வரி விளம்பரங்கள்!!!
குறைந்த கட்டணத்தில் மூன்றே வாரத்தில் நீச்சல் பயிற்சி. பயிற்சியாளர் உங்கள் வீட்டிற்கே வந்து காலை/மாலை இரு வேளையும் நீச்சல் கற்றுக் கொடுப்பார். நீச்சல் குளம் optional.
---
30 நாட்களில் சீன மொழி. கற்க விருப்பமா. உடனே புறப்பட்டு வரவும். குறைந்த கட்டணம் மற்றும் திறமை மிக்க பயிற்சியாளர் யாராவது கிடைத்தால் நாம் உடனே கற்கலாம். ஏனென்றால், நானும் அப்படிப்பட்ட பயிற்சியாளரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
---
தொலைதூரக்கல்வி முறையில் வீணை கற்றுத்தரப்படும். வீணை மீட்டுவதை காதால் மட்டும் கேட்டால் போதும் என்பதால், நேரில் வரத்தேவையில்லை. தொலைபேசியிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆறே மாதத்தில் அரங்கேற்றத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்படும். .
---
இவ்விடம் ஜோசியம் கற்றுத்தரப்படும். சைதாப்பேட்டை குரு தன் சொந்த வீட்டிலிருந்து ஏழாம் வீட்டில் இருக்கும் ராகுவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, டக்குன்னு குருவின் வீட்டுக்கு வரவும். நீங்கள் ஜோசியம் கற்க எவ்வளவு நாளாகும் என்பது உங்கள் ஜாதகத்தைப் பார்த்தபிறகுதான் சொல்ல முடியும்.
---
போரூரிலிருந்து அடையாறு போகவிருக்கும் எனக்கு ஒரு பயணத்துணை வேண்டும். நாளை காலையில் 6 மணி நேரங்கள் ஒதுக்கமுடிந்தவர்கள் கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.
---
வெளிமானில மெண்பொறுள் னிபுணர்களுக்கு தமில் கற்றுத்தரப்படும். பயிர்சியில் சேந்து மூண்றே மாதத்தில், கவித, கானா பாடல்கள் எளுதமுடியும். உடனே புரப்பட்டு வரவும்.
---
உடனடியாக 10 துப்பறியும் நிபுணர்கள் தேவை. நீங்கள் வரவேண்டிய முகவரி... ஐ... அதையும் நாங்களே சொல்வோம்னு பாக்கறீங்களா... மரியாதையா நீங்களா முகவரியை கண்டுபிடிச்சி வந்தாத்தான் வேலை... ஓகே..
---
தமிழ்மணத்தில் பதிவு போடுவதற்கு பதிவர்கள் தேவை. நீங்கள் 'இடது' வாசல் வழியாக வந்தாலும் ஓகே, 'வலது' வாசல் வழியாக வந்தாலும் ஓகே. தங்கள் முகத்தை காட்டிக்கொண்டு வந்தாலும் ஓகே, 'முகமூடி' போட்டுக்கொண்டு வந்தாலும் ஓகே. ஆனால், ____ சட்டை மட்டும் போட்டுக்கொண்டு வரவேண்டாம்.
பின் -1: கடைசி விளம்பரத்தில் ஒரு வார்த்தை மட்டும் விட்டுப்போயிடுச்சு. மக்கள் யாராவது அதை பூர்த்தி செய்தால் நல்லாயிருக்கும்!!!
பின் -2: கடைசிக்கு முன்னால் இருக்கும் விளம்பரங்களைப் பற்றியும் ஏதாவது சொல்லுங்க...
23 comments:
:))))))
//குறைந்த கட்டணத்தில் மூன்றே வாரத்தில் நீச்சல் பயிற்சி. பயிற்சியாளர் உங்கள் வீட்டிற்கே வந்து காலை/மாலை இரு வேளையும் நீச்சல் கற்றுக் கொடுப்பார். நீச்சல் குளம் optional.
//
:-))))))))
ஆஹா இன்னமும் ஒருத்தரும் பில் இன் தி ப்ளாங்க பில் பண்ணலையா, யாரவது செய்யுங்களேன், ஆர்வம் தாங்க முடியல
கோடிட்ட இடத்தை நிரப்புக:
//ஆனால், ____ சட்டை மட்டும் போட்டுக்கொண்டு வரவேண்டாம்.//
விடை: கால்
:-)
kishore -> அது தப்பு.....அவ்வ்வ்
என்ன என் விடையில் பிழையா?
நக்கீரா என்னைப்பார்.
என் கண்களை உற்றுப்பார்
இவ்விடம் உங்களை விரும்பாத பெண்ணிற்கு வசியம் வைத்து
உங்கள் கால்களையே சுற்றி வருவது போல் செய்யப்படும்.
வசியம் செய்ய பெண்ணின் அம்மாவை கூட்டி வரவேண்டும்
(அம்மாவின் வயதுக்கேற்ப பெண்ணின் வசியம் சாத்தியம்)
வால்பையன்
வாங்க சிவமுருகன், பிரேம்ஜி -> நன்றி...
வாங்க ராப் -> அவ்வ். எதுவும் 'பிரச்சினைக்குரிய' வார்த்தை கிடைக்கலியா உங்களுக்கு?
வாங்க கிஷோர் -> கண்ணைப் பார்த்தாலும், பாக்காவிட்டாலும் - அது தப்புதான் சார். பேன்ட் போடாமெ வாங்கன்னு சொல்லுவேனா?... அவ்வ்வ்வ்
அவ்வ்வ். வால்பையன் -> ஏங்க நிறைய தொலைக்காட்சி தொடர்கள் பாக்கறீங்களா?... அவ்வ்வ்...
ஓகே. பல்லாயிரக்கணக்கான நேயர்கள் விருப்பப்படி (!!!), அந்த வார்த்தை இங்கே வெளியிடப்படுகிறது. அதுக்கப்புறம் புரிஞ்சிக்கறது, புரிஞ்சிக்காதது உங்க திறமை... ஓகே. அந்த வார்த்தை : 'தெள்ளத்தெளிவான' அல்லது Transperant.
ம்ஹூம் எனக்குப் புரியல :(:(:( வர வர நீங்க எல்லாரையும் மூளைய உபயோகப்படுத்த வைக்க முயற்சி பண்றீங்க:(:(:(
//ஓகே. அந்த வார்த்தை : 'தெள்ளத்தெளிவான' அல்லது Transperant.
//
இன்று முதல் "தலை சிறந்த ஆராய்ச்சியாளர்" என அழைக்கபடுவீர்கள்.
(உங்க கொசுபத்தி பதிவுகளை தாங்க முடியலயே நாராயணா.....ஓரு எதிர் பதிவு போட்ட என்ன ????...
தாறுமாறா யோசிச்சுகிட்டு இருக்கேன்...)
Fill in the blanks - பர்ஸட் விளம்பரத்துக்கு நல்லா மேட்ச் ஆகும்னு தோணுது...
ரூம் போட்டு யோசிப்பீங்கன்னு நினைக்கிறேன்..நல்லா சிரிச்சேன்.
வாங்க ராப் -> அவ்வ்வ். புரியலையா... அப்புறம் சொல்றேன். வேறே யாராவது 'தெளிவா' சொல்றாங்களான்னு பாப்போம்.
ஆஹா வழிப்போக்கன் -> நன்றிங்கண்ணா. அப்போ விரைவில் 'சி.பை.க்கு ஒரு கேள்வி' அப்படின்னு ஒரு பதிவு எதிர்பார்க்கலாம்... ஓகே ஓகே.. ஆனா நான் சட்டை optionalனு சொல்லலீங்கோ...
வாங்க வெண்பூ -> முன்னாடி எப்பவோகூட சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்... யோசிக்கறதுக்குதான் அலுவலகத்திலே ரூம் போட்டு கொடுத்திருக்காங்க... அவ்வ்வ்வ்....
விரைவில்
சி.ப கேள்வி - பதில்கள் போட்றனுங்க.
நான் சொல்ல வந்தது Tranparent/Seethrough/White khadhar shirt...+ குளம் மேட்சிங்.
தமிழ் படத்துல நிறய வருமே...
:-))
சரிதான். நீங்க 'கனவு' காணுங்கன்னு சொன்னா, 'கனவுக்காட்சி'களா காண்றீங்கன்னு நினைக்கிறேன்.... அவ்வ்வ்வ்....
ஒரு மெயில் வந்து இருக்கும்..
பாருங்க...ரிப்ளை பண்ணுங்க.
//வெளிமானில மெண்பொறுள் னிபுணர்களுக்கு தமில் கற்றுத்தரப்படும். பயிர்சியில் சேந்து மூண்றே மாதத்தில், கவித, கானா பாடல்கள் எளுதமுடியும்.//
தமில் மனத்திள் பதிவராகளாம்.இது உத்திரவாதம்..இது விட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்..
இப்பத்தான் புரியுது, வெறும் transparentனு சொல்லி நிறுத்தாம, ஏங்க கூட சேர்த்து தெள்ளத் தெளிவுனெல்லாம் எழுதி என்னைக் குழப்புனீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................
வாங்க ராப் -> ஐயய்யோ... இது அசிங்கமான அர்த்தத்துலே நான் எழுதலே.
சட்டை Transperant-ஆ இருந்தா, உள்ளே ஏதாவது 'நெளியுதா', 'இல்லையா'ன்னு கண்டுபிடுச்சுடுவாங்கன்னுதான் சொன்னேன்.
ஓகேவா...
”வரி”க்கு “வரி” ரசிச்சேன்!
வாங்க தமிழ்ப்பறவை -> அவ்வ்வ். என்னோட பதிவு அப்படித்தான் இருக்குன்றீங்களா???????
வாங்க பரிசல் -> நன்றி...
இப்படி எல்லாம் ரூம் போட்டு யோசிபீங்களா
Post a Comment