'சூடான' கேள்வி-பதில் : Part 3
கே: தசாவதாரம் - பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டதே. ஏதாவது 'எஃபெக்ட்' இருக்கிறதா?
ப: 1. 'ஸ்ரீரங்கநாதருக்கு' ஒரு ச்சின்ன பக்தை கிடைத்துவிட்டார். எங்கள் வீட்டு பாப்பாதான் அது. 'அந்த' கடவுள்தான் வேண்டுமென்றதால், இணையத்திலிருந்து ஒரு படம் அச்செடுத்து, வீட்டில் கதவில் ஒட்டியாகிவிட்டது.
2. ஒரு நாளைக்கு பல தடவை 'கல்லை மட்டும்' மற்றும் 'முகுந்தா' கேட்காமல் அவளால் இருக்க முடியவில்லை.
3. ஒரு வாரம் கழித்து (திரைப்படத்தை தூக்கக் கலக்கத்தில் பார்த்த) பாப்பா (3.5 வயது) சொன்ன ஒரு வரி விமர்சனம். 'He likes her. But She dont like him'.
கே: 'கொல்றாங்கோ... கொல்றாங்கோ' அப்படின்னு யாராவது உங்களிடம் சரணடைந்திருக்கிறார்களா?
ப: ஆம். ஒரு நாள் நண்பரின் வீட்டில் இருந்தபோது, நண்பரின் மகன் (வயது 5), 'சேவ் மீ, டாடி இஸ் கில்லிங் மீ' - என்று ஓடி வந்தான்.
நண்பர் பின்னாடியே வந்தார் - டென்ஷனாகாதீங்க. அவன் ஆங்கிலத்தையும், தமிழையும் சேர்த்துப் பேசறான். அதாவது - நான் அவனை 'கிள்ளிவிடுவேன்' என்று பயமுறுத்தினால், அதை ஆங்கிலத்தில் 'டாடி இஸ் கிள்ளிங் மீ' என்று ஓடிவருகிறான் என்றார்.
யப்பா, அதை எங்களிடத்தில் சொல்லியதால் பரவாயில்லை, வெளியே யாரிடமோ, பள்ளியிலோ கூறிவிட்டால், பெற்றோர்களை தூக்கி உள்ளே வைத்துவிடுவார்.. பாத்துக்கோங்க... என்று கூறிவிட்டு வந்தோம்.
கே: எல்லோரும் காமக்கதைகள், ஜட்டிக்கதைகள் இப்படி போட்றாங்களே, நீங்க போடலியா?
ப: சாமி. ஆளை விடுங்க. அதுக்கு பதிலா இதை கேளுங்க.
ஒரு காலத்துலே சென்னையிலிருந்து மாதமொருமுறை மென்பொருள் சேவைக்காக நாகர்கோவிலுக்கு போய்வந்துகொண்டிருந்தேன்.
அப்படி ஒரு முறை சென்னை திரும்பிவரும்போது, பேருந்தில் கடைசி ( நீள) இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனக்கு முன் ஒரு ஜோடி. வண்டி புறப்பட்ட சிறிது நேரம் கழித்து இருட்டில், சின்ன 'சில்மிஷங்கள்' செய்ய ஆரம்பித்திருந்தனர். நானும் முன் இருக்கையின் ஜன்னல் கண்ணாடியில் பிரதிபலிப்பில் தெரிந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து சற்றே சாய்ந்து உட்கார்ந்தேன். அப்போது பின் இருக்கையிலிருந்த ஒருவர் என் தோளில் தட்டி, "தம்பி, கொஞ்சம் நேரே உட்காருங்க. 'எங்களுக்கு' சரியா தெரியலே" என்றார்.
பிறகென்ன, சிறிது நேரத்துக்கு ஆடாது அசங்காது - பிரதிபலிப்பையே பார்த்துக்கொண்டு வந்தோம்.!!!
11 comments:
// "தம்பி, கொஞ்சம் நேரே உட்காருங்க. 'எங்களுக்கு' சரியா தெரியலே" என்றார்//
ஹய்யோ ஹய்யோ...... ஒரே தமாசு தான் போங்க.
அண்ணே உண்மையைச் சொல்லுங்க!
// "தம்பி, கொஞ்சம் நேரே உட்காருங்க. 'எங்களுக்கு' சரியா தெரியலே" என்றார்//
வேற ஒரு தம்பிக்கிட்ட பக்கத்துல ஒக்காந்திருந்த நீங்கதானே அப்படி சொன்னீங்க..ஹி..ஹி..ஹி
//அப்போது பின் இருக்கையிலிருந்த ஒருவர் என் தோளில் தட்டி, "தம்பி, கொஞ்சம் நேரே உட்காருங்க. 'எங்களுக்கு' சரியா தெரியலே" என்றார்//
double ROTFL.... :-)))
சூப்பர், கலக்கல், அசத்தல், என்னங்க நம்ம தலையப் பத்தி ஒரு மேட்டரும் போடலீங்கலே! நீங்க அந்தக் கிள்ளிங் விஷயத்த போட்டப்போ யாரோ அந்தப் பையன கானல்நீர் பார்க்கச் சொல்லி துன்புறுத்தினாங்கன்னு சொல்ல வரீங்களோனு நினைச்சேன்
வாங்க பிரேம்ஜி, ஸ்யாம் -> நன்றி..
வாங்க அப்துல்லா -> ஏங்க இந்த கொலவெறி உங்களுக்கு??? அவ்வ்வ்வ்
வாங்க ராப் -> இன்னும் மக்களுக்கு தலயோட அருமை தெரியல. அப்புறம் பாருங்க, வீட்டிலே டிவிடியா வாங்கி அடுக்கி, பசங்களோட உக்காந்து பாப்பாங்க... அவ்வ்வ்...
புதுசா பதிவு எழுத ஆரம்பிச்சு இருக்கேன். உங்க கருத்த பாத்துட்டு சொல்லுங்க.
//"தம்பி, கொஞ்சம் நேரே உட்காருங்க. 'எங்களுக்கு' சரியா தெரியலே"
ஹா ஹா ஹா :-)
// 'He likes her. But She dont like him'.//
உண்மையில் அருமையான விமர்சனம்
//அப்போது பின் இருக்கையிலிருந்த ஒருவர் என் தோளில் தட்டி, "தம்பி, கொஞ்சம் நேரே உட்காருங்க. 'எங்களுக்கு' சரியா தெரியலே" என்றார்.//
வழிகாட்டிய ஷாரி வழிவிட்ட புண்ணியம் உங்களை சேரும்
வால்பையன்
வாங்க சரவணகுமரன் -> நானும் பேருந்தை விட்டு இறங்கினப்புறம் 'விழுந்து விழுந்து' சிரிச்சேன்.... :-)))
வாங்க வால் -> ஓஓ.. நான் 'அவரில்லை'ங்கோ!!!!
// "தம்பி, கொஞ்சம் நேரே உட்காருங்க. 'எங்களுக்கு' சரியா தெரியலே" என்றார்//
:)))))))))))))))
poiyanalum poruntha sollurenga
Post a Comment