Thursday, July 10, 2008

த்ரிஷா & சிம்பு நாட்டு மக்களுக்காக என்னென்ன செய்யலாம்???

சிம்புவை நயன்தாராவுடன் சேர்த்துவிட்டு, நயன்தாராவின் மார்க்கெட்டை இறக்கி விடலாம் என்று த்ரிஷா நினைத்தார்.


இந்த செய்தி உண்மையா / பொய்யா என்று எனக்குத் தெரியாது.


ஆனால், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் - சிம்புவுடன் சேர்ந்துவிட்டால், நயன்தாராவின் மார்க்கெட் இறங்கிவிடும் என்று நினைத்த த்ரிஷா, அதற்கு பதிலாக கீழ்க்கண்டவாறு செய்தால், நாட்டு மக்களுக்காவது நன்மை உண்டாகும்.


1. சிம்புவை ஒரு பெட்ரோல் பங்குக்குக் கூட்டிப்போய், வண்டியில் பெட்ரோல் போடச் செய்து, பெட்ரோல் விலையை குறைக்க வைக்கலாம்.


2. சிம்புவை ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு சேர்த்துவிட்டு, பள்ளிக் கட்டணங்களைக் குறைக்க முயற்சிக்கலாம்.


3. சிம்புவை ஒரு மாநகர சொகுசு பேருந்தில் ஏற்றிவிட்டு, பேருந்து கட்டணங்களைக் குறைக்கப் பார்க்கலாம்.


4. சிம்புவை ஒரு உயர்தர சைவ உணவகத்துக்குக் கூட்டிச் சென்று, ஒரு ஃபுல் மீல்ஸ் வாங்கித் தந்து, உணவு பதார்த்தங்களின் விலையை குறைக்க வைக்கலாம்.


5. சிம்புவை கத்திப்பாரா பாலத்துக்குப் பக்கத்தில் ஒரு கட்டில் போட்டு உட்காரச் செய்யலாம். போக்குவரத்து குறைந்தால், பால வேலையாவது வேகமாக நடக்கும்.


என்னவெல்லாம் செய்யக்கூடாது...


1. சிம்புவை மழை பெய்யும்போது மொட்டை மாடிக்கு கூட்டிப்போகக்கூடாது. (மழை அளவை குறைத்தால் நமக்குத்தான் பிரச்சினை)


2. சிம்புவை மும்பை பங்கு வர்த்தகம் நடக்கும் சாலையில் கூட்டிப்போகக்கூடாது (சென்செக்ஸ் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்).


எனக்குத் தோன்றியது அவ்வளவுதான் மக்களே.. இன்னும் வேறே எதாவது இருக்கா... சொல்லுங்க...

16 comments:

Prakash G.R. July 10, 2008 at 5:53 AM  

ச்சின்னப் பையன் வீட்டுக்கு கூட்டீட்டு போய் அவர் கூட பேச வைக்கலாம் :-)

rapp July 10, 2008 at 6:10 AM  

ஏங்க எப்ப பின்நவீனத்துவ வாதியா மாறினீங்க? பின்ன, த்ரிஷாவின் கனவு பலிக்காதுன்னு நயன்தாரா ரசிகரா, அழகா, டைரக்டா சூளுரைக்காம, இப்படி பகீர் வேலையப் பார்க்கறீங்களே:):):)
நீங்க கேட்ட யோசனைகளைப் பார்த்ததும், எனக்கு ஒரே பயமாகிடுச்சி, எங்க அடுத்ததா நம்ம தல ஜே.கே.ரித்தீஷ் வீட்டுக்கோ ஆபிசுக்கோ சிம்புவ கூட்டிட்டுப்போய் அவரோட மார்க்கெட்ட குறைச்சிடுவாங்களோன்னு

கிஷோர் July 10, 2008 at 6:31 AM  

//பெட்ரோல் போடச் செய்து//

அப்படி என்றால் நயன்தாராவை ஹோட்டலுக்கு கூப்பிட்டு போய்.... என்று சொல்லாமல் சொல்கிறீர்.

இப்பதிவு ஆபாசமாக உள்ளது. வெளிநடப்பு செய்கிறேன்.

ச்சின்னப் பையன் July 10, 2008 at 7:00 AM  

அவ்வ்வ்.. ப்ரகாஷ்.. எனக்கு BP அதிகமாகும்போது கண்டிப்பாக சிம்புவை வீட்டுக்குக் கூட்டிவந்தால், ஒருவேளை BP குறையுமோ என்னமோ?!!!!!!!:-))))

ஆஹா ராப் -> இதுதான் பின்நவீனத்துவமா?... அப்ப இப்படியே போனா 'தலை சிறந்த இலக்கியவாதி' ஆயிடலாமா?.... அவ்வ்வ்...

ஆஆஆ கிஷோர் -> எப்படிங்க இப்படி நினைக்கிறீங்க? அது Bedroll இல்லீங்கோ - Petrolங்கோ...

வெண்பூ July 10, 2008 at 7:06 AM  

டாஸ்மாக் விட்டுப்போச்சி. சரக்கு விலை குறையும்ல.

அப்புறம் பின்லேடன்ட கூட்டிட்டு போனா தீவிரவாதம் குறையும். ஆனா சிம்புவை விட எஃபக்டிவ் டி.ஆர்.தான். போய் ஒரு பாரா வசனம், ஒரு அழுகாச்சி காட்டுனா பின்லேடன் தானா வந்து அமெரிக்காட்ட சரண்டர் ஆயிடமாட்டான்?

ச்சின்னப் பையன் July 10, 2008 at 9:48 AM  

ம்ம். டாஸ்மாக் விட்டுப்போச்சேன்னு நெனெச்சேன்... நீங்க சொல்லிட்டீங்க... நன்றி வெண்பூ... அப்பா 8 அடி பாய்வாருன்னா, குட்டி 16 அடி பாய்வான்னு சொல்லுவாங்க.. அது இவங்க விஷயத்திலே சரி வராதா என்ன?

வழிப்போக்கன் July 10, 2008 at 2:12 PM  

//இதுதான் பின்நவீனத்துவமா?... அப்ப இப்படியே போனா 'தலை சிறந்த இலக்கியவாதி' ஆயிடலாமா?.... அவ்வ்வ்...
//

சந்தேகமென்ன ஆ(க்)கிடலாம்..

Rapp அவர்கள் பின்னூட்டமே உங்கள் பதிவை விட பெரிதாக இருக்கிறது..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...


Rapp - நீங்க ஏன் இந்த பின்னூட்டத்தை எல்லாம் எதிர்பதிவா போட்டு தொடர்ந்து தமிழ் மண முகப்பில இடம் பிடிக்க கூடாது ???

பரிசல்காரன் July 10, 2008 at 2:33 PM  

என்னய்யா இது?

த்ரிஷா சிம்புவை என்கெங்க கூட்டிட்டு போலாம்ன்னு தெரியல.. ஆனா கூடிட்டு போகக் கூடாத இடம்...

வேண்டாம்

ஜ்வரோம் சுந்தர், லக்கிலுக் பதிவுகளுக்கு நேர்ந்த கதி ச்சின்னப்பையனுக்கு நேரும்..
//Rapp - நீங்க ஏன் இந்த பின்னூட்டத்தை எல்லாம் எதிர்பதிவா போட்டு தொடர்ந்து தமிழ் மண முகப்பில இடம் பிடிக்க கூடாது ???//

பரிசல்காரன் July 10, 2008 at 2:37 PM  

(போன பின்னூட்டத்தோட தொடர்ச்சி)?

///Rapp - நீங்க ஏன் இந்த பின்னூட்டத்தை எல்லாம் எதிர்பதிவா போட்டு தொடர்ந்து தமிழ் மண முகப்பில இடம் பிடிக்க கூடாது ???//
//

வெட்டியாபீசரம்மா.. இப்படியெல்லாம்தான் சொல்லுவாங்க.. கண்டுக்காதீங்க..

King July 10, 2008 at 3:28 PM  

சிவப்பு விளக்கு பக்கம் கூடி போனால் கூடுமா குறையுமா???

ச்சின்னப் பையன் July 10, 2008 at 3:51 PM  

வாங்க வழிப்போக்கன் -> இப்படித்தான் பதிவெல்லாம் 'சூடாகுதா'?...அவ்வ்வ்

வாங்க பரிசல் -> பரவாயில்லை. சொல்லுங்க... சொல்லிடுங்க...

வாங்க கிங் -> அவ்வ்வ்... எனக்குத் தெரியாதுங்க... த்ரிஷாவெ கேளுங்க...

இவன் July 10, 2008 at 11:24 PM  

முதல்ல தமிழ்மணப்ப்க்கம் கூட்டிக்கிடு வரணும்ய்யா...

VIKNESHWARAN July 11, 2008 at 2:34 AM  

//"த்ரிஷா & சிம்பு நாட்டு மக்களுக்காக என்னென்ன செய்யலாம்???"//

ஒரு சாமி படம் நடிக்கலாம்.... ஐ மீன் சாமி படத்துல வந்த விக்கரம தூக்கிட்டு சிம்புவ போட்டா படம் சூப்பரா இருக்காது?

மங்களூர் சிவா July 11, 2008 at 3:09 AM  

/
பரிசல்காரன் said...

என்னய்யா இது?

த்ரிஷா சிம்புவை என்கெங்க கூட்டிட்டு போலாம்ன்னு தெரியல.. ஆனா கூடிட்டு போகக் கூடாத இடம்...

வேண்டாம்
/

ஹாஹாஹா

ரிப்ப்ப்ப்ப்ப்பீட்டு

வால்பையன் July 11, 2008 at 10:00 AM  

நடிகைகள் மார்கெட் போன என்ன செய்வாங்க

காய்கறி வாங்குவாங்க

வால்பையன்

ச்சின்னப் பையன் July 11, 2008 at 11:45 AM  

வாங்க இவன் -> சிம்புவை தமிழ்மணம் பக்கம் கூட்டிவந்தா, பதிவுகள் குறைஞ்சிடாதா?....

வாங்க விக்கி -> சிம்பு போலீஸ்காரனாவா?... ஹாஹா. டாம் அன்ட் ஜெர்ரி பாக்கறமாதிரி நல்லா வாய்விட்டு சிரிக்கலாம்னு சொல்றீங்க...

வாங்க சிவா -> ஆமா. ஆனா எங்கேன்னு பரிசல் சொல்லமாட்டேங்கறார்.

வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு.. யாருமே கண்டுபிடிக்காதத கண்டுபிடிச்ச நம்ம வால்பையனுக்கு ஒரு ஓ.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP