Thursday, July 3, 2008

ரீ-ரீமேக் : பாசக் கயிறு : NULLல மாமனார்வெட்டிப்பயலின் ஒரிஜினல் பதிவு இங்கே. அதை ரீமேக் பண்ண கேஆரெஸ் பதிவு இங்கே. நம்ம டாக்டர் விஜய் எப்பவுமே செய்யற மாதிரி, ரீமேக்குக்கே ரீமேக்தான் இந்த பதிவு.

அவங்க ரெண்டு பேரும் - பொண்ணு எப்படி இருக்கணும்னு பையனும் - பையன் எப்படி இருக்கணும்னு பொண்ணும் - கண்டிஷன் போடறாமாதிரி பதிவு போட்டிருந்தாங்க.
ஆனா, இந்த பதிவு கொஞ்சம் வித்தியாசமானது (எல்லா திரைப்பட விளம்பரங்களிலும் இயக்குனர், நடிகர்கள் அவங்க படத்தை பத்தி இப்படித்தான் சொல்வாங்க). நீங்களே படிச்சி பாருங்க.

மொத்தம் ரெண்டே பாத்திரங்கள். நம்ம ஹீரோ சுரேஷ். அவரு நாரதர் நாயுடுவை பாக்க போறாரு.


வாப்பா சுரேஷ். எப்படியிருக்கே?

நான் நல்லா இருக்கேன் நாயுடு சார். நீங்க எப்படி இருக்கீங்க?

பகவான் புண்ணியத்துலே நல்லா இருக்கேன்பா. அப்புறம்? உனக்கு வயசாயிண்டே போறது. காலாகாலத்துலே கல்யாணம் பண்ணிக்கற உத்தேசமே இல்லையா? நேரா 60-ஆம் கல்யாணம் பண்ணிக்கப்போறியா?

அட, அது விஷயமாத்தான் சார் உங்களை பாக்க வந்தேன். நீங்களே ஆரம்பிச்சிட்டீங்க.

என் வேலையே அதுதானேப்பா. நல்ல தமிழ்க் கலாச்சாரத்தோட ஒரு நல்ல பொண்ணு பாத்துடலாமா?

சார். இருங்க. எனக்கு பொண்ணு, இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பே இல்லை.

ஏம்பா, அப்போ ஒரு கிழவியா இருந்தாகூட ஓகேவா?

அதில்லை சார். எந்த பொண்ணு வந்தா என்ன. எப்படியும் கல்யாணத்துக்கப்புறம் என்கூட சண்டைதான் போடப்போறா. என் அம்மாவுக்கும், அவளுக்கும் நடுவிலே மாட்டிண்டு முழிக்கபோறது நாந்தான். அப்புறம் நல்ல பொண்ணு என்ன, கெட்ட பொண்ணு என்ன. யாராயிருந்தாலும் எனக்கு ஓகேதான்.

அப்புறம் என்னப்பா, என் வேலை ரொம்ப சுலபமா போச்சு. டக்குன்னு யாராவது ஒரு பொண்ணை பார்த்து கட்டிவெச்சிடறேன்.

இருங்க சார். பொண்ணுதான் எப்படி இருந்தாலும் ஓகேன்னு சொன்னேன். ஆனா 'மாமனார்' எப்படி இருக்கணும்னு நான் இன்னும் சொல்லவேயில்லையே.

என்னது? மாமனார் எப்படி இருக்கணும்னு சொல்லப்போறியா. ஏம்பா, நீ பொண்டாட்டியோட குடும்பம் நடத்தப்போறீயா இல்லே மாமனாரோடவா?

இத கேளுங்க சார். எங்க தல ரஜினியே சொல்லியிருக்காரே 'உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம்'னு.

இரு இரு. ஏம்பா, எதை எடுத்தாலும், ரஜினி சொன்னாரு, ரஜினி சொன்னாருன்னா, அப்ப மத்தவங்கல்லாம் சும்மா 'ரிப்பீட்டே', 'ரிப்பீட்டே'ன்னு சொல்லிட்டிருந்தாங்களா. அதை உங்க ரஜினி சொல்லலே. அதுக்கு முன்னாலேயே யாரோ சொல்லிட்டாங்க.

சரி விடுங்க சார். யார் சொன்னா என்ன, என்ன சொன்னாங்கன்னு பாருங்க. அதனால, நான் என் வரப்போற மாமனார் எப்படியிருக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.

எனக்கு வேறே வழி? இந்த வேலைக்கு வந்துட்டேன். நீ என்னென்ன சொல்றியோ கேட்டுத்தானே ஆகணும். சொல்லுப்பா, எப்படி இருக்கணும் உன் வரப்போற மாமனார். ஏதாவது கண்டிஷன்ஸ் வெச்சிருக்கியா?

சொல்றேன் கேளுங்க.

கண்டிஷன் நெ.1: இப்போ நான் தனியார் மென்பொருள் நிறுவனத்திலே வேலை பண்றேன்.

அதனாலே, அரசாங்கத்திலே பணியாற்றவரோட பொண்ணா பாத்துடலாமா?


அதுதான் கிடையாது. எனக்கு மாமனாரா வரப்போறவரும் தனியார் நிறுவனத்திலேதான் வேலை பாக்கணும். ஏன்னா, இந்த அரசாங்க வேலையிலே இருக்கறவர்னா, அடிக்கடி வீட்டுக்கு வந்து, இந்த கருணாநிதி சரியில்ல, ஜெயலலிதா சரியில்லே, ஸ்ட்ரைக் பண்னா கைது பண்ணிடுறாங்க - அப்படி இப்படின்னு புலம்பிக்கிட்டே இருப்பாரு.


நாம் அதைத்தானே தினமும் தமிழ்மணத்திலே பாத்துக்கிட்டிருக்கோம். அங்கேயாவது 'சூப்பர்', 'அவ்வ்வ்' இப்படி எதையாவது சொல்லிட்டு போயிடலாம். வீட்டிலே வந்து மாமனார் அறுக்க ஆரம்பிச்சிட்டார்னா, எங்கேந்து எஸ்கேப் ஆகறது.


ஏம்பா, அவங்க கஷ்டம் அவங்களுக்கு. சரி விடு. உனக்கு அரசாங்க மாமனார் வேண்டாம். அடுத்தது?

கண்டிஷன் நெ.2: தனியார் நிறுவனத்திலே வேலை பாக்கற என் மாமனார், அடுத்த ஒரு வருடத்திலே ரிடையர் ஆகணும் அல்லது வாலண்டரி டிடையர் ஆகிறா மாதிரி இருக்கணும்.


அட. இது எதுக்குப்பா. ஒரு வருஷத்துக்கு அப்புறமும் வேலை பாத்துக்கிட்டுருந்தா அது நல்லதுதானே?


அதுதான் இல்லை. அடுத்த ஒரு வருஷத்திலே எனக்கு வேலை உயர்வு வந்துடும். அதுக்கப்புறம் நான் ரொம்ப பிஸியாயிடுவேன். அப்போ பொறக்க போற என் குழந்தையை யார் பாத்துக்கறது. குழந்தையை தினமும் கார்த்தாலே நடைப்பயிற்சிக்கும், மாலையிலே பூங்காவுக்கும் யார் கூட்டிப்போறது. அதுக்கெல்லாம் மாமனார்தான் கரெக்ட்.


ஓ. குழந்தையை பாத்துக்கறதுக்கு இப்பவே ஆள் புடிக்கறே.
ரொம்ப நல்லதுப்பா. மேலே சொல்லு.


இதுலே இன்னும் விஷயம் இருக்கு. அப்படி அவர் ரிடையரோ அல்லது வாலண்டரி ரிடையரோ ஆயிட்டார்னா, அப்போ அவருக்கு நிறைய பணம் கிடைக்குமில்லே, அதிலே எனக்கு ஒரு 'ப்ரேஸ்லெட்'டாவது கிடைக்காதா. அதுக்காகத்தான் அப்படி சொன்னேன்.


அப்போ உனக்கு ஒரு சின்ன 'ப்ரேஸ்லெட்' போடணும்றதுக்காக உன் மாமனார் வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கணும்றே. இப்போதான், மக்கள் எல்லாருக்கும் 'பிரேஸ்லெட்' எப்படி கிடைக்குதுன்னு புரியுது. நீ சொல்லுப்பா. உனக்கென்ன, என் நேரம்தான் இப்போ சரியில்லே.


கண்டிஷன் 3: வீட்டிலே இருக்கும்போது மட்டும்தான் அவர் என்னை, 'மாப்ளே', 'மாப்ளே'ன்னு கூப்பிடலாம். நான் தெருவிலே தனியா நடந்து போகும்போது பாத்தார்னா, மாப்ளேன்னு கூப்பிடக்கூடாது.


இது என்னப்பா அநியாயமா இருக்கு? நீ எங்கே இருந்தா என்ன, அவர் உனக்கு எப்பவுமே மாமனார்தானே. மாப்ளேன்னு கூப்பிடாதேன்னா, அவர் என்னன்னு கூப்பிடுவார்? எதுக்காக இந்த கண்டிஷன்?

வீட்லே தங்கமணிங்க தொல்லை தாங்கமுடியலன்னுதான் இப்போ எல்லா ரங்கமணிகளும் 'வாக்கிங்' போறேன்னு ' நிறம்' பார்க்க புறப்படறாங்க. அந்த சமயத்திலே ' நந்தி' மாதிரி வந்து 'மாப்ளே'ன்னு கத்தி காரியத்தையே கெடுத்தார்னா, யாருக்குதான் கோபம் வராது சொல்லுங்க.

ரொம்ப சரியா சொன்னேப்பா. ரோட்லே எங்கே பாத்தாலும், விரோதியை பாக்கறாமாதிரி டக்குன்னு தலையை திருப்பிக்கிட்டு போகச்சொல்லிடறேன். ஓகேவா. எனக்கு தலையே சுத்தறா மாதிரி இருக்கு. அவர் உன்னை எப்படி கூப்பிடணும்னு சொல்லிட்டே. நீ அவரை கூப்பிடறதுன்னு ஏதாவது கண்டிஷன் வெச்சிருக்கியா?

இருக்கே. அடுத்த கண்டிஷனே அதுதான். கண்டிஷன் நெ.4: என்னை 'மாமா'ன்னோ, 'சார்'ன்னோ கூப்பிடச் சொல்லி யாரும் வற்புறுத்தக்கூடாது. நான் மாமனாரை 'அப்பா'ன்னுதான் கூப்பிடுவேன்.

அடடா.. அடடா. அப்படியே புல்லரிக்குதுப்பா. இதுதான் உன்கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம். எல்லார்கிட்டேயும் ரொம்ப பாசமா இருப்பே. என்னதான் வெளி நாட்டுக்குப் போனாலும், நம்ம கலாச்சாரத்தையும், மனுசங்களையும் மதிக்கிற நல்ல உள்ளம் உனக்கு இருக்கு. நீ ரொம்ப நாள் நல்லா இருப்பேப்பா. நான் மனசார வாழ்த்தறேன்.

இருங்க சார். பாசம் கீசம் எல்லாம் ஒண்ணுமில்லே. அப்பான்னு கூப்பிட்டா என்ன அர்த்தம், அவருக்கப்புறம் அவரோட சொத்து எல்லாமே எனக்குத்தான் வரணும்னு அர்த்தம். புரிஞ்சுதா...

இதைக்கேட்டு நாயுடு மயக்கம் போட்டு விழுகிறார்.

20 comments:

புதுகைத் தென்றல் July 3, 2008 at 12:22 PM  

aaha ingayum manal kayiru vivaharamathan pathiva

sari sari

rapp July 3, 2008 at 12:23 PM  

என்னாங்க, ஒரேடியா விஜயோட போட்டி போடறீங்க, அவருக்கு போட்டியா அரசியல் கட்சி தொடங்கி, 2016 இல் மு(த்)தல் அமைச்சர் ஆக ஏதாவது ப்ளான் வெச்சிருக்கீங்களா:):):)
//பாசம் கீசம் எல்லாம் ஒண்ணுமில்லே. அப்பான்னு கூப்பிட்டா என்ன அர்த்தம், அவருக்கப்புறம் அவரோட சொத்து எல்லாமே எனக்குத்தான் வரணும்னு அர்த்தம்//
சூப்பர் பன்ச்.

rapp July 3, 2008 at 12:25 PM  

என்னாங்க, ஒரேடியா விஜயோட போட்டி போடறீங்க,அவருக்கு போட்டியா அரசியல் கட்சி தொடங்கி, 2016 இல்
மு(த்)தல் அமைச்சர் ஆக ஏதாவது ப்ளான் வெச்சிருக்கீங்களா:):):)
//பாசம் கீசம் எல்லாம் ஒண்ணுமில்லே. அப்பான்னு கூப்பிட்டா என்ன அர்த்தம், அவருக்கப்புறம் அவரோட சொத்து எல்லாமே எனக்குத்தான் வரணும்னு அர்த்தம்//
சூப்பர் பன்ச்.

வெட்டிப்பயல் July 3, 2008 at 12:42 PM  

பதிவு சூப்பர் :-)

உங்க கைல இருக்கற ப்ரேஸ்லேட் சூப்பர் :-))

ஆயில்யன் July 3, 2008 at 12:43 PM  

//வீட்லே தங்கமணிங்க தொல்லை தாங்கமுடியலன்னுதான் இப்போ எல்லா ரங்கமணிகளும் 'வாக்கிங்' போறேன்னு ' நிறம்' பார்க்க புறப்படறாங்க. அந்த சமயத்திலே ' நந்தி' மாதிரி வந்து 'மாப்ளே'ன்னு கத்தி காரியத்தையே கெடுத்தார்னா, யாருக்குதான் கோபம் வராது சொல்லுங்க.//


:))))

நல்லா இருக்கு !

பிரேம்ஜி July 3, 2008 at 12:57 PM  

//வீட்லே தங்கமணிங்க தொல்லை தாங்கமுடியலன்னுதான் இப்போ எல்லா ரங்கமணிகளும் 'வாக்கிங்' போறேன்னு ' நிறம்' பார்க்க புறப்படறாங்க. அந்த சமயத்திலே ' நந்தி' மாதிரி வந்து 'மாப்ளே'ன்னு கத்தி காரியத்தையே கெடுத்தார்னா, யாருக்குதான் கோபம் வராது சொல்லுங்க//

:-))))))))))

ச்சின்னப் பையன் July 3, 2008 at 1:03 PM  

வாங்க புதுகைத் தென்றல் -> பதிவை படிச்சீங்களா, இல்லையா?

வாங்க ராப் -> முதல் வாக்கியத்தையும், கடைசி வாக்கியத்தையும் மேற்கோள் காட்டிட்டீங்க. நடுவிலே படிச்சீங்களா, இல்லையா? அவ்வ்வ்வ்...

வாங்க வெட்டி -> அவ்வ்வ். அதை நேத்திக்கே கழட்டி வெச்சிட்டேனே...

நன்றிங்க ஆயில்யன் , பிரேம்ஜி -> நிஜம்தானே... :-)))

இவன் July 3, 2008 at 1:11 PM  

//அங்கேயாவது 'சூப்பர்', 'அவ்வ்வ்' இப்படி எதையாவது சொல்லிட்டு போயிடலாம். வீட்டிலே வந்து மாமனார் அறுக்க ஆரம்பிச்சிட்டார்னா, எங்கேந்து எஸ்கேப் ஆகறது.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


//கண்டிஷன் 3: வீட்டிலே இருக்கும்போது மட்டும்தான் அவர் என்னை, 'மாப்ளே', 'மாப்ளே'ன்னு கூப்பிடலாம். நான் தெருவிலே தனியா நடந்து போகும்போது பாத்தார்னா, மாப்ளேன்னு கூப்பிடக்கூடாது.//

இந்த கண்டிஷன்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

//பாசம் கீசம் எல்லாம் ஒண்ணுமில்லே. அப்பான்னு கூப்பிட்டா என்ன அர்த்தம், அவருக்கப்புறம் அவரோட சொத்து எல்லாமே எனக்குத்தான் வரணும்னு அர்த்தம். புரிஞ்சுதா... //

அதுதுதுதுதுதுதுதுது

வழிப்போக்கன் July 3, 2008 at 1:58 PM  

//எங்க தல ரஜினியே சொல்லியிருக்காரே 'உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம்'னு.
//

எப்ப சொன்னாரூ ????

:-))

rapp July 3, 2008 at 2:27 PM  

//ஆனா, இந்த பதிவு கொஞ்சம் வித்தியாசமானது (எல்லா திரைப்பட விளம்பரங்களிலும் இயக்குனர், நடிகர்கள் அவங்க படத்தை பத்தி இப்படித்தான் சொல்வாங்க). நீங்களே படிச்சி பாருங்க.மொத்தம் ரெண்டே பாத்திரங்கள். நம்ம ஹீரோ சுரேஷ். அவரு நாரதர் நாயுடுவை பாக்க போறாரு.

வாப்பா சுரேஷ். எப்படியிருக்கே? நான் நல்லா இருக்கேன் நாயுடு சார். நீங்க எப்படி இருக்கீங்க?பகவான் புண்ணியத்துலே நல்லா இருக்கேன்பா. அப்புறம்? உனக்கு வயசாயிண்டே போறது. காலாகாலத்துலே கல்யாணம் பண்ணிக்கற உத்தேசமே இல்லையா? நேரா 60-ஆம் கல்யாணம் பண்ணிக்கப்போறியா?அட, அது விஷயமாத்தான் சார் உங்களை பாக்க வந்தேன். நீங்களே ஆரம்பிச்சிட்டீங்க.என் வேலையே அதுதானேப்பா. நல்ல தமிழ்க் கலாச்சாரத்தோட ஒரு நல்ல பொண்ணு பாத்துடலாமா? சார். இருங்க. எனக்கு பொண்ணு, இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பே இல்லை. ஏம்பா, அப்போ ஒரு கிழவியா இருந்தாகூட ஓகேவா? அதில்லை சார். எந்த பொண்ணு வந்தா என்ன. எப்படியும் கல்யாணத்துக்கப்புறம் என்கூட சண்டைதான் போடப்போறா. என் அம்மாவுக்கும், அவளுக்கும் நடுவிலே மாட்டிண்டு முழிக்கபோறது நாந்தான். அப்புறம் நல்ல பொண்ணு என்ன, கெட்ட பொண்ணு என்ன. யாராயிருந்தாலும் எனக்கு ஓகேதான். அப்புறம் என்னப்பா, என் வேலை ரொம்ப சுலபமா போச்சு. டக்குன்னு யாராவது ஒரு பொண்ணை பார்த்து கட்டிவெச்சிடறேன். இருங்க சார். பொண்ணுதான் எப்படி இருந்தாலும் ஓகேன்னு சொன்னேன். ஆனா 'மாமனார்' எப்படி இருக்கணும்னு நான் இன்னும் சொல்லவேயில்லையே. என்னது? மாமனார் எப்படி இருக்கணும்னு சொல்லப்போறியா. ஏம்பா, நீ பொண்டாட்டியோட குடும்பம் நடத்தப்போறீயா இல்லே மாமனாரோடவா?இத கேளுங்க சார். எங்க தல ரஜினியே சொல்லியிருக்காரே 'உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம்'னு. இரு இரு. ஏம்பா, எதை எடுத்தாலும், ரஜினி சொன்னாரு, ரஜினி சொன்னாருன்னா, அப்ப மத்தவங்கல்லாம் சும்மா 'ரிப்பீட்டே', 'ரிப்பீட்டே'ன்னு சொல்லிட்டிருந்தாங்களா. அதை உங்க ரஜினி சொல்லலே. அதுக்கு முன்னாலேயே யாரோ சொல்லிட்டாங்க.சரி விடுங்க சார். யார் சொன்னா என்ன, என்ன சொன்னாங்கன்னு பாருங்க. அதனால, நான் என் வரப்போற மாமனார் எப்படியிருக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.எனக்கு வேறே வழி? இந்த வேலைக்கு வந்துட்டேன். நீ என்னென்ன சொல்றியோ கேட்டுத்தானே ஆகணும். சொல்லுப்பா, எப்படி இருக்கணும் உன் வரப்போற மாமனார். ஏதாவது கண்டிஷன்ஸ் வெச்சிருக்கியா?சொல்றேன் கேளுங்க. கண்டிஷன் நெ.1: இப்போ நான் தனியார் மென்பொருள் நிறுவனத்திலே வேலை பண்றேன். அதனாலே, அரசாங்கத்திலே பணியாற்றவரோட பொண்ணா பாத்துடலாமா?


அதுதான் கிடையாது. எனக்கு மாமனாரா வரப்போறவரும் தனியார் நிறுவனத்திலேதான் வேலை பாக்கணும். ஏன்னா, இந்த அரசாங்க வேலையிலே இருக்கறவர்னா, அடிக்கடி வீட்டுக்கு வந்து, இந்த கருணாநிதி சரியில்ல, ஜெயலலிதா சரியில்லே, ஸ்ட்ரைக் பண்னா கைது பண்ணிடுறாங்க - அப்படி இப்படின்னு புலம்பிக்கிட்டே இருப்பாரு.


நாம் அதைத்தானே தினமும் தமிழ்மணத்திலே பாத்துக்கிட்டிருக்கோம். அங்கேயாவது 'சூப்பர்', 'அவ்வ்வ்' இப்படி எதையாவது சொல்லிட்டு போயிடலாம். வீட்டிலே வந்து மாமனார் அறுக்க ஆரம்பிச்சிட்டார்னா, எங்கேந்து எஸ்கேப் ஆகறது.


ஏம்பா, அவங்க கஷ்டம் அவங்களுக்கு. சரி விடு. உனக்கு அரசாங்க மாமனார் வேண்டாம். அடுத்தது?

கண்டிஷன் நெ.2: தனியார் நிறுவனத்திலே வேலை பாக்கற என் மாமனார், அடுத்த ஒரு வருடத்திலே ரிடையர் ஆகணும் அல்லது வாலண்டரி டிடையர் ஆகிறா மாதிரி இருக்கணும்.


அட. இது எதுக்குப்பா. ஒரு வருஷத்துக்கு அப்புறமும் வேலை பாத்துக்கிட்டுருந்தா அது நல்லதுதானே?


அதுதான் இல்லை. அடுத்த ஒரு வருஷத்திலே எனக்கு வேலை உயர்வு வந்துடும். அதுக்கப்புறம் நான் ரொம்ப பிஸியாயிடுவேன். அப்போ பொறக்க போற என் குழந்தையை யார் பாத்துக்கறது. குழந்தையை தினமும் கார்த்தாலே நடைப்பயிற்சிக்கும், மாலையிலே பூங்காவுக்கும் யார் கூட்டிப்போறது. அதுக்கெல்லாம் மாமனார்தான் கரெக்ட்.


ஓ. குழந்தையை பாத்துக்கறதுக்கு இப்பவே ஆள் புடிக்கறே. ரொம்ப நல்லதுப்பா. மேலே சொல்லு.


இதுலே இன்னும் விஷயம் இருக்கு. அப்படி அவர் ரிடையரோ அல்லது வாலண்டரி ரிடையரோ ஆயிட்டார்னா, அப்போ அவருக்கு நிறைய பணம் கிடைக்குமில்லே, அதிலே எனக்கு ஒரு 'ப்ரேஸ்லெட்'டாவது கிடைக்காதா. அதுக்காகத்தான் அப்படி சொன்னேன்.


அப்போ உனக்கு ஒரு சின்ன 'ப்ரேஸ்லெட்' போடணும்றதுக்காக உன் மாமனார் வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கணும்றே. இப்போதான், மக்கள் எல்லாருக்கும் 'பிரேஸ்லெட்' எப்படி கிடைக்குதுன்னு புரியுது. நீ சொல்லுப்பா. உனக்கென்ன, என் நேரம்தான் இப்போ சரியில்லே.


கண்டிஷன் 3: வீட்டிலே இருக்கும்போது மட்டும்தான் அவர் என்னை, 'மாப்ளே', 'மாப்ளே'ன்னு கூப்பிடலாம். நான் தெருவிலே தனியா நடந்து போகும்போது பாத்தார்னா, மாப்ளேன்னு கூப்பிடக்கூடாது.


இது என்னப்பா அநியாயமா இருக்கு? நீ எங்கே இருந்தா என்ன, அவர் உனக்கு எப்பவுமே மாமனார்தானே. மாப்ளேன்னு கூப்பிடாதேன்னா, அவர் என்னன்னு கூப்பிடுவார்? எதுக்காக இந்த கண்டிஷன்?

வீட்லே தங்கமணிங்க தொல்லை தாங்கமுடியலன்னுதான் இப்போ எல்லா ரங்கமணிகளும் 'வாக்கிங்' போறேன்னு ' நிறம்' பார்க்க புறப்படறாங்க. அந்த சமயத்திலே ' நந்தி' மாதிரி வந்து 'மாப்ளே'ன்னு கத்தி காரியத்தையே கெடுத்தார்னா, யாருக்குதான் கோபம் வராது சொல்லுங்க.ரொம்ப சரியா சொன்னேப்பா. ரோட்லே எங்கே பாத்தாலும், விரோதியை பாக்கறாமாதிரி டக்குன்னு தலையை திருப்பிக்கிட்டு போகச்சொல்லிடறேன். ஓகேவா. எனக்கு தலையே சுத்தறா மாதிரி இருக்கு. அவர் உன்னை எப்படி கூப்பிடணும்னு சொல்லிட்டே. நீ அவரை கூப்பிடறதுன்னு ஏதாவது கண்டிஷன் வெச்சிருக்கியா?இருக்கே. அடுத்த கண்டிஷனே அதுதான். கண்டிஷன் நெ.4: என்னை 'மாமா'ன்னோ, 'சார்'ன்னோ கூப்பிடச் சொல்லி யாரும் வற்புறுத்தக்கூடாது. நான் மாமனாரை 'அப்பா'ன்னுதான் கூப்பிடுவேன்//

சூப்பர் பதிவு

rapp July 3, 2008 at 2:31 PM  

இப்ப நம்பறீங்களா நான் முழுசா படிச்சேன்னு:):):)

kannabiran, RAVI SHANKAR (KRS) July 3, 2008 at 2:41 PM  

//அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம்//

யப்பா
நீ ச்சின்னப் பையன் இல்ல!
ரொம்ப பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய பையன்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) July 3, 2008 at 2:45 PM  

இதே ஒரு தொடர் விளையாட்டு கணக்கா ஆயிருச்சே!
அடுத்து ரீ-ரீ-ரீமேக் யாருப்பா?

நீங்க யாருக்கும் அடுத்தாப்புல சங்கிலி போடலீங்களா அண்ணாச்சி?
(இதுக்கு ரெண்டு பொருள் உண்டு என்பதை மட்டும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) July 3, 2008 at 2:51 PM  

//NULLல மாமனார்//

மாமனாரை ஒன்னுமில்லாம ஆக்கறதுக்குத் தான் C++ படிக்கறோம், சாப்ட்வேர் படிக்கறோம் என்று சொல்லாமல் சொல்லிய துட்டுமணி நீ தானாப்பா? (கிட்டுமணிக்கு ரைமிங்க்கா துட்டுமணி-ஓக்கேவா?)

தலைப்பிலேயே உள்குத்து வைத்த மொத பதிவர் என்று பதிவுலக வரலாற்றில் உன் பெயர் பொறிக்கப்படுவதாகுக! :-))

ச்சின்னப் பையன் July 3, 2008 at 5:19 PM  

வாங்க இவன், இராம் -> நன்றி..

வாங்க வழிப்போக்கன் -> அதுதான் பதிவுலேயே சொல்லிட்டேனே. ரஜினி சொல்லலேன்னு.... அவ்வ்வ்...

ஓ ராப் -> நம்பிட்டேன்... நம்பிட்டேன்...

வாங்க கேஆரெஸ்: நான் துட்டுமணி இல்லீங்கோ... மக்குமணிதாங்கோ.... அவ்வ்வ்... நன்றி...

ரம்யா ரமணி July 3, 2008 at 10:34 PM  

ஆஹா இது என்ன மாமனாரை காலி பண்ற பதிவாட்டம் இருக்கு????

ROTFL :))

வெண்பூ July 4, 2008 at 2:33 AM  

//அதிலே எனக்கு ஒரு 'ப்ரேஸ்லெட்'டாவது கிடைக்காதா//

இப்ப உங்க கைல ப்ரேஸ்லெட் இருக்கா இல்லையா?

//வீட்லே தங்கமணிங்க தொல்லை தாங்கமுடியலன்னுதான் இப்போ எல்லா ரங்கமணிகளும் 'வாக்கிங்' போறேன்னு ' நிறம்' பார்க்க புறப்படறாங்க//

இதில இருந்து ஒண்ணு புரியுது. உங்க தங்கமணி தமிழ்மணம் படிக்கறது இல்லை. இல்லைன்னா இவ்ளோ தைரியமா எந்த ரங்கமணியாலயாவது எழுத முடியுமா?

முக்கியமான கண்டிஷன விட்டுட்டீங்களே. அவருக்கு ஒரே பொண்ணுதான் இருக்கணும். (பின்ன சொத்துல பங்கு கேட்டா என்ன பண்றது)

----

சிறில் அலெக்ஸின் போட்டிக்காக இரண்டாவது கதையை பதிவிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது படித்துப் பார்க்கவும். நன்றி.

கடைசி ஆசை

ச்சின்னப் பையன் July 4, 2008 at 7:34 AM  

வாங்க ரம்யா -> ரசிச்சீங்களா... நன்றி...

வாங்க வெண்பூ -> இல்லீங்கோ.. என் கையில் ப்ரேஸ்லெட் இல்லீங்கோ (கழட்டி வெச்சிட்டேன்!!!!)

கண்டிப்பா படிக்கிறேங்க. நேத்திக்கு நாள் முழுக்க தமிழ்மணமே பாக்கலீங்க... ரொம்ப பிஸியா போச்சு!!!

Divya July 4, 2008 at 8:04 PM  

ரொம்ப விபரமான மாப்பிள்ளைத்தான் :))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP