கேள்வி - பதில் : Part 4
கே: வேகக் கட்டுப்பாட்டை விட குறைவாக போய் 'மாமா'விடம் மாட்டிக் கொண்டதுண்டா?
ப: சென்ற வருடம் ' நயாகரா' போய் திரும்பி வந்துகொண்டிருந்தோம். மொத்தம் 7 பேர் இருந்த வண்டியை நான் ஓட்டிக்கொண்டிருந்தேன். நள்ளிரவு 11.45 மணி.
திடீரென்று பின்னாடி 'மாமா' வந்து விளக்கு போட்டுவிட்டார். சரியென்று ஓரம்கட்டினால், அவர் பக்கத்தில் வந்து ' நான் உங்களை எதுக்காக நிறுத்தினேன் தெரியுமா?' என்றார். நான் தெரியாது என்றதும், நீங்கள் மிகவும் வேகமாக செல்கிறீர்கள். நான் உங்களை 83 மைல் வேகத்தில் நிறுத்தியிருக்கிறேன் என்றார்.
சரியென்று கூறிவிட்டு, அவர் கொடுத்த டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, நண்பரிடம் 'வேகக் கட்டுப்பாட்டைவிட கம்மியாகத்தானே போனேன். எதற்கு இவர் இப்படி கூறுகிறார்?' என்றேன். 'என்னது?' என்ற நண்பர் கேட்க 'பின்னே என்ன? 87 வரைக்கும் போகலாமே - 83 தானே போயிருக்கிறேன்' என்றேன்.
நண்பரோ 'அடப்பாவி.. I- 87ங்கறது நெடுஞ்சாலை எண். வேகக் கட்டுப்பாடு அல்ல. இங்கே அதிகபட்ச வேகம் 65தான். நீ இப்படியே I- 95லே போயிருந்தேன்னா, தூக்கி உள்ளே வெச்சிருப்பான்' என்றார்.
'சரி, அதுதான் பணத்தை கட்டுன்னு விட்டுட்டான்லே. நீ வேறே எதுக்கு பயமுறுத்துறே?' என்றபடியே வீடு வந்து சேர்ந்தோம்.
-----
கே: தங்கமணியை, தங்கமணி ஆனப்பிறகு சைட் அடித்ததுண்டா?
ஒரு தடவை சென்னை காமராஜர் அரங்கத்தில் எங்கள் பழைய அலுவலகம் சார்பாக ஒரு விழா நடந்தது. நான் மேடையில் (சில அமைச்சர்கள் முன்னிலையில்) பேசவிருந்ததால், வீட்டிலிருந்து தங்கமணியும் வந்திருந்தார்.
நான் 'வரவேற்புரை' வழங்கிவிட்டு, எங்கள் அலுவலக நண்பர்கள் அமர்ந்திருந்த பகுதியில் சென்று அமர்ந்தேன். ஒரு இரண்டு/மூன்று வரிசைகள் தள்ளி 'தங்கமணியும்' அமர்ந்திருந்தார்.
என் பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பரொருவர், அடிக்கடி திரும்பி ' நிறம்' பார்த்துக் கொண்டிருந்தார். என்னிடம், 'அண்ணே. மேடையிலே சூப்பரா பேசினீங்கண்ணே. கலக்கிட்டீங்க. டக்குன்னு திரும்பிடாதீங்க. அங்கேயிருந்து ஒரு பொண்ணு உங்களையே பாத்துக்கிட்டிருக்கு' என்றார்.
'தங்கமணி'யைத்தான் சொல்கிறார் என்று தெரிந்தாலும், சும்மா இருந்துவிட்டு, நிகழ்ச்சி முடிந்ததும், 'தம்பி வா, அந்த பொண்ணுகிட்டே பேசலாம்' என்று அவரை தங்கமணியிடம் அழைத்துப் போனேன்.
'பயங்கர தைரியம்ணே உங்களுக்கு' என்றவரிடம் தங்கமணியை அறிமுகப்படுத்தினேன் - 'தம்பி, இது உங்க அண்ணி!!!'
அதன்பிறகு அவரும் நானும் வெவ்வேறு வேலை/ஊர்/ நாடு மாறிவிட்டாலும், இன்றுவரை 'யாஹூ'வில் பேசினால், அவர் அடிக்கும் முதல் வாக்கியம் 'அண்ணே, என்னை மன்னிச்சிடுங்கண்ணே!!!' தான்.
----------
கே: ஆத்திரத்தோட 'அதையும்' சேர்த்து அடக்கி வெச்ச சம்பவம் ஏதாவது?...
ப: சென்னையில் ஒரு ஹோட்டலில் நண்பனுக்கு ரிசப்ஷன். நான் சிறிது நேரம் கழித்துத்தான் போனேன். போன சமயம், நண்பனைச் சுற்றி கூட்டம் இருந்ததால், ஓய்வறைக்குப் போய் வரலாமென்று போனேன். 'உள்ளே' போய்விட்டு வெளியே வர ஒரு பத்து நிமிடம் ஆகிவிட்டது.
கதவைத் திறந்து வெளியே வந்தால், நண்பன் அங்கே நிற்கிறான்.
நண்பன்: 'என்னடா, இவ்ளோ லேட்டா வர்றே'?
நான்: 'இப்போத்தாண்டா வந்துச்சு...'.நண்பன்: "அடச்சீ, நான் அதைக் கேக்கலேடா, ஃபங்ஷனுக்கு ஏன் லேட்"?
நான்: "இல்லையே. நான் அப்பவே வந்துட்டேனே!!!"
நண்பன்: " நான் உன்னை பாக்கவேயில்லையே?"
நான்: " நாந்தான் இவ்ளோ நேரமா உள்ளே இருந்தேனே..."
நண்பன்: "ஏண்டா, நீ ரிசப்ஷனுக்கு வந்தியா, இல்லே 'இதுக்கு' வந்தியா. இப்போவாவது எல்லாரும் பாக்கறாமாதிரி வெளியே உக்காரு. நான் இப்போ வந்துடறேன்..."
நான்: "ஹிஹி".
அதுக்கப்புறம் நான் ஏன் 'அந்த'ப்பக்கம் போறேன். போய் மறுபடி அவன்கிட்டே திட்டு வாங்கவா???
39 comments:
aiyo...
Naan than Firstaaaaaaaa??????
ஐயோ நான் தான் செகன்டா?? செகண்டுமா???
முதல் முனு போனியும் நான் தானா??
ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?
(((நண்பன்: 'என்னடா, இவ்ளோ லேட்டா வர்றே'?
நான்: 'இப்போத்தாண்டா வந்துச்சு...'.
நண்பன்: "அடச்சீ, நான் அதைக் கேக்கலேடா, ஃபங்ஷனுக்கு ஏன் லேட்"?)))
கலக்கல் .. வயிற சொல்லல ... பதிவ சொன்னேன்
//நண்பரோ 'அடப்பாவி.. I- 87ங்கறது நெடுஞ்சாலை எண். வேகக் கட்டுப்பாடு அல்ல. இங்கே அதிகபட்ச வேகம் 65தான். நீ இப்படியே I- 95லே போயிருந்தேன்னா, தூக்கி உள்ளே வெச்சிருப்பான்' என்றார்.//
இந்தாங்க அம்பது ரூபா, இத லஞ்சம்னு அவருகிட்ட கொடுத்துருங்க
வால்பையன்
//இன்றுவரை 'யாஹூ'வில் பேசினால், அவர் அடிக்கும் முதல் வாக்கியம் 'அண்ணே, என்னை மன்னிச்சிடுங்கண்ணே!!!' தான்.//]
இன்னுமா அவர நீங்க மன்னிக்கல
வால்பையன்
///Anonymous said...
(((நண்பன்: 'என்னடா, இவ்ளோ லேட்டா வர்றே'?
நான்: 'இப்போத்தாண்டா வந்துச்சு...'.
நண்பன்: "அடச்சீ, நான் அதைக் கேக்கலேடா, ஃபங்ஷனுக்கு ஏன் லேட்"?)))
கலக்கல் .. வயிற சொல்லல ... பதிவ சொன்னேன்///
மறுக்கா கூவூவூவூவூவூ
வால்பையன்
:-))))....
வாங்க அனானி -> பதிவு தமிழ்மணத்திலே வர்றதுக்குள்ளே பூந்து விளையாடியிருக்கீங்க... நன்றி..
வாங்க வால் -> என்கூட பேசணும்னாலே அவருக்கு முதல்லே நினைவுக்கு வர்றது அந்த நிகழ்ச்சிதாங்க... அதனால்தான்... :-)))
எங்க ஊர்''கனவுக் கன்னி"க்கு பிறந்த நாள் வாழ்த்த வாங்க!!
ச்சும்மா கலக்கல்
// நீ இப்படியே I- 95லே போயிருந்தேன்னா, தூக்கி உள்ளே வெச்சிருப்பான்' என்றார்.//
//நண்பன்: 'என்னடா, இவ்ளோ லேட்டா வர்றே'?
நான்: 'இப்போத்தாண்டா வந்துச்சு...'.
//
:-)))))))))))))))))))))
ஹா ஹா ஹா ஹா ஹா ,,.. ஆஹ்.
இந்த பாகம் கேள்வி பதில் ரொம்ப கலக்கலா இருக்கு.
//நண்பரோ 'அடப்பாவி.. I- 87ங்கறது நெடுஞ்சாலை எண். வேகக் கட்டுப்பாடு அல்ல. இங்கே அதிகபட்ச வேகம் 65தான். நீ இப்படியே I- 95லே போயிருந்தேன்னா, தூக்கி உள்ளே வெச்சிருப்பான்' என்றார்//
ஆஹா, நீங்க என்னை மாதிரி வெவரமான ஆளா? பாருங்க நாம குழம்பிப்போரா மாதிரியே வேணும்னு ஒவ்வொரு நாட்லயும் இப்படி செய்யறாங்க.
வழக்கம் போல அருமை ச்சின்னப் பையன்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............................................
உங்க நண்பர் பாவங்க. உங்களுக்குள்ள இப்படி ஒரு சைலன்ட் வில்லன் கும்மி அடிக்கரானா?????????????????
கலக்கல்.... லஞ்சம் ஏதும் கொடுக்க முடியாதாங்க...
நல்ல அனுபவமாகத்தான் இருக்கு. :-)
ஹா ஹா ஹா அப்ப நீங்க ச்சின்ன பய்யன் இல்ல பெரிய்ய்ய்ய்ய்ய பய்யன்
புதுகை சாரல் -> ரெண்டு இடத்திலேயும் அண்ணாச்சிக்கு வாழ்த்து சொல்லியாச்சுங்க...
வாங்க வேலன், பிரேம்ஜி, வெட்டி, வடுவூர் குமார் -> எல்லாருக்கும் நன்றிங்க..
வாங்க ராப் -> நான் ரொம்ப ' நல்லவன்'னு முன்னாடியே அவனுக்கு தெரிஞ்சிருக்கு பாருங்க...
வாங்க விக்னேஸ்வரன் -> கையூட்டு கொடுக்க இன்னும் முயற்சி செய்யலேங்க....:-)))
வாங்க கிரி -> சிரிங்க சிரிங்க நல்லாஆஆஆஆ சிரிங்க.... அவ்வ்வ்வ்....
:-)
அருமையா இருந்தது நண்பரே!
பார்ட்-4ஆ? பாக்கியை தேடி தேடி அலைஞ்சேன். சுட்டி குடுத்திருக்கலாமே?
முதல் நாலு கமெண்டும் சூப்பர்!
எப்படி இப்படியெல்லாம்?
என்னமோ போங்க.. நம்பீட்டோம்!
நல்ல வேளை... "நியூயார்க் 120"ன்ற போர்டை பார்த்துட்டு நியூயார்க் வரைக்கும் 120 மைல் வேகத்துல போலாம் போலன்னு நினைக்காம இருந்தீங்களே...
//அதுக்கப்புறம் நான் ஏன் 'அந்த'ப்பக்கம் போறேன்//
அதுதானே!! ஏற்கனவே 10 நிமிசம் போயிட்டு வந்தப்புறம் எதுக்கு மறுபடியும் போகப் போறீங்க.. :)))
கலக்கல்.. வயிற சொல்லல..
பதிவ சொன்னேன்..
வாங்க அனானி -> நன்றி..
வாங்க பரிசல் -> அவ்வ்வ்வ். என்ன இப்படி சொல்லிட்டீங்க... அது நானில்லை...
( நன்றி திரு.கேப்டன்). நான் மொத்தம் போட்டிருக்கிற பதிவுகள் 127. அதிலே ஒரு பின் கூட வராத பதிவுகள் 5. ஒரே ஒரு பின் வந்த பதிவுகளும் 5. 5 பின்களுக்கு கம்மியா வந்த பதிவுகள் கிட்டத்தட்ட 20. இப்போத்தான் சராசரியா 25 வருதே. அப்படியிருக்கும்போது, நானே போட்டுக்குவேனா...
இருந்தாலும், உங்க நல்ல மனதைப் பாராட்டி, பழைய கே-ப க்களின் உரல்கள்:
Part 3: http://boochandi.blogspot.com/2008/07/part-3.html
part 2: http://boochandi.blogspot.com/2008/06/blog-post_25.html
Part 1: http://boochandi.blogspot.com/2008/05/blog-post_30.html
தல பின்னீட்டீங்க..
சின்ன சின்ன நிகழ்வுகளை வெச்சு ரசிக்கும்படியா எழுதறதுக்கு உங்களை விட்டா ஆளு கிடையாது.
//நான் மொத்தம் போட்டிருக்கிற பதிவுகள் 127. அதிலே ஒரு பின் கூட வராத பதிவுகள் 5. ஒரே ஒரு பின் வந்த பதிவுகளும் 5. 5 பின்களுக்கு கம்மியா வந்த பதிவுகள் கிட்டத்தட்ட 20. இப்போத்தான் சராசரியா 25 வருதே. அப்படியிருக்கும்போது, நானே போட்டுக்குவேனா...
//
அதானே..பரிசல்!!
யாருகிட்ட என்ன கேட்கறீங்க..
என்க்கு கூடத்தான் சந்தேகமா "இருந்தது" நானெல்லாம் கேட்டுகிட்டா இருக்கேன்..ம்ம்ம்.
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் இன்னிக்கு காலைலதான் கேள்வி-பதில் என்னாச்சுனு கேட்கணும்னு நெனச்சேன். அதுக்குள்ள நீங்களே போட்டுட்டீங்க..
நான் கேள்வி கேட்கட்டுமா ?
1) நீங்க பதிவு எழுதறத நிறுத்த சொன்ன டைம்பாஸ்க்கு என்ன செய்வீங்க ?
2) ரொம்ப சீரியசா மட்டுமே எழுத சொன்னா என்ன பதிவு போடுவீங்க ?
இன்னும் பல கேள்வி இருக்கு...தொடரும்.
வாங்க வெண்பூ -> ஆமா. ஆமா. நாந்தான் சொல்லிட்டேனே....:-)))
வாங்க சரவண குமார் -> நன்றிங்க...
வாங்க வ்ழிப்போக்கன் -> போட்டுத் தாக்கறீங்க.... என்னோட பதில்கள்:
1. எனக்கு வெக்கவெக்கமா வருது...
2. அவ்வ்வ்வ். இந்த களங்கத்தைப் போக்க, நாளையிலேர்ந்து நான் சோப் போட்டு குளிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
3. தொடர்ச்சியா அதையே எழுதினா, வர்றவங்களும் வரமாட்டாங்கல்ல. அதனால, கே-ப, மென்பொருள் நிபுணரானால் - இந்த மாதிரியானதெல்லாம், 15 நாளுக்கொரு தடவை போடலாம்னு....
4. அவ்வ்வ்வ். இந்த மாதிரியெல்லாம் கேட்டா என்ன சொல்றது... யோசிக்கறேன்....
போன வருடம் ஸ்டாப் சைனில் நிறுத்தாமல் போனதுக்கு போலீஸ் அங்கிள் எனக்கும் ஒரு டிக்கெட் கொடுத்தார்.:(
//2. அவ்வ்வ்வ். இந்த களங்கத்தைப் போக்க, நாளையிலேர்ந்து நான் சோப் போட்டு குளிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
//
சரி..சாரி...கோபப்படாதீங்க.
அதுக்காகஇவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா ??
\\நண்பரோ 'அடப்பாவி.. I- 87ங்கறது நெடுஞ்சாலை எண். வேகக் கட்டுப்பாடு அல்ல. இங்கே அதிகபட்ச வேகம் 65தான். நீ இப்படியே I- 95லே போயிருந்தேன்னா, தூக்கி உள்ளே வெச்சிருப்பான்' என்றார்.\\
ஜூப்பரு..
வாங்க கயல்விழி -> ம். இந்த அங்கிள்களே ரொம்ப மோசம்....:-))
வாங்க வழிப்போக்கன் -> நானெல்லாம் ரிஸ்கையே போர்வையா போர்த்திக்கறவன்...:-))
வாங்க ரம்யா ரமணி -> நன்றி...
1.வேகம் விவேகமல்ல.
அதிக வேகம் அபராதத்தை கொடுக்கும்
2.இடமறிந்து பேசுதல் நலம்
இல்லையென்றால்
மன்னிப்பே காலை வணக்கமாகும்
3.ஆத்திரத்தை அடக்கினாலும்..
அசடு வழிய வேண்டியிருக்கும்
மூணும் அருமை.
புகைப்படப் பேழைக்கு, தங்களின் வருகைக்கு நன்றி,
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
அண்ணேஏஏஏஏ வந்துட்டேன்...கொஞ்சம் லேட்டா
வால்பையன் said...
இன்னுமா அவர நீங்க மன்னிக்கல //
ஹீம்..மன்னிப்பு தமிழ்ல எங்க சங்கத்துக்கு பிடிக்காத ஓரே வார்த்தை.
சூப்பர்... :-))
//நீ இப்படியே I- 95லே போயிருந்தேன்னா, தூக்கி உள்ளே வெச்சிருப்பான்' என்றார்//
இது டாப்பு ...
வாங்க கோவை விஜய், ஸ்யாம் -> நன்றி...
வாங்க அப்துல்லா -> ஹாஹா.. (ச்சே. எனக்கு இது தோணாமெ போயிடுச்சே!!!)..
Post a Comment