Wednesday, July 9, 2008

கிபி 2030 - நங்கநல்லூர் - மேடவாக்கம் மேம்பாலம்


இடம்: சென்னை நங்கநல்லூர் - மேடவாக்கம் இணையும் இடம்.

நேரம்: கிபி 2030 - ஏதோ ஒரு திங்கட்கிழமை காலை 8மணி

---

என்னங்க, போன வாரம் வரைக்கும் இந்த இடத்திலே மேம்பாலமே இல்லை. இப்போ திடீர்னு ஒண்ணு வந்திருக்கு?

ஆமா, போன வாரயிறுதியில் நங்கநல்லூர் - மேடவாக்கம் சேர்ற பகுதியிலே ஒரு மேம்பாலம் அமைக்கணும்னு தீர்மானிச்சாங்க. உடனடியா இந்த வாரயிறுதியிலே கட்டி முடிச்சிட்டாங்க.

அதெப்படிங்க இவ்ளோ பெரிய மேம்பாலத்தை ஒரே வாரத்திலே கட்டி முடிக்கமுடியும்?

நீங்க என்ன இவ்ளோ நாளா உள்ளே இருந்துட்டு வந்தீங்களா? இப்போல்லாம் இப்படித்தான். பாலத்தை வேறொரு இடத்திலே கட்டுவாங்க. அப்புறம் எங்கே வேணுமோ, அங்கே அதை கொண்டு வந்து ரெண்டே நாள்லே ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க. எல்லாம் கணிணியோட உதவியோட பண்றாங்க.

அப்படியா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே?

ஆமா. இதனாலே மக்களுக்கு எந்த தொந்தரவுமில்லை. சனிக்கிழமை இரவு வேலையை ஆரம்பிச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு முடிச்சிடுவாங்க. மக்கள் திங்கள்லேர்ந்து பாலத்தை உபயோகப்படுத்த ஆரம்பிச்சுடுவாங்க. உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு. நீங்க வேறே.

ஆமாமா. இதை கண்டுபிடிச்சவன் நல்லா இருக்கட்டும். முன்னெயெல்லாம், ஒரு பாலத்தை கட்டிட்டிருக்கும்போது அந்த இடத்தை கடந்து போறதுக்குள்ளே எவ்ளோ பிரச்சினை வரும்றீங்க. அப்பப்பா. ரொம்ப கொடுமை.


சரி வர்றேங்க.

(அவர் போய் பக்கத்து கடையில் தினத்தந்தி வாங்குகிறார்).

தலைப்பு செய்தி - "பழைய முறையில் கட்டப்பட்ட பாலம் - கடைசி பாதை நாளை திறப்பு - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அறிவிப்பு!!!".
கீழே பார்க்க - கத்திப்பாரா பாலத்தின் படம்.

டிஸ்கி: இது ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி எழுதிய கதை. அதுக்குப்பிறகு கத்திப்பாரா பாலத்தில் இரண்டு பாதைகளை திறந்துவிட்டனர். மேலும், வேலை படுவேகமாக நடப்பதால், கிபி2030 வரை கட்டுமானப்பணிகள் போகாது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!!!

12 comments:

Selva Kumar July 9, 2008 at 2:54 PM  

டூ மச் லேட்..

OMR ரோடு சாரி ராஜீவ் காந்தி சாலை கூட போட்டாச்சு தெரியுமோ???

rapp July 9, 2008 at 3:30 PM  

நல்லா பண்ணீங்க கற்பனை. சூப்பர். ஆனா நிஜமாவே இரும்புப் பாலத்தை தூக்கிட்டு போலாம்னு எப்பவோ படிச்ச ஞாபகம். தப்பா இருந்தா மன்னிச்சுக்கங்கோ :):):)

சின்னப் பையன் July 9, 2008 at 3:44 PM  

வாங்க பிரேம்ஜி -> நன்றி...

வாங்க வழிப்போக்கன் -> புரியலியே... நான் கத்திப்பாரா பத்திதானே பேசறேன்.... அவ்வ்வ்...

வாங்க ராப் -> நீங்க படிச்சா சரியாத்தான் இருக்கும். எனக்கு தெரியலீங்கோ.... (இதிலே என்கிட்டே எதுக்கு மன்னிப்பு கேக்கறீங்க... முடிஞ்சா பாலத்தை தூக்கிட்டு போயிடுங்க... !!!!)

rapp July 9, 2008 at 4:23 PM  

அப்படி நெசமாவே தூக்கிட்டு போனதை பத்தி படிச்சப்பதான் இந்த மாதிரி பாலம் இருக்கறதே தெரிஞ்சது

ராஜ நடராஜன் July 10, 2008 at 8:49 AM  

//கிபி2030 வரை கட்டுமானப்பணிகள் போகாது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!!!//

கிபி2010...1 தப்பா சுண்டு விரலுக்குப் பதிலா 3க்கு நடு விரல் தாண்டிருச்சோ:)உங்க ஸ்டைல சொல்லனுமின்னா அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

வடுவூர் குமார் July 10, 2008 at 8:54 AM  

இதெல்லாம் விட கொடுமை....வடபழனியில் இருந்து கிண்டி போகனும் நினைத்து பழைய வழியில் போனால் அம்பேல் தான்.
வழிகாட்டி எதுவும் இல்லாமல்...கொடுமையப்பா!! இவுங்களோட.
ஆமாம், இது யார் பணி?ஒரு சாலையை மூடும் போது மாற்றுவழியை குறிப்பிட்டு போட்டு வைப்பது???

சரவணகுமரன் July 10, 2008 at 9:43 AM  

நான் தலைப்பை பார்த்திட்டு அறிவியல் கதைன்னு நினைச்சுட்டேன்... :-)

பார்ப்போம், நீங்க இந்த கதைய எத்தனை முறை மறுபதிப்பு செய்றீங்கன்னு....

சின்னப் பையன் July 10, 2008 at 9:46 AM  

வாங்க ராஜ நடராஜன் -> இல்லீங்கோ... அது '2030'தாங்கோ...

வாங்க வடுவூர் குமார் -> ஆமா. இப்போ 100அடி சாலையில் வேலைகள் நடப்பதால், அங்கே சாலை மூடப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.

ஏங்க தமாஸ் பண்றீங்க... 'மாற்றுப்பாதை' குறிப்பட தனி டீம் வரணும்னா வேலைக்கே ஆகாதே... அதுவும் அங்கே வேலை செய்றவங்களோட வேலைதான்... சரிதானே???

வால்பையன் July 11, 2008 at 10:19 AM  

சென்னைவாசிகளுக்கு புரியலாம்
என்னை போல் வெளியூர்வாசிகளுக்கு
சரி எப்போ சென்னை வந்துட்டு போனிங்க

வால்பையன்

சின்னப் பையன் July 11, 2008 at 11:48 AM  

வாங்க வால் -> அந்த 'இடம்' முக்கியமேயில்லை. நீங்க எந்த இடம் வேணா நினைச்சிக்கலாம். கருத்து புரிஞ்சுதா?... ஆஆ... அப்படின்னா என்னவா?... அவ்வ்வ்...

நான் எங்கேங்க சென்னை வந்தேன்.. இன்னும் வரவேயில்லையே!!!

ராஜ நடராஜன் July 23, 2008 at 12:36 PM  

தமிழ்( ) பிரியனப் பார்த்துட்டு இப்பத்தான் ஓடிவர்ரேன்.மெய்யாலுமே இ ப் பத்தான் பார்க்கிறேன். உண்மையிலேயே சமத்துக்குட்டி:)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP