Tuesday, July 8, 2008

தமிழ் படங்களை யாருக்கெல்லாம் போட்டுக் காட்டலாம்!!!

இப்போதைய ட்ரெண்ட் என்னவென்றால், ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு வெளி நாட்டில்
இருக்கிற யாராவது ஒரு பிரபலத்திடம் போட்டுக் காட்டுவது அல்லது போட்டுக் காட்டுவேன் என்று சொல்வது.


உதாரணம்:

தசாவதாரம் - ஜார்ஜ் புஷ்

புனித தோமையார் - போப்பாண்டவர்


இந்த பாணியை நாம் எப்போதோ ஆரம்பித்திருக்கலாம். எந்தெந்த படங்களை யாருக்கெல்லாம் காட்டியிருக்கலாம் என்று பார்க்கலாம்.


குருவி - அந்த கார் பந்தயத்துக்காக மைக்கெல் ஷுமேக்கருக்கு காட்டியிருக்கலாம்.

திருமலை - பைக் பந்தய வீரர் பர்ட் மன்றோ (Burt Monro) இல்லாததால், அவர் வேடத்தில் நடித்த ஆண்டனி ஹாப்கின்ஸுக்கு காட்டியிருக்கலாம்.

அரசாங்கம் - கேப்டனின் துப்பறியும் திறமைக்காக டேனியல் கிரேக்குக்கு (புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர்) காட்டியிருக்கலாம்


பில்லா - அஜித் ஒரு காட்சியில் நீச்சல் குளத்தில் இருப்பார் - அதற்காக குற்றாலீஸ்வரனுக்கு படத்தை காட்டியிருக்கலாம்.


M.குமரன் s/o மகாலட்சுமி - ஜெயம் ரவியின் பாக்சிங் திறமைக்காக - மைக் டைசனுக்கு காட்டியிருக்கலாம்.


தாஸ் - ஜெயம் ரவியின் கால்பந்து திறமைக்காக டேவிட் பெக்காமுக்கு காட்டியிருக்கலாம்.

இப்படி செய்திருந்தால், தமிழ் சினிமா, உலகத்தரத்துக்கு எப்போவோ போயிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. நீங்க என்ன சொல்றீங்க?

மேற்கூறிய தமிழ் படங்களின் சாதனைகளை எனக்கு நினைவூட்டி உதவி செய்த தமிழ் மசாலா பிரேமுக்கு நன்றி.

நீங்களும் விட்டுப்போன 'அருமையான' படங்களைப் பற்றி பின்னூட்டத்தில் கூறலாம்...

27 comments:

டொன் லீ July 8, 2008 at 6:08 AM  

சென்னை 600028 ஐ உங்கட இந்தியா அணிக்கு போட்டு காண்பிக்கலாம்

ஈர வெங்காயம் July 8, 2008 at 6:25 AM  

கீழ் வரும் படங்களை யாருக்கு போட்டுக் காட்டலாம்..

1. கேப்டன் பிரபாகரன்.
2. நரசிம்மா,
3. அரசாங்கம்

VIKNESHWARAN July 8, 2008 at 6:28 AM  

தசாவதாரம் படத்த அசினுக்கு போட்டு காட்டலாம்...

அடுத்த படத்துலயாவது உயிர வாங்காம இருக்கட்டும்...

rapp July 8, 2008 at 7:03 AM  

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........நல்ல சிந்தனைதான், ஆனா உங்கள தீவிரவாதின்னோ, கொலவெறியோட சுத்திகிட்டிருக்கும் ஆளுன்னோ புடிச்சு உள்ள போட்டுற மாட்டாங்க? ஏற்கனவே நானெல்லாம் ப்லாக் எழுதறேன்னு தெரிஞ்சிதான் கூகிளை பில் கேட்ஸ் வாங்கற ஆசையை விட்டுட்டாருன்னு பேசிக்கராங்கங்க. ஆனா ஒன்னுங்க டேனியல் கிரேக்குக்கு நான் நம்ம கேப்டன் படத்தையே பார்ப்பேன்:):):)

Syam July 8, 2008 at 7:15 AM  

உலகம் சுற்றும் வாலிபன் - ஒசாமா பின்லேடன் :-)

Karthik July 8, 2008 at 8:04 AM  

//உலகம் சுற்றும் வாலிபன் - ஒசாமா பின்லேடன் :-)

Ha..ha. Come again?!

பிரேம்ஜி July 8, 2008 at 8:38 AM  

சின்ன பையன்.பதிவும் செம காமெடி ஆ இருக்கு.வர்ற பின்னூட்டங்களும் செம நக்கலா தான் இருக்கு.

இவன் July 8, 2008 at 9:30 AM  

//கீழ் வரும் படங்களை யாருக்கு போட்டுக் காட்டலாம்..

1. கேப்டன் பிரபாகரன்.
2. நரசிம்மா,
3. அரசாங்கம்//


நம்ம டொம் குரூஸ்க்கு போட்டு காட்டலாமே

இவன் July 8, 2008 at 9:31 AM  

அப்படியே நம்ம சாம் அண்டர்சன் படத்த முழு hollywoodக்குமே போட்டு காட்டலாமே???

சரவணகுமரன் July 8, 2008 at 9:53 AM  

* முஷாரப் - இம்சை அரசன் இருபத்திமூன்றாம் புலிகேசி
* சிவாஜி - பில் கேட்ஸ்
* ஸ்டிவன் ஸ்பீல்பெர்க் - பாளையத்தம்மன், கோட்டை மாரியம்மன்.

PPattian : புபட்டியன் July 8, 2008 at 10:49 AM  

குற்றாலீஸ் வெளிநாட்டு பிரபலமா?

எனக்கு தெரிஞ்சு பில்லாவை யாராவது கொலம்பியா, மெக்ஸிக்கோவை சேர்ந்த டிரக் லார்டுக்கு போட்டு காட்டலாம்.

Anonymous,  July 8, 2008 at 11:03 AM  

லீ -
கால்பந்து திறமைக்காக டேவிட் பெக்காமுக்கு காட்டியிருக்கலாம்.

வீரசுந்தர் July 8, 2008 at 11:16 AM  

தமிழ்ப் படங்கள ச்சின்னப்பையருக்கு போட்டுக் காட்டலாம்! :-)

ச்சின்னப் பையன் July 8, 2008 at 11:50 AM  

வாங்க லீ -> காட்டியிருக்கலாம்தான்... விட்டுட்டாங்களே...

வாங்க ஈர வெங்காயம் -> அவ்வ்வ்.. கீழே இன்னொத்தரு பதில் சொல்லிட்டாரு பாருங்க....

வாங்க விக்னேஸ்வரன் -> அசினுக்கு என்னங்க குறைச்சல்?... உங்களுக்கு ஏங்க புகைச்சல்?... அவ்வ்வ்வ்.

வாங்க ராப் -> கண்டிப்பா. டேனியலுக்கு கேப்டன் படத்தை காட்றோம்...

ச்சின்னப் பையன் July 8, 2008 at 11:52 AM  

வாங்க ஸ்யாம் -> உலகம் சுற்றும் 'மர்ம' வாலிபன் தானே அவரு?....

வாங்க கார்த்திக் -> நன்றி...

வாங்க பிரேம்ஜி -> ரொம்ப நன்றிங்க..

வாங்க இவன் -> டாம் க்ரூஸை ஒரு வழி பண்ணாமே விட மாட்டீங்க போல.... நடத்துங்க...

ச்சின்னப் பையன் July 8, 2008 at 11:56 AM  

வாங்க இவன் -> ' நம்ம' தலயத்தானே சொல்றீங்க... அதிலே சந்தேகமே வேண்டாம். கண்டிப்பா காட்றோம்.... அவ்வ்வ்

வாங்க சரவணகுமரன் -> ஹாஹா... கண்டிப்பா அவங்க மூணு பேரும் 'துண்ட காணோம், துணிய காணோம்'னு ஓடப்போறாங்க... சூப்பர்..

வாங்க இராம் -> நன்றி...

வாங்க புபட்டியன் -> குற்றாலீஸ்வரன் இப்போது இந்தியாவிலேயும் இல்லை, நீச்சலிலேயும் இல்லை. அதுக்காக அவர் பேரை போட்டுட்டேன். வேறே யாராவது இருந்தா சொல்லுங்க. 'பில்லா'வை காட்டிடலாம்.

வாங்க அனானி -> டேவிட் பெக்காம் பேரை நான் சொல்லியிருக்கேனே?

வெண்பூ July 8, 2008 at 12:00 PM  
This comment has been removed by the author.
வெண்பூ July 8, 2008 at 12:01 PM  

இவிங்க யாருமே பாக்கமாட்டேன்னு சொல்லிட்டா எல்லா படத்தையும் ஒருத்தருக்கு போட்டு காட்டலாம். அவருக்குதான் நெறய நேரம் இருக்குறதால எல்லா படத்தையும் பார்ப்பாரு. இன்னும் யாருன்னு தெரியலன்னா தமிழ்நாடு தலைமை செயலகத்துல போயி கேளுங்கப்பு...

ஈர வெங்காயம் July 8, 2008 at 12:21 PM  

//கீழ் வரும் படங்களை யாருக்கு போட்டுக் காட்டலாம்..

1. கேப்டன் பிரபாகரன்.
2. நரசிம்மா,
3. அரசாங்கம்

நம்ம டொம் குரூஸ்க்கு போட்டு காட்டலாமே //

ரிசல்ட் : அய்யய்யோ...அநியாயமா டொம் குரூஸ் இப்படி தூக்குல தொங்கிட்டாரே...

ச்சின்னப் பையன் July 8, 2008 at 1:24 PM  

வாங்க வீரசுந்தர் -> ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு???

வாங்க வெண்பூ -> அவ்வ்வ்வ்... இததானே நேத்து 'அம்மா' சொன்னாங்க...

ஹாஹா ஈர வெங்காயம் -> சூப்பர்...

வழிப்போக்கன் July 8, 2008 at 2:01 PM  

பில்லா --> தாவுத் இப்றாகீம்

rapp July 8, 2008 at 9:20 PM  

//வாங்க இவன் -> ' நம்ம' தலயத்தானே சொல்றீங்க... அதிலே சந்தேகமே வேண்டாம். கண்டிப்பா காட்றோம்//
இதை நான் கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன். இப்படி நீங்க நம்ம தல, அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்துக்கு துரோகம் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............

ச்சின்னப் பையன் July 8, 2008 at 9:30 PM  

வாங்க வழிப்போக்கன் -> நல்ல ஐடியாதான். யார் போய் அவருக்கு படம் காட்றது? நீங்க தயாரா?????

வாங்க ராப் -> ஐயயோ... தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க... நான் ' நம்ம தல' அப்படின்னு சொன்னது அண்ணன் ஜே.கே.ரித்தீஸைத்தான்.... ஒரு நிமிஷத்திலே என்னை சந்தேகப்பட்டுட்டீங்களே!!!! அவ்வ்வ்வ்...

Bleachingpowder July 9, 2008 at 4:47 AM  

எல்லாமே சூப்பர் !!! பில்லாவை தவிர. பேசாம பில்லாவ Blind School கு போட்டு காட்டலாம். கூலிங்கிளாஸ் மாடல்களுக்காக.

அப்புறம் இலங்கை தமிழர்களுக்கு கண்ணத்தில் முத்தமிட்டாலும் நந்தாவை காமிக்களாம்.

மைக்கேல் ஜாக்சனுக்கு கரகாட்டகாரன் காட்டாலாம்

நாயகனை God Father இயக்குனர்கு போட்டு காமிக்கலாம்.

போக்கிரிய Departed Team கு காட்டலாம்.

பின்ன நம்ம விஜய்காந்தோட எல்லா சண்டை காட்சிகளையும் நியுட்டன் உயிரோட இருந்த காட்டலாம் ( படம் பார்த்ததற்கு அப்புறம் உயிரோட இருப்பாரனு கேக்க கூடாது).

பரிசல்காரன் July 10, 2008 at 2:29 PM  

//1. கேப்டன் பிரபாகரன்.
2. நரசிம்மா,
3. அரசாங்கம்//.

பின்லேடன்?

ச்சின்னப் பையன் July 10, 2008 at 3:54 PM  

வாங்க ப்ளீசிங் -> ஹாஹா... சூப்பர்... இதெல்லாம் பாக்கக்கூடாதுன்னுதான் ந்யூடன் அப்பவே போயிட்டாரு... அவ்வ்வ்...

வாங்க பரிசல் -> பின்லேடன் மேலே அவ்ளோ பாசமா உங்களுக்கு...ஹாஹா

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP