விண்கூட்டர் விபத்து!!!
கிபி 2080.சென்னை நங்கநல்லூரில் ஒரு காலை வேளை. மணி 7.00.
காட்சி - 1:சுரேஷ் பரபரப்பாக அலுவலகம் கிளம்பும் நேரம். தன் வீட்டின் 110வது மாடியில் நிறுத்தப்பட்டிருந்த தன் விண்கூட்டரை (விண் ஸ்கூட்டர்) நோக்கி மின் தூக்கியில் போய்க்கொண்டிருக்கிறான்.
"இன்னும் 10 நிமிடத்தில் என்னுடைய Exit-ஐ அடைந்துவிட்டால், அடுத்த 100 கிலோ மீட்டர்களை 5 நிமிடத்தில் கடந்துவிடலாம். 7.30 மணிக்குள் அலுவலகம் போய்ச்சேர வேண்டும். ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது".
வண்டி புறப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும், நிர்ணயிக்கப்பட்ட பாதையை நோக்கி திருப்பினான்.
சுரேஷ் 5 நிமிடத்தில் தன் அலுவலகம் போவதற்குள், நாம் இந்த 'விண்கூட்டர்' பற்றி தெரிந்துகொள்வோம், வாங்க.
பத்து வருடங்களுக்கு முன் நம் மக்கள் கண்டுபிடித்த வண்டிதான் இந்த விண்கூட்டர். சூரிய ஒளியை பயன்படுத்தி பறக்க/ஓடக்கூடியது. இந்தியாவில் பெட்ரோல் சுத்தமாக இல்லாமல் போய்விட்டதால், இதை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தனர். ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால், ஒருவர் உட்காரக்கூடிய விண்கூட்டர் 1000 கிமீ வரை போகும்.
இந்தியாவில் சூரியஒளிக்கு பஞ்சமேயில்லாததாலும், வேறு வழியில்லாததாலும் மக்கள் இதை போட்டி போட்டுக்கொண்டு வாங்க ஆரம்பித்தனர். சில நாட்களில், சாலைகளில் நெரிசல் அதிகமாகி, வண்டி ஓட்டவே இடமில்லாமல் போனதால், அதே வண்டியை பறக்க வைக்க முயன்று அதிலும் வெற்றி பெற்றுவிட்டனர்.
ஓகே. மறுபடி கதைக்கு வரலாம்.
இன்னும் ஒரு நிமிடம்தான். அலுவலகம் வந்துவிடும். விசில் அடித்துக்கொண்டே வந்த சுரேஷ், திடீரென்று அலறினான்.
"ஆஆ. இதென்ன பொருள்னே தெரியலையே. திடீர்னு என் பாதையில் வந்துவிட்டதே. இந்த வேகத்தில் நான் ப்ரேக் போட்டால் என் கதி?" - ஆனால், யோசிக்க நேரமில்லை. பிரேரரரக் அடித்தான் சுரேஷ்.
காட்சி - 2
சுரேஷ் கண்விழித்துப் பார்த்த இடம் ஒரு மருத்துவமனை.
" நான் எங்கே இருக்கேன். எனக்கு என்ன ஆச்சு???"
"கவலைப்படாதீங்க. உங்களுக்கு ஒண்ணுமில்லை. சிறிய விபத்துதான். ஒரு வாரம் மயக்கமா இருந்து இப்பத்தான் முழிச்சிருக்கீங்க..."
"டாக்டர், எனக்கு என்ன ஆச்சு? நான் பறக்கும்போது எதுமேலேயோ மோதிட்டேன்னு நினைக்கிறேன். அது என்னன்னு தெரியல".
"ஆமா... நீங்க மோதினது ஒரு சின்ன வான்குடை (Parachute) மேல்"
"என்னது? வான்குடையா? சிறுவர்கள் விளையாட்டுப் பொருளா அவ்ளோ மேலே வந்தது?
"இல்லை. அது சிறுவர்களுக்கான வான்குடை இல்லை. சில காரணங்களுக்காக மனிதர்கள் கண்டுபிடித்ததுதான் அது..."
"என்ன காரணம் டாக்டர்?. மேலும் அதிலே ஏதோ ஒரு பொருள் கட்டியிருந்ததே? அது என்ன என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை..."
"சொல்றேன். அதிலே கட்டியிருந்தது ஒரு பூசணிக்காய்"
"என்ன, பூசணிக்காயா? எதுக்கு பூசணிக்காயை வான்குடையில் கட்டி அனுப்பினாங்க?"
"பழங்காலத்திலே புது வண்டி வாங்கறவங்க திருஷ்டி கழிக்கறேன்னு பூசணிக்காயை வண்டி முன்னாடி உடைப்பாங்க. ஸ்கூட்டர்லே போனவங்க நிறைய பேர் அதிலே வழுக்கி விபத்துக்குள்ளான சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு".
"அதே பழக்கத்துலே விண்கூட்டர் வாங்கற மக்கள் பூசணிக்காயை வான்குடையிலே கட்டி பறக்கவிட்டு, விண்கூட்டருக்கு திருஷ்டி கழிக்கறாங்க. இதனாலே, மேலே பறக்கறவங்க நிறைய பேர் உங்களை மாதிரி விபத்துலே மாட்டிக்கறாங்க... நீங்க நல்லவேளையா பெரிய பிரச்சினையில்லாமே தப்பிச்சிட்டீங்க"
பூசணிக்காய் பறந்த காரணத்தைக் கேட்ட சுரேஷ், மீண்டும் நீண்ட மயக்கத்துப் போனான்.
பக்கத்தில் எங்கிருந்தோ ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியில் பழம்பெரும் நடிகர் விவேக் சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது... "1000 பெரியார்கள் வந்தாலும்..."
*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான முதல் இடுகை ***
27 comments:
//" நான் எங்கே இருக்கேன். எனக்கு என்ன ஆச்சு???"
எத்தனை வருஷம் ஆனாலும் இத மாத்த மாட்டாங்களா? :-)
கதை சூப்பர்...
super story, really enjoyed.
//*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான முதல் இடுகை *** //
Expecting your second story eagerly..
விண்கூட்டார் பேரே கலக்கலா இருக்கு கதையும் தான் :-)
//இதனாலே, மேலே பறக்கறவங்க நிறைய பேர் உங்களை மாதிரி விபத்துலே மாட்டிக்கறாங்க//
நிறைய பேர் ஏற்கனவே விபத்துக்குள்ளாகியிருக்கும் போது, சுரேஷுக்கு ஏன் அது பற்றி தெரியவில்லை? எதற்கு பூசணி பற்றி விளக்கம் கேட்க வேண்டும்?
ஹா ஹா ஹா, மறுபடியும் உங்களோட முத்திரைய பதிச்சிட்டீங்க துணைத் தலைவரே,
நீங்க எப்படி, இப்பயும் புது காரெல்லாம் வாங்கினா, எலுமிச்சைப் பழம் தொங்கவிட்டு அதிமுக்கிய இன்ஷூரன்ஸ் செஞ்சு பாதுகாப்பா இருக்கீங்களா இல்லையா?
:):):)
வாங்க சரவணகுமரன் -> அந்த சிச்சுவேஷனுக்கு அந்த வசனம்தான் சரியா பொருந்துது....:-)))
வாங்க தியாகராஜன் -> அவ்வ்வ்... சும்மா ஒரு ஜாலிக்காக போட்டது அது....
வாங்க ஸ்யாம் -> நன்றி...
வாங்க யோசிப்பவர் -> சரியான கேள்வி... சுரேஷ், அமெரிக்காவிலிருந்து B- 1 விசாவில் 'சமீபத்தில்' இந்தியாவுக்கு வந்திருப்பவர். அவருக்கு இந்த ' நல்ல' பழக்கவழக்கங்கள் இன்னும் சரியா தெரியல... ஓகேவா... (அப்பாடா!!!)
வாங்க ராப் -> எப்படி நேர்லே பாத்தாமாதிரியே சொல்றீங்க...அவ்வ்வ்..
கலக்கல்!
கலக்கறீங்க பாஸ்.
கலக்கீட்டீங்க ச்சின்னப்பையன்... எத்தன வருசம் ஆனாலும் எந்த டெக்னாலஜி வந்தாலும் எதுவுமே மாறப்போறதில்லன்னு சொல்றீங்க.. (அவசரமா ஆபீஸ் கிளம்புறது, ட்ராஃபிக், பூசணிக்காய் இப்படி), கரெக்ட்தான்..
பூசணியை பாராசூட்டில் போட்டதால் அது மெதுவா விழுந்துருக்கும்.
அப்படியே போட சொல்லுங்கள் எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்துடலாம்
வால்பையன்
//அதே பழக்கத்துலே விண்கூட்டர் வாங்கற மக்கள் பூசணிக்காயை வான்குடையிலே கட்டி பறக்கவிட்டு, விண்கூட்டருக்கு திருஷ்டி கழிக்கறாங்க//
சிரிப்பை அடக்க முடியலை. ..
:-))))))))))))
கதையை ரசிச்ச வீரசுந்தர், அவனும் அவளும், பிரேம்ஜி -> அனைவருக்கும் நன்றி...
வாங்க வெண்பூ -> மெயினா சொல்லவந்தது அந்த 'பலக்க வலக்கங்கள்'தான்.
வாங்க வால்பையன் -> சந்தேகமேயில்லை. நீங்க ரொம்ப ' நல்லவன்'தான்.
எத்தினி ஆயிரம் வருசம் ஆனாலும் நாம திருந்த மாட்டோம்னு இப்பிடி பப்ளிக்கா சொல்லிபுட்டீங்க!!
சுரேஷ் விண்ஸ்கூட்டரில் எலுமிச்சம்பழம் , மிளகாய் திருஷ்டி கழிச்சி கட்டியிருந்தால் ஒருவேளை விபத்து ஏற்பட்டிருக்காது !!
நல்லா இருந்தது கதை!
யப்பா!சாமி! வயித்து வலி மாத்திரை ரெண்டு அனுப்பி வையிப்பா
கலக்கல் மக்கா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஹி..ஹி...
ஹு...ஹூ...
நல்ல கதைங்க.. ச்.பையன்...!
கதை சூப்பரோ சூப்பர் :-)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சிவா, அப்துல்லா, அனானி, வசந்த குமார் மற்றும் வெட்டி... மீண்டும் வருக...
பின்னீட்டீங்க...
ஆமா ஏன் 2030ல இருந்து ஒரு 50 வருசம் மேல போய்ட்டீங்க..
நான் முதல்ல சீ்ரியஸான கதையோனு நினச்சுட்டேன் அப்புறம் படிச்சு பாத்ததுக்கப்றம் தலை எப்பவுமே தலைதான்னு கன்பார்ம் பண்ணீட்டேன்.
:))))
அடுத்த பதிவு எப்போ ??
அட்டகாசம்!
வாங்க வழிப்போக்கன் -> அறிவியல் கதைன்னா கு.ப. 50 வருஷமாச்சும் முன்னாடியான கதை சொன்னாத்தான் நம்புவாங்களாம்... அவ்வ்வ்வ்
சீரியஸான கதையா -> இன்னும் அங்கேல்லாம் போகலைப்பா... அடுத்த பதிவு இப்போதைக்கு ஒண்ணும் "தோணலை"....
வாங்க கப்பி -> ரொம்ப நன்றி...
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கரீங்க..கலக்கல் :))
//110வது மாடி//
நடக்கும்!
//100 கிலோ மீட்டர்களை 5 நிமிடத்தில் கடந்துவிடலாம்.//
நடக்கும்!
//ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால், ஒருவர் உட்காரக்கூடிய விண்கூட்டர் 1000 கிமீ வரை போகும்.//
நடக்கும்!
//அதே வண்டியை பறக்க வைக்க முயன்று அதிலும் வெற்றி பெற்றுவிட்டனர்//
நடக்கும்!
ஒன்றே ஒன்று மட்டும் நடக்காது.
அது....
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
.
.
ஏன்யா.. ஆஃபீஸ் மீட்டிங்குக்கு நேரத்துலயே கிளம்பி போகமுடியாதா?
எப்பயா திருந்துவீங்க?
வாங்க ரம்யா ரமணி -> நல்லாயிருந்துதா.. நன்றி...
வாங்க பரிசல் -> ஹிஹி... சீக்கிரமா போயிட்டா வேலையில்லாதவன்னு நினைச்சுக்குவாங்க.. லேட்டா போனாத்தான் ' நிறைய பிரச்சினை. எல்லாத்தையும் நானே பாக்கவேண்டியிருக்கு'ன்னு சொல்லலாம்.... அவ்வ்வ்
kathai arumai...
//100 கிலோ மீட்டர்களை 5 நிமிடத்தில் கடந்துவிடலாம்//
ithaiye 1 MegaMeter nu pottirunthaa valarchi vegaththa innum superaa kaatirukkum ;)))
வானில் ஒரு வழுக்கல்.
Post a Comment