Wednesday, July 23, 2008

கிறுக்கியது யார் - அரைபக்கக் கதை

அண்ணே. இது தமிழ்லேதான் எழுதியிருக்காங்க. ஆனா, என்னன்னே புரியலே.

அட, எனக்குத்தான் புரியலேன்னு படிக்கற புள்ளே உன்னைக் கூப்பிட்டா, என்னடா நீயும் இப்படி சொல்றே?

விஷயம் இதுதான். சுரேஷுக்கு சுவற்றில் அரசியல் தலைவர்களை வரவேற்று எழுதுவது, விளம்பரங்கள் எழுதுவது போன்ற வேலை. இன்று சற்றே வித்தியாசமாக, சில பங்களாக்களின் சுவற்றில் 'போஸ்டர் ஒட்டாதீர்கள்', 'Stick No Bills' என்று மாற்றி மாற்றி எழுதும் வேலை கிடைத்துள்ளது. காலையிருந்து எழுதிக்கொண்டு இருக்கிறான். திடீரென்று பார்த்தால், தான் முதன்முதலில் எழுதிய சுவற்றில் யாரோ எதையோ கிறுக்கி வைத்திருக்கிறார்கள்.

அது என்னவென்று புரியாமல், அங்கே போய்க்கொண்டிருந்த ஒரு பள்ளிச்சிறுவனை கூப்பிட்டு கேட்டபோது, அந்த சிறுவன் சொன்னதுதான் இந்த கதையின் முதல் வசனம்.

"எனக்கு ஒரு ஐடியா. எங்க வீட்டுலே ஒருத்தர் இருக்கார். அவர் கவிதை, கதை எல்லாம் நல்லா எழுதுவார். 'தமிழ்மணம்' அப்படின்னு ஒரு இடம் இருக்கு. எப்போ பாத்தாலும் அங்கே போய் ஏதாவது கிறுக்கிக்கிட்டே இருப்பாரு. நான் அவரைக் கூட்டிண்டு வரேன். இங்கேயே இருங்க. அதை அழிச்சிடாதீங்க. ரெண்டு நிமிஷத்தில் வரேன்."

வந்தவர், அங்கே எழுதியிருப்பதைக் கண்டு, அடுத்த ஐந்து நிமிடம் சிரித்துக்கொண்டே இருந்தார்.

அப்படி அங்கே என்ன எழுதியிருந்தது என்று சற்று கீழே போய் பார்த்துவிட்டு, அந்த சுவற்றில் யார் அப்படி கிறுக்கியிருப்பார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்...

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

'மீ த பஷ்டு'.

35 comments:

சிங்கை நாதன்/SingaiNathan July 23, 2008 at 5:52 AM  

'மீ த பஷ்டு'. :)
anputan
singai nathan

சரவணகுமரன் July 23, 2008 at 6:07 AM  

ஹி... ஹி...

அத எழுதினது யாரு?

rapp July 23, 2008 at 6:21 AM  

நான் 'அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....' னு இருக்கும்னு நினைச்சேன். ஆனா நீங்க சொல்லிருக்கறத கிட்டத்தட்ட எல்லாருமே அடிச்சி பிடிச்சி சொல்வாங்களே

rapp July 23, 2008 at 6:22 AM  

அதனால வழக்கம் போல நீங்களே சொல்லிடுங்க :):):)

Syam July 23, 2008 at 6:25 AM  

ROTFL...

மீ த போர்த்து :-)

Kanchana Radhakrishnan July 23, 2008 at 6:48 AM  

இதுக்கு பின்னூட்டமா இன்னொரு கால் பக்கக் கதை
ஒரு வெளிநாட்டுக்காரன் சென்னையில் திருவெல்லிக்கேணியில் ஒரு விலாசம் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்துக் கொண்டிருந்தான் ஒரு மணி நேரமாக.
கடைசியில் அந்த தெருவைக் கண்டுபிடித்தான்.
அடுத்த தடவை வரும்போது அலையக்கூடாது என்று புத்திசாலித்தனமாக தெருமுனையில் எழுதியிருந்த தமிழ் வாசகத்தை தன் நாட்குறிப்பில்
எழுதிக்கொண்டான்.அவன் எழுதிக்கொண்டது என்ன?.
.>>
>
>
<
>
இங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது

பரிசல்காரன் July 23, 2008 at 7:14 AM  

கிறுக்கியது நீங்க...

படிக்கறது நாங்க!

பரிசல்காரன் July 23, 2008 at 7:14 AM  

//அவர் கவிதை, கதை எல்லாம் நல்லா எழுதுவார்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஸயீத் July 23, 2008 at 7:16 AM  

Me tha bushdu

அட நல்லாயிருக்கு, உங்க நக்கல்.

:-))!

சின்னப் பையன் July 23, 2008 at 7:17 AM  

வாங்க சிங்கை நாதன், ஸ்யாம் -> நன்றி..

சரவணகுமரன், ராப் -> நிறைய பேர் 'அதை' சொன்னாலும், 'அதுனாலே'யே பேர் வாங்கினவர் யார் தெரியுமா?...

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> ஓ. கதை சூப்பர். ( நான் திருவல்லிக்கேணியில் 25 வருஷம் சிறுநீர் கழிச்சவங்க.. அட. தெருவிலே இல்லே.....)

VIKNESHWARAN ADAKKALAM July 23, 2008 at 8:10 AM  

என்னக்கு தெரியும்... சொல்ல மாட்டேன்... மற்றவர்கள் கண்டு பிடிக்கிறார்களா என பார்க்கிறேன்...

MyFriend July 23, 2008 at 8:23 AM  

அது "மீ தி ஃபர்ஸ்ட்டூ"....

;-)
;-)
;-)

சின்னப் பையன் July 23, 2008 at 8:38 AM  

வாங்க பரிசல் -> (கவிதை, கதை....) அது நீங்கதான்...

வாங்க ஸயீத் -> நன்றி..

வாங்க விக்னேஸ்வரன் -> அது சரி. உங்களுக்கும் தெரியாதா!!!!!

வாங்க மை ஃப்ரெண்ட் -> ஆமாங்க. நன்றி..

Veera July 23, 2008 at 11:29 AM  

ஹா.ஹா.ஹா.

வாவிசி! (வாய் விட்டு சிரிச்சேன்! :D)

வால்பையன் July 23, 2008 at 11:43 AM  

எங்கள் பின்னூட்ட புயல்களை கிண்டலடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

வால்பையன்

சின்னப் பையன் July 23, 2008 at 11:58 AM  

வாங்க பாஸ்கர், வீரசுந்தர் -> ரசித்ததற்கு நன்றி...

வாங்க வால்பையன் -> ஆமாமா. உங்களோட சேந்து நானும் கண்டிக்கிறேன்... (இது மத்திய அரசை எதிர்த்து திமுக செய்யும் 'உண்ணாவிரதம்' மாதிரி).... அவ்வ்வ்வ்....

புதுகை.அப்துல்லா July 23, 2008 at 11:50 PM  

வாங்க வால்பையன் -> ஆமாமா. உங்களோட சேந்து நானும் கண்டிக்கிறேன்... (இது மத்திய அரசை எதிர்த்து திமுக செய்யும் 'உண்ணாவிரதம்' மாதிரி).... அவ்வ்வ்வ்....
//

மறுக்கா கூவு(ரிப்பீட்டு)

தாரணி பிரியா July 24, 2008 at 12:19 AM  

// ச்சின்னப் பையன் said...
வாங்க பாஸ்கர், வீரசுந்தர் -> ரசித்ததற்கு நன்றி...

வாங்க வால்பையன் -> ஆமாமா. உங்களோட சேந்து நானும் கண்டிக்கிறேன்... (இது மத்திய அரசை எதிர்த்து திமுக செய்யும் 'உண்ணாவிரதம்' மாதிரி).... அவ்வ்வ்வ்....//


பின்னூட்டத்துல கூட உங்க நக்கல் குறையாது போல இருக்கு.

சின்னப் பையன் July 24, 2008 at 6:53 AM  

வாங்க அப்துல்லா, தாரிணி பிரியா -> என்ன பண்றது சொல்லுங்க... அந்த 'சம்பவம்' அப்படி... கோபத்தை நக்கலாதானே வெளிபடுத்தமுடியும்....:-((((

வெண்பூ July 24, 2008 at 7:07 AM  

//ச்சின்னப் பையன் said...
வாங்க அப்துல்லா, தாரிணி பிரியா -> என்ன பண்றது சொல்லுங்க... அந்த 'சம்பவம்' அப்படி... கோபத்தை நக்கலாதானே வெளிபடுத்தமுடியும்....:-((((
//

ச்சின்னப்பையன் இப்போல்லாம் ரொம்ப சீரியஸ் பையன் ஆகிட்டே இருக்கார். இடுகைக்கு இடுகை முன்னேற்றம் தெரியுது. ஸ்டார் பதிவர் ஆகாம நிக்க மாட்டார் போல...:))))

சின்னப் பையன் July 24, 2008 at 12:52 PM  

வாங்க வெண்பூ -> ஏங்க இப்படி? உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு இங்கே ரணகளமாயிட்டிருக்கு... அவ்வ்வ்....:-)

வெண்பூ July 24, 2008 at 1:01 PM  

//உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு இங்கே ரணகளமாயிட்டிருக்கு//

கண்டிப்பாக தவறில்லை ச்சின்னப்பையன். நம் போன்றவர்களின் கோபத்தை வெளிக்காட்ட ஒரு வடிகாலாக இணையம் இருப்பது நல்லதுதான் (அட்லீஸ்ட் நமது ஹெல்த்திற்காவது)

Selva Kumar July 24, 2008 at 3:17 PM  

அடுத்த பதிவு எப்போ ??

Selva Kumar July 24, 2008 at 3:20 PM  

//நிறைய பேர் 'அதை' சொன்னாலும், 'அதுனாலே'யே பேர் வாங்கினவர் யார் தெரியுமா?...
//

நிச்சயம் சொல்லனுமா ?

வேண்டாம் தெரியாது..நீங்களே சொல்லீருங்க...அழுதுருவேன்...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்..

சின்னப் பையன் July 24, 2008 at 4:07 PM  

//நம் போன்றவர்களின் கோபத்தை வெளிக்காட்ட ஒரு வடிகாலாக இணையம் இருப்பது நல்லதுதான் (அட்லீஸ்ட் நமது ஹெல்த்திற்காவது)//

100% சரியா சொன்னீங்க...

வாங்க வழிப்போக்கன் -> அவ்வ்வ்வ்..... என்ன இது 'அடுத்த பதிவு' எப்போன்னு சின்னபுள்ளதனமா ஒரு கேள்வி?... (ஏதாவது சரக்கிருந்தா இன்னிக்கு கோட்டாலே போட்டிருப்போம்லே.....!!!)... இனிமே திங்கட்கிழமைதான்.... :-(((

இவன் July 24, 2008 at 9:49 PM  

//கிறுக்கியது நீங்க...

படிக்கறது நாங்க!//


ரிப்பீட்டேடேடேடேடேடேடே

Sathiya July 25, 2008 at 1:40 AM  

யாருங்க அவரு? இளைய திலகம் பிரபுவா?. அவரு தான் இந்த மாதிரி சீரியஸா டயலாக்(என்ன கொடுமை சார் இது?) சொன்னா எல்லாரும் அதை வச்சு காமெடி பண்ணுவாங்க;)

Sangeeth July 25, 2008 at 10:11 AM  

liked it very much...not only this but also ur other posts...keep going...next time tamilla ezhutharen.....

சின்னப் பையன் July 25, 2008 at 10:45 AM  

வாங்க இவன், சங்கீத் -> நன்றிங்க...

வாங்க சத்யா -> அட. நீங்க எங்கேயோ போயிட்டீங்க... நான் சொன்னது நம்ம வலைப்பதிவரைங்க...

Sathiya July 25, 2008 at 7:35 PM  

//அட. நீங்க எங்கேயோ போயிட்டீங்க... நான் சொன்னது நம்ம வலைப்பதிவரைங்க...//
அதை தாங்க கேட்டேன்;)

சின்னப் பையன் July 25, 2008 at 9:46 PM  

சத்யா -> சரி. விடமாட்டீங்க. மங்களூர் சிவா அல்லது மை ஃபிரெண்ட் இவங்க ரெண்டு பேர்லே யாரோ ஒருத்தருதான் அவரு... (யாரு அந்த கமெண்ட் போடறத ஆரம்பிச்சாங்கன்னு தெரியல...)

ராஜ நடராஜன் July 26, 2008 at 8:36 AM  

இன்னிக்கி லீவு.அதுதானாலக் கொஞ்சம் கிட்னி வேலை செய்யுது.ஆபிசா இருந்தா அவ்வ்வ்வ் மட்டும் சொல்லியிருப்பேன்.

"போஸ்டர் ஓட்டாதீர்கள்" :)

ராஜ நடராஜன் July 26, 2008 at 8:41 AM  

பரிசு என்கிட்ட கொடுப்பீங்கன்னு வெயிட்டிங்:)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP