Wednesday, July 2, 2008

உணவகக் கதைகள் - 1

ஏய்.. என்னப்பா இங்கே சத்தம்? என்ன பிரச்சினை?

முதலாளி, வாங்க. இவர் பேரு சுரேஷ். குடும்பத்தோட எப்பவுமே நம்ம உணவகத்துக்குத்தான் சாப்பிட வருவார். உள்ளே 'குடும்ப அறை' இருக்கு - போய் உக்காருங்கன்னு சொன்னாலும் கேக்கமாட்டார். 'வெளியே' உட்கார்ந்து சாப்பிடறேன்னு சொல்வார்.

அதனாலென்னப்பா, உக்காரட்டுமே? அதுக்கு எதுக்கு தகராறு?

அதில்லை முதலாளி. எந்த ஐட்டம் கொடுத்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கறாரு. இட்லி குண்டாவேயில்லை. தோசை முறுகலாவேயில்லை. பஜ்ஜியை மனுசன் சாப்பிடுவானான்னு கேக்கறாரு. எதுக்கெடுத்தாலும் தகராறு பண்றாரு.

தம்பி, கஸ்டமர்ஸ்கிட்டே அன்பா நடந்துக்கணும். அவங்க என்ன கேக்கறாங்களோ அதை கொடுக்கணும். சண்டை போடக்கூடாது.

இவர்கூட பரவாயில்லேங்க. இவர் சொந்தக்காரங்க, கூட வர்றவங்க இவங்கல்லாம்கூட தாறுமாறா பேசறாங்க. ஒரு தடவை இந்த உணவகத்தை நாங்க நடத்திக் காட்டறோம். அப்போ எல்லா ஐட்டங்களும் சூப்பரா போடுவோம் அப்படின்னு சவால் விடறார்.

அப்படியா சொன்னார்? செய்யட்டுமே. யார் இந்த உணவகத்தை நடத்தினாலும் சரி. மக்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டாங்கன்னா எனக்கு சந்தோஷம்தான். ஐயா, நீங்களே அடுத்த வருஷத்திலிருந்து இந்த உணவகத்தை எடுத்து நடத்திக்கோங்க. நல்லாவேயிருங்க.

(சில நாட்களுக்குப் பிறகு)

முதலாளி, நாங்க அப்பவே சொன்னோம். அவர் தொல்லை தாங்கமுடியல. நீங்க என்ன செய்யப்போறீங்கன்னு எங்களுக்கு இப்பவே தெரிஞ்சாகணும்.

சரி. நானே அவரிடம் பேசறேன்.

ஐயா, நீங்க ரொம்ப தரக்குறைவா பேசறதா எங்க ஊழியர்கள் சொல்றாங்க. நீங்க மரியாதையா வெளியே போயிடுங்க.

என்னது? நான் எப்போ அப்படி பேசினேன்.

மூணு மாசம் முன்னடி நீங்க என் ஊழியர்கிட்டே 'இது போண்டா' அப்படின்றதுக்கு பதிலா 'இது போண்டாடா' அப்படின்னு 'டா' போட்டு பேசிட்டீங்க. எனக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கலை. இப்ப நீங்களே போறீங்களா, இல்லே கழுத்தை பிடிச்சி தள்ளட்டுமா?

'இது ரொம்ப அக்கிரமம், அநியாயம். அதுக்கு நான் அப்போவே மன்னிப்பு கேட்டுட்டேன். திடீர்னு இப்போ அந்த பேச்சை ஏன் இழுக்குறீங்க?' என்றபடியே அவரும் குடும்பத்துடன் வெளியே செல்கிறார்.

அதன் பிறகு, உணவக ஊழியர்களும், முதலாளியும் happily lived ever after. THE END.

டிஸ்கி-1:

மேற்கூறிய சம்பவமும், சம்பவத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. அப்படியும் யாரையாவது குறிப்பிடும்படியாக இருந்தால், அது 'தற்செயலானதுதான்'.

டிஸ்கி-2:

முழுக்க முழுக்க நமக்குத் தெரிந்த மனிதர்களைப் பற்றியே படம் எடுத்துவிட்டு, 'இதில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே' என்று போடும் மணிரத்னம் ஐயாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!!!

டிஸ்கி-3:

உணவகக் கதைகள் - 1ன்னு போட்டது சும்மா 'trend'க்காகத்தான். '2, 3'ம் பாகமெல்லாம் வராது.


13 comments:

rapp July 2, 2008 at 12:27 PM  

ஆஹா இந்த (உள்)குத்து குத்தறீங்க. கிட்டத்தட்ட எல்லாமே புரிஞ்சிக்கறாப்போல எழுதினத்துக்கு ரொம்ப நன்றி. அவ்வ்வ்வ்வ்வ்வ்.........

வெட்டிப்பயல் July 2, 2008 at 12:32 PM  

//:உணவகக் கதைகள் - 1ன்னு போட்டது சும்மா 'trend'க்காகத்தான். '2, 3'ம் பாகமெல்லாம் வராது.//

:-))))

பிரேம்ஜி July 2, 2008 at 12:32 PM  

//மேற்கூறிய சம்பவமும், சம்பவத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. அப்படியும் யாரையாவது குறிப்பிடும்படியாக இருந்தால், அது 'தற்செயலானதுதான்'.//

நாங்க நம்பிட்டோம்.

//முழுக்க முழுக்க நமக்குத் தெரிந்த மனிதர்களைப் பற்றியே படம் எடுத்துவிட்டு, 'இதில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே' என்று போடும் மணிரத்னம் ஐயாவுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!!!//

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :-))))))

வெட்டிப்பயல் July 2, 2008 at 12:34 PM  

உங்க அரசியல் ஞானத்துக்கும் நீங்க தோடரே எழுதலாம் போல ;) (ஏதோ நம்மால முடிஞ்சது)

ச்சின்னப் பையன் July 2, 2008 at 1:06 PM  

வாங்க ராப், பிரேம்ஜி -> நன்றி...

வாங்க வெட்டி -> அவ்வ்வ்... இப்படி உசுப்பிவிட்டுத்தான் உடம்பு ரணகளமாயிருக்கு.... :-(((

Anonymous,  July 2, 2008 at 2:45 PM  

வரப்போகுது ஆட்டோ
தரப்போகுது ஹாட்டா
உடம்பாகும் ரணம்
செலவாகும் பணம்

ச்சின்னப் பையன் July 2, 2008 at 9:00 PM  

வாங்க வேலன் -> எவ்வளவோ பாத்துட்டோம். இத பாக்கமாட்டோமா... அவ்வ்வ்...

Sudha,  July 3, 2008 at 9:08 AM  

Felt soooo happy and relaxed after reading the last two lines.
Thanks for that. :)

தமிழ்ப்பறவை July 5, 2008 at 9:26 AM  

//வரப்போகுது ஆட்டோ
தரப்போகுது ஹாட்டா
உடம்பாகும் ரணம்
செலவாகும் பணம்

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்...

Anonymous,  July 8, 2008 at 7:18 AM  

Dumb NUT

சரவணகுமரன் July 8, 2008 at 10:15 AM  

அப்டேட் : "போண்டாடா" என்று சொன்னவரை, முன்னாடி எந்த ஹோட்டல்'லயோ சாப்பிட்டு காசு கொடுக்காம வந்ததா சொல்லி கைது பண்ணிட்டாங்க...

இப்ப அந்த குடும்பம் சாப்பிட எந்த ஹோட்டல் போறதுன்னு தெரியாம நாடு ரோட்டில் நிக்குறாங்க....

ARUVAI BASKAR July 8, 2008 at 11:23 AM  

முதலாளிக்கு பண உதவி செய்பவர் ,தலைமை ஓட்டல்(நடுவண் ) மூடப்பட்டதும் தானும் கல்லாவில் வந்து உட்காருவேன்(ஆட்சியில் பங்கு ) என்று சொல்வாரே ! அப்போது எப்படி நிம்மதியாக ஓட்டலை நடத்துகிறார் என்று பார்ப்போம் !

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP