கிபி 2030 - சென்னைக்குப் போறீங்களா?
"வடமாவட்டங்களுக்குப் போறவங்க மட்டும் இங்கே இறங்குங்க. மத்தவங்களுக்கெல்லாம், அடுத்த நிறுத்தம்" - ஓட்டுனரின் அறிவிப்பு கேட்டது. கூடவே யாரிடமோ கத்துவதும் - "ஏய், வீட்லே சொல்லிட்டு வந்துட்டியா, வண்டி வர்றது தெரியல?.. மாடு மாதிரி குறுக்கே வர்றியே?"... "இட்லி, வடை, காப்பி.... இட்லி, வடை, காப்பி.... " "ஏம்பா, நாங்க இறங்க வேண்டாமா, இங்கே வந்து இட்லிக்கடையைப் போட்டுட்டியே..." "போதுங்க. இனிமே சென்னை வர்றதுன்னா ஒழுங்கா பேருந்துலியோ அல்லது புகைவண்டியிலியோதான் வரணும். விமானத்துல வேண்டவே வேண்டாம். அப்பப்பா, போதும் போதும்னு ஆயிடுச்சு..." பின் : ---> இது சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினை பற்றியதுதான். ---> கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை 'டி' போட்டுக் கூப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ளவும். இல்லையென்றால், 'ங்க'தான்.
"ஏங்க, அடுத்தது நம்ம இடம்தானே?. எழுந்திருச்சி முன்னாடி போய் கதவுகிட்டே நிப்போம். வாங்க".
"என்னடி, எழுந்திருக்க எங்கே இடம் இருக்குன்னு நீ இப்போ கிளம்பிட்டே?. வழியிலே பெட்டி, படுக்கையெல்லாம் அடுக்கி வெச்சிருக்காங்களே?"
"ஏங்க, நீங்க முன்பதிவு செஞ்சிட்டுதானே வந்தீங்க? முன்பதிவு செய்த பெட்டியிலுமா இப்படி கூட்டம்?"
"ஆமாண்டி. இப்போல்லாம், முன்பதிவுக்கெல்லாம் அர்த்தமேயில்லாமெ போயிடுச்சு. கொஞ்சம் கூட வெக்கமேயில்லாமெ திடீர் பயணம்னு ஏர்றவனுங்க எல்லாம் - கொஞ்சம் தள்ளி உக்காருங்க சார்னு உக்காந்துடறாங்க. விட்டா என் மடியிலேயே உக்காந்துடுவாங்க. கம்மனாட்டிப் பசங்க"..
(எதிரில் உட்கார்ந்திருப்பவர் திடீரென்று எழுந்து)
"ஏய், யாரைப் பாத்து கம்மனாட்டிப் பசங்கன்னு சொன்னே? நான் யார் தெரியுமா? வெட்டிடுவேன். ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டா, இந்த வண்டி முழுக்க உனக்கே சொந்தம்னு நினைச்சியா?"
"ஐயோ. விட்டுடுங்க. இவர் ஏதோ தெரியாமெ சொல்லிட்டார். ஏங்க, நீங்க வாங்க. நாம போய் இறங்கற வழியை பாப்போம்".
"உக்காரு உக்காரு. வண்டி நிக்கட்டும். அப்புறம் எழுந்து போகலாம்".
(அடுத்த அறிவிப்பு)"தென் மாவட்டங்களுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கும் போறவங்க இங்கே இறங்கிக்கோங்க".
"வாடி, இறங்கலாம்".
ஒருவழியாய், அடித்துப்பிடித்து இறங்குகிறார்கள்.
33 comments:
ஹா ஹா ஹா ஹா !!!!
நாந்தான் மொதோ!!!
// இருக்கிற விமான நிலையத்தை விரிவு படுத்த இடம் இல்லாமல், வெவ்வேறு இடத்தில் கட்டி, அதுவும் சில வருடங்களில் நிரம்பி வழிந்தால் என்ன ஆகும் என்ற கற்பனைதான் இது. //
கற்பனை கலவரப்படுத்துதே...
//"இட்லி, வடை, காப்பி.... இட்லி, வடை, காப்பி.... "//
இதுதான் டாப்பு... கலக்கல்ஸ் ச்சின்னப்பையன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............எங்கயோ போயிட்டீங்க. இதுவும் போட்டிக்கா?
எதுக்கும் பார்த்து பதவிசா இருந்துக்கங்க, ஏன்னா இதே மாதிரி கதையெழுதி படமெடுக்கிற தக்காளி ஸ்ரீநிவாசன் அவருக்கு நீங்க தீவிர போட்டியாளரா இருக்கீங்கன்னு உங்களை தன் டிஸ்கஷனுக்குக் கூப்பிடறதா இருக்காராம்:):):)
//"கிபி 2030 - சென்னைக்குப் போறீங்களா?"
//
ஏங்க இன்னும் இருபத்திரண்டு வருஷம்தானே இருக்கு, அதுக்குள்ள இப்படி பீதியக் கிளப்பினா என்னங்க நியாயம்
வாங்க விஜய் -> ஆமா. ஆமா. நீங்கதான் மொதோ... :-)
வாங்க வெண்பூ -> ஹாஹா... நன்றிங்க...
வாங்க ராப் -> தக்காளி சீனிவாசனா - ஆஆஆ... (ரொம்ப பழைய மொக்கைங்கல்லாம் ஞாபகத்துக்கு வருதே!!!!)..
அப்போ என் பேரை ச்சின்னப்பையன்லேந்து ச்சின்னத்தக்காளின்னு மாத்திக்கவா???? அவ்வ்வ்வ்....
நம்ம லோகல் விமானம் விட்டா..நடுவானிலே மக்கர் பண்ணி..சில்லறை இல்லன்னு இறக்கிவிட்றுவாங்க..ஜாக்கிரதை
உன்மைதான்...
விரைவில் எதிர்பாக்கலாம்...
//கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை 'டி' போட்டுக் கூப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ளவும். இல்லையென்றால், 'ங்க'தான்.//
சொந்த அனுபவத்தில் எழுதியதோ..??
கலக்கல் கசையடி..
வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> ஹாஹா. அது சரி... வண்டி கிளம்பல.. கொஞ்சம் இறங்கி தள்ளி விடுங்கன்னு சொல்லாம இருந்தா சரிதான்.
வாங்க குரங்கு -> புதுவரவு?... வாழ்த்துக்கள். வந்ததுக்கு நன்றி...
வாங்க சரவணகுமார் -> அது சரி. மொத்த கதைய விட்ருங்க... கடைசீசீசீசீசீ வரிய மட்டும் நல்லா படிங்க.... அவ்வ்வ்வ்வ்..... :-))))
வழக்கம் போல முடிவில் வரும் அருமை. போற போக்கை பார்த்தா இது மாதிரி கூடிய சீக்கிரம் நடக்கலாம். :-)))))
//"ஏய், வீட்லே சொல்லிட்டு வந்துட்டியா, வண்டி வர்றது தெரியல?.. மாடு மாதிரி குறுக்கே வர்றியே?"... //
அப்பாவும் இதே வசனம் தானா.
கன்னடத்துக்காரன் மாதிரி குறுக்க வர்றியே-ன்னு புதுசா போட்ருக்கலாம்
வால்பையன்
//"ஏங்க, அடுத்தது நம்ம இடம்தானே?. எழுந்திருச்சி முன்னாடி போய் கதவுகிட்டே நிப்போம். வாங்க".//
ஸ்டாப் வந்த உடனே எழுப்பி விடறதுக்கு ஒரு மிசின் கண்டு பிடிக்க துப்பில்ல என்ன நாடு இது
வால்பையன்
// வழியிலே பெட்டி, படுக்கையெல்லாம் அடுக்கி வெச்சிருக்காங்களே?"//
சரிதான். ஆக்கிரமிப்பு புத்தி நம்மள விட்டு போகவே போகாதா
வால்பையன்
//"ஏங்க, நீங்க முன்பதிவு செஞ்சிட்டுதானே வந்தீங்க? முன்பதிவு செய்த பெட்டியிலுமா இப்படி கூட்டம்?"//
உலகம் அழியும் வரை வித்அவுட்டில் போகும் எங்கள மாதிரி ஆளுங்க இருக்கிற வரை எப்படி கூட்டம் குறையும்
வால்பையன்
//விட்டா என் மடியிலேயே உக்காந்துடுவாங்க. கம்மனாட்டிப் பசங்க"..//
ஒரு பொண்ணு இதே மாதிரி கேட்டா, அதுவும் கம்மனாட்டி பொண்ணா
வால்பையன்
//"ஏய், யாரைப் பாத்து கம்மனாட்டிப் பசங்கன்னு சொன்னே? நான் யார் தெரியுமா? வெட்டிடுவேன். //
அதான பார்த்தேன். என் தலைவனை திட்டினாலே தீக்குளிப்போம்.
எங்க சாதி(கம்முனாட்டி)காரனை திட்டினால் சும்மா இருப்போமா
வால்பையன்
//"இட்லி, வடை, காப்பி.... இட்லி, வடை, காப்பி.... "//
உங்க இட்லிவடை புராணம் இங்கேயும் தொடருதா
வால்பையன்
//"ஏம்பா, நாங்க இறங்க வேண்டாமா, இங்கே வந்து இட்லிக்கடையைப் போட்டுட்டியே..."//
எங்க? உங்க மடியிலேயே
வால்பையன்
//இருக்கிற விமான நிலையத்தை விரிவு படுத்த இடம் இல்லாமல், வெவ்வேறு இடத்தில் கட்டி, அதுவும் சில வருடங்களில் நிரம்பி வழிந்தால் என்ன ஆகும் என்ற கற்பனைதான் இது.//
வேணும்னா முழு சென்னையவும் விமான நிலையமா மாத்திட்டு நாம கடலுக்குள்ள குடி போயிரலாமா
வால்பையன்
//கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை 'டி' போட்டுக் கூப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ளவும். இல்லையென்றால், 'ங்க'தான்.//
உங்க வீட்டு ரகசியமெல்லாம் யாருங்க கேட்டா
வால்பையன்
வாங்க பிரேம்ஜி -> நன்றி...
வாங்க வால்பையன் -> இன்னிக்குமா..!!!!!!!!!. பயங்கர ஃபார்ம்லே இருக்கீங்க போல... நடத்துங்க.. நடத்துங்க... அவ்வ்வ்வ்.....
//கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை 'டி' போட்டுக் கூப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ளவும். இல்லையென்றால், 'ங்க'தான்.//
'ஙே'
saturday / sunday 'ங்க' than ungakalukku
ச்சின்னப்புள்ளத்தனமா இல்லை! :0)
கலக்கல் ச்சின்னவர்.! //பேருந்துலியோ அல்லது புகைவண்டியிலியோதான் வரணும்// இப்போதே தமிழகத்தைத்தவிர பிற மாநிலங்களில் (குறிப்பாக மத்திய மாநிலங்கள். பிறவற்றைப் பற்றி அவ்வளவாக தெரியாது) முன்பதிவுப்பெட்டிகளில் அனைவரும் ஏறிச்செல்வதென்பது சகஜமான ஒன்று. அப்பர் பெர்த்தில் படுத்திருந்தாலும், எழுந்திருக்கச்சொல்லி பக்கத்தில் உட்கார்ந்துகொள்வார்கள்.
/
வால்பையன் said...
//கதையில் கணவன் கோபத்தில் இருப்பதால்தான் மனைவியை 'டி' போட்டுக் கூப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ளவும். இல்லையென்றால், 'ங்க'தான்.//
உங்க வீட்டு ரகசியமெல்லாம் யாருங்க கேட்டா
வால்பையன்
/
கல்யாணம் ஆவாதவனுங்களை கிலி பண்றதுன்னு முடிவோடதான் எழுதறீங்க!!!
:))))))))
ஆனாலும் எம்புட்டு தைரியம்ங்க உங்களுக்கு நிஜமெல்லாம் எழுதறீங்க ச்சின்ன பையன்
சூப்பர் கற்பனை...
//இல்லையென்றால், 'ங்க'தான்.//
இது டாப்பு டக்கர்.. :-)
வணக்கம் ச்சின்னப் பையன்.ஏன் 2030 வரைக்கும் காத்திருக்கணும்!போன வருசம் கோவை,சென்னை,மும்பாய் போறப்பவே டெக்கான் விமானத்திலேயெல்லாம் இருக்கை எண் கிடையாது.யார் முந்தியோ அங்கே உட்கார்ந்துக்க வேண்டியதுதான்.ஹோஸ்டஸ்கள் இடிக்கும்படியான தர்மசங்கடங்கள் வேறு.குளிர்பானம்,தண்ணீர் எதுவானாலும் நீங்க சொல்றது போல் சத்தம் போட்டுகிட்டே வந்தாங்க.காசு குடுத்தே வாங்கவேண்டியதாயிருந்தது.சென்னையிலிருந்து,கோவை வரை ஏ.சி கோச்சுல ரயில்பயணம் அம்மா,குடும்பம்,தங்கைகள்,மச்சான்மார்கள் என சுகமாகவே இருந்தது:)
வாங்க வேலன், அப்துல்லா, ஸ்யாம் -> நன்றி...
வாங்க குடுகுடுப்பை -> அப்ப மத்த நாள்லாம்???...அவ்வ்வ்வ்..
வாங்க தாமிரா, ராஜ நடராஜன் -> வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
வாங்க சிவா -> உண்மையை சொல்ற நேரம் வந்துடுச்சு!!!!
Post a Comment