பரிசல் - மென்பொருள் நிபுணரானால்!!!
சென்னையே ஒரு ஆஃப்ஷோர்தான். சென்னைக்கு திருப்பூர் ஆஃப்ஷோர் ஆகமுடியாதான்னு கேக்காதீங்க. மரியாதையா சென்னைக்கு வந்து வேலை பாருங்க.
----
நல்லாத்தானே மென்பொருள்லே வேலை செய்றீங்க, எதுக்கு தினமும் 'மொக்கை' போடுறேன், 'மொக்கை' போடுறேன்னு சொல்லிக்கிறீங்க?
---
மென்பொருள் பெர்பார்மென்ஸ் தூக்கணும்னா, அதுக்கு பலம் தேவையில்லீங்க. நான் ஒல்லியா இருக்கேன்னு சொல்லாதீங்க...
----
நீங்க கவிதை நல்லா எழுதுவீங்கன்னு எனக்கு தெரியும். அதுக்காக கோடிங்கையும் கவிதை மாதிரி மடக்கி மடக்கி எழுதாதீங்க...
--
என்னது, நீங்க முதல்முதல்லே வேலை பாத்த மென்பொருள் 'க்ளிப்பனா'? நான் அந்த மாதிரி ஒண்ணை கேள்விப்பட்டதே இல்லையே?
ஆமா. எனக்கு 'க்ளிப்பர்'ஐ ரொம்ப நாளா தெரியும்றதாலே, அதோட பேரை 'க்ளிப்பன்'னு மாத்திட்டேன்.---
'சந்திப்பிழை'யெல்லாம் பதிவெழுதும்போது மட்டும்தாங்க பாக்கணும். கோடிங் செய்யும்போது பாத்தா, மென்பொருள் காறித் துப்பிவிடும்.
----
உங்களுக்கு மொத்தம் எவ்ளோ வருட முன்னனுபவம்னுதானே கேட்டேன்? நீங்க முதல் மென்பொருள் செய்த தேதி, முதன்முதல் டெஸ்டிங் செய்த தேதின்னு ஏன் எல்லாத்தையும் தேதிவாரியா சொல்லிக்கிடிருக்கீங்க?
-----
தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?
---
பின் : இந்த பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு.. (கடைசி 2ஐத் தவிர). இன்னிக்குத்தான் போட நேரம் கிடைச்சது. . விட்டுப்போனவற்றை மக்கள் பின் மூலமாக சொல்லுங்க....
37 comments:
விட்டுப் போன பின் - 2: நண்பர் பரிசல் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.... நன்றி...
//தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?//
;)
;)
எல்லாத்தையும் சொல்லிட்டு நகைச்சுவையா??
;)
ஆமாம்ங்க..நானும் அதைத்தான் கேட்கிறேன்..நாம ஒரு இடத்திலே புகுந்துட்டா...அவங்க கழுத்தை பிடிச்சு தள்ளறவரைக்கும்
வெளியேறக்கூடாது..நாமே ஏன் ராஜிநாமா பண்ணனும்?..அப்படி என்ன சொல்லிட்டார் அவர்?
//தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?//
சின்ன பையன் பன்ச் :-))))
/
தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?
/
:))
//சென்னையே ஒரு ஆஃப்ஷோர்தான். சென்னைக்கு திருப்பூர் ஆஃப்ஷோர் ஆகமுடியாதான்னு கேக்காதீங்க. மரியாதையா சென்னைக்கு வந்து வேலை பாருங்க.//
சென்னை எந்த நாட்ல இருக்கு, நாங்க ஒன்லி வெளிநாட்ல மட்டும் தான் வேலை பார்ப்போம்
வால்பையன்
//நல்லாத்தானே மென்பொருள்லே வேலை செய்றீங்க, எதுக்கு தினமும் 'மொக்கை' போடுறேன், 'மொக்கை' போடுறேன்னு சொல்லிக்கிறீங்க?//
வேலை செய்யுறது சம்பளத்துக்கு, மொக்கை எங்க திருப்பதிக்கு
வால்பையன்
//மென்பொருள் பெர்பார்மென்ஸ் தூக்கணும்னா, அதுக்கு பலம் தேவையில்லீங்க. நான் ஒல்லியா இருக்கேன்னு சொல்லாதீங்க...//
என்ன சால்ஜாப்பு சொன்னாலும் வேலைக்காக மாட்டிங்குதே
வால்பையன்
//நீங்க கவிதை நல்லா எழுதுவீங்கன்னு எனக்கு தெரியும். அதுக்காக கோடிங்கையும் கவிதை மாதிரி மடக்கி மடக்கி எழுதாதீங்க...//
புதுக்கவிதை மாதிரி இது மடகவிதைங்க
வால்பையன்
//என்னது, நீங்க முதல்முதல்லே வேலை பாத்த மென்பொருள் 'க்ளிப்பனா'? நான் அந்த மாதிரி ஒண்ணை கேள்விப்பட்டதே இல்லையே?//
நீங்க தொழிலுக்கு புதுசா
//எனக்கு 'க்ளிப்பர்'ஐ ரொம்ப நாளா தெரியும்றதாலே, அதோட பேரை 'க்ளிப்பன்'னு மாத்திட்டேன்.//
பின்னவீனத்துல இதுவும் ஒரு வகை
வால்பையன்
//சந்திப்பிழை'யெல்லாம் பதிவெழுதும்போது மட்டும்தாங்க பாக்கணும். கோடிங் செய்யும்போது பாத்தா, மென்பொருள் காறித் துப்பிவிடும்.//
அதான் உங்க கேபின்ல வழுக்கி வழுக்கி விடுதா
வால்பையன்
//உங்களுக்கு மொத்தம் எவ்ளோ வருட முன்னனுபவம்னுதானே கேட்டேன்? நீங்க முதல் மென்பொருள் செய்த தேதி, முதன்முதல் டெஸ்டிங் செய்த தேதின்னு ஏன் எல்லாத்தையும் தேதிவாரியா சொல்லிக்கிடிருக்கீங்க?//
எப்பவும் எங்களுக்கு தலையை சுத்தி மூக்க தொட்டு தான் பழக்கம், இதுவும் பின்னவீனத்துல ஒருவகை
வால்பையன்
//தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?//
நாங்க எப்பவுமே வச்சா குடுமி செரச்சா மொட்ட தான்
அதாவது அடிச்சா கும்மி, எழுதுனா மொக்கை
வால்பையன்
//விட்டுப்போனவற்றை மக்கள் "பின்" மூலமாக சொல்லுங்க....//
உங்க பின்நவீனத்துவ ஆர்வம் புல்லரிக்க வைக்குது
வால்பையன்
//இந்த பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு..//
இந்த மாதிரி இன்னும் எத்தனை பெண்டிங்க்குல இருக்கு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வால்பையன்
எல்லாமே நல்லா இருக்கு.. ஆனா டாப் கிளாஸ் இது ரெண்டும்தான்...
//உங்களுக்கு மொத்தம் எவ்ளோ வருட முன்னனுபவம்னுதானே கேட்டேன்? நீங்க முதல் மென்பொருள் செய்த தேதி, முதன்முதல் டெஸ்டிங் செய்த தேதின்னு ஏன் எல்லாத்தையும் தேதிவாரியா சொல்லிக்கிடிருக்கீங்க?
-----
தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?
//
வாங்க சரவண குமார் -> இதிலே சீரியஸா எடுத்துக்கறது ஏதாவது இருக்கா????... அவ்வ்வ்..
வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி -> முதல் வருகைக்கு நன்றி...
வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> அதானே....
வாங்க பிரேம்ஜி -> நன்றி...
வாங்க சிவா -> நன்றிங்க...
வாங்க வால் -> வழக்கம்போல போட்டுத் தாக்கிட்டீங்க...
//மொக்கை எங்க திருப்பதிக்கு//
என்ன சொல்ல வர்றீங்க.... 'மொட்டை எங்க திருப்பதிக்கா' இல்லே 'மொக்கை எங்க திருப்திக்கா'.... சரியாச் சொல்லுங்க.... அவ்வ்வ்...
மடகவிதை - மட... ச்சீ... அட.. இது நல்லாயிருக்கே...
//அதான் உங்க கேபின்ல வழுக்கி வழுக்கி விடுதா //
அட.. அது வேறே விஷயங்க... ( நீங்க மட்டும் படிக்க)... அது ஜொள்ளுங்க...
திருப்தி தான். ஒரு p டை அடிக்கும் போது அதிகமா வந்துருச்சு
//( நீங்க மட்டும் படிக்க)... அது ஜொள்ளுங்க... //
ஊருக்கே தெரியுமாக்கும், இதிலென்ன ரகசியம்
வால்பையன்
//தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?//
ரிபீடேய்
//தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?//
நாசூக்கா சொல்லியிருக்கீங்க.
சுபாஷ்
ஓய்வெடுக்காம வேலைசெய்றதுனாலதான் ராஜினாமா செய்கிறாராம்.ஆனாலும் கடிதாசி வேலைகளைப் பார்க்கிறேன்னு சொல்லி சமாதானப் படுத்தியிருக்கிறார்.லீவுதான் கொடுக்கிறது?கொஞ்சம் தூங்கிட்டுத்தான் வரட்டுமே!
வாங்க வெண்பூ, வேலன், ஹைசுபாஷ், ராஜ நடராஜன் -> நன்றி...
போட்டுத் தாக்கீட்டீங்க..
பாவங்க அவரு விட்ருங்க. அழுதிட போறாரு..
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.
விட்டுப் போன பின் - 3: நண்பர் வழிப்போக்கன் அன்று சொன்னதிற்காக இன்று இந்த பதிவு போடவில்லை.
மறந்துட்டீங்களா ???
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
எல்லாமே சூப்பர்..
ஒண்ணே ஒண்ணைத் தவிர..
அது..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
//ச்சின்னப் பையன் said...
விட்டுப் போன பின் - 2: நண்பர் பரிசல் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.... நன்றி...//
யோவ்.. நம்புய்யா...
நான் நானேதான்!
எதத்தான் நாம சொல்லித் திருந்தீருக்கோம்?
ஒரு ஃபிஃப்டியோ, செஞ்சுரியோ அடிக்கணும் போல இருக்கு..
மறுபடி யாராவது லெட்டர் எழுதீடுவாங்களோன்னு பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு!
இதென்ன எல்லாரும் இப்போ லக்கிலுக்கை விட்டுட்டு நம்மளைப் போட்டு தாளிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க..
பலே வெள்ளையத்தேவா..
இனி பாத்துத்தான் இருக்கோணும்டா,,,
பரிசல் வாங்க வாங்க..
இந்த அப்பாக்களே இப்படித்தான் அட்வைஸ் பண்ணட்டே இருப்பாங்க.
ம்..நாம ஐம்பது போடுவொமா ?
//'சந்திப்பிழை'யெல்லாம் பதிவெழுதும்போது மட்டும்தாங்க பாக்கணும். கோடிங் செய்யும்போது பாத்தா, மென்பொருள் காறித் துப்பிவிடும்.//
அப்போ 'ச்சின்னப்பையன்'ன்றது சந்திபிழையா...? ('தமிழ்ப்பறவை யில் மட்டும் என்ன வாழுதுன்னு கேட்கக்கூடாது.சொல்லிப்புட்டேன்..ஆமா..)
----
//உங்களுக்கு மொத்தம் எவ்ளோ வருட முன்னனுபவம்னுதானே கேட்டேன்? நீங்க முதல் மென்பொருள் செய்த தேதி, முதன்முதல் டெஸ்டிங் செய்த தேதின்னு ஏன் எல்லாத்தையும் தேதிவாரியா சொல்லிக்கிடிருக்கீங்க?
//
சூப்பர்.....
//தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?//
ஏங்க வெந்த புண்ணுல வேலையும்,நொந்த இடத்துல நூலையும் விட்டு நோண்டுறீங்க.... ஹி...ஹி.... ச்சும்மா தமாஷூக்கு....
//இதென்ன எல்லாரும் இப்போ லக்கிலுக்கை விட்டுட்டு நம்மளைப் போட்டு தாளிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க..
பலே வெள்ளையத்தேவா..
//
இன்னய தேதிக்கு பதிவுலகின் சூப்பர்ஸ்டார் நீங்கதான் அண்ணாச்சி....
பரிசல்: இப்படி சொல்லிச்சொல்லியே மனசப் புண்ணாக்கிட்டீங்களே....
பரிசல் இங்க கமெண்டுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. உங்களுக்கு தனியா மின்னஞ்சல் அனுப்ப நினைச்சேன். உங்க பக்கத்துல 'குழந்தைகள்' படம் சூப்பரோ சூப்பர்... கமெண்ட் நச்...(திருஷ்டி சுத்திப் போடுங்க...)
//நல்லாத்தானே மென்பொருள்லே வேலை செய்றீங்க, எதுக்கு தினமும் 'மொக்கை' போடுறேன், 'மொக்கை' போடுறேன்னு சொல்லிக்கிறீங்க?//
திடீர்னு உங்க நெனப்பு வந்துருச்சா
வாங்க வழிப்போக்கன் -> ஆம். நிஜமாகவே நீங்க சொன்னதாலே அன்னிக்கே தயார் செய்த பதிவுதான் இது.... நன்றி...
வாங்க பரிசல் -> அந்த நம்பிக்கையால்தான் முதல்லே உங்க பார்வைக்கு அனுப்பாமே, நேரடியா பதிவிட்டேன்.... நன்றி...
நல்லவேளை வழிப்போக்கனும் பரிசலும் சேரலே இன்னிக்கு.... அவ்வ்வ்..
வாங்க தமிழ்ப்பறவை -> நன்றி..
வாங்க குடுகுடுப்பை -> அவ்வ்வ்... அப்போ நான் நல்லாத்தான் பதிவு போடறேன்னு சொல்றீங்களா??????? ஆஆஆ....
//தொடர்ச்சியா வேலை பாக்காதீங்க. கொஞ்சம் ஓய்வெடுங்கன்னுதானே சொன்னேன். எதுக்கு நான் ராஜீனாமா பண்றேன்னு சொல்றீங்க?//
//
பாவமய்யா அந்த ஆளு :( என்ன இருந்தாலும் நம்ப பங்காளி.அதுனால நிறுத்திக்குவோம் இத்தோட...
எங்க பரிசல் அண்ண இனிமே வாரத்துக்கு ஒரு பதிவு எழுதுனாலும், சும்மா நச்சுனு சின்ன பையன்ல இருந்து பெரிய ஆளு வரைக்கும் நடுமண்டைல ரத்தம் வருமளவுக்கு பதிவிடுவார் ..
இதுக்குதான் ரஜினி அடிக்கடி குசேலன் மாதிரி படம் பண்ணனும், இல்லன்ன ஏதாவது திட்டுறது, மன்னிப்பு கேட்குறதுனு இருக்கனும். அவரு சத்தம் போடாம இருக்காரு, இங்க கும்முறதுக்கு ஆள் கிடைக்காம அலையவேண்டியிருக்கு.
//எனக்கு 'க்ளிப்பர்'ஐ ரொம்ப நாளா தெரியும்றதாலே, அதோட பேரை 'க்ளிப்பன்'னு மாத்திட்டேன்.//
ABAP புரோக்ராமரை ABAPer னு சொல்லுவோம்,என் கூட வேலை பார்த்த தமிழ் நண்பர் ஒருந்த்தர் எங்க அலுவலகத்துல இருந்த ஒரு ABAPer அவரு வயசுல சின்ன பையன்ங்கிறதால ABAPan னு சொல்லுவார், கடைசிய அந்த பையன் பெயரே மறந்து போயி எல்லாருமே அப்டி கூப்பிட ஆரம்பிச்சாங்க.
Post a Comment