ஏ ஃபார் ஏப்பிள்!!!
சங்கிலித்தொடரில் பதிவு போட அழைத்த தலைவி ராப்க்கு நன்றி..
ஏதோ நான் பாக்கற சிலபல (பலானன்னு படிச்சிடாதீங்க!!!) இணையதளங்களைப் பற்றி சொல்லலாம்னு..... நீங்களே படிச்சிப் பாருங்க..
b-bawarchi.com - திடீர்னு தங்கமணி சமைக்கக் கிளம்பிட்டா, அவங்க இந்த தளத்தைப் பாத்துதான் ஏதாவது ஸ்பெஷலா செய்வாங்க (அவ்வ்வ்வ்...). இப்போ இது food/sify.com ஆ மாறிடுச்சு...
C- craigslist.org; விளம்பரங்களே இல்லாத ஒரு வரி விளம்பரத் தளம். நான் மற்றும் என் நண்பர்களெல்லாம் கார் வாங்குவதற்கு உதவிய தளத்தில் இப்போது சென்னைப் பக்கங்களும் இருக்கிறது.
d- dinamalar.com : டீக்கடை பெஞ்சுக்காகவும், டவுட் தனபாலுக்காகவும் தினமும் பார்க்கும் தளம். நமக்கு புது பதிவுகள் போட நிறைய ஐடியாக்களை தினமும் தருபவர் - எல்லா அரசியல்வாதிகளையும் கலாய்க்கும் டவுட் தனபாலு.F-fandango.com : இது வாரயிறுதியிலே பக்கத்து கொட்டாய்லே ஏதாவது பாக்கற மாதிரி படம் இருக்குதான்னு பாக்கற தளம்.
I-Idlyvadai.com
பல மக்களைப் போல காலையில் எழுந்ததும், எனக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லிவிட்டு - பார்க்கும் முதல் தளம் இட்லிவடை.
ஒரு நாள் காலையில் எழுந்து என் பதிவுக்கு வந்தவர்கள் எவ்வளவு பேர் என்று பார்த்தால் பயங்கர அதிர்ச்சி - 500 பேருக்கும் மேல். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை, என்று சிறிது நேரம் கழித்து இட்லிவடை பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கே என் பதிவை குறிப்பிட்டிருந்தனர்.
அந்த ஒரு சிறு அறிமுகத்தால், அடுத்த 3 நாட்களுக்கு எனக்கு ஒரு 2000 ஹிட்ஸ் கிடைத்தது....
J-jeyamohan.in : புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. 'குமரி'ப் பக்கத்து பேச்சுவழக்கில் எழுதப்பட்ட தமிழுக்காக விரும்பிப் படிக்கும் தளம்.
K-kumudam.com: புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.
L-linkedin.com : சொல்லாமல் எஸ்கேப் ஆன பல பழைய ' நண்பர்கள்' இங்கேதான் எனக்கு திரும்ப கிடைத்தார்கள். என் 'சங்கிலியில்' இருப்பவர்கள் வேலை மாறினால், எனக்கு உடனுக்குடனே மெயில் அனுப்பி தெரிவித்துவிடும்.
M-Musicindiaonline.com : பலப்பல அருமையான பாடல்களின் தொகுப்பு அடங்கிய தளம். என்ன ஒண்ணு, எதையும் தரவிறக்கம் செய்ய முடியாது. அதனால், எனக்குப் பிடிச்ச பாட்டுக்களை ஒரு 'ஆல்பத்திலே' போட்டு, அதை ஓடவிட்டுடுவேன். அப்புறம் என்ன, அன்னிக்கு முழுவதும் மனம் மிகவும் அமைதியாக, சந்தோஷமாக இருக்கும்.
r-raaga.com - புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.
S-Scribd.com - பல நல்ல புத்தகங்கள், அகராதிகள் எல்லாம் கிடைக்குமிடம். நம்ம சுஜாதா, ரமணி சந்திரன் நாவல்கள் எல்லாம் இங்கேயிருந்துதான் இறக்கிப் படித்தேன்.
w-WebSudoku.com : 'சுடோகு' ஞாபகம் வந்தால், விளையாடப்போகும் தளம். பல்வேறு 'லெவல்'களில் விளையாடலாம். 'அலைபாயும்' மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நான் போகும் தளம்.
y-youtube - இங்கே போகாமல் யாராவது இருக்கமுடியுமா? 2.5 ஆண்டுகளாக தமிழ் சினிமா நகைச்சுவைக் காட்சிகளை இங்கேதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மற்றும் அடிக்கடி 'funny videos', 'bloopers' - இப்படி தேடித்தேடிப் பார்த்து சிரித்துக்கொண்டே இருப்போம்.
அடுத்து நான் பதிவு போட அழைக்கும் மூவர்:
1. சின்ன பிகேபி என்றழைக்கப்படும் - நமக்கு தினம்தினம் புதுப்புது தொழில் நுட்பப் பதிவுகளை அள்ளி வழங்கும் நண்பர் பிரேம்ஜி
2. தினமும் நல்லா மழித்துவிட்டு, எனக்கு மீசையே முளைக்கவில்லை என்று வருத்தப்படும் நண்பர் விக்னேஸ்வரன்
3. நானே மறந்துவிட்டாலும், நாந்தான் மன்றத்தின் துணைத்தலைவர் என்று வாயார கூப்பிடும் நண்பர் அப்துல்லா.
37 comments:
me the first
நல்ல நல்ல தளங்கள் அறிமுகத்துக்கு நன்றி. scribd.comகு ஸ்பெஷல் நன்றி :):):)
நாம நம்ம தல பேர்ல ஒரு இணையப்பக்கத்தை ஆரம்பிக்கலாம்னு பார்த்தா, இன்னைய தேதிக்கு தமிழ்மணமே நம்ம தல தயவுல இயங்கிக்கிட்டு இருக்காப்புல ஒரு பீலிங்:):):)
//தினமும் நல்லா மழித்துவிட்டு, எனக்கு மீசையே முளைக்கவில்லை என்று வருத்தப்படும் நண்பர் விக்னேஸ்வரன்//
:):):)
துணைத் தலைவரேன்னு கூப்புட்ட ஓரே பாவத்துக்காக என்னைய இதுல மாட்டிவுடனுமா?
ஓ.கே. நிறைய ஆணி இருக்கதால இன்னும் 2 நாள் கழித்து ப்திவு போட்டுடுறேன்.
நல்ல collection !!!
:-))))....
வாங்க ராப் -> அப்பாடா... நீங்க வந்துதான் மானத்த காப்பாத்துனீங்க... ( நேத்து... நேத்து... என்னெ நல்லவன்னு சொல்லிட்டாங்க..... அவ்வ்வ்..)
ஆளுங்கட்சியை திட்டித்திட்டியே நிறைய பேர், பிரபலமாகிறமாதிரி, நம்ம தலய உபயோகப்படுத்திக்கறாங்க... ம்...
//வாங்க ராப் -> அப்பாடா... நீங்க வந்துதான் மானத்த காப்பாத்துனீங்க...//
அந்த மனுசன் என் மானத்தை வாங்கிட்டு போயிட்டாருயா... அவ்வ்வ்
வாங்க விஜய் -> நன்றிங்க...
வாங்க விக்கி -> இப்படியெல்லாம் சமாளிக்கமுடியாது... நான் சொல்லியிருப்பதற்கு என்ன பதில்???
//திடீர்னு தங்கமணி சமைக்கக் கிளம்பிட்டா, //
திடீர்னு வர்ற அதிர்ச்சியெல்லாம் எப்படி தாங்க்குரிங்க
வால்பையன்
//விளம்பரங்களே இல்லாத ஒரு வரி விளம்பரத் தளம்.//
அப்போ அது சேவைத்தளம்
வால்பையன்
//நமக்கு புது பதிவுகள் போட நிறைய ஐடியாக்களை தினமும் தருபவர் //
இது தானா ரகசியம்.
//இது வாரயிறுதியிலே பக்கத்து கொட்டாய்லே ஏதாவது பாக்கற மாதிரி படம் இருக்குதான்னு பாக்கற தளம்.//
அப்போ சினிமா விமர்சனம் எங்கே?
வால்பையன்
//பார்க்கும் முதல் தளம் இட்லிவடை. //
நீங்க என்ன ஐஸ் வைச்சாலும் இட்லிவடை உங்களுக்கு பின்னூட்டம் போட மாட்டார்
வால்பையன்
//இட்லிவடை பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கே என் பதிவை குறிப்பிட்டிருந்தனர்.//
பொதுசேவை விளம்பரம் தருவது இட்லிவடை
வால்பையன்
//அடுத்த 3 நாட்களுக்கு எனக்கு ஒரு 2000 ஹிட்ஸ் கிடைத்தது....//
போதும் போதும் இட்லிவடைக்கு ஜலதோஷம் பிடித்து விட்டது
வால்பையன்
//குமரி'ப் பக்கத்து பேச்சுவழக்கில் எழுதப்பட்ட தமிழுக்காக விரும்பிப் படிக்கும் தளம்//
பக்கத்துல குமரிய உட்கார வச்சுகிட்டு எழுதுவாரோ
வால்பையன்
//kumudam.com: புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.//
ஏன் இல்லை. இந்த வாரம் வாங்கி படியுங்கள். புதிதாக ஏதாவது இருக்கும்
வால்பையன்
//சொல்லாமல் எஸ்கேப் ஆன பல பழைய ' நண்பர்கள்' இங்கேதான் எனக்கு திரும்ப கிடைத்தார்கள்.//
பாவம்! இங்கே வந்தும் தொல்லையா என்று தலையில் அடித்து கொள்வார்கள்
வால்பையன்
//பலப்பல அருமையான பாடல்களின் தொகுப்பு அடங்கிய தளம். என்ன ஒண்ணு, எதையும் தரவிறக்கம் செய்ய முடியாது.//
www.cooltoad.com
www.123musiq.com
இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
வால்பையன்
//விளையாடவும் நிறைய இருக்கிறது இங்கே. //
ச்சின்னப்பையன் புத்திய காட்டிடிங்க்களே!
வால்பையன்
//r-raaga.com - புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. //
மறுக்கா கூவுவூவூ
(அதாவது எனக்கும் சொல்ல ஒண்ணுமில்லை)
வால்பையன்
//பல நல்ல புத்தகங்கள், அகராதிகள் எல்லாம் கிடைக்குமிடம். நம்ம சுஜாதா, ரமணி சந்திரன் நாவல்கள் எல்லாம் இங்கேயிருந்துதான் இறக்கிப் படித்தேன்.//
அந்த மாதிரி புத்தகமெல்லாம் எங்கே கிடைக்கும்
வால்பையன்
// 'சுடோகு' ஞாபகம் வந்தால், விளையாடப்போகும் தளம். பல்வேறு 'லெவல்'களில் விளையாடலாம். 'அலைபாயும்' மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நான் போகும் தளம்.//
ஆனா வேலை மட்டும் செய்யுறதில்லை
வால்பையன்
// தெஹெல்கா தளத்தைப் பாத்து வர்ற கோபத்தையெல்லாம், தமிழ்மூவிவேவ்ஸ் தளத்தில் இருக்கும் பழைய விசு படங்களைப் பாத்து ஆத்திக்குவோம்.//
நாங்க ரெண்டு ரவுண்டு ஊத்திக்குவோம்
வால்பையன்
//y-youtube - இங்கே போகாமல் யாராவது இருக்கமுடியுமா? //
அதான! அப்புறம் சம்பளம் எப்படி வாங்குறதாம்.
இந்த மாதிரி தளத்துக்கேல்லாம் போகலேன்னா கம்பெனி கோவிச்சுகாது
வால்பையன்
வாங்க வாஆஆஆஅல் -> அடடா, அடடா, இன்னிக்கு வேறே யாரும் கிடைக்கலியா? இங்கே ஒரு பெரிய வீடே இல்லே இல்லே பங்களாவே கட்டிட்டீங்க.... 17 கமெண்ட் போட்ட உங்களுக்கு 17 ஓஓஓஓஓ-ஓஓஓஓஓ-ஓஓஓஓஓ-ஓஓ...
பட்டியல் அருமை. :-))
வால் பையனுக்கு 17 நன்றி..
இன்னிக்கு நான் லீவு...:((((((((((
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(நீங்களும் லீவு போட்ருங்க Small boy).
எனக்குத் தெகல்கா மிர்ச்சிதான் தேறும்போல இருக்குது.
வாங்க பிரேம்ஜி -> நன்றி.
வாங்க வழிப்போக்கன் -> நல்ல தூக்கமா?.... நல்லது
வாழ்க ராஜ நடராஜன் -> ஹிஹி. எனக்கு ஒண்ணும் பிரியல....
/
b-bawarchi.com - திடீர்னு தங்கமணி சமைக்கக் கிளம்பிட்டா, அவங்க இந்த தளத்தைப் பாத்துதான் ஏதாவது ஸ்பெஷலா செய்வாங்க (அவ்வ்வ்வ்...). இப்போ இது food/sify.com ஆ மாறிடுச்சு...
/
அதுக்கப்புறம் எந்த ஆஸ்பத்திரிக்கு போகறதுன்னு எந்த தளத்தை பாப்பீங்க அதை சொல்லவே இல்லையே!?!?
:))
// ஹிஹி. எனக்கு ஒண்ணும் பிரியல....//
நீங்க குறிப்பிட்டிருக்கும் T=தெகல்கா வை எனக்கு தேறும் மிர்ச்சி=மிளகாய்ன்னு சொன்னேன்.தெகல்கான்னாலே காரமிளகாய்ன்னு அர்த்தமாம்.
அண்ணா ஏ பார் ஆப்பிள் பதிவு போட்டாச்சு
நல்ல பயனுள்ள தொகுப்புகள் நன்றி.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
come the site fristtime good collection thank you
frist time come the site good
collection thankyou
Post a Comment