Tuesday, August 5, 2008

டாக்டர், டாக்டர் - அரை பக்கக் கதை

"சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சினை"?

"டாக்டர். என் பேர் சுரேஷ். நான் ஒரு மென்பொருள் நிபுணரா இருக்கேன். எனக்கு சில நாட்களா ஒரு மாதிரியான பிரச்சினை. நீங்க ஒரு நல்ல மனோதத்துவ டாக்டர்னு சொன்னாங்க. அதுதான் உங்களைப் பாத்து சொல்லலாம்னு வந்தேன்".


"சரி, சொல்லுங்க".


"எனக்கு ஆவி, பேய், பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கையே இல்லை. இந்த கூடு விட்டு கூடு பாய்றதெல்லாம் சுத்த பேத்தல்".


"உங்க பிரச்சினை மட்டும் சொல்லுங்க. அதோட காரணத்தை நான் சொல்றேன்".


"கொஞ்ச நாளா எனக்குப் பக்கத்துலே எப்பவுமே ஒருத்தர் நிக்கறா மாதிரியே இருக்கு டாக்டர்".

"நிக்கறா மாதிரின்னா? அவங்க உருவம் உங்களுக்குத் தெரியுதா? அவங்க குரல் கேட்குதா"?

"குரலெல்லாம் ஒண்ணும் கேக்கலே டாக்டர். ஆனா, நான் பாக்கறதெல்லாம் அவங்களும் பாக்கற மாதிரியே இருக்குது. அதிலே என்னன்னா, அவங்க பாக்கற கோணம்கூட எனக்குத் தெரியுது".

"எப்போல்லாம் அப்படி நடக்குது? அப்படி நடந்ததுக்கு ஒரு உதாரணமோ அல்லது ஒரு சம்பவமோ சொல்லுங்க".


"நேத்து காபி சாப்பிடலான்னு ஒரு ஹோட்டல் போனேன். சர்வர் காபி கொண்டு வந்து என் மேஜையிலே வெச்சிட்டாரு. என் பக்கத்துலே நின்னு பாக்கறவரோட கோணம் எனக்குத் தெரியுதுன்னு சொன்னேனில்லையா, அந்த கோணத்திலே போய் காபி கப் எடுக்கலாம்னு போனேன்".

"எடுத்தீங்களா"?


"இல்லே டாக்டர். காபி கப்பை தள்ளி விட்டுட்டேன். அப்புறம் திட்டு வாங்கிண்டு வீடு வந்து சேந்தேன். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல டாக்டர்".


"ஒரு சீட்டு எழுதித்தர்றேன். நீங்க உங்க கோணத்திலேயோ அல்லது உங்க பக்கத்துல நிக்கறவரோட கோணத்திலேயோ அதை படிச்சிட்டு, அதன்படி நடந்துக்கோங்க".


(சுரேஷ், டாக்டர் எழுதிய சீட்டைப் படிக்கிறார்).


"உங்களுக்கு எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது. ஒரு நல்ல கண் டாக்டரைப் பார்க்கவும்".

23 comments:

rapp August 5, 2008 at 5:15 AM  

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............................திடீர்னு டாக்டர தெளிவானவரா காமிச்சிட்டீங்களே

rapp August 5, 2008 at 5:17 AM  

இந்தப் பதிவுல ஏதாவது உள்குத்து இருக்கா? ரொம்ப சாதாரணமா இருக்கறத பார்த்தா சந்தேகமா இருக்கு

rapp August 5, 2008 at 5:19 AM  

தக்காளி ஸ்ரீனிவாசனும், பேரரசும் கலந்த கலவையா மிரட்டிட்டீங்க போங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................

வெண்பூ August 5, 2008 at 5:28 AM  

ஹா...ஹா...

நான் கூட ஏதோ அறிவியல் சிறுகதை போல, நம்ம ச்சின்னப்பையன் இன்னும் அந்த போட்டியில இருந்து வெளியில வரலன்னு நெனச்சேன். நன்றாக ரசிக்கும்படி இருந்தது.. பாராட்டுக்கள்.

விஜய் ஆனந்த் August 5, 2008 at 5:50 AM  

மென்பொருளாளர்களெல்லாம் இம்மாம்பெரிய்ய்ய்ய மூளைக்காரங்களாவா இருக்காங்க???

சின்னப் பையன் August 5, 2008 at 6:14 AM  

வாங்க ராப் -> இதிலே எந்த உள்குத்தும் இல்லே. இன்னிக்கு வேறே ஒண்ணும் கைவசம் மேட்டர் இல்லாததினாலே, ஒரு கதை எழுதலாம்னு..... அவ்வ்வ்வ்வ்...

வாங்க வெண்பூ -> நல்லாயிருந்துச்சா... நன்றிங்க...

வாங்க விஜய் -> என்னெ மட்டும் பாத்துட்டு, நீங்க எல்லாரும் அப்படித்தான்னு நினைக்கக்கூடாது. ஓகேவா????

விஜய் ஆனந்த் August 5, 2008 at 6:35 AM  

// ச்சின்னப் பையன் said...

வாங்க விஜய் -> என்னெ மட்டும் பாத்துட்டு, நீங்க எல்லாரும் அப்படித்தான்னு நினைக்கக்கூடாது. ஓகேவா???? //

வாங்க நல்லவரே!!! மென்பொருள் சூரரே!!!பதிவுலக தீரரே!!!புத்திசாலிங்களுக்கெல்லாம் புத்திசாலியே!!!

போதுமா??? முடியல....

விஜய் ஆனந்த் August 5, 2008 at 6:41 AM  

// ச்சின்னப் பையன் said...
வாங்க ராப் -> இதிலே எந்த உள்குத்தும் இல்லே. இன்னிக்கு வேறே ஒண்ணும் கைவசம் மேட்டர் இல்லாததினாலே,ஒரு கதை எழுதலாம்னு..... //

அவ்வ்வ்வ்வ்வ்...அப்ப இது கதயா??? அனுபவமில்லயா???

விஜய் ஆனந்த் August 5, 2008 at 6:43 AM  

அச்சச்சோ...லேபில்ல அரைபக்க கததான்னு போட்ருக்கு...நாந்தான் சரியா பாக்காம வந்துட்டேன்.....சாரிங்கோவ்...

புருனோ Bruno August 5, 2008 at 7:29 AM  

உள்குத்து இருக்கா?

நான் ஒரு குத்து கதை சொல்றேன்

டாக்டர், டீ குடிக்கும் போது வலது கண்ணு வலிக்குது டாக்டர்

டீ கப்பில் உள்ள ஸ்பூனை வெளியே எடுத்துவச்சுட்டு டீயை குடிங்க ஸார். அப்ப அது கண்ண குத்தாது

Kanchana Radhakrishnan August 5, 2008 at 8:08 AM  

உங்க நாலு பேருக்கும் அதுதான் கோளாறு

சின்னப் பையன் August 5, 2008 at 9:04 AM  

வாங்க விஜய் -> அப்போ, நீங்க பதிவோட தலைப்பையும் பாக்கலே, லேபிளையும் பாக்கலே - பதிவையாவது படிச்சீங்களான்னு தெரியல... அவ்வ்வ்வ்....

வாங்க டாக்டர் ஐயா -> அடடா... தலைப்பைப் பார்த்து கரெக்டா வந்துட்டீங்க....:-)).. அந்த ஜோக்கும் நல்லா இருக்கு.... நன்றி...

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> அடக்கடவுளே... உங்களுக்கு பல கோணங்கள் தெரியும் போலிருக்கே....:-))))

பிரேம்ஜி August 5, 2008 at 10:16 AM  

ஒரு த்ரில்லான கதை மாதிரி ஆரம்பித்து ஜாலியா முடிச்சிருக்கீங்க.சூப்பர்.

வால்பையன் August 5, 2008 at 11:53 AM  

//"சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சினை"? //

நீங்க தான் பிரச்சனை, போய் நல்லா படிச்சிட்டு வாங்க டாக்டர்

வால்பையன்

Anonymous,  August 5, 2008 at 12:08 PM  

//இந்தப் பதிவுல ஏதாவது உள்குத்து இருக்கா? ரொம்ப சாதாரணமா இருக்கறத பார்த்தா சந்தேகமா இருக்கு//

மறுக்காச் சொல்லேய்

விஜய் ஆனந்த் August 5, 2008 at 12:25 PM  

// வாங்க விஜய் -> அப்போ, நீங்க பதிவோட தலைப்பையும் பாக்கலே, லேபிளையும் பாக்கலே - பதிவையாவது படிச்சீங்களான்னு தெரியல... அவ்வ்வ்வ்.... //

அவ்வ்வ்வ்வ்....அப்புறம் நா அழுதுடுவேன்...எவ்ளோ கஷ்டப்பட்டு நீங்க சொல்றத புரிஞ்சுக்க ட்ரை பண்றேன்...இப்டி சொல்லிட்டீங்களே...போங்க...எனக்கு ஒரே அழுவ அழுவயா வருது...அக்காங்ங்ங்....

விஜய் ஆனந்த் August 5, 2008 at 12:31 PM  

ஆகா!!! நீங்க அறிவாளிங்கறத டக்குன்னு புரிஞ்சிகிட்டதால வந்த எபஃக்டா இது!!! அது தெரியாம....அடடா...வட போச்சே!!!....be careful....நா என்னச்சொன்னேன்.....

Selva Kumar August 5, 2008 at 1:54 PM  

எதுக்கு இந்த பதிவ நாலு தடவை போட்டீங்க ?

அடுத்த பதிவு எப்போ ??

Selva Kumar August 5, 2008 at 1:55 PM  

இப்போ கண்ணாடி போட்டுட்டுதான் பதிவு எழுதறீங்களா ??

(இது கற்பனை கேள்வி)

சின்னப் பையன் August 5, 2008 at 4:08 PM  

வாங்க பிரேம்ஜி -> நன்றிங்க...

வாங்க வால் -> நீங்க நிஜமான வால்தானா, ஒரே ஒரு கமெண்டோட முடிச்சிட்டீங்களே!!!

வாங்க வேலன் -> இல்லீங்கோ.. இல்லீங்கோ.. உள்குத்து இல்லீங்கோ...

வாங்க விஜய் -> :-)))

வாங்க வழிப்போக்கன் -> உங்களுக்குமா????... நான் குளிர் கண்ணாடி மட்டும்தான் போடறதுங்கோ!!!

வால்பையன் August 6, 2008 at 2:33 AM  

//வாங்க வால் -> நீங்க நிஜமான வால்தானா, ஒரே ஒரு கமெண்டோட முடிச்சிட்டீங்களே!!!//

கிடைக்கறது கிடைக்காம இருக்காது!
கிடைக்காம இருக்குறது கிடைக்காது!

எதையும் எதிர்பாக்காத போது கொடுக்குறது தான் வால்பையனோட ஸ்டைல்

வால்பையன்

Anonymous,  August 6, 2008 at 3:41 AM  

ஹாஹா, கத சூப்பரு. ஆனா டாக்டர்தா வேஸ்ட். நா டாக்டரா இருந்திருந்தா, பிரச்சனய கண்டுபிடிசசதும் அந்தாளுக்கு முதல்ல சீட்ட இப்படித்தா குடுத்திருப்பேன்.
” Advance charge: 10"
அதுக்கு அந்தாளும் சீப்பாருக்குனுடு 1010 (!!!! ) குடுத்திருப்பாரு. அப்புறம் ஒரிஜினல் சீட்ட குடுத்திருப்பன்.

ம்ம்ம் நல்லவேள நா டாக்டரில்ல.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP