இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ!!!
கதை v1.0:
ஒரு பாட்டி மரத்தடியில் வடை சுட்டுக்கிட்டிருந்தாங்க. அப்போ மரத்திலேர்ந்து ஒரு காக்கா வந்து ஒரு வடையை எடுத்துக்கிட்டு மறுபடியும் மரத்தில் போய் உக்காந்துகிச்சு. அந்த சமயம், கீழே ஒரு நரி வந்துச்சு. காக்காவைப் பாத்து, காக்கா, காக்கா, ஒரு பாட்டு பாடேன்னுச்சு. அந்த காக்காவும், பாட்டு பாடறதுக்காக வாயைத் திறந்தப்போ, அந்த வடை கீழே விழுந்துச்சு. நரியும் அந்த வடையை தூக்கிட்டு ஓடிப்போயிடுச்சு.
கதை v2.0:
ஒரு பாட்டி, மரத்தடியில் வடை சுட்டுக்கிட்டிருந்தேன். அப்போ மரத்திலேர்ந்து ஒரு காக்கா வந்து ஒரு வடைகளை எடுத்துக்கிட்டு மறுபடியும் மரத்தில் போய் உக்காந்துகிட்டேன். அந்த சமயம், கீழே ஒரு நரிகள் வந்தார். காக்காவைப் பாத்து, காக்கா, காக்கா, பல பாட்டு பாடேன்னேன். அந்த காக்காவும், பாட்டு பாடறதுக்காக வாய்களைத் திறந்தப்போ, அந்த வடை கீழே விழுந்துட்டார். நரியும் அந்த வடையை தூக்கிட்டு ஓடிப்போயிட்டே.
ஒரே கதையோட ரெண்டு மாதிரிகளைப் படிச்சிட்டீங்களா. அடுத்த பாராவையும் படிங்க. இனிமேதான் மேட்டரே.
கதை v2.0-லே பல இலக்கணப் பிழைகள் இருக்கிறதை நீங்க பாத்திருப்பீங்க. ஒரு தடவை பதிவோட தலைப்பையும் பாத்துக்கோங்க. இரண்டாவது கதையில் பல இடங்களிலே இலக்கணம் மாறினதாலே, அதை 'இலக்கியம்' னு சொல்லலாமா?? - தயவு செஞ்சு யாராவது சொன்னீங்கன்னா, 'இலக்கியவாதிகள்' லிஸ்டோட கடைசியிலே என் பேரையும் சேத்துடுவேன்.
(ஏதாவது %$# பின்னூட்டம் போடறதுக்கு முன்னாடி, லேபிளை ஒரு தடவை பாத்துக்கிடுங்க.... அவ்வ்வ்வ்.....)
19 comments:
//"இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ!!!"//
புறம்போக்கு, கழுதை, கஸ்மாலம் என்று திட்டமாட்டேன் . தெரியமா இது மாதிரி எழுதுங்கள் தலைவா
ஏன்.. இல்ல ஏன்னு கேக்கறேன்.. உங்களுக்கு "மவுஸ்" இருக்கு, (கீ போர்டும் இருக்கு) ங்கறதுக்காக எப்படி வேணா எழுதறதா? கேக்கறதுக்கு ஆளில்லன்னு நெனச்சீங்களா? நீங்க என்ன வேணா எழுதுவீங்க, நாங்க அதப் படிக்கணும் அப்படித்தானே? இல்ல என்ன மனசுல பெரிய பரிசல்காரன்னு நெனப்பா?
சரி.. இதே மாதிரி இன்னும் எழுதுங்க.. சரியா? ரொம்ப விரக்தில தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு நெனைக்கறப்போ... இந்த மாதிரி பதிவைப் படிக்கற ஆளெல்லாம் உயிரோட இருக்கும்போது நாம ஏன் சாகணும்-ன்னு அவங்களுக்கு தைரியம் தர்றது நம்மள மாதிரி ஆளுங்களோட பதிவுதானே!
:-)))))))))))))
இந்த வருஷம் சாகித்ய அகாடமி விருது, இலக்கியத்துக்கான நோபல் பரிசு இதெல்லாம் யாருக்கு குடுக்கறதுன்னு ஒரு சந்தேகம் இருந்தது, கொஞ்ச நேரத்துக்கு முன்னால வரைக்கும். ஆனா இப்ப இல்லப்பா.
யப்பா, ஜெயகாந்தன் மாதிரி ஆளுங்களை எல்லாம் கொஞ்ச நாளைக்கு நெட் பக்கம் விடாதீங்க. அப்பாலிக்கா அவரு எழுதறத விட்டுட்டா யாரும் ச்சின்னப்பையனை திட்டக்கூடாது.
வாங்க ஜெய்சங்கர் ஜெகன்னாதன், பரிசல், பிரேம்ஜி, வெண்பூ ->
அவ்வ்வ்வ்... நாந்தான் மொக்கை பதிவுன்னு சொல்லிட்டேனே.....
தமிழுக்கான ஆஸ்கர் பரிசு உங்களுக்குத்தான்.
யப்பா முடியல.
//'இலக்கியவாதிகள்' லிஸ்டோட கடைசியிலே என் பேரையும் சேத்துடுவேன்//
ஆஹா, அப்போ அதிரி புதிரியா கவித எழுதின நான் யாருங்க?
//அதை 'இலக்கியம்' னு சொல்லலாமா?? - தயவு செஞ்சு யாராவது சொன்னீங்கன்னா, 'இலக்கியவாதிகள்' லிஸ்டோட கடைசியிலே என் பேரையும் சேத்துடுவேன்.
//
நீங்களும் இலக்கியவாதிதான்...
எப்படிங்க ஒவ்வொரு பதிவும் இப்படி அசத்தலா போடறீங்க ??
உங்களுக்கு உடம்பெல்லாம் மூளைங்க....
:-))
இலக்கிய Version Controlக்கு என்ன Software யூஸ் பண்றீங்க... ???
//ரொம்ப விரக்தில தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு நெனைக்கறப்போ... இந்த மாதிரி பதிவைப் படிக்கற ஆளெல்லாம் உயிரோட இருக்கும்போது நாம ஏன் சாகணும்-ன்னு ///
Boatsman & Littleboy -
உங்களால முடிஞ்ச நல்லது செய்யுங்க...
ரொம்ப நன்றிங்க வேலன், வழிப்போக்கன் ... அவ்வ்வ்வ்..
வாங்க ராப் -> அந்த லிஸ்ட்லே நீங்க ஏற்கனவே இருக்கீங்களே... அப்பாடா..
யப்பா, யாராச்சும் உதவி பண்ணுங்க.. .என்னோட பதிவு தமிழ்மணத்தில் - பக்கத்து பாரில் வரவே மாட்டேங்குது. ரெண்டு நாளா.. இப்போத்தான் கவனிச்சேன்... அவ்வ்வ்வ்...
test1
// ச்சின்னப் பையன் said...
அவ்வ்வ்வ். நான் இன்னும் ஒரு கதைகூட எழுதலே... நேரமே இல்லை.... (அப்பாடா, ஒண்ணும் தோணலேன்றதை இப்படிகூட சொல்லலாம்)... அவ்வ்வ்வ்
//
ச்சின்னப் பையன், நீங்கள் மிக அழகாக எழுதுகிறீர்கள். முக்கியமாக நகைச்சுவை. அறிவியல் புனைவுடன் நகைச்சுவை இணைத்து ஒரு கதை முயற்சி செய்து பாருங்களேன்.
என்னை மாதிரி புதுசுங்களுக்கு எழுதுவதற்கான தைரியம் வர்றதே உங்களைப் பார்த்துதாங்க சேவை தொடரட்டும்.!(பரிசலுக்கும் சேர்த்துத்தான்)
ரொம்ப நன்றிங்க வெண்பூ... பாப்போம். எதாவது தோணுதான்னு...
வாங்க தமிரா -> நன்றி... எழுதுங்க... எழுதுங்க...
//என்னை மாதிரி புதுசுங்களுக்கு எழுதுவதற்கான தைரியம் வர்றதே உங்களைப் பார்த்துதாங்க சேவை தொடரட்டும்.!(பரிசலுக்கும் சேர்த்துத்தான்)
//
ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய...
அவ்வ்வ்வ்.. இதிலே ஏதாவது உள்குத்து இருக்குதான்னு தெரியாமெ, நான் பாட்டுக்கு நன்றி, நன்றின்னு சொல்லிட்டே இருக்கேனே... :-))))... இருந்தாலும் நன்றிங்க வழிப்போக்கன்....
Thanks for an idea, you sparked at thought from a angle I hadn’t given thoguht to yet. Now lets see if I can do something with it.
I love reading your blog because you can always bring us new and cool stuff, I think that I ought to at least say thanks for your hard work.
- Henry
Post a Comment