Monday, July 28, 2008

தன் கையே தனக்குதவி!!!

கிபி 2030 - சென்னையில் ஒரு அலுவலகத்தில் நண்பர்கள் சுரேஷ், ரமேஷ் இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.


சு: பயங்கர தலைவலியா இருக்குடா.


ர: ஏன், என்ன ஆச்சு? ராத்திரி சரியா தூங்கலியா இல்லே ராத்திரி அடிச்சுது இன்னும் தெளியலியா?


சு: அதெல்லாம் ஒண்ணுமில்லேடா, வீட்டிலே பால் தீர்ந்திடுச்சு. கார்த்தாலே காபி குடிக்கலே. அதனாலே, தலைவலி.


ர: ஹேய், என்ன ஜோக்கடிக்கறியா? பால் தீர்ந்துடுச்சுன்னா, ஃப்ரிட்ஜே பால் கடைக்குப் தொலைபேசி சொல்லிடுமே? அவந்தான் 10 நிமிஷத்திலே பால் வந்து கொடுத்துடுவானே?


சு: அட, போன மாசமே அந்த கடையோட தொலைபேசி எண் மாறிடுச்சுப்பா. நாந்தான் அதை ஃப்ரிட்ஜோட settingsலே மாத்தலே.


ர: சரிப்பா, அதில்லேன்னா என்ன, உன்னோட செல்லுலே எஸ்.எம்.எஸ் வருமே?


சு: எனக்குத்தான் தினமும் ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ் வருதே - தத்துவம், அரசியல், வங்கியிலேந்து - அப்படி, இப்படின்னு. அதனாலே, நான் எந்த எஸ்.எம்.எஸ்ஸையும் பாக்கறதேயில்லை.


ர: எஸ்.எம்.எஸ் அனுப்பிச்சி எதுவும் நடக்கலேன்னா, உடனே ஃப்ரிட்ஜ்தான் உன் கைபேசியில் கூப்பிடுமே?


சு: கூப்பிட்டிருக்கும்னு நினைக்கறேன். நான் நேத்து என் ஆளுகிட்டே ஒரு நாலு மணி நேரம் பேசிக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலே, கிட்டத்தட்ட 10-15 கால்கள் வந்திருந்தன. எல்லாத்தையும் பாத்துக்கிட்டே வந்த நான், இதை மிஸ் பண்ணியிருப்பேன்னு நினைக்கறேன்.


ர: உன்னோட கைபேசியை நீ எடுக்கலேன்னா, கைபேசியிலேர்ந்து மெயில் பெட்டிக்கு ஒரு மெயில் போறாமாதிரி செட் பண்ணியிருக்கியே? அந்த மெயிலையாவது பாத்தியா?


சு: என்னோட கைபேசியிலேர்ந்து மெயில் பெட்டிக்கு வர்ற மெயில்களுக்கெல்லாம் நான் ஒரு 'Rule' செட் பண்ணி நேரா அதையெல்லாம் அழிச்சிடுவேன். அதனால, நான் அங்கேயும் பாக்கலை.


ர: உன்னையெல்லாம்.... என்ன பண்றதுன்னே எனக்கு தெரியல...


சு: இந்த தொழில்நுட்பம் இன்னும் வளரலேன்னு நான் நினைக்கறேன். பாரேன், இவ்ளோ வளர்ந்திருந்தும் எனக்கு இன்னிக்கு பால் இல்லாததாலே காபி கிடைக்கலே.


ர: டேய்.. டேய். உனக்கு வந்த எந்த தகவலையும் நீ பாக்காமே, தொழில்நுட்பம் மேலே பழி போடாதே.


சு: சரி சரி. நீ டென்சனாகாதே. எனக்கு ஒரு சந்தேகம். நாம இவ்ளோ வசதிகள் வெச்சிருந்தும், எனக்கு இன்னும் பிரச்சினை இருக்கே. அந்த காலத்துலேயெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு நினைக்கறேன்.


ர: அதுதான் இல்லே. நான் கேள்விப்பட்டது என்னன்னா, அவங்க இதையெல்லாம் விட ஒரு சூப்பர் தொழில்நுட்பம் வெச்சிருந்தாங்களாம். சின்ன வயசிலே, என் தாத்தா எனக்கு சொல்லியிருக்கார்.


சு: அப்படியா, அது என்ன?


ர: அந்த தொழில்நுட்பத்தோட பேரு - 'தன் கையே தனக்குதவி'. அதாவது, தினமும் ஒரு தடவை, அவங்களே ஃப்ரிட்ஜைத் திறந்து பாத்திடுவாங்க. பால் தீர்ந்திருந்துன்னா, உடனே கடைக்குப் போய் வாங்கிட்டு வந்துடுவாங்க. அவ்வளவுதான்.


பி.கு: சிறில் அலெக்ஸின் அறிவியல் போட்டிக்கு என்னுடைய மூன்றாவது இடுகை இது.

32 comments:

ராஜ நடராஜன் July 28, 2008 at 5:35 AM  

இன்னைக்கு முதல் போணி உங்களுக்குத்தான்.நாங்களெல்லாம் இனி பிரிட்ஜ் போன் செய்யறளவுக்குப் போகல.சொல்லப் போனா பிரிட்ஜவே திறக்கிறதில்ல:)

rapp July 28, 2008 at 6:02 AM  

ஆஹா, கெளம்பிட்டீங்களா? சூப்பர். வர வர இந்த அறிவியல் சிறுகதை போட்டியினால இப்போ என்ன வருஷம்னே மறந்து போயிடும் போலருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........................

Unknown July 28, 2008 at 6:32 AM  

அடித்து தூள் கிளப்ப என் வாழ்த்துக்கள் :-)

சின்னப் பையன் July 28, 2008 at 8:09 AM  

வாங்க விஜய் -> ஹிஹி. இப்போதான் அகராதியிலே பார்த்தேன். நல்லவேளை நீங்க திட்டலை...:-)))

வாங்க ராஜ நடராஜன் -> நன்றி...

வாங்க ராப் -> ஆமாங்க. போட்டிக்கான பதிவுகள வரிசையா படிச்சி பாத்தா, 2008லாம் எப்போவோ கடந்த காலம்போல இருக்கு....:-))

வாங்க புதுகைச் சாரல் -> நமக்கு இந்த ரோபோ, கால இயந்திரம் இதெல்லாம் வெச்சி கதை எழுத பிடிக்கலீங்க (அப்பாடா, தோணலைன்னு எழுதலை). அதனால், இந்த மாதிரி!!!.. நன்றி...:-))

முரளிகண்ணன் July 28, 2008 at 8:32 AM  

\\ஹிஹி. இப்போதான் அகராதியிலே பார்த்தேன். நல்லவேளை நீங்க திட்டலை...:-)))
\\
ஹா ஹா ஹா

குசும்பன் July 28, 2008 at 8:54 AM  

தலைப்பை படிச்சதும்...ஆர்வமாக உள்ளேவந்தேன் வந்தது வீன் போகவில்லை:))))))

பிரேம்ஜி July 28, 2008 at 9:39 AM  

எனக்கு பிடித்த கதை இதுவே, எளிமையாக ஆனால் நச்சுனு இருக்கு.

NewBee July 28, 2008 at 9:53 AM  

//தினமும் ஒரு தடவை, அவங்களே ஃப்ரிட்ஜைத் திறந்து பாத்திடுவாங்க//

சே! பாவம். ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்காங்க அந்த காலத்துல :D.

நல்லா யோசிக்குறீங்க ச்சின்னப் பையன்.

பி.கு.: எந்த 'காலத்துக்கும்' போக சுலபமான வழி...நீங்கதானே? :))

சின்னப் பையன் July 28, 2008 at 10:18 AM  

வாங்க முரளிகண்ணன் -> சிரிங்க சிரிங்க... நல்லா சிரிங்க... அவ்வ்வ்வ்...

வாங்க குசும்பன் -> ஆ. அப்போ தலைப்பைப் பாத்துதான் பதிவ படிக்கணுமான்னு தீர்மானிப்பீங்களா.... கடவுளே.. இனிமே பதிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை.. நல்ல தலைப்பை மட்டும் எனக்கு கொடுத்துடு....:-))

வாங்க பிரேம்ஜி -> நன்றி..

வாங்க ந்யூபீ -> ஆஆ. இன்னும் கொலவெறியோடதான் அலையறீங்க போல.... அவ்வ்வ்....

விஜய் ஆனந்த் July 28, 2008 at 10:23 AM  

\\ வாங்க விஜய் -> ஹிஹி. இப்போதான் அகராதியிலே பார்த்தேன். நல்லவேளை நீங்க திட்டலை...:-))) \\
அவ்வ்வ்வ்வ்...பெரியண்ணா, நீங்க எம்மாம்பெரீய்ய்ய்ய ஆளு!!!...உங்களை நான் திட்றதா???
அபச்சாரம்...அபச்சாரம்...அது சரீரீரீஇஇஇ...நீங்க என்ன திட்டலயே??(அகராதி புடிச்சவன்???)எதுனா தப்பா இருந்தா மாப்பு கேட்டுக்கறேன்....

புதுகை.அப்துல்லா July 28, 2008 at 10:30 AM  

rapp said...
ஆஹா, கெளம்பிட்டீங்களா? சூப்பர். வர வர இந்த அறிவியல் சிறுகதை போட்டியினால இப்போ என்ன வருஷம்னே மறந்து போயிடும் போலருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........................

மறுக்கா கூவு

வெண்பூ July 28, 2008 at 10:47 AM  

கலக்குறீங்க ச்சின்னப்பையன். தலைப்பைப் பார்த்தவுடனே ஏதோ நம்ம தலையும் ஏடாகூடாம எழுத ஆரம்பிச்சிட்டாரோன்னு நினச்சேன். பரவாயில்ல.. அப்படி ஒண்ணும் இல்ல. :)))

சின்னப் பையன் July 28, 2008 at 11:26 AM  

மறுபடி வாங்க விஜய் -> சரிதான். நான் நிறுத்தறேன். நீங்களும் நிறுத்திடுங்க... (அவன நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தறேன் - இதோட எதிர்ப்பதம்தான் அது...)!!!

வாங்க அப்துல்லா -> அப்படின்னா, ராப்க்கு போட்ட பதிலையே நீங்களும் படிச்சிடுங்க...

வாங்க வெண்பூ -> அடடா, **** கதைகள்னு நினைச்சி வந்தீங்களா... ஏமாந்துட்டீங்களே.. ஏஏஏஏ....:-))

இரா. வசந்த குமார். July 28, 2008 at 2:55 PM  

ஹி...ஹி... நல்ல காமெடி சையின்ஸ் பிக்ஷனுங்கோ...

NewBee July 28, 2008 at 4:57 PM  

/வாங்க ந்யூபீ -> ஆஆ. இன்னும் கொலவெறியோடதான் அலையறீங்க போல.... அவ்வ்வ்....
//

உண்மையாவே, சிரிச்சு ரசிச்சுத்தான் சொன்னேன்.ஒரு அன்பானக் கொலைவெறி தான்.சீரியஸா இல்லை, ச்சின்ன பையன் :)))

MSK / Saravana July 28, 2008 at 4:59 PM  

தன் கையே தனக்குதவி!!!

:) :) :)

என்னே ஒரு சிந்தனை..!!

சின்னப் பையன் July 28, 2008 at 5:05 PM  

வாங்க வசந்தகுமார், சரவண குமார் -> ஹிஹி... நன்றி...

வாங்க ந்யூபீ -> தெரியுங்க... சும்மாதான் சொன்னேன்.. நன்றி...:-))

அருப்புக்கோட்டை பாஸ்கர் July 28, 2008 at 8:41 PM  

கலக்கல் அறிவியல் கதை !
அதில் ஒரு தத்துவம் வேறயா ? நடக்கட்டும் , நடக்கட்டும்

சீமாச்சு.. July 28, 2008 at 9:18 PM  

நல்ல கதை..

//வாங்க விஜய் -> ஹிஹி. இப்போதான் அகராதியிலே பார்த்தேன். நல்லவேளை நீங்க திட்டலை...:-)))
//

அகராதியில தான் பாத்தீங்களே.. என்ன பாத்தீங்க-ன்னு போடக்கூடாதா?

இப்ப என்னை வேற ஒருதடவை பாக்க வெக்கறீங்களே..

துளசி கோபால் July 28, 2008 at 9:23 PM  

என்னங்க இப்படி முடிச்சுட்டீங்க.

அந்த தாத்தா சொன்னது இப்படி இருக்குமுன்னு நினைச்சேன்.

எப்படி?

' அந்தக் காலத்துலே கல்யாணமுன்னு ஒரு விசயம் இருந்துச்சாம். அப்படிக் கட்டிக்கிட்டாங்கன்னா அவுங்க பார்த்துச் சொல்லுவாங்களாம் ஃபிரிட்ஜ்லே என்ன இல்லைன்னு'

சின்னப் பையன் July 28, 2008 at 9:42 PM  

வாங்க பாஸ்கர் -> நன்றிங்க..

வாங்க சீமாச்சு -> ஹிஹி. என்ன பாத்தேன்னு மறந்துட்டேன். நீங்க பாத்துட்டீங்கல்ல?

வாங்க துளசி மேடம் -> ஹாஹா. அது சரி. அப்புறம் ஆணியம், பெண்ணியம்னு பேச்சு வர்றதுக்கா? வேணாம்டா சாமி, இருக்கற பிரச்சினையே போதும்.... அவ்வ்வ்வ்.....

இவன் July 29, 2008 at 12:06 AM  

நல்லா இருக்கு ச்சின்னப்பையன்... கலக்கீட்டீங்க போங்க இனி எதிர்காலத்தில இப்படித்தான் பேசுவாங்களோ??

விஜய் ஆனந்த் July 29, 2008 at 12:26 AM  

\\ மறுபடி வாங்க விஜய் -> சரிதான். நான் நிறுத்தறேன். நீங்களும் நிறுத்திடுங்க... (அவன நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தறேன் - இதோட எதிர்ப்பதம்தான் அது...)!!! \\
yes boss...எல்லாரும் பாத்துக்குங்கோ...நான் நிறுத்திட்டேன்....நான் நிறுத்திட்டேன்....நானும் சின்ன பையன்தான்...எல்லாரும் பாத்துக்குங்க....

மங்களூர் சிவா July 29, 2008 at 1:37 AM  

/
அந்த தொழில்நுட்பத்தோட பேரு - 'தன் கையே தனக்குதவி'.
/

கரிக்குட்டுங்ணா!

மங்களூர் சிவா July 29, 2008 at 1:37 AM  

/
குசும்பன் said...

தலைப்பை படிச்சதும்...ஆர்வமாக உள்ளேவந்தேன்
/

அப்புறம்

/
வந்தது வீன் போகவில்லை:))))))
/

இதை எதோ ஜோகத்தோட சொல்றாமாதிரி இருக்கே!?!?!?

மங்களூர் சிவா July 29, 2008 at 1:39 AM  

/
துளசி கோபால் said...

என்னங்க இப்படி முடிச்சுட்டீங்க.

அந்த தாத்தா சொன்னது இப்படி இருக்குமுன்னு நினைச்சேன்.

எப்படி?

' அந்தக் காலத்துலே கல்யாணமுன்னு ஒரு விசயம் இருந்துச்சாம். அப்படிக் கட்டிக்கிட்டாங்கன்னா அவுங்க பார்த்துச் சொல்லுவாங்களாம் ஃபிரிட்ஜ்லே என்ன இல்லைன்னு'
/

துல்சிம்மா அது எந்த வருசம் 1980லயா???

Anonymous,  July 29, 2008 at 3:05 AM  

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.... நோ பீஸ் ஆஃப் மைண்ட் :)

சுவாரஸ்யமான கதை

VIKNESHWARAN ADAKKALAM July 29, 2008 at 4:33 AM  

எப்படி எப்படியோ யோசிக்கிறிங்க

சின்னப் பையன் July 29, 2008 at 6:01 AM  

வாங்க இவன் -> எல்லாம் ஒரு கற்பனைதான்... ஹிஹி

வாங்க விஜய் -> ஹலோ. நீங்க நிறுத்துங்கன்னு சொன்னேன் அவ்வளவுதான். சின்னப்பையன்னு நான் சொன்னேனா???....:-)

வாங்க சிவா -> போட்டுத் தாக்குங்க...

வாங்க சேவியர் -> அதேதான்... அதேதான்...

வாங்க விக்னேஸ்வரன் -> உங்களையெல்லாம் என் பக்கத்துக்கு வந்து படிக்கவைக்கணுமே????

VIKNESHWARAN ADAKKALAM July 29, 2008 at 11:27 AM  

//உங்களையெல்லாம் என் பக்கத்துக்கு வந்து படிக்கவைக்கணுமே????//

என்ன சொல்ல வரிங்க விவகாரமா இருக்கே...

சின்னப் பையன் July 29, 2008 at 3:11 PM  

அதிலே ஒண்ணும் விவகாரமான மேட்டரே இல்லீங்க. "இப்படி ஏதாவது புதுசு புதுசா எழுதினாத்தானே விக்னேஸ்வரன் மாதிரி ஆட்களை என் பதிவுக்கு இழுக்க முடியும்"னு சொன்னேன்..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP