டாவது கப் காபி கேட்டாய்.

9 மாசத்துக்கு முன்னாடி - நான் என் ஆளு கூட இருக்கும்போது, வேணும்னே 'பபிள்கம்'மிற்கும் 'ச்யூவிங்கம்'மிற்கும் 6 வித்தியாசங்கள் சொல்லுன்னு என்னை வெறுப்பேற்றினாய்.

8 மாசத்துக்கு முன்னாடி - தண்ணி அடிக்கலாம்னு வீட்டுக்கு வரச்சொல்லி சொன்னதாலே உங்க வீட்டுக்கு வந்த எனக்கு, குடத்தை கையில் கொடுத்து 'பம்ப்'பில் தண்ணி அடிச்சிக் கொடுக்கச் சொன்னே...

7 மாசத்துக்கு முன்னாடி - நான் அனுப்பின 'Forward mail' லை அதில் சொன்னமாதிரி நீ ஐந்து பேருக்கு அனுப்பவேயில்லை.

6 மாசத்துக்கு முன்னாடி - ஆங்கிலத்துலே லவ் லெட்டர் எழுதித்தாடான்னா, லீவ் லெட்டர் எழுதி தந்துட்டே.

5 மாசத்துக்கு முன்னாடி - ஞாயிறு வீட்டுக்கு வா, யாரும் இருக்கமாட்டாங்கன்னு சொல்லி நான் உங்க வீட்டுக்கு வந்தபோது, உங்க வீடு பூட்டியிருந்துச்சு. என்னை நல்லா ஏமாத்திட்டே.

4 மாசத்துக்கு முன்னாடி - நான் உங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது, கொடுத்த காபியில் சக்கரையே போடவில்லை.

3 மாசத்துக்கு முன்னாடி - என் ஆளு கூட இருக்கும்போது, கற்பூர பாக்கெட்டை என்கிட்டே வாசனை காட்டி, அது என்னன்னு கண்டுபிடிக்க முடியுதான்னு பாக்கச் சொன்னாய்.

2 மாசத்துக்கு முன்னாடி - 'பக்தி' பட சிடின்னு நீ கொடுத்த சிடி 'நிஜமாகவே' பக்தி பட சிடிதான்.

போன மாசம் - ரொம்ப நல்ல படம் என்று சொல்லி என்னை டாக்டர் விஜய் படத்துக்குக் கூட்டிப்போனாய்.

டிஸ்கி: மக்கள்ஸ்.. நீங்க இவ்ளோ நேரம் படிச்சதுகூட முக்கியமில்லை. இனிமே படிக்கப் போறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். 'லேபிளை' ஒரு தடவை படிச்சுடுங்க.... அவ்வ்வ்வ்...

42 comments:

கிஷோர் July 18, 2008 at 6:43 AM  

தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டீங்க‌

Syam July 18, 2008 at 6:47 AM  

நம்ம கட்சிக்கு உங்கள மாதிரி ஒருத்தர் இருக்கறது பெரிய பலம் :-)

rapp July 18, 2008 at 7:03 AM  

அதெப்படி அந்த பெருமைய நீங்க டாக்டர் விஜய்க்கு மட்டும் கொடுக்கலாம், எங்க தலயோட படம் ஓடற தியேட்டர் ஏரியா பக்கம் கூட்டி போனாலே நண்பருக்கு காண்டாவாதா?

ச்சின்னப் பையன் July 18, 2008 at 7:16 AM  

வாங்க கிஷோர் -> இல்லியே.. நான் இங்கேயேதாங்க இருக்கேன்...

வாங்க ஸ்யாம் -> அப்பாடா.. இப்போவாவது புரிஞ்சிக்கிட்டீங்களே...

வாங்க சீக்வல் -> அந்த வீடியோ பாத்தேங்க. சூப்பர்...

வாங்க விக்னேஸ்வரன் -> ரொம்ப நாளா ஆளே காணோம்?...

வாங்க தலைவி -> ஹாஹா.. ஆமா. 'அந்த ஏரியா உள்ளே போகாதே' அப்படின்னு ஏகப்பட்ட பேரு நின்னு கத்திக்கிட்டிருப்பாங்க - தலயோட படம் ரிலீஸ் ஆச்சுன்னா!!!

வீரசுந்தர் July 18, 2008 at 8:02 AM  

அஞ்சு மாசத்துக்கு முன்னாடி நடந்தது டாப்பு!

பிரேம்ஜி July 18, 2008 at 8:48 AM  

//6 மாசத்துக்கு முன்னாடி - ஆங்கிலத்துலே லவ் லெட்டர் எழுதித்தாடான்னா, லீவ் லெட்டர் எழுதி தந்துட்டே//

//5 மாசத்துக்கு முன்னாடி - ஞாயிறு வீட்டுக்கு வா, யாரும் இருக்கமாட்டாங்கன்னு சொல்லி நான் உங்க வீட்டுக்கு வந்தபோது, உங்க வீடு பூட்டியிருந்துச்சு. என்னை நல்லா ஏமாத்திட்டே.//

எப்படி தான் இப்படி எல்லாம் தோணுதோ உங்களுக்கு. சரியான காமெடி. :-))))))))

பரிசல்காரன் July 18, 2008 at 9:03 AM  


ப்

டீ
ங்
ப்

டி
?

புதுகை.எம்.எம்.அப்துல்லா July 18, 2008 at 9:03 AM  

மாசத்துக்கு முன்னாடி - 'பக்தி' பட சிடின்னு நீ கொடுத்த சிடி 'நிஜமாகவே' பக்தி பட சிடிதான்.
//

haa!haa!haa! tamil font is not working. i never like to give a comment in english.i will come later.

Boston Bala July 18, 2008 at 9:21 AM  

வீரசுந்தரை வழிமொழிகிறேன்

தமிழ்ப்பறவை July 18, 2008 at 10:18 AM  

உங்களைக் கழற்றி விடுறதுக்கு இவ்வளவு காரணமா உங்க நண்பர்களுக்கு தேவைப் பட்டுச்சு...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெட்டிப்பயல் July 18, 2008 at 10:30 AM  

டோட்டல் பதிவும் சூப்பர் :-)

//மாசத்துக்கு முன்னாடி - தண்ணி அடிக்கலாம்னு வீட்டுக்கு வரச்சொல்லி சொன்னதாலே உங்க வீட்டுக்கு வந்த எனக்கு, குடத்தை கையில் கொடுத்து 'பம்ப்'பில் தண்ணி அடிச்சிக் கொடுக்கச் சொன்னே..//

இதுக்கு அப்பறமும் நண்பரா இருந்துருக்காரே.. அவர் ரொம்ப நல்லவர் போல

ச்சின்னப் பையன் July 18, 2008 at 11:27 AM  

வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க வீரசுந்தர், பிரேம்ஜி, பரிசல், அப்துல்லா, பாலா...

வாங்க தமிழ்ப்பறவை -> ஆஆஆ.. நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.....

ஆமாங்க வெட்டி -> அவர் ரொம்ம்ம்ம்ப நல்லவர்தாங்க...

களப்பிரர் July 18, 2008 at 12:10 PM  

//5 மாசத்துக்கு முன்னாடி - ஞாயிறு வீட்டுக்கு வா, யாரும் இருக்கமாட்டாங்கன்னு சொல்லி நான் உங்க வீட்டுக்கு வந்தபோது, உங்க வீடு பூட்டியிருந்துச்சு. என்னை நல்லா ஏமாத்திட்டே.//

தூள் கிளப்புற ராசா

மங்களூர் சிவா July 18, 2008 at 12:35 PM  

/
2 மாசத்துக்கு முன்னாடி - 'பக்தி' பட சிடின்னு நீ கொடுத்த சிடி 'நிஜமாகவே' பக்தி பட சிடிதான்.
/

இவன்லாம் ஒரு ப்ரெண்டா????
மொதல்ல கழட்டி விடுங்கய்யா

:)))

புதுகை.எம்.எம்.அப்துல்லா July 18, 2008 at 2:02 PM  

உங்களைக் கழற்றி விடுறதுக்கு இவ்வளவு காரணமா உங்க நண்பர்களுக்கு தேவைப் பட்டுச்சு...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அடப்பாவமே!இதத்தானய்யா நான் சொல்ல நினைச்சேன்.அதுக்குள்ள முந்திக்கிட்டீங்களே!!!!

ச்சின்னப் பையன் July 18, 2008 at 2:11 PM  

களப்பிரர், சிவா, அப்துல்லா -> வாங்க... நல்லாயிருந்துச்சா... ரொம்ப நன்றிங்க...

மதுவதனன் மௌ. July 18, 2008 at 2:37 PM  

"என்னைக் கழற்றிவிட 10 மொக்கைக் காரணங்கள் சொன்னதால இந்த ஒரு காரணத்தை வச்சே நான் உன்னைக் கழற்றிவிட்டுட்டேன்..."

நண்பன்-

சென்ஷி July 18, 2008 at 2:50 PM  

நெனைச்சே பார்க்க முடியல.. இவ்வளவு கொடுமக்கார நண்பன இன்னும் நீங்க நண்பன்னு சொல்லிக்கிட்டு இருக்கறதால்தான நாட்ல மழையே பெய்யுது :))

Anonymous,  July 18, 2008 at 2:51 PM  

Unga office la oru vela kedakuma anna

சென்ஷி July 18, 2008 at 2:55 PM  

//தமிழ்ப்பறவை said...
உங்களைக் கழற்றி விடுறதுக்கு இவ்வளவு காரணமா உங்க நண்பர்களுக்கு தேவைப் பட்டுச்சு...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

தாங்க முடியலைய்யா இந்த பின்னூட்டத்த பார்த்தப்புறம்ம்... எனக்கு தோணுறது ஒண்ணே ஒண்ணுதான்.. அவனா நீயி... :))

சூப்பர் கமெண்ட் :))

சென்ஷி July 18, 2008 at 2:56 PM  

//Syam said...
நம்ம கட்சிக்கு உங்கள மாதிரி ஒருத்தர் இருக்கறது பெரிய பலம் :-)
//

டபுள் ரிப்பீட்டே :))

சென்ஷி July 18, 2008 at 2:58 PM  

//5 மாசத்துக்கு முன்னாடி - ஞாயிறு வீட்டுக்கு வா, யாரும் இருக்கமாட்டாங்கன்னு சொல்லி நான் உங்க வீட்டுக்கு வந்தபோது, உங்க வீடு பூட்டியிருந்துச்சு. என்னை நல்லா ஏமாத்திட்டே.//

என்னடா சொன்னே...

உண்மைய சொன்னேன் - ங்கற ரேஞ்சுல இருக்குது.. கலக்கலான பதிவு.. ரொம்ப ரசிச்சேன்.. :))

ச்சின்னப் பையன் July 18, 2008 at 3:17 PM  

நண்பா மதுசூதனா -> அப்படி சொல்லாதேப்பா... :-)))

வாங்க சென்ஷி -> ஏதோ என்னாலே எல்லாருக்கும் நல்லது ஆனா சரிதாங்க...:-)))

வாங்க அனானி -> அவ்வ்வ்வ்...

மதுவதனன் மௌ. July 18, 2008 at 4:06 PM  

11ஆவது காரணம் : மதுவதனன் என்கிற என்னோட அழகான பெயரை மதுசூதனா என முன்னாடி உள்ள பின்னூட்டத்தில் விளித்திருந்தாய்.

:-)))

பின்னூட்டத்தில கொட்டை எழுத்தில என்னோட பெயரைப் போட ஏதாவது வழியிருக்கா, இது சின்னப்பையனோட இரண்டாவது தரமும் மொத்தமாக நான்காவது தரமும் என்னை மதுசூதனன் என விளிப்பது. மதுவதனன் எப்படி மதுசூதனன் ஆகிறது என ஒவ்வொருமுறையும் வியந்து போகிறேன்.

மதுவதனன் மௌ.

Ramya Ramani July 18, 2008 at 4:08 PM  

கலக்கல் :))

மதுவதனன் மௌ. July 18, 2008 at 4:10 PM  

11ஆவது காரணம் : மதுவதனன் என்கிற என்னோட அழகான பெயரை மதுசூதனா என முன்னாடி உள்ள பின்னூட்டத்தில் விளித்திருந்தாய்.

:-)))

பின்னூட்டத்தில கொட்டை எழுத்தில என்னோட பெயரைப் போட ஏதாவது வழியிருக்கா, இது சின்னப்பையனோட இரண்டாவது தரமும் மொத்தமாக நான்காவது தரமும் என்னை மதுசூதனன் என விளிப்பது. மதுவதனன் எப்படி மதுசூதனன் ஆகிறது என ஒவ்வொருமுறையும் வியந்து போகிறேன்.

மதுவதனன் மௌ.

ச்சின்னப் பையன் July 18, 2008 at 4:18 PM  

ஓஓஓஓஓ. என்னை மன்னிச்சிடுங்க... என்னோட ரெண்டாவது தரமா இப்படி தப்பு செய்வது???... இனிமே சரியா சொல்றேன் மதுவதனன்... :-(((

நன்றி ரம்யா ரமணி....

மதுவதனன் மௌ. July 18, 2008 at 4:28 PM  

இதுக்கெல்லாமா மன்னிப்பு. பதிவு மொக்கையானதால என்னோட பின்னூட்டமும் மொ்க்கைப் பாணியிலேயே இருந்திச்சு.

சொன்ன மேட்டர் உண்மைதான் என்றாலும் சொன்ன விதம் சீரியஸ் இல்லீங்க.

காரணமில்லாம மூணு வேறு வேறானவங்க ஒரே மாதிரி கூப்பிட்டிருக்கானுகன்னா அதுக்கு ஏதோவொரு நியாயம் இருக்கணும். அத கண்டுபிடிக்கணும். :-)))

மதுவதனன் மௌ.

கயல்விழி July 18, 2008 at 4:45 PM  

அப்படியே தோழிகளை கழட்டி விடக்காரணங்களும் சொல்லுங்க ச்சின்னப்பையன். ஜெண்டர் ந்யூட்ரலா இருக்க வேண்டாமா? :) :)

வழிப்போக்கன் July 18, 2008 at 6:26 PM  

அடுத்த பதிவு புது நண்பர்கள் சேர்த்து கொள்ள 10 காரணம்.

(நான் அமர் சிங் பத்தி சொல்லவில்லை)நம்ம எப்பவுமே பாசிட்டிவா யோசிக்கணும்..சரியா ??


(சாரி பார் லேட் பின்னூட்டம்..கொஞ்சம் பிசி)

விஜய் July 18, 2008 at 6:40 PM  

நண்பனை கழ்ற்றி விட இத்தணை வழிகளா!

தி.விஜய்
pugaippezhai.blogspot.com

வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்

ச்சின்னப் பையன் July 18, 2008 at 9:32 PM  

வாங்க கயல்விழி -> அப்படின்றீங்களா.. சரி யோசிப்போம். நன்றி...

வாங்க வழிப்போக்கன் -> ஹாஹா... சரி சரி.. இதையும் ஒரு ஐடியாவா வெச்சிக்கறேன்... நன்றி..

வாங்க விஜய் -> இது சும்மா மொக்கைதாங்க. சீரியஸா எடுத்துக்காதீங்க...

நல்லதந்தி July 18, 2008 at 10:35 PM  

//5 மாசத்துக்கு முன்னாடி - ஞாயிறு வீட்டுக்கு வா, யாரும் இருக்கமாட்டாங்கன்னு சொல்லி நான் உங்க வீட்டுக்கு வந்தபோது, உங்க வீடு பூட்டியிருந்துச்சு. என்னை நல்லா ஏமாத்திட்டே.//

இது நிச்சயமா அனுவம்தான்! :)

Anonymous,  July 19, 2008 at 3:45 AM  

இதில எத்தனை உங்க சொந்த அனுபவம் அப்படீங்கறதையும் போட்டிருக்கலாம்

ச்சின்னப் பையன் July 19, 2008 at 6:02 AM  

வாங்க நல்லதந்தி, சின்ன அம்மிணி -> அவ்வ்வ்வ்வ்வ். ஆக மொத்தம் யாரும் இது கற்பனைதான்னு நம்பறதாயில்லை... (என்னதான் வேஷம் போட்டாலும், எப்படியாச்சும் கண்டுபிடிச்சிடறாங்கய்யா!!!!)

ஜிம்ஷா July 19, 2008 at 6:34 AM  

///5 மாசத்துக்கு முன்னாடி - ஞாயிறு வீட்டுக்கு வா, யாரும் இருக்கமாட்டாங்கன்னு சொல்லி நான் உங்க வீட்டுக்கு வந்தபோது, உங்க வீடு பூட்டியிருந்துச்சு. என்னை நல்லா ஏமாத்திட்டே///


ச்சின்னப்பையா! உன்னை மாதிரி முட்டாள நான் பார்த்ததே இல்லை.

வெண்பூ July 20, 2008 at 12:38 PM  

ஹா..ஹா..ஹா...உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.

இர.கருணாகரன் September 18, 2010 at 5:56 AM  

ரூம் போட்டு யோசிப்பீங்களோ

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP