இதுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்?
காலை அலுவலகத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு கிளம்பும்போது, வாய் தானாக விசில் அடிக்கிறது.
அலுவலகத்திற்குள் நுழையும்போது அப்பாடா என்றிருக்கிறது.
மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு கிளம்பவேண்டுமே என்றிருக்கிறது.
வீட்டிற்குள் நுழையும்போது, தானாக கொட்டாவி வருகிறது.
வெள்ளிக்கிழமை மாலை வந்தால், எரிச்சலாக இருக்கிறது.
திங்கட்கிழமை காலை வந்தால், பயங்கர சுறுசுறுப்பாக இருக்கிறது.
அலுவலகத்திலே தமிழ்மணம் பாத்துக் கொண்டிருந்தாலும், வீட்டிலிருந்து தொலைபேசி வந்தால், கடுப்பாக இருக்கிறது.
அலுவலகத்தில் வேலை செய்யச் சொன்னால் ஜாலியாக இருக்கிறது... வீட்டில் வேலை செய்யச் சொன்னால் கோபம்தான் வருகிறது.
வீட்டில் இருக்கும்போது புத்தகம் படிக்க 'ஓய்வறை'யில் அதிக நேரம் செலவாகிறது.
இதுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்?
எனக்கு கல்யாணமாகி ஏழு வருஷமாயிடுச்சே - அதுவா?
ச்சே..ச்சே..அது காரணமாக இருக்க முடியாது.
அப்போ வேறே என்ன காரணம்?
----------------------------------------------
கதை அவ்வளவுதான்.
நம்ம கதையோட ஹீரோவுக்கு அவர் கேக்கற சரியான காரணத்தை யாராவது சொல்லுங்களேன்...
18 comments:
ஓ கல்யாணம் ஆனாலும் இந்த பிரச்சனை தொடருமா .................!
ஆடி மாசம்?
//வீட்டிலிருந்து தொலைபேசி வந்தால், கடுப்பாக இருக்கிறது.//
இந்த வரி இல்லையென்றால், அன்புமனைவி ஊருக்குப் போயிருக்கிறார் எனலாம்!
வாங்க ஆதர் -> எனக்கு வர்றதே ஒண்ணு/ரெண்டு பின்னூட்டம்தான். அதையும் போட்டவுடனே நீங்களே எடுத்துட்டீங்களே.... ஆஆஆ
வாங்க தியாகராஜன் -> ஓ. அப்போ கல்யாணமாகாதவங்களுக்கும் இதே பிரச்சினைதானா????
வாங்க பரிசல் -> அதான் வீட்டில் இருக்காங்களே???? அப்போ?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், ஒரு வேளை மாமனார் வீட்டிற்கு வந்திருக்காரா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம், வேறதுவும் தெரியலயே
அய்யோ அய்யோ உங்களுக்கான நோயின் அறிகுறி அத்தனையும் என்கிட்ட இருக்கே.
/
கதை அவ்வளவுதான்.
நம்ம கதையோட ஹீரோவுக்கு அவர் கேக்கற சரியான காரணத்தை யாராவது சொல்லுங்களேன்...
/
ஹி ஹி உங்க எச்சரிக்கை உணர்வு புல்லரிக்கவைக்குது ச்சின்ன பையன். மைண்ட்ல வெச்சிக்கிறேன் யூஸ் பண்ணிக்கிறேன் இன்னும் கல்யாணம் ஆகாதவன்!!
:))))))
//அதான் வீட்டில் இருக்காங்களே????//
அதான் கடுப்பா :-))
வாங்க ராப் -> இப்படியெல்லாம் கேப்பீங்கன்னுதான் 'கதை'ங்கிறதை நல்ல அழுத்தமா சொல்லியிருக்கேனே?????
வாங்க ராஜ நடராஜன் -> "இந்த கதை" மாதிரியே சேம் ப்ளட்???
வாங்க சிவா -> நீங்க ஒருத்தர்தான் 'சரியா' புரிஞ்சிக்கிட்டுருக்கீங்க!!!!
என் யூகம் சரியென்றால் உங்களுக்கு இன்று திருமண நாள்.. சரியா? வாழ்த்துக்கள்.
//கல்யாணமாகி ஏழு வருஷமாயிடுச்சே - அதுவா?//
எனக்கு ரெண்டரை வருசம்தான் ஆகுது.. அதுக்கே 'ஒய் ப்ளட்?...சேம் ப்ளட்' தான் :)
எங்கேயும் அதே கதை தான். காலையில சீக்கிரமா அலுவலகம் வந்து மாலையில் நேரம் கழிச்சு வீட்டுக்கு போறேன்.இந்த வியாதி ரொம்ப வேக பரவுதோ?
வாங்க வெட்டி -> என்னங்க.. இப்படி வெளிப்படையா பேசாதீங்கன்னு சொல்றேனல்லோ???
வாங்க வெண்பூ -> அப்போ இது 'கதை'தான்னு நம்பலீங்களா?... அவ்வ்வ்வ்... (என்னோட திருமண நாள் மே 14 - அன்னிக்கு அதுக்காக ஒரு பதிவு போட்டிருக்கேனே!!!)
வாங்க பிரேம்ஜி -> ஆமாங்க. நிறைய பேருக்கு இருக்குன்னு தெரியுது... 150+ பேர் பதிவை பாத்திருக்காங்க. யாரும் இதை மறுக்கவேயில்லையே!!!!
கல்யாணம் ஆகினால் திருந்திடுவோம் என்று நாங்க கணக்கு போடறது எல்லாம் வேஸ்ட்டா? :)
நானும் இதோட நாப்பது அம்பது தரம் வந்து பார்த்துட்டேன், சீக்கிரம் கொஞ்சம் காரணத்தை சொல்லுங்களேன்.
வாங்க ராப் -> 40- 50 ஹிட்ஸ் கொடுத்ததற்கு நன்றிங்க. சரி சொல்லிடறேன்.. காரணம் 'வெய்யில்'.. என்னதான் வீட்டுலே ஏ.சி போட்டுண்டு உக்காந்தாலும், ஆபீஸ்லே குளிர குளிர ஏ.சி. போடறதாலே... ஆபிஸ் போகறதுக்கு விரும்பறேன்னு சொல்லவந்தேன்.... வேறே ஒண்ணுமில்லீங்க...
மக்கள் என்ன சொல்றாங்கன்னு பாக்கலான்னு பாத்தா.. ஆடி மாசத்துலேந்து... திருமண நாள் அப்படின்னு பல காரணங்கள் சொல்லியிருக்காங்க....
//அலுவலகத்திலே தமிழ்மணம் பாத்துக் கொண்டிருந்தாலும், வீட்டிலிருந்து தொலைபேசி வந்தால், கடுப்பாக இருக்கிறது//
நைசா தப்பிச்சிக்க பாக்கறீங்களா? அப்போ மேலே உள்ள வரிக்கும் வெய்யிலுக்கும் என்னங்க சம்பந்தம்?
ஹாஹா.. சமாளிக்க விடமாட்டீங்களே...சரி பாப்போம்.
வீட்லேர்ந்து மொபைல்லே கூப்பிடுவாங்க. வெள்ளைக்காரவுங்க மத்தியிலே உக்காந்து பேச (கத்த) நமக்கு கூச்சமாயிருக்காதா!!! அதனால, தொலைபேசியை எடுத்துக்கிட்டு க்யூபை விட்டு எழுந்து வரவேண்டாமா... அதுக்குத்தான் கடுப்பு...
அவ்வ்வ்.. முடியலேடா சாமி....
சூப்பர் சமாளிப்புத்தான்,மறுபடியும் திறமைய காமிச்சிட்டீங்க.ஆனா இங்க நீங்க கைபேசின்னு சொல்லிருக்கணும், தொலைபேசிங்கும்போது லேண்ட்லைனும் கணக்கில் எடுத்துக்கலாம் இல்ல:):):)
Post a Comment