Monday, August 4, 2008

ஷங்கர் படத்தில் நடிக்க ஜே.கே.ரித்தீஷ் மறுப்பு!!!

ஜே.கே.ரித்தீஷ் வீட்டில் எல்லா பத்திரிக்கையாளர்களும் குவிந்துள்ளனர்.


டைரக்டர் ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டுமென்று பல பேர் காத்துக்கொண்டிருக்க, தேடி வந்த வாய்ப்பை ஜே.கே மறுத்திருப்பதால் கோடம்பாக்கத்தில் உச்சக்கட்ட பரபரப்பு.


நிருபர்: என்ன ஜே.கே. சார், இப்படி பண்ணிட்டீங்க. இதுக்கு என்ன காரணம்?


ஜே.கே: எல்லாருக்கும் வணக்கம். நீங்க யாரும் இதில் அதிர்ச்சியடையாதீங்க. படத்தின் கதை எனக்குப் பிடிக்காததாலேதான், நான் அந்த வாய்ப்பை வேண்டாமென்று உதறிவிட்டேன். இதில் எனக்கு எந்தவித வருத்தமுமில்லை.


நிருபர்: ஷங்கரோட படங்கள் எல்லாம் மிக பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். மக்களுக்கு ஏதாவது ஒரு கருத்தும் அதில் இருக்கும். உங்களோட திரைப்பட, அரசியல் வளர்ச்சிக்கு கண்டிப்பாக அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்குமே.


ஜே.கே: அவர் எனக்கு சொன்ன கதை பிரம்மாண்டமானதுதான். ஆனால் எனக்கு ஆனா எனக்கு அது ரொம்ப சாதாரணம்.


நிருபர்: என்ன இப்படி சொல்லிட்டீங்க? அந்த கதை என்னன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா?


ஜே.கே: கதை நான் சொல்லமுடியாதுங்க. டைரக்டர் சார் கோச்சிப்பார். அந்த கதையிலே ஹீரோவோட அறிமுகக் காட்சியை மட்டும் சொல்றேன். கேட்டுக்கங்க.

ஹீரோ வெளி நாட்டிலேர்ந்து சென்னைக்கு வருகிறார். அவர் விமானத்தில் இறங்கும்போது, ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு வரவேற்க காத்திருக்கின்றனர். விமான நிலையத்தில் ஏகப்பட்ட மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. தாரை, தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள் வாசித்துக்கொண்டிருக்கின்றனர். யானைகள் கையில் மாலை கொடுத்து ஹீரோவுக்கு சூடச்சொல்கிறார்கள். அதே இடத்தில் ஒரு சூப்பர் பாட்டு. ஹீரோவுடன் நடனமாட பாலிவுட் நட்சத்திரங்கள் ஐந்து பேரை புக் செய்திருக்கிறார்கள். பாட்டு முடிந்து, காமிரா முன் வந்து ஹீரோ 'வணக்கம். நான் வந்துட்டேன். இனிமே யாரும் கவலைப்படவேண்டாம்' அப்படின்னு சொல்லணும்.


இதுதான் ஷங்கர் சார் சொன்ன ஒரே ஒரு சீன். இந்த சீன் ரிச்சாகவே இல்லையென்பதால், நான் அந்த படத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.


நிருபர்: எனக்கென்னவோ நீங்கள் ஒரு அருமையான வாய்ப்பை இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது. உங்கள் முடிவை மறுபடியும் பரிசீலிப்பீர்களா?


ஜே.கே: கண்டிப்பாக கிடையாது. நான் ஒரு தடவை முடியெடுத்துட்டா... ச்சீ.. முடிவெடுத்துட்டா எடுத்ததுதான். உங்க ஆதங்கத்துக்கு நன்றி... மீண்டும் சந்திப்போம். நன்றி...


(எல்லா நிருபர்களும் போன பிறகு, கூட இருக்கும் நண்பர் ஒருவர்...)


நண்பர்: என்னடா இப்படி பண்ணிட்டே?


ஜே.கே: டேய், நான் அந்த படத்தில் நடிக்காததற்கு உண்மையான காரணத்தை சொன்னா, நீ வெறுத்துடுவே.


நண்பர்: என்ன, அப்போ உண்மையான காரணம்தான் என்ன, சொல்லுடா.


ஜே.கே: அந்த படத்தில் முன்னாடி ரஜினி சார்தான் நடிக்கறதா இருந்தது. அவர் நடிக்கமுடியாததாலேதான் என்னை கூப்பிட்டு அனுப்பிச்சாரு ஷங்கர் சார்.


நண்பர்: அதுதான் எனக்கு தெரியுமே? அப்புறம்?


ஜே.கே: மேற்படி அறிமுகக் காட்சியை சொன்னவுடனேயே, நான் படத்துலே நடிக்கறதுக்கு ஓகேன்னுட்டேன். அவரும், அப்படின்னா இன்னிக்கே அந்த சீனை எடுத்துடலாம். எல்லாம் ரெடியா இருக்கு அப்படின்னார்.

நண்பர்: வாவ். விமான நிலையத்திலே எல்லா ஏற்பாடும் தயாரா இருந்துச்சா?

ஜே.கே: நானும் அவர்கிட்டே இதைத்தான் கேட்டேன். அதுக்கு அவரு சொன்னதைக் கேட்டு அங்கேயே மயக்கமாகி விழுந்துட்டேன்.


நண்பர்: அப்படி என்னதாண்டா சொன்னாரு?


ஜே.கே: அப்படிப்பட்ட பொருட்செலவிலே ஒரு அறிமுகக் காட்சி ரஜினிக்கு மட்டும்தான் வெப்பாராம். எனக்கு... எனக்கு...


நண்பர்: உனக்கு?


(அடுத்த பாராவை சொல்லிட்டு ஜேகே மறுபடியும் மயக்கமாகி விழுகிறார்).


ஜே.கே: என் கையிலே ஒரு ஹாண்டிகெம் (Handycam) கொடுத்து விமான நிலையம் போகச்சொன்னாரு. போய் அந்த ' நகரும் படிக்கட்டுகளுக்கு' எதிரே இந்த ஹாண்டிகேமை வைத்துவிட்டு, நான் மேலேயிருந்து இறங்கி ஹண்டிகேம் பக்கத்துலே வந்து 'வணக்கம். நான் வந்துட்டேன். இனிமே யாரும் கவலைப்படவேண்டாம்' அப்படின்னு சொல்லிட்டு, ஹாண்டிகேமை ஆஃப் செய்து, அவர்கிட்டே போய் கொடுக்கணுமாம். மத்த படப்பிடிப்பு அடுத்த வாரம் வெச்சிக்கலாம்னார்.

பின் - 1: இது ஒரு கற்பனைக் கதைதான். நம்ம தல, அண்ணன் ஜே.கே, டைரக்டர் ஷங்கரோட படத்தில் நடிக்கணும்றதுதான் என் விருப்பம்.

பின் - 2: மன்றத்தோட பொருளாளர் அப்துல்லா அண்ணாச்சி அவர்கள் நடந்த விபத்துலேந்து விரைவில் மீண்டு வந்து - எல்லா பதிவுலேயும் 'மீ த பஷ்டு' போடவேண்டுமென்று - இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


45 comments:

பிரேம்ஜி August 4, 2008 at 11:39 AM  

//என் கையிலே ஒரு ஹாண்டிகெம் (Handycam) கொடுத்து விமான நிலையம் போகச்சொன்னாரு. போய் அந்த ' நகரும் படிக்கட்டுகளுக்கு' எதிரே இந்த ஹாண்டிகேமை வைத்துவிட்டு, நான் மேலேயிருந்து இறங்கி ஹண்டிகேம் பக்கத்துலே வந்து 'வணக்கம். நான் வந்துட்டேன். இனிமே யாரும் கவலைப்படவேண்டாம்' அப்படின்னு சொல்லிட்டு, ஹாண்டிகேமை ஆஃப் செய்து, அவர்கிட்டே போய் கொடுக்கணுமாம். மத்த படப்பிடிப்பு அடுத்த வாரம் வெச்சிக்கலாம்னார்//

:-))))))
நான் ஆரம்பிக்கிறேன்.

ராஜ நடராஜன் August 4, 2008 at 11:41 AM  

பிரேம்ஜிக்குப் பக்கத்து சீட் :)

ராஜ நடராஜன் August 4, 2008 at 11:47 AM  

எங்கிட்ட கேட்டிருந்தா நானும் ஹேண்டிகெம் கொடுத்திருப்பேனே.அதை படிக்கட்டின் துவக்கத்திலும் சங்கர் சாரின் கெமை இறுதியிலும் வெச்சு எடுத்திருந்தா பிரேம்ஜி 3 டைமன்சன் கிடைக்காட்டியும் 2 டைமன்சன் கிடைச்சிருக்கும்.பதிவு போட்டுட்டு சொன்னா என்ன பண்ணமுடியும்?

பரிசல்காரன் August 4, 2008 at 11:54 AM  

அந்த கடஃஇசி பாராவைப் படித்து கன்னா பின்னான்னு சிரிச்சேன் நண்பரே!!

அபாரமான கற்பனை!

பரிசல்காரன் August 4, 2008 at 11:56 AM  

கடைசி-ன்னுதாங்க அடிச்சேன்!

ஜே.கே.ரித்தீஷ் பதிவுன்னதும் நடுங்கி, இப்படி ஆயிடுச்சு!

VIKNESHWARAN ADAKKALAM August 4, 2008 at 11:56 AM  

எனக்கு அந்த நடிகரை தெரியாதுங்க...

சின்னப் பையன் August 4, 2008 at 12:01 PM  

வாங்க பிரேம்ஜி -> போணி செய்துட்டீங்க... பாப்போம் உங்க கைராசி எப்படியிருக்குன்னு....:-)))

வாங்க ராஜ நடராஜன் -> ஏங்க இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்கல. அதுக்குள்ளே சீட் பிடிக்கறீங்களே?...:-))

நம்ம தல 3-D படத்துலே நடிச்சா எப்படியிருக்கும்!!!! அவ்வ்வ்வ்....

வாங்க அவனும் அவளும் -> நன்றி...

வாங்க பரிசல் -> அது (அஜித் உங்க முன்னாலே நின்னு சொல்றதா கற்பனை பண்ணிக்குங்க!!!)...

Mathuvathanan Mounasamy / cowboymathu August 4, 2008 at 12:03 PM  

அண்ணன் ஜே கே ரித்தீஷ் இல்லாம படம்தான் ஹிட்டாகுமா இல்ல பதிவுதான் ஹிட்டடிக்குமா..

:-)))

விஜய் ஆனந்த் August 4, 2008 at 12:17 PM  

// பின் - 1: இது ஒரு கற்பனைக் கதைதான் //

அக்காம்ப்பா...இத மட்டும் சொல்லாங்காண்டி, இந்நேரத்துக்கு ஜங்கரு டார்ர்ராயிருப்பாரு...

விஜய் ஆனந்த் August 4, 2008 at 12:19 PM  

அப்துல்லா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்...

Saminathan August 4, 2008 at 12:21 PM  

ரியல் ஏழரை போலிருக்கு அண்ணன் ஜே.கே.ஆர் அவர்களுக்கு...

சின்னப் பையன் August 4, 2008 at 12:26 PM  

வாங்க விக்னேஸ்வரன் -> பதிவோட கருத்து புரிஞ்சுதா... 'கலாய்த்தல்'.. அவ்ளோதான்...:-))

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> நன்றி...

வாங்க மதுவதனன் -> அதேதான்....:-))

வாங்க விஜய் -> ஹாஹா....:-))

வால்பையன் August 4, 2008 at 12:57 PM  

//ஜே.கே.ரித்தீஷ் வீட்டில் எல்லா பத்திரிக்கையாளர்களும் குவிந்துள்ளனர்.//

உண்மையிலேயே இது நல்ல கற்பனை

வால்பையன்

வால்பையன் August 4, 2008 at 12:57 PM  

//டைரக்டர் ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டுமென்று பல பேர் காத்துக்கொண்டிருக்க, தேடி வந்த வாய்ப்பை ஜே.கே மறுத்திருப்பதால் கோடம்பாக்கத்தில் உச்சக்கட்ட பரபரப்பு.//

பின்ன படத்துல ஹீரோயின் இல்லையாமா

வால்பையன்

வால்பையன் August 4, 2008 at 12:57 PM  

// படத்தின் கதை எனக்குப் பிடிக்காததாலேதான், //

சங்கர் படத்துல கதையா, இதுவும் நல்ல கற்பனை

வால்பையன்

Anonymous,  August 4, 2008 at 12:57 PM  

ஜே கே ரித்தீஷ் னு உண்மையிலேயே ஒருத்தர் இருக்காரா?
ஏன்னா நெறய பேர் இவர நிறயத்தடவ கிழிச்சு காயப்போர்றாங்க???

வால்பையன் August 4, 2008 at 12:57 PM  

//ஜே.கே: அவர் எனக்கு சொன்ன கதை பிரம்மாண்டமானதுதான். ஆனால் எனக்கு ஆனா எனக்கு அது ரொம்ப சாதாரணம். //

முடியல

வால்பையன்

வால்பையன் August 4, 2008 at 12:58 PM  

// இது ஒரு கற்பனைக் கதைதான். நம்ம தல, அண்ணன் ஜே.கே, டைரக்டர் ஷங்கரோட படத்தில் நடிக்கணும்றதுதான் என் விருப்பம்.//

உங்கள் கற்பனை எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது.
தமிழ் பட ரசிகர்கள் இனிமேல் சினிமாவே பார்க்க மாட்டோம் என்று தீர்மானம் போடுவார்கள்

வால்பையன்

சின்னப் பையன் August 4, 2008 at 1:18 PM  

வாங்க ஈர வெங்காயம் -> எங்க தல, 7.5 என்ன 15 வந்தாலும் தாங்குவாரு.... :-))))

வாங்க வால் -> //தமிழ் பட ரசிகர்கள் இனிமேல் சினிமாவே பார்க்க மாட்டோம் என்று தீர்மானம் போடுவார்கள் //
அவ்வ்வ்வ். இப்படிகூட ஆகுமா என்ன?... சான்ஸே இல்லை...

வாங்க ஹைசுபாஷ் -> என்ன இப்படி கேட்டுட்டீங்க?... கூகுள்லியோ, யூட்யூப்லியோ தலயோட பேர் போட்டு பாருங்க. தகவல்கள் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்...:-))

Selva Kumar August 4, 2008 at 1:20 PM  

என்ன இது மன்ற ஜே.கே.ஆர் மன்ற கொ.ப.செ விடம் உத்தரவு வாங்காமல் கிண்டல் செய்து பதிவு போட்டதால் நான் வெளிநடப்பு செய்கிறேன்...

Selva Kumar August 4, 2008 at 1:21 PM  

தலைவரோட ஒரு போட்டோ போட்டிருந்தா யாருனே தெரியாதுன்னு சொல்லுவாங்களா ??

ஜோசப் பால்ராஜ் August 4, 2008 at 2:34 PM  

எங்க அண்ணண் அப்துல்லாகிட்ட இப்பத்தான் நான் பேசுனேன்,அவரோட பணிகள அவர் வரும்வரை நான் தான் கவனிப்பேன். என்னதான் எனக்கு ஜே.கே.ரித்தீஷ் மேல எந்த பாசமும் இல்லைன்னாலும், இப்டி எங்க அண்ணண் அப்துல்லாவோட தலைவர பகடிசெய்திருப்பதை எங்க அண்ணண் சார்பா வன்மையா கண்டிக்கிறேன்.


எங்கள் அண்ணண் அப்துல்லாவின் தலைவர் ஜே.கே.ரித்தீஷ்ஷை தெரியாது என்ற சொன்ன விக்னேஸ்வரனை வன்மையாக கண்டிக்கிறோம்.

அவரது புகைப்படம் இல்லாமல் பதிவிட்டமைக்காக கண்டித்த வழிப்போக்கனின் கருத்தை வழிமொழிகிறேன்.

அப்துல்லா அண்ணண், நல்ல சுகத்துடன் இருக்கின்றார். தலையில் ஏற்பட்ட காயத்திற்காக தையல் போடப்பட்டுள்ளது. வேறு ஒன்றும் கவலைப்படும்படி இல்லை.

அவருக்கு பெட்டிதட்டும் வேலை செய்து பழக்கமேதுமில்லாததால் சும்மா இருக்க முடியவில்லையாம். ஆதலால் இன்றும் அலுவலகம் சென்று வந்துள்ளார்.
மற்றபடி நலமாயுள்ளார், அவருக்காக பிரார்தித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சின்னப் பையன் August 4, 2008 at 4:02 PM  

வாங்க வழிப்போக்கன் -> ஓ... சரி சரி... வெளி நடப்பு செஞ்சுட்டு ஒரு பத்து நிமிடத்துக்குள்ளே மறுபடி உள்ளே வந்துடுங்க.. ( நம்ம சட்டமன்றத்திலேல்லாம் அப்படித்தான்!!!...)... அடச்சே... படத்தை போட மறந்துட்டேன்... (போட்ட பதிவுலே எப்படி அப்டேட் பண்றதுன்னு எனக்குத் தெரியல...:-(()

வாங்க ஜோசப் பால்ராஜ் -> அப்துல்லா அண்ணனைப் பற்றிய தகவலுக்கு ரொம்ப நன்றிங்க....

வாங்க கெக்கேபிக்குணி -> ஹாஹா. அந்த செய்தியை பார்த்தேன்... இன்னிக்கு தினமலர்லேயா... அங்கே போய் பார்க்கிறேன்.... :-))

கயல்விழி August 4, 2008 at 7:57 PM  

//'வணக்கம். நான் வந்துட்டேன். இனிமே யாரும் கவலைப்படவேண்டாம்' அப்படின்னு சொல்லிட்டு, ஹாண்டிகேமை ஆஃப் செய்து, அவர்கிட்டே போய் கொடுக்கணுமாம். மத்த படப்பிடிப்பு அடுத்த வாரம் வெச்சிக்கலாம்னார்//

LOL

நல்ல கற்பனை.

அருப்புக்கோட்டை பாஸ்கர் August 4, 2008 at 10:51 PM  

மன்றத்தின் தலைவரிடமிருந்து (rapp)எந்த பின்னூட்டத்தையும் காணோமே ?

அருப்புக்கோட்டை பாஸ்கர் August 4, 2008 at 10:51 PM  

மன்றத்தின் தலைவரிடமிருந்து (rapp)எந்த பின்னூட்டத்தையும் காணோமே ?

rapp August 5, 2008 at 12:45 AM  

ரொம்ப நன்றிங்க ச்சின்னப் பையன், நான் நேத்து முழுக்க ப்ளாக், தமிழ்மணம் பக்கமே வரலை, இப்போ உங்கப் பதிவு படிச்சித்தான் அப்துல்லா அண்ணனோட விபத்து பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். நீங்க இதனை தெரிவிச்சதுக்கு நன்றி.

rapp August 5, 2008 at 12:47 AM  

//"ஷங்கர் படத்தில் நடிக்க ஜே.கே.ரித்தீஷ் மறுப்பு!!//

இப்படி செய்தி போடக் கூடாது. ஜே.கே.ரித்தீஷ், ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்தார், அப்டின்னு போடணும் :):):)

rapp August 5, 2008 at 12:49 AM  

ஷங்கர், சூரியனுக்கு டார்ச் அடிக்கப் பார்த்தாரோன்னு நினைச்சேன். அவரெங்கே, வழக்கம்போல தனக்குத் தானே சூனியம் வெச்சுக்கிட்டார்

தாரணி பிரியா August 5, 2008 at 1:31 AM  

நாளைய முதல்வர் அண்ணன் ஜே.கே.ரீத்திஷ் தனது படத்தில் நடிக்க மறுத்ததால் டைரக்டர் ஷங்கர் கவலை ‍ ரோபோ ப‌ட‌ப்பிடிப்பு நிறுத்த‌ம்


அப்படின்ற செய்தி உண்மைதானா?



(ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் தாங்க‌லைப்பா உங்க‌ அழும்பு)

வெண்பூ August 5, 2008 at 2:03 AM  

//பின் - 1: இது ஒரு கற்பனைக் கதைதான். நம்ம தல, அண்ணன் ஜே.கே, டைரக்டர் ஷங்கரோட படத்தில் நடிக்கணும்றதுதான் என் விருப்பம்.//

ஷங்கர் மேல ஏன் உங்களுக்கு இந்த கொலவெறி?

//என் கையிலே ஒரு ஹாண்டிகெம் (Handycam) கொடுத்து//

அது எதுக்கு குடுக்கணும்? அவருகிட்டயே ஹாண்டி கேம் இல்லையா?

Thiyagarajan August 5, 2008 at 2:56 AM  

எச்சூஸ்மீ, நிங்க‌ ரூம் போட்டு யோசிப்பிங்க‌ளா ?!
Good one.

Anonymous,  August 5, 2008 at 3:14 AM  

////வழிப்போக்கன் said...

தலைவரோட ஒரு போட்டோ போட்டிருந்தா யாருனே தெரியாதுன்னு சொல்லுவாங்களா ?? ////////

அதானே, போட்டோ இருந்தா நச்சென்று இருக்கும்.

/////
என்ன இப்படி கேட்டுட்டீங்க?... கூகுள்லியோ, யூட்யூப்லியோ தலயோட பேர் போட்டு பாருங்க. தகவல்கள் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்...:-)) /////

இன்னிக்கு புரா றிசேச்சுதான்!!!!!! ஹிஹி

சின்னப் பையன் August 5, 2008 at 6:10 AM  

வாங்க கயல்விழி, ஜெகதீசன், தியாகராஜன், றிசாந்தன் -> ரொம்ப நன்றிங்க...

வாங்க பாஸ்கர் -> தலைவி மன்றத்து வேலையா கொஞ்சம் பிஸியா இருந்தாங்க.... வந்துட்டாங்க பாருங்க....

வாங்க ராப் -> நம்ம தலக்கே டார்ச்சா? ஆஆஆஆ..

சின்னப் பையன் August 5, 2008 at 6:11 AM  

வாங்க தாரணி பிரியா -> ஹாஹா.... என்ஞாய் பண்ணுங்க...

வாங்க வெண்பூ -> என்ன இருந்தாலும் டைரக்டர்தானே 'காமிரா'வை கொடுக்கணும்....:-)))

வாங்க ஹைசுபாஷ் -> தலயப்பத்தி ரிசர்ச் செய்து ஒரு டாக்டர் பட்டம் வேணா வாங்கிக்குங்க... அவ்வ்வ்வ்வ்....:-)))

ஸயீத் August 5, 2008 at 10:22 AM  

//ஜே.கே: என் கையிலே ஒரு ஹாண்டிகெம் (Hஅன்ட்ய்cஅம்) கொடுத்து விமான நிலையம் போகச்சொன்னாரு. போய் அந்த ' நகரும் படிக்கட்டுகளுக்கு' எதிரே இந்த ஹாண்டிகேமை வைத்துவிட்டு, நான் மேலேயிருந்து இறங்கி ஹண்டிகேம் பக்கத்துலே வந்து 'வணக்கம். நான் வந்துட்டேன். இனிமே யாரும் கவலைப்படவேண்டாம்'//

ஐயோ! பாவம் ஜே. கே. ரித்தீஷ், இருந்தாலும் ஷங்கர் ரெம்ப மோஷம்.

ers August 5, 2008 at 12:37 PM  

என்னவோ நினைச்சு வந்தேன்... ஆனாலும் கடிச்சு கொதறாம சிரிக்க வைத்தீர்கள். நன்றி.

Athisha August 5, 2008 at 1:40 PM  

வாழ்க ஜேகே ரித்திஷ் குமார் வளருக அவர் புகழ்



அகில உலக மற்றும் பிரபஞ்ச இளம்புயல் அதிரடி வீரன் ஜே.கே.ஆர் வலைப்பதிவு ரசிகர் மன்றம்

சின்னப் பையன் August 5, 2008 at 4:10 PM  

வாங்க ஸயீத் -> ஆமா ஆமா... ரொம்ப மோஷம்....:-)

வாங்க தமிழ்சினிமா -> நன்றிங்க...

வாங்க அதிஷா -> இது வேறேயா!!!!... அவ்வ்வ்வ்....

Katz October 14, 2008 at 3:56 PM  

//என் கையிலே ஒரு ஹாண்டிகெம் (Handycam) கொடுத்து விமான நிலையம் போகச்சொன்னாரு. போய் அந்த ' நகரும் படிக்கட்டுகளுக்கு' எதிரே இந்த ஹாண்டிகேமை வைத்துவிட்டு, நான் மேலேயிருந்து இறங்கி ஹண்டிகேம் பக்கத்துலே வந்து 'வணக்கம். நான் வந்துட்டேன். இனிமே யாரும் கவலைப்படவேண்டாம்' அப்படின்னு சொல்லிட்டு, ஹாண்டிகேமை ஆஃப் செய்து, அவர்கிட்டே போய் கொடுக்கணுமாம். மத்த படப்பிடிப்பு அடுத்த வாரம் வெச்சிக்கலாம்னார்//

நல்ல காமெடி
ரொம்ப சூப்பருங்கோ

ஷாஜி January 6, 2009 at 7:43 AM  

கலக்கல் பதிவு... அதுவும் கடைசி பாரா ரொம்ப டாப்பு... பாராட்டுக்கள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP