ஜோசியர் ஒருவர் மென்பொருள் நிபுணரானால்!!!
1. மென்பொருள்லே பிரச்சினை இருந்தாக்கா, உக்காந்து அதை தீர்க்கற வழிபாருங்க. அதை விட்டுட்டு, இந்த இடத்துக்குப் போ, அந்த கோவிலுக்குப் போ - எல்லா பிரச்சினையும் தீந்துடும்னு சொல்லாதீங்க...
2. இன்னிக்கு எனக்கு உகந்த மென்பொருள் 'விஷுவல் பேசிக்'தான் - அதிலேதான் வேலை செய்வேன்னுல்லாம் இங்கே சொல்லமுடியாதுங்க. நாங்க என்ன சொல்றோமோ அதுதான் செய்யணும்.
3. ஏங்க நாம நடத்தறது வெளிநாட்டுக்கு மென்பொருள் ஏற்றுமதி செய்யற கம்பெனி. நேர்முகத் தேர்வுக்கு வர்றவங்களுக்கு ஜாவா தெரியுமான்னு கேளுங்க. அவங்க ஜாதகத்திலே லக்னம் எங்கேயிருக்கு தெரியுமான்னு கேக்காதீங்க..4. இந்த மென்பொருள் எப்போ முடிப்பீங்கன்னு க்ளையண்ட் கேட்டதற்கு, 9-க்குள்ளே ஒரு நம்பர் சொல்லுன்னீங்களாமே? ஏங்க, ஒழுங்காவே பேசமாட்டீங்களா?
5. நம்ம எம்.டிகிட்டே பணம் இருக்கும்போதுதான் எல்லாருக்கும் பெரிய கணிணித்திரை வாங்கித் தருவார். உங்களுக்கு இப்போ ரொம்ப நல்ல நேரம்னீங்கன்னா, உங்க கைக்காசை போட்டு வாங்கிக்கோங்க.6. உங்களை இங்கே மாச சம்பளத்துக்குத்தான் எடுத்திருக்கோம். மூணு கேள்விக்கு 200ரூபாய் கணக்கெல்லாம் வேலைக்காகாது. ஒழுங்கா வேலையை பாருங்க.
7. இந்த மென்பொருள்லே இருக்கிற ரெண்டு மாட்யூல்களை இன்னிக்கே 'இணைச்சி' சரி பார்க்கணும். அதுக்கெல்லாம் நல்ல முஹூர்த்தம் பாத்துக்கிட்டிருக்க முடியாதுங்க.8. நம்ம கம்பெனியோட வரலாறு எல்லாமே தெள்ளத்தெளிவா நம்ம வலைப்பக்கத்துலேயே போட்டிருக்கு. நீங்க என்னமோ உங்க ஜோசியத்தாலே கண்டுபிடிச்சாமாதிரி பேசிக்கிட்டிருக்கீங்களே?
9. க்ளையண்ட் இந்த வாரத்துக்குள்ளே இந்த பிரச்சினையை முடிக்கணுன்றான். நீங்க என்னடான்னா, 3 மாசத்துக்குள்ளே பிரச்சினை தன்னாலே தீந்துடும்றீங்களே? அது எப்படிங்க தன்னாலே முடியும்?
10. உங்க பக்கத்து க்யூப்லே இருக்கிற குரு, எதிர் க்யூபுக்கு மாறி வந்தாத்தான் உங்களாலே நல்லா வேலை பாக்கமுடியும்றீங்களே - அதெல்லாம் இங்கே நடக்காது.
30 comments:
ஐய்யா.. நாந்தான் மொதல் கும்மி!
:)
அடுத்ததாக ச்சின்னப்பையன் எழுதப்போவது..
# பஸ் கண்டக்டர் மென்பொருள் நிபுணரானால்..
# சினிமா ஸ்டன்ட் கலைஞர் மென்பொருள் நிபுணரானால்..
# பூக்காரன் மென்பொருள் நிபுணரானால்..
# டி.வி.சீரியல் டைரக்டர் மென்பொருள் நிபுணரானால்..
# டாக்ஸி டிரைவர் மென்பொருள் நிபுணரானால்..
# டாஸ்மாக் சூபர்வைசர் மென்பொருள் நிபுணரானால்..
# ட்ராஃபிக்போலீஸ் மென்பொருள் நிபுணரானால்..
# ராப்பிச்சைக்காரர் மென்பொருள் நிபுணரானால்..
# நாவிதர் மென்பொருள் நிபுணரானால்..
# ரயில்வே டி.டி.ஆர் மென்பொருள் நிபுணரானால்..
# பரிசல்காரன் மென்பொருள் நிபுணரானால்..
போதுமா?
பரிசல்காரன் சொன்னதோட தொடர்ச்சி..
ச்சின்னப் பையன் மென்பொருள் நிபுணரானால்..... மத்த எல்லாரயும் மென்பொருள் நிபுணராக்கி அழகு பாப்பாரு!! :-)
ரொம்ப கலாய்ச்சா சூனியம் வச்சுருவாங்க
ஜோசியகாரங்க ஜாக்கிரதை
வால்பையன்
வாங்க பரிசல் -> அவ்வ்வ்வ். என்னோட 'drafts'லே இருக்கிறதெல்லாம் நீங்க எப்ப பாத்தீங்க???????
வாங்க சிவா -> நன்றி...
வாங்க வீரசுந்தர் -> அவ்வ்வ். நீங்களுமா?........:-)))
வாங்க பிரேம்ஜி -> நன்றி..
வாங்க வால் -> என்னங்க ஜோசியக்காரங்களை மந்திராவாதிகளோட ஒப்பிடறீங்களே?... ஆஆஆ..
//இந்த மென்பொருள் எப்போ முடிப்பீங்கன்னு க்ளையண்ட் கேட்டதற்கு, 9-க்குள்ளே ஒரு நம்பர் சொல்லுன்னீங்களாமே? ஏங்க, ஒழுங்காவே பேசமாட்டீங்களா?//
சூப்பர் :-)
ஏனுங்க, வேலையில ஏதவது தப்பு இருந்தா கூட போட்டி நிறுவனத்தார் வைச்ச செய்வினைனு சொல்றத விட்டுட்டீங்க?
இந்த வாரம் ஜோசியம்னு வலையில எல்லாரும் முடிவு பண்ணீடிங்களா?
நீங்க - ஜோசியர் மென்பொருள் நிபுணரானால், லக்கி - கிளி ஜோசியம். வாலபையன் வேற சூடா இருக்கார்.
வாங்க வெட்டி -> நன்றி...
வாங்க ஜோசப் -> முதல் வருகைக்கு நன்றி... இப்படியும் சொல்லலாமே?... ம்...
வாங்க வேலன் -> நாம எப்பவுமே 'ட்ரெண்ட்' பாத்துதான் பதிவே போடறது.. எப்படி...:-)))
//# பரிசல்காரன் மென்பொருள் நிபுணரானால்..//
இது நேயர் விருப்பமா அடுத்ததா போட முடியுமா ?
// க்ளையண்ட் இந்த வாரத்துக்குள்ளே இந்த பிரச்சினையை முடிக்கணுன்றான். நீங்க என்னடான்னா, 3 மாசத்துக்குள்ளே பிரச்சினை தன்னாலே தீந்துடும்றீங்களே? அது எப்படிங்க தன்னாலே முடியும்?//
:)) ROTFL..
சூப்பர் ச்சின்னப்பையன்....அடிச்சு ஆடுறீங்க..
வாங்க வழிப்போக்கன் -> சிரிச்சதுக்கு நன்றி... 'பரிசல்' பதிவு - இது வரைக்கும் எந்த பதிவரைக் குறித்தும் நான் பதிவு போட்டதில்லை. அதனால், சிறிது யோசிக்கிறேன்.... எனினும் ஐடியாவுக்கு நன்றி...
நன்றி வெண்பூ.
பரிசலப் பத்தி கண்டிப்பாக எழுதவும்.
ரசிக்கவே செய்வார். வேறு விதமாக எடுத்துக்கொள்ள மாட்டார்.
ஹா ஹா..
1.எனக்கு இன்னிக்கி கீப்போர்டு-ல கண்டம் அதுனால கோட் எல்லாம் அடிக்க முடியாதுன்னு சொல்றதெல்லாம் ஓவர்
2.உங்க ராசியான கலர் என்னவோ அதே கலர்ல தான் கீப்போர்டு,மவுஸ் எல்லாம் இருக்கனும்னு கேக்கறது தப்பு.
3.Project Plan-கூட ஜாதக கட்டம் மாதிரி தான் தருவேன்னு அடம் பிடிக்காதீங்க :P
இதே மாதிரி சீக்கிரம் பின்நவீனத்துவ வாதி மென்பொருள் நிபுணரானால், அப்புறம் நம்ம மன்றத்து நேயர் விருப்பமா, அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மென்பொருள் நிபுணரானால், போட்டிருங்க
இதெல்லாத்தையும் விட குரு(காடுவெட்டி இல்லைங்க) வணக்கம் ரொம்ப முக்கியாமில்லைங்களா, அதால நம்ம குருவான 'பேரரசு மென்பொருள் நிபுணரானால்' மறந்திடாதீங்க.
ரம்யா ரமணி சொன்னதும் சூப்பரா இருக்குங்க, அதையும் கூட சேர்த்துக்கலாம்.
ஆனாலும் நீங்க எப்படித்தான் இவ்வளவு சூப்பரா யோசிக்கறீங்களோ, இவ்வளவு சிந்திக்கறவரு, ஏன் நம்ம தலயோட ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதி, டைரக்ட் பண்ணக் கூடாது?
:):):)
வாங்க வேலன் -> அது சரி. பரிசல் நல்லபடியாத்தான் எடுத்துப்பாரு.. முயற்சி பண்றேன்... நன்றி..
நன்றி ஆதர் -> ஒரு கமெண்டை போட்டுட்டு, நானும் மத்தவங்களும் படிக்கறதுமுன்னே அதை தூக்கிவிட்டதற்கு... :-)))
வாங்க ரம்யா ரமணி -> ஹாஹா.. ஆமாங்க. இப்படியே சொல்லிக்கிட்டே போகலாம். நன்றி...
வாங்க ராப் -> ச்சீ போங்க. எனக்கு வெக்க வெக்கமா வருது. ஆனாலும் ஒரு சூப்பர் ஐடியா கொடுத்திருக்கீங்க. 'பின்நவீனத்துவ வாதி' மென்பொருள் நிபுணரானால்!!!... யோசிக்கிறேன்.... அவ்வ்வ்வ்..
// அது சரி. பரிசல் நல்லபடியாத்தான் எடுத்துப்பாரு.. முயற்சி பண்றேன்... நன்றி..//
இந்த முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இந்த ஐடியா கொடுக்கவில்லை. உங்களுக்கு அதுபோல் தோன்றினால் தற்செயலானதே...
//அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மென்பொருள் நிபுணரானால், போட்டிருங்க//
நான் ஏற்கெனவே புக் பண்ணியிருக்கிறேன். வெறும்(பய)ரித்தீஷ்க்கு தொல்லை பொடுத்தால் தமிழ்மணத்தில் புகார் செய்யப்படும்.
////நம்ம கம்பெனியோட வரலாறு எல்லாமே தெள்ளத்தெளிவா நம்ம வலைப்பக்கத்துலேயே போட்டிருக்கு. நீங்க என்னமோ உங்க ஜோசியத்தாலே கண்டுபிடிச்சாமாதிரி பேசிக்கிட்டிருக்கீங்களே?////
சூப்பரப்பு!
Good one!!
Vasan
டைம் பாத்து அடிக்கப்பட்ட சூப்பர் கில்லி !!!
:)
உங்களை இங்கே மாச சம்பளத்துக்குத்தான் எடுத்திருக்கோம். மூணு கேள்விக்கு 200ரூபாய் கணக்கெல்லாம் வேலைக்காகாது. ஒழுங்கா வேலையை பாருங்க.//
ஹா..ஹா கலக்குறே சந்துரு..
ஓகே வழிப்போக்கன். ஒரு வேளை நான் 'பரிசல்' பதிவை போட்டுட்டா, அதுக்கும் உங்களுக்கும் சம்மந்தமேயில்லைன்னு ஒரு டிஸ்கியே போட்டுடறேன்... ஓகேவா....
வந்ததற்கும் ரசித்ததற்கும் நன்றிங்க மோகன், வாசன், சரவணகுமரன் மற்றும் அப்துல்லா...
தல ரவி... வாங்க வாங்க... ரொம்ப நன்றி...
Post a Comment