சென்னை இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது!!!
கிபி 2080 - சென்னை. அம்மா, அப்பா மற்றும் ஒரு பையன் உள்ள ஒரு குடும்பம். ஒரு உயர்தர சீன உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கின்றனர்.
பையன்: அம்மா, இன்னிக்கும் எனக்கு நூடுல்ஸ் போதும்.
அம்மா: என்னப்பா, அது மட்டும் எப்படி போதும்? வேறே ஏதாவது சாப்பிடு.
பையன்: போம்மா. ஒரே போரடிக்குது.
அம்மா: ஏங்க, இவன் எப்போ பாத்தாலும் இப்பத்தான் போரடிக்குது, போரடிக்குதுன்னு சொல்லிட்டிருக்கான். இந்த வருஷமாவது அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பெங்களூர், மைசூர் போகலாங்க. அப்புறமாவது கொஞ்ச நாளைக்கு சும்மா இருக்கானான்னு பாப்போம்.
அப்பா: சரிம்மா. ஏற்பாடு பண்றேன். நம்ம எல்லாருக்கும் பாஸ்போர்ட் இருக்கு. விசா மட்டும்தான் எடுக்கணும். அதுவும் பிரச்சினையில்லை. ஒரே நாள்லே எடுத்துடலாம்.
மகன்: ஹையா.. ஜாலி.. விசான்னா என்னப்பா?
அப்பா: விசான்றது ஒரு நாட்டுக்குள்ளே போறதுக்கான அனுமதிச்சீட்டு. அது இருந்தாத்தான் அவங்க நாட்டுக்குள்ளேயே போக அனுமதிப்பாங்க.
மகன்: நீங்க விசா எடுத்துண்டு நிறைய் தடவை பெங்களூர் போயிருக்கீங்களாப்பா?
அப்பா: நான் சின்ன வயசா இருந்தப்போல்லாம், பெங்களூரும் சென்னையும் ஒரே நாட்டுலேதான் இருந்துச்சு. கொஞ்ச வருஷம் முன்னாலேதான் இப்படி ஆயிடுச்சு. அன்னிலேர்ந்து, இங்கேயிருந்து யார் அங்கே போனாலும் அல்லது அங்கேயிருந்து யார் இங்கே வந்தாலும், விசா எடுத்துத்தான் ஆகணும்.
மகன்: சரி. அங்கே போய் நாம என்னென்ன பாக்கப்போறோம்பா?
அப்பா: மைசூர் அரண்மனை பாக்கலாம். அப்புறம், நம்ம பாட்டி வீட்டு பின்னாடி ஓடுதில்லையா, காவிரி, அது புறப்பட்டற இடத்தை பாக்கலாம்.
மகன்: சூப்பர்பா. எனக்கு பாட்டி வீட்டுக்கு போகறதுக்கு பிடிக்கறதே அந்த காவிரி ஆறுதான். வருஷத்திலே எப்போ போனாலும், மேல் படிக்கட்டு வரைக்கும் தண்ணி ஓடிண்டேயிருக்கும். நீங்க சின்ன வயசிலே ரொம்ப என்ஜாய் பண்ணியிருப்பீங்க, இல்லையாப்பா?
அப்பா: இல்லைப்பா. அப்போல்லாம் இந்த காலம் மாதிரி இல்லே. கர்நாடகாலேர்ந்து தண்ணி திறந்துவிட்டாத்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணி வரும். அதுக்கு பெரிய பெரிய கலாட்டால்லாம் நடக்கும். நம்ம அரசியல் கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதம் இருப்பாங்க. திரைப்படக் கலைஞர்களெல்லாம் ஊர்வலம் போவாங்க.
மகன்: இப்போல்லாம் அந்த மாதிரி பிரச்சினை இல்லையாப்பா?
அப்பா: இல்லேப்பா. கர்நாடகா வேறே நாடானப்புறம் இந்த தண்ணி பிரச்சினை ஈஸியா தீர்ந்திடுச்சு.
மகன்: இப்போ கர்நாடகா எந்த நாடுப்பா?
அப்பா: China.
பின் - 1: இது சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் போட்டிக்கான எனது இரண்டாவது இடுகையா போடலாமான்னு தெரியல. உங்க பதில்களைப் பார்த்துத்தான் முடிவு பண்ணணும்.
பின் - 2: கடந்த 4 வருடங்களில் 300+ முறையாக எல்லை தாண்டி பிரச்சினை செய்திருக்கும் சீனாவை, சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா, பிற்காலத்திலும் அப்படியே இருந்தால், என்ன ஆகும் என்கிற கற்பனைதான் இந்த பதிவு.
பின் - 3: காவிரி பிரச்சினை இரு நாடுகளுக்கிடையே இருந்திருந்தால், எப்போவோ தீர்ந்திருக்கும் என்று ஞாநி சொல்லியிருந்தார். அதையும் இந்த 'சிறு' கதையில் பொருத்திவிட்டேன்.
42 comments:
பொதுவா உங்க பதிவுகள் எல்லாம் சிரிச்சுட்டு போற மாதிரிதான் இருக்கும். உங்களால சிந்திக்கவும் வைக்க முடியும் நிருப்பிச்சுட்டிங்க சின்னபையன்
//மகன்: இப்போ கர்நாடகா எந்த நாடுப்பா?
அப்பா: China.
//
இத மட்டும் தனி நாடுனு மாத்திருங்க. அவங்களுக்குதான் மனுசங்களே ஆகாது. அவர்களுக்கு எந்த மாநிலத்தோடையும் நல்லுறவு கிடையாது. ஆந்திரா, மஹாராஷ்ராவோடவும் சண்டைதான்.
பேசாமல் அவர்களை கதையில் இந்தியாவில் இருந்து பிரித்து விடலாம்
//பெங்களூரும் சென்னையும் ஒரே நாட்டுலேதான் இருந்துச்சு. கொஞ்ச வருஷம் முன்னாலேதான் இப்படி ஆயிடுச்சு//
அவ்வ்வ்வ்.....
சிறப்பா எழுதியிருக்கீங்க. சிரிப்பு, சீரியஸ் ரெண்டும் கலக்கறீங்க.
//மகன்: இப்போ கர்நாடகா எந்த நாடுப்பா?
அப்பா: China.
//
:-))
//மகன்: இப்போ கர்நாடகா எந்த நாடுப்பா?
அப்பா: China.//
Super :)
வாங்க தாரணி பிரியா -> நன்றிங்க.
வாங்க ப்ளீசிங் பவுடர் -> அது சரி. ஆனா இந்த கதையோட நோக்கம் பின் - 2வில் இருக்கே, அதுதான்.
வாங்க ராஜ நடராஜன், பிரேம்ஜி, தியாகராஜன் -> நன்றி...
தமிழ்நாட்டைத்தான் கர்நாடகா,கேரளா.ஆந்திரா மாநிலங்கள் தனி நாடாக ஆக்கிவிடும் போல இருக்கிறது.
அப்பிடி நடந்தாலும்..இந்த தமிழன் ஏமாளி..அந்நாடுகளுக்கு தேவையான காய்கறி.மின்சாரம் ஆகியவற்றை
அனுப்பிக்கொண்டிருப்பான்.வந்தாரை வாழவைப்போம் என்பான்.
நல்லா யோசிக்கிறீங்க...
இது அறிவியல் சிறுகதையில் வருமா?
எதிர்காலம் என்று தலைப்பில் இருந்தால் வரும், நன்றாக இருக்கிறது.
Kanchana Radhakrishnan said...
தமிழ்நாட்டைத்தான் கர்நாடகா,கேரளா.ஆந்திரா மாநிலங்கள் தனி நாடாக ஆக்கிவிடும் போல இருக்கிறது.
அப்பிடி நடந்தாலும்..இந்த தமிழன் ஏமாளி..அந்நாடுகளுக்கு தேவையான காய்கறி.மின்சாரம் ஆகியவற்றை
அனுப்பிக்கொண்டிருப்பான்.வந்தாரை வாழவைப்போம் என்பான்.///
ஹா ஹா ஹா
சின்னப் பையன் = சிரிப்பு,சிறப்பு
கதை நன்றாக இருக்கிறது :
காமெடி டைமா இருந்து சீரியஸ் டைமாகிட்டீங்க :-))
//பொதுவா உங்க பதிவுகள் எல்லாம் சிரிச்சுட்டு போற மாதிரிதான் இருக்கும். உங்களால சிந்திக்கவும் வைக்க முடியும் நிருப்பிச்சுட்டிங்க சின்னபையன்//
யாரை பாத்து என்ன கேள்வி கேட்டுட்டாங்க?
//இத மட்டும் தனி நாடுனு மாத்திருங்க. அவங்களுக்குதான் மனுசங்களே ஆகாது. அவர்களுக்கு எந்த மாநிலத்தோடையும் நல்லுறவு கிடையாது. ஆந்திரா, மஹாராஷ்ராவோடவும் சண்டைதான்.
பேசாமல் அவர்களை கதையில் இந்தியாவில் இருந்து பிரித்து விடலாம்//
:-)))))))))))
வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> ஹாஹா. சரியா சொன்னீங்க...
வாங்க சரவணகுமரன், அப்துல்லா -> நன்றி..
வாங்க குசும்பன் -> அவரு சுற்றுப்புற சூழல், உணவு பற்றாக்குறை மற்றும் இன்னபிறன்னு சொல்லியிருந்தாரேன்னு பாத்தேன்....:-(((
வாங்க கிரி -> ஹிஹி.. சும்மா எப்படி வருதுன்னு பாக்கலாமேன்னுதான்....:-))
அவ்வ்வ்வ் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கையா?
:-))))))
இப்படியெல்லாம் பின்னூட்டமிட்டா என்ன மாதிரி கத்துக்குட்டிக்கு என்ன தெரியும்?அழகா " அவ்வ்வ்வ்வ் " ன்னு இங்கிலிபீசுல சொன்னாத்தானே புரியும் :)
வாங்க பரிசல் -> அதானே... உங்க பதிவுலே போடவேண்டியதெ இங்கே போட்டுட்டாங்க... அவ்வ்வ்வ்..
வாங்க விக்னேஸ்வரன் -> என்ன பண்லாம்றீங்க?....
வாங்க ராஜ நடராஜன் -> என்னது... 'அவ்வ்வ்வ்'.. இங்க்லீஸா????... மாத்திட்டீங்களா.... சொல்லவேயில்லே.....
// அவ்வ்வ்வேதாங்க அது...
செய்திகளுக்கேற்ற உங்க கமெண்ட்களுக்காகத்தான் அந்த சிரிப்பு.... //
உண்மையச் சொல்லப்போனா இந்த அவ்வ்வ்வ் பற்றி ரெண்டு மூணு நாளா ஒரு பதிவு போட்டு சந்தேகம் தீர்த்துக்கணுமின்னு நினைச்சுகிட்டே இருக்கேன்.ஆனா பாராளுமன்றத்துல ஓட்டுப்போட வேண்டியதா இருந்ததால ரெம்ப பிசி.மார்க்தான் 253 எப்படியோ காசக்குடுத்தாவது வாங்கிட்டோமில்ல.வருது வருது பதிவு வருது சீக்கிரம்.
ஓ என்னைய பாக்கணும்னா நீங்க அப்ப சீனாவுக்கு வரணுமா??
அவ்வ்வ்
சூப்பரோ சூப்பர். தாரளமா இதை நீங்க போட்டிக்கு அனுப்புங்க. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
//Kanchana Radhakrishnan said...
தமிழ்நாட்டைத்தான் கர்நாடகா,கேரளா.ஆந்திரா மாநிலங்கள் தனி நாடாக ஆக்கிவிடும் போல இருக்கிறது.
அப்பிடி நடந்தாலும்..இந்த தமிழன் ஏமாளி..அந்நாடுகளுக்கு தேவையான காய்கறி.மின்சாரம் ஆகியவற்றை
அனுப்பிக்கொண்டிருப்பான்.வந்தாரை வாழவைப்போம் என்பான்//
இதை நான் கன்னா பின்னாவென ஆதரிக்கிறேன்
மீன்புடிக்கப்போறதுக்கு கூட வீசா எடுக்கணுமாமே ஸ்ரீலங்காகிட்ட...
கலக்கல். சும்மா நச்சுன்னு இருக்கு..
:))
நீங்க அம்பி அண்ணன் ப்ளாக்ல கேட்டிருந்தீங்க இல்லையா, அந்த நிகழ்ச்சியெல்லாம் இங்க கிடைக்கும், நேரம் கிடைக்கும் போது பாருங்க
http://www.techsatish.net/
வாங்க ராப் -> அப்ப அனுப்பலான்றீங்க... பாப்போம்.. அந்த உரலுக்கு நன்றி..
வாங்க மதுவதனன் -> அதுவும் ஒரு கொடுமைதாங்க... :-(((
வாங்க ஸயீத் -> நன்றிங்க...
என்ன திடீர்னு ச்சின்னப்பையன் சீரியஸ்பையன் ஆகிட்டீங்க.. :))) நல்லா இருந்தது.. இந்த கதைக்கு லக்கிலுக்க விட்டு ஒரு விமர்சனம் எழுதச் சொல்லிடுவோமா?
கவலைப்படாதீர்கள் அம்மாதிரியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை
அமெரிக்காகாரன் மொத்தமாக நம்மை குத்தகைக்கு எடுத்து விட்டான்.
வால்பையன்
ரொம்ப நல்லா இருக்கு ச்சின்னப்பையன்.. வர வர நீங்க ச்சின்னப்பையன் மாதிரி யோசிக்கிறதில்லை.. ரொம்பப் பெரியாளு ஆயிட்டீங்க... நல்ல சிந்தனை.. உண்மையிலேயே அப்படி ஆனாத்தான் காவிரி பிரச்சினை தீரும் போல...போட்டிக்கு அனுப்புங்க....இதுவரைக்கும் உங்க பதிவுக்கு அவ்வ்வ்வ்வ் தான் போடுவாங்க.. இப்போ 'ஓ' போட வச்சுட்டீங்க...
//ஒரு உயர்தர சீன உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கின்றனர்.
பையன்: அம்மா, இன்னிக்கும் எனக்கு நூடுல்ஸ் போதும்.
//
அப்ப சென்னை சீனா இல்லையா ?
//அதுவும் பிரச்சினையில்லை. ஒரே நாள்லே எடுத்துடலாம்.
//
இந்தியாவுல பாஸ்போர்ட் ஒரே நாள்லயா ??
// இது சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் போட்டிக்கான எனது இரண்டாவது இடுகையா போடலாமான்னு//
எதுக்கு யோசனை ??போடலாம்..போடலாம்..எல்லாருமே படிக்க வேண்டும்.
கன்னா பின்னானு ஆதரிக்கிறேன்..
அடடே நல்லா எல்லை தாண்டின கற்பனையா இல்ல இருக்கு!! அவங்க நம்மளோட சண்டை போட்டுகிட்டே இருக்கறதுனால வேற நாடாவே மாத்திடீங்களோ!!வாழ்த்துக்கள்
வாங்க வெண்பூ -> ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு?.. நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா ???...:-)
வாங்க வால்பையன் -> அது சரி...
வாங்க தமிழ்ப்பறவை -> கருத்திற்கு நன்றி...
வாங்க வழிப்போக்கன் -> பதிவோட தலைப்பைப் பாருங்க... இன்னும் சென்னை இந்தியாவிலேதான் இருக்கு... அவ்வ்வ்வ்..
அவரு சொல்றது விசாங்க. பாஸ்போர்ட் இல்லே..
நன்றி...
வாங்க ரம்யா ரமணி -> நன்றிங்க...
2080-இல் குடும்பமெல்லாம் இருக்குமா?
பாய்ப்ரெண்ட்- கேர்ள் ப்ரெண்ட் தங்கள் இருவருக்குமோ, அல்லது இதில் ஒருவருக்கு மட்டுமோ பிறந்த Geniticaly engineered குழந்தையுடன் ரெஸ்டாரெண்டுக்கு பதில் ஆக்சிஜன் பாருக்கு போவது போல எழுதினீர்கள் என்றால் பொருத்தமாக இருக்கும் JK :)
கதை நல்லா இருக்கு :) அதுவும் நீங்கள் கர்நாடகத்துக்கு கொடுத்திருக்கும் குட்டி ரொம்ப தேவையானது.
சுவை தந்தும் சூடு தந்தும் - சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
நல்ல பதிவு
இந்த உரையாடலை 2080-ல் அல்ல; அதற்கு முன்னரே எதிர்பார்க்கலாம்.
அப்ப சென்னை, கொரியாவில் இருக்கா?
:-))))0
அப்போ பெங்களுரு,China ல pub எல்லாம் இருக்குமா :-)
சிற(ரி)ப்பா எழுதிருக்கீங்க.
சூப்பர்.
வாங்க கயல்விழி -> அது சரிங்க. ஆனா இங்கே main story line (அடேங்கப்பா... என்ன பில்டப்பு...) வேறேயாச்சே... அதனால, வேறே எதையும் நான் மிகைப்படுத்தி சொல்லலே...
அண்ணன், நிரந்தர உலக நாயகன் JKயின் பேரை போட்டுட்டதாலே, உங்களுக்கு ஒரு ஓ.
வாங்க தமிழ்நம்பி, கரிகாலன், சிவமுருகன் -> கருத்திற்கு நன்றி...
வாங்க துளசி மேடம் -> அவ்வ்வ்வ்...
வாங்க ஸ்யாம் -> நல்ல சந்தேகம். மன்னரது சந்தேகத்தை தீர்த்து வைப்போருக்கு, 1000 காலி பீர் பாட்டில்கள் இலவசம்னு அறிவிச்சிட்டேன்... அவ்வ்வ்வ்...
உண்மையிலேயே சிந்திக்க வைக்கும் ஒரு பதிவு. நன்று..
Post a Comment