தசாவதாரம் Vs மெட்டி ஒலி By கஜினி
கஜினி கணக்காக தொடர்ந்து மூன்று வாரமாக முயன்று போன ஞாயிறன்று வெற்றிகரமாக தசாவதாரம் பார்த்தாயிற்று. அதைப் பார்த்துவிட்டு வண்டியில் வரும்போது (40 மைல்கள்) நானும் தங்கமணியும் பேசிக்கொண்டதுதான் இது....
தங்கமணி: அப்பாடா, 'மெட்டி ஒலி' மாதிரி இழுத்தடிக்காமே, 3 மணி நேரத்திலே முடிச்சிட்டாங்க..
நான்: என்னது? மெட்டி ஒலி மாதிரியா? தசாவதாரம் எங்கே, மெட்டி ஒலி எங்கே?
என்ன என்னது?. அதிலேயும் முதல்லேயே 5 சகோதரிகள்னு தீர்மானிச்சிட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு குடும்பம், பிரச்சினை. ஒரு அப்பா இருந்துக்கிட்டு எல்லாரையும் இணைச்சிக்கிட்டே கதையை நகர்த்திண்டு போறார்.அதே மாதிரி இங்கேயும் 10 வேடங்கள்னு தீர்மானிச்சிட்டாங்க. ஒரு 'கிருமி' எல்லாரையும் இணைச்சிண்டே கதையை நகர்த்திண்டு போறது.
அதனாலே? அதுவும் இதுவும் ஒண்ணாயிடுமா? இந்த படத்திலே 'க்ராஃபிக்ஸ்' இருந்துதே? மெட்டி ஒலியில் அது இல்லையே?
அப்பாடா. ஒரு வித்தியாசத்தை கண்டுபிடிச்சிட்டீங்க. இன்னும் கேளுங்க.
சொல்லு சொல்லு.
மெட்டி ஒலி கடைசி நாள் ஞாபகம் இருக்கா? உங்களுக்கு எப்படி மறக்கும்? அலுவலகம் போனா தொடர் மிஸ்ஸாயிடும்னு லீவ் போட்டுண்டு வீட்லே இருந்தீங்களே?
அது எதுக்கு இப்போ? மேட்டரை சொல்லு.
மெட்டி ஒலி கடைசி பாகம் - அரை மணி நேரமும் ஒரே ஷாட். நடுவே விளம்பர இடைவேளை கூட விடலை. கல்யாண மண்டபம், கீழே, மேலே அப்படின்னு காமிரா சுத்தி சுத்தி காட்டிண்டே இருந்தது. க்ராஃபிக்ஸே இல்லாமே அவங்க அப்படி எடுக்கலையா, என்ன?
அப்போ வேறே எந்த வித்தியாசமுமே இல்லைன்னு சொல்ல வரியா?
அப்படி கேளுங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய வித்தியாசம். பாட்டு. 'அம்மி அம்மி அம்மி மிதிச்சி...' அப்படின்னு அப்போல்லாம் நீங்க கூட நாள் முழுக்க பாடிண்டிருப்பீங்களே. எவ்ளோ நல்லா புரிஞ்சுது. இந்த படத்திலேயும் ஒரு பாட்டு வருதே. மல்லிகா பாடுற பாட்டு. கொஞ்ச நேரத்துக்கு அது தமிழ் பாட்டுதானானு சந்தேகம் வருதா இல்லையா?
அது சரி. ஆனா, மத்த பாட்டுக்களெல்லாம் நல்லா இருந்ததில்லையா? முகுந்தா, முகுந்தா பாட்டு அருமையா இருந்ததே?
ஆமா. கல்லை மட்டும், முகுந்தா ரெண்டு பாட்டுக்காக ஓகே சொல்லலாம்.
அவ்ளோதானா, கமல் மற்றும் அந்த முதல் பத்து நிமிட கதை இதெல்லாம் நல்லாயில்லையா என்ன?
கண்டிப்பா. எல்லா கமலோட நடிப்பு மற்றும் ரெண்டு பாட்டு சூப்பர் - சின்னச்சின்ன விஷயங்களைக்கூட ரொம்பவே கவனமாக யோசிச்சி பண்ணியிருக்காங்க. அதுக்காகவும் பாராட்டலாம். ஆனா...
ஆனா என்ன?
ஆனா படம் பாத்துட்டு ஒரு பத்து நிமிடத்துக்கு யாரை பாத்தாலும் கமல் மாதிரியே தெரியுது. இப்போ உங்களைப் பாத்தால்கூட கமல் மாதிரிதான் இருக்குது.
அப்படியா?
ஆமா. அந்த வில்லன் கமல் மாதிரியே இருக்கீங்க...
சரி சரி. கடைசியா என்ன சொல்லவர்றே? படம் நல்லாயில்லையா?
நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்........... தெளிவா குழப்பறாய்யா... முகுந்தா... முகுந்தா.......
28 comments:
//நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...//
இது சூப்பர் :-))))
//நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...//
இது உங்க தங்கமணி சொன்னதா இல்ல நீங்க சொன்னதா? எங்கே உண்மையை சொன்னா எல்லாரும் கும்மிடுவாங்கன்னு சேஃபா ப்ளே பண்றீங்களா?
(மனதுக்குள்) அப்பாடா, சந்தோசமா வலையில சுத்திட்டு இருந்த ஒரு மனுசனை கொலவெறியோட சுத்திட்டு இருக்குற ஒரு கும்பலுக்குள்ள தள்ளி விட்டாச்சு..ஹையா ஜாலி....
//நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...//
இங்கே தான் உங்களோட டச் தெரியுது
வால்பையன்
//அப்பாடா, சந்தோசமா வலையில சுத்திட்டு இருந்த ஒரு மனுசனை கொலவெறியோட சுத்திட்டு இருக்குற ஒரு கும்பலுக்குள்ள தள்ளி விட்டாச்சு..ஹையா ஜாலி....//
ஓ..இவர் தானா அவரு
ஆஹா சூப்பருங்க. இது ஒரு வித்தியாசமான கோணமா இருக்கே! மர்மயோகிய சித்தி, கோலங்கள்னு எதோடவாவது கம்பேர் பண்ணிடவேண்டியதுதான். அடுத்த வருஷம் தசாவதாரத்த யாராவது ஆராய்ச்சிப் பாடமா எடுத்துறப் போறாங்க. உங்கள பாராட்டி என் பாணியில ஏதாவது ஒரு கவிதை போடணும்னு கை துறு துறுக்குதுங்க.
வாங்க பிரேம்ஜி, வால்பையன் -> நன்றி..
வாங்க வெண்பூ -> உங்ககிட்டே எனக்கு பிடிச்சது இப்படி வெளிப்படையா பேசறதுதான்...
வாங்க மருதநாயகம் -> அவ்வ்வ்...
வாங்க ராப் -> ஹாஹா.. நடுநடுவிலே மானே, தேனே, பொன்மானேன்னு போடுவீங்களா?... அவ்வ்வ்..
////நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...//
இத நான் பாராட்டணும்னு நெனச்சேன்.. ஆனா ஏற்கனவே ரெண்டு பேர் இத பாரட்டீட்டதால நான் //நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...// இதப் பாராட்டறேன்!
ஏன்னா //நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...// இது ரொம்ப நல்லாயிருக்கு. அதுவுமில்லாம //நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...// இதப் படிக்கறப்போ //நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...// இது மாதிரி எழுதின வசனமும் ஞாபகத்துக்கு வர்ற மாதிரி..
சரி.. விடுங்க. நல்லாயிருக்கு. போதுமா? (ரெண்டு ரவுண்டுக்கு மேல வேணாம்னா கேட்டாத்தானே?)
சூப்பரா இருக்கு... ;)...
கடைசி பஞ்ச் டயலாக் தான் அல்டிமேட்... :))))
:)) Good one
வாங்க பரிசல் -> நான் இங்கே மாடா வேலை செஞ்சிக்கிட்டுருக்கேன். நீங்க ரவுண்டு கட்டி அடிக்கறீங்க... ம்...
வாங்க தமிழ் பிரியன், சிவா -> நன்றிங்க...
செம செம செம!!
அட்டகாசம்!
சூ..ப்ப்..ர்ர்ர்ர்
//இப்போ உங்களைப் பாத்தால்கூட கமல் மாதிரிதான் இருக்குது//
ஆட்டோ போற சந்துல வாட்டர் டேங்கர் ஒட்டிட்டீங்க... :-)
//இப்போ உங்களைப் பாத்தால்கூட கமல் மாதிரிதான் இருக்குது//
என்னடா இப்படி கேப்ல கடா வெட்டிட்டீங்கலேனு பார்த்தேன்!
//ஆமா. அந்த வில்லன் கமல் மாதிரியே இருக்கீங்க//
இது ஓகே;)))
//அலுவலகம் போனா தொடர் மிஸ்ஸாயிடும்னு லீவ் போட்டுண்டு வீட்லே இருந்தீங்களே?
ஓ... அவரா நீங்க? :-)
வாங்க VSK, இராம் -> நன்றி...
வாங்க ஸ்யாம் -> ஹிஹி
வாங்க சத்யா -> அவ்வ்வ்.....
வாங்க சரவணகுமரன் -> நானேதாங்க அவன்...
வித்தியாசமா விமர்சனம் கொடுத்து தப்பிச்சுகலானு பார்க்குறிங்களா???
இப்ப சொல்லுங்க... படம் பிடிச்சிருக்கா இல்லையா??
(மனசுக்குள்-இல்லைனு சொன்னா ஒரு கும்மு கும்மலாம்)
// இப்ப சொல்லுங்க... படம் பிடிச்சிருக்கா இல்லையா??
(மனசுக்குள்-இல்லைனு சொன்னா ஒரு கும்மு கும்மலாம்)
//
இல்லைன்னு அவர் எங்க சொன்னாரு? இருந்திருக்கக் கூடாதான்னுதன்னுதானே கேக்குறாரு!!!
அச்சச்சோ... யாரு அங்க அருவாளா எடுத்துட்டு வெறியோட வரது? ச்சின்னப்பையன் மாதிரி தெரியுது. அப்பீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்...
ஹாஹா.. விக்னேஸ்வரன் -> உங்களுக்கு பதில் அடிச்சிண்டிருக்கும்போதே - வெண்பூ சரியா சொல்லிட்டாங்க பாருங்க.... இப்போவாவது புரியுதா...
வெண்பூ -> உதவி பண்ண உங்களுக்கு எதுக்குங்க அரிவாளோடு வரப்போறேன்.. இதைவிட தெள்ளத்தெளிவா நான் சொன்னதை புரிஞ்சிக்கவேமுடியாது.... அவ்வ்வ்வ்.......
//ஆனா படம் பாத்துட்டு ஒரு பத்து நிமிடத்துக்கு யாரை பாத்தாலும் கமல் மாதிரியே தெரியுது. இப்போ உங்களைப் பாத்தால்கூட கமல் மாதிரிதான் இருக்குது.//
ஹி.. ஹி... ஹி...
//நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்........... //
ஹாஹா.. நினைச்சு பாக்க முடியாத சிந்தனை-மெட்டி ஒலி Vs தசாவதாரம்! ஹாஹா... தொடர்ந்து கலக்குங்க
வாங்க நிருபர் -> இதுக்கு அடுத்த வாக்கியத்தை படிக்கலியா?... அவ்வ்வ்வ்
வாங்க தமிழ்மாங்கனி -> நன்றிங்க...
:) :))
---மர்மயோகிய சித்தி, கோலங்கள்னு எதோடவாவது கம்பேர் பண்ணிடவேண்டியதுதான்---
கமலோ ஏற்கனவே 10அ- வின் விரிவுதான் ம.யோ என்கிறார். எனவே, 'அரசி'தான் அதற்கு சரிப்பட்டு வரும் ;)
நன்றி பாபாஜி -> எதுவாயிருந்தாலும் 2.5 வருஷத்துக்கு முன்னாடிய சீரியல்னா, நான் 'சம்பந்தப்படுத்தி' எழுதறேன்... ஏன்னா, கடந்த 2.5 வருஷமா நான் எந்த சீரியலும் பாக்கலே... :-)))
//வெண்பூ said...
//நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...//
இது உங்க தங்கமணி சொன்னதா இல்ல நீங்க சொன்னதா? எங்கே உண்மையை சொன்னா எல்லாரும் கும்மிடுவாங்கன்னு சேஃபா ப்ளே பண்றீங்களா?//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
//ச்சின்னப் பையன் said...
நன்றி பாபாஜி -> எதுவாயிருந்தாலும் 2.5 வருஷத்துக்கு முன்னாடிய சீரியல்னா, நான் 'சம்பந்தப்படுத்தி' எழுதறேன்... ஏன்னா, கடந்த 2.5 வருஷமா நான் எந்த சீரியலும் பாக்கலே... :-)))//
ஹா ஹா ஹா அதெல்லாம் முடியாது ..நீங்க அரசி பார்த்து தான் ஆகணும் :-))
It's an interesting site. I just have gone through it. Keep it up buddies!
Can anybody help how to write in tamil here?
வாங்க கிரி -> எவ்ளவோ பாத்துட்டோம். அரசியை பாக்க மாட்டோமா? அவ்வ்வ்.... நல்லாயிருங்க....
Thuy -> Thanks... Search for NHM Writer Software and download it. You can write in Tamil thru that...
//நல்லாயில்லேன்னு நான் எங்கே சொன்னேன். நல்லா இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்...//
இப்போ தான் படம் பார்க்க முடிஞ்சுது, ரொம்ப கரீட்டா சொல்லி இருக்கீங்க தல :-)
Post a Comment