முதன்முதலில் வேலைக்காக சென்னை வந்தபோது!!!
சென்னை எழும்பூரில் வந்து இறங்கிய அந்த ஞாயிற்றுக்கிழமை காலை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் புகைவண்டியில் தனியாக வருவது அதுதான் முதல் தடவை. அதுவும் சென்னைக்கு தனியாக வருவதால், வீட்டில் எல்லாருக்கும் கவலை. சென்னையில் அன்றைய தேதிக்கு எனக்கு யாரையும் தெரியாது. ஆனாலும், புதிதாகக் கிடைத்திருக்கும் வேலைக்குப் போகவேண்டுமே - அதனால் ஒரு பெரிய பயணத்தை மேற்கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன்.
அதற்கு முதல் நாள் இரவு புகைவண்டிக்குக் கிளம்பும்போது, தந்தை வழக்கம்போல் கொஞ்சமே பேசினார் - ராத்திரி தூங்கும்போது வீடு உள்ளேயிருந்து பூட்டிக்கோ. அப்பப்போ போன் பண்ணு. அவ்வளவுதான். அம்மாதான் தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தாங்க - வேளா வேளைக்கு சாப்பிடுப்பா. போர்ன்விடா வாங்கி வெச்சுக்கோ. ராத்திரி ரொம்ப நேரம் டிவி பாக்கறதுக்கு கண் முழிக்காதே - அப்படி இப்படின்னு.
சரி. முன்னாடியே சொன்னா மாதிரி எழும்பூர்லே வந்து இறங்கியாச்சு. சென்னையில் ஆட்டோவிலெல்லாம் போகாதேன்னு ஊர்லே படிச்சி படிச்சி சொல்லியிருந்ததாலே, பேருந்துக்காக கொஞ்ச நேரம் காத்திருந்து அதிலேயே திருவல்லிக்கேணி போய் சேர்ந்தேன். போகவேண்டிய வீட்டு விலாசம், அதற்கான வழி எல்லாம் ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்டிருந்ததால், யாரிடமும் கேட்காமல் நேரே அங்கே போயாச்சு.
எப்பவும் குடும்பத்துடனே இருந்து பழக்கப்பட்டதால், தனித்து விடப்பட்ட அரை நாளிலேயே வாழ்க்கை வெறுத்துப் போனது. மனம் விட்டு பேச யாருமில்லை. தனிமை பயங்கரமாக போர் அடித்தது. இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான். அதன் பிறகு, அம்மா அப்பா இங்கே வந்துட்டாங்கன்னா, எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும்னு மனசை தேத்திண்டு அடுத்த நாள் வேலைக்குப் போய் சேர்ந்தாச்சு.
சரி. இவ்ளோ சொன்னேனே, எங்க ஊர் எதுன்னு சொல்லவேயில்லையே? சென்னைதான். வேலைக்கு சேரணும்னு அலைபேசியில் தகவல் வந்தபோது நாங்கெல்லாம் ஒரு உறவினர் வீட்டு கல்யாணத்துக்காக பெங்களூர்லே இருந்தோம். குடும்பமே அடுத்த 10 நாட்களுக்கு மைசூர் டூர்லாம் போக, நான் மட்டும் வேலைக்காக சென்னை வந்து சேர்ந்தேன்.
இதுதான் கதையின் முதல் பாகம். மீதி கதை அடுத்த பாகத்தில்....
பின் - 1: இது என் சொந்தக்கதை இல்லீங்க. கற்பனைக் கதைதான். இன்னிக்கு வேறொரு பயணக்கட்டுரை பார்த்தபிறகு தோன்றியதுதான் இந்த கதை.
பின் - 2: அடுத்த பாகமெல்லாம் இல்லை. அது சும்மா நானும் 'தொடரும்' போட்டிருக்கேன்றதுக்காக.
51 comments:
சும்மா சொல்லகூடாது.. சூப்பரான கதை..இத தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல செதுக்கி வெச்சிட்டு பக்கத்துலயே நீங்க் ஒக்காத்துக்கங்க.. உங்களுக்கு பின்னால வர சந்ததிகள் எல்லாம் படிச்சு புரிஞ்சுக்குவாங்க..
***
நல்ல சிந்தனை ச்சின்னப்பையன். உங்களுக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. எதிர்பாராத முடிவு :)
ஹை.. இன்னிக்கும் நாந்தான் "மீ த பஷ்டூ"
கிர்ர்ர்ர்ர்...
என்னாது இது சின்னப்புள்ளதனமா இருக்கு ராஸ்கல். பெங்களூர்ல இருந்து வந்தா சென்ட்ரல்ல தான் இறங்கனும், எழும்புர்ல இல்ல.
இல்ல நான் தூத்துகுடி போய், அங்கே இருந்து தஞ்சாவூர் வந்து ரயில புடிச்சு சென்னை வந்தேனு சொன்னா பிச்சுபுடுவேன் பிச்சு ராஸ்கல்
கிர்ர்ர்ர்ர்...
//இத தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல செதுக்கி வெச்சிட்டு பக்கத்துலயே நீங்க் ஒக்காத்துக்கங்க.. உங்களுக்கு பின்னால வர சந்ததிகள் எல்லாம் படிச்சு புரிஞ்சுக்குவாங்க..
//
:-)
//பெங்களூர்ல இருந்து வந்தா சென்ட்ரல்ல தான் இறங்கனும், எழும்புர்ல இல்ல.//
இந்த கதையில லாஜிக் எல்லாம் பாக்குறாங்கப்பா :-)
//சென்னையில் அன்றைய தேதிக்கு எனக்கு யாரையும் தெரியாது.//
//எங்க ஊர் எதுன்னு சொல்லவேயில்லையே? சென்னைதான்//
:(
சில விளக்கங்கள்:
1. எழும்பூர் - தவறான புகைவண்டி நிலையம்தான்.... வேறொரு ஊரிலிருந்து பெங்களூர், மைசூர் மாற்றியபிறகு இதை மாற்றத்தவறி விட்டேன்.....:-((
2. மொத்த குடும்பமும் சென்னையில் இல்லாமல், பெங்களூரில் இருப்பதால் - அன்றைய தேதியில் தெரிந்தவர்கள் யாரும் சென்னையில் இல்லை - என்றேன். அப்போது - பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள் - இவங்கல்லாம் என்ன ஆனார்கள் என்று கேள்வி வந்தால் - ஹிஹி. என்னிடத்தில் பதில் இல்லை.
3. நிறைய பேர் புரியாமல், கிர்ர்ர்ர் என்றிருப்பதால், இந்த கதையும், கலைஞரின் புதிய கவிதையைப் போலவே இருக்கிறது என்று நான் புரிந்து கொண்டேன்.. கிர்ர்ர்ர் போட்டவங்களுக்கெல்லாம் நன்றி... நன்றி... நன்றி...
அய்யா..கிர்ர்ர்ரு புரியாம போட்டது இல்ல....நல்லா தெளிவா புரிஞ்சுகிட்டதால போட்டது...
க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்...
வாங்க வெண்பூ -> ஏங்க இதுக்காக என்னாலே தஞ்சாவூரெல்லாம் போக முடியாது... வேணும்னா இங்கேயே கல்வெட்டு வெக்கமுடியுமான்னு பாக்கறேன்....:-))
வாங்க ப்ளீசிங் பவுடர் -> ஹிஹி... சென்ட்ரல்லேர்ந்து நடந்து பூங்கா போய் அங்கேர்ந்து எழும்பூர் போய் வெளியே வந்து பேருந்து பிடித்தேன்... இப்படிகூட சொல்லலாமில்லே.... அவ்வ்வ்வ்....
வாங்க சரவண குமார், சரவணகுமரன், அனானி மற்றும் விஜய் ஆனந்த் -> நன்றி... உங்களுக்காக சில விளக்கங்கள் போட்டிருக்கேன்.. அதையும் பாத்துடுங்க.... அவ்வ்வ்.....
நானும் கதை ரொம்ப சீரியசா போகுதேன்னு நினைச்சி ஏமாந்திட்டேன். கர்ர்ர்ர்ர்ர்ர்......
அவ்வ்வ்வ்....உங்க விளக்கத்துக்கு நானும் பதில் போட்டுட்டேன்....
பேருந்துக்காக கொஞ்ச நேரம் காத்திருந்து அதிலேயே திருவல்லிக்கேணி போய் சேர்ந்தேன்.//
உங்க வீட்ல எல்லாருமே பேச்சிலரா? இல்ல திரிவல்லிக்கேணினு எழுதுனதால கேக்கிறேன் ;))
தொடரும்
(பதிவுல மட்டும்தான் தொடரும் போடுவீங்களோ?நாங்க பினூட்டத்திலேயே போடுவோம்!!) :))
முற்றும்.
முற்றும் போட்டதுக்கப்புறம் பின்னூட்டம் போட்டா பப்ளிஷ் ஆகுமா?
வாங்க பிரேம்ஜி -> ஹிஹி... இப்போ புரிஞ்சிக்கிட்டீங்கல்ல....
வாங்க விஜய் ஆனந்த் -> பாத்துட்டேங்க... பாத்துட்டேன்......:-))
வாங்க அப்துல்லா -> அட... என்ன இப்படி கேட்டுட்டீங்க... நான் பேச்சிலரா வெளியூர்லேயும் இருந்திருக்கேன்... குடும்பத்தோட திருவல்லிக்கேணியிலும் இருந்திருக்கேன்... இது எப்படி?.....:-))
வாங்க குடுகுடுப்பை மற்றும் வேலன் -> அவ்வ்வ்...... வேண்டாம். அழுதுடுவேன்....
நான் பேச்சிலரா வெளியூர்லேயும் இருந்திருக்கேன்... குடும்பத்தோட திருவல்லிக்கேணியிலும் இருந்திருக்கேன்... இது எப்படி?.....:-))//
அண்ணே! நா வரல! இந்த விளையாட்டுக்கு நா வரவே இல்லை :))
//நான் புகைவண்டியில் தனியாக வருவது அதுதான் முதல் தடவை. //
அடடே உங்க ஒரு ஆளுக்காக வண்டி ஓட்டுனாங்க்களா!
//சென்னையில் அன்றைய தேதிக்கு எனக்கு யாரையும் தெரியாது//
தேதிய சொல்லவே இல்லை!
இன்னைக்கு மட்டும் எல்லாத்தையும் தெரியுமா
வடபழனி போலிஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பெயர் என்ன?
// புதிதாகக் கிடைத்திருக்கும் வேலைக்குப் போகவேண்டுமே//
பவாம்பா அந்த கம்பெனி
//வேளா வேளைக்கு சாப்பிடுப்பா. போர்ன்விடா வாங்கி வெச்சுக்கோ.//
ச்சின்னப்பையன் செர்லாக் தானே குடிக்கணும்!
//ராத்திரி ரொம்ப நேரம் டிவி பாக்கறதுக்கு கண் முழிக்காதே//
அப்போ டிஸ்கோத்தே, பப்புன்னு சுத்துறதுக்கு கண்ணு முளிக்கலாமே, சரியா தான் சொல்லியிருக்காங்க!
// குடும்பமே அடுத்த 10 நாட்களுக்கு மைசூர் டூர்லாம் போக, நான் மட்டும் வேலைக்காக சென்னை வந்து சேர்ந்தேன்.//
இந்த நக்கலுக்கு மட்டும் குறைச்சல் இல்ல!
கல்யாண வீட்ல ஏதாவது பிகர சைட் அடிச்சிருப்பீரு,
அத மிஸ் பண்ண கடுப்புல இந்த பதிவா
//சென்னை எழும்பூரில் வந்து இறங்கிய அந்த ஞாயிற்றுக்கிழமை காலை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.//
என்னா ஞாபக சக்திபா பய புள்ளக்கி...
//அதற்கு முதல் நாள் இரவு புகைவண்டிக்குக் கிளம்பும்போது,//
மன்னிக்கனும். நான் முதல் இரவுன்னு படிச்சிட்டேன்.. ஹி..ஹி..
//ராத்திரி தூங்கும்போது வீடு உள்ளேயிருந்து பூட்டிக்கோ//
எல்லா வீட்லயும் உள்ளயிருந்துதான் பூட்டிகிட்டு தூங்குவாங்க. வெளியில பூட்டிட்டு உள்ளாற தூங்க முடியுமா என்னா?
//அம்மாதான் தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தாங்க//
ஹி..ஹி.. என் பையனோட அம்மாவும் இப்படிதான் பேசிட்டே இருப்பாங்க.. நான் அமைதியா கேட்டுகிட்டு இருப்பேன்..
//ராத்திரி ரொம்ப நேரம் டிவி பாக்கறதுக்கு கண் முழிக்காதே //
மிட்நைட் மசாலா பாக்காத அப்படின்றத டீஜன்டா சொல்லியிருக்காங்க ...
//எப்பவும் குடும்பத்துடனே இருந்து பழக்கப்பட்டதால், தனித்து விடப்பட்ட அரை நாளிலேயே வாழ்க்கை வெறுத்துப் போனது//
குடும்பத்துல மத்த எல்லாரும் சந்தோசமாத்தான் இருந்திருப்பாங்க...
//தனிமை பயங்கரமாக போர் அடித்தது. //
உண்மைத்தமிழனோட "புனித போர்" டாக்குமென்ட்ரி பாத்துட்டு இருந்தீங்களா?
சமீப காலமாக ச்சின்னப்பையன் பதிவுகள் மொக்கையாக இருப்பதன் காரணம் கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு,
ஒலகநாயகன் நடுத்து வெளி வரும் நாயகன் படத்தின் மொத்த டிக்கெட்டுகளும் இலவசமாக தரப்படும்
உலக நாயகனின் படத்தை மூன்று வாரம் முயன்று முடியாமல் நான்காவது அட்டெம்ப்டில் பார்த்த இந்த ச்சின்னப்பையன், மன்றத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் இன்னும் அகிலாண்ட நாயகனின் படத்தை பார்க்காதது மன்னிக்க முடியாத குற்றம். அவருக்கு 100 கானல் நீர் டிவிடி (வித் சப் டைட்டில்) அனுப்பிவைக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.
இப்படிக்கு
பொறுப்பாளர்
சைதை பகுதி மன்றம்
//ச்சின்னப் பையன் said...
சில விளக்கங்கள்:
1. எழும்பூர் - தவறான புகைவண்டி நிலையம்தான்....
//
என்னாது எழும்பூர் தவறான புகைவண்டி நிலையமா? அப்படின்னா ரொம்ப மோசமான ஸ்டேஷனா அது?
//வால்பையன் said...
சமீப காலமாக ச்சின்னப்பையன் பதிவுகள் மொக்கையாக இருப்பதன் காரணம் கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு,
ஒலகநாயகன் நடுத்து வெளி வரும் நாயகன் படத்தின் மொத்த டிக்கெட்டுகளும் இலவசமாக தரப்படும்
//
ஒலகநாயகன் சொந்த ஊரில் இருப்பவர்களுக்கு மட்டும் பிரியாணி அன்ட் குவாட்டர் எக்ஸ்ட்ரா
//ஒலகநாயகன் சொந்த ஊரில் இருப்பவர்களுக்கு மட்டும் பிரியாணி அன்ட் குவாட்டர் எக்ஸ்ட்ரா //
கூடவே அவர் ஆரம்பிக்க போகும் புது கட்சியின்
கொ.ப.செ பதவியும்
பதிவைப் படிக்க நேரமில்லை. அப்புறமா படிச்சுக்கறேன்...
யார் யாரெல்லாம் இருக்கீங்கப்பா?
என்னைக் கூப்பிட்ட வெண்பூ எங்கப்பா போனாரு?
இங்கதான் இருக்கேன் பார்ட்னர்...
இப்ப பிரச்சினை என்னான்னா ச்சின்னப்பையன் போடுற பதிவெல்லாம் மொக்கையா இருக்குன்னு வால் வருத்தப்படுறாரு.. என்னா பண்ணலாம் பரிசல்?
என்னதான் சொல்றாரு ச்சின்னப்பையன்?
//ச்சின்னப்பையன் போடுற பதிவெல்லாம் மொக்கையா இருக்குன்னு வால் வருத்தப்படுறாரு.. என்னா பண்ணலாம் பரிசல்? //
ச்சின்னபையனுக்கு ஒரு மிரட்டல் கடிதம் எழுதலாம்
//இப்ப பிரச்சினை என்னான்னா ச்சின்னப்பையன் போடுற பதிவெல்லாம் மொக்கையா இருக்குன்னு வால் வருத்தப்படுறாரு.. என்னா பண்ணலாம் பரிசல்?//
பகிரங்கக் கடிதம்தான்... வேற வழி?
//பகிரங்கக் கடிதம்தான்//
ஹி..ஹி.. அது போன வாரம்.. நான் சொன்னது இந்த வாரம்...
நண்பர் அப்துல்லா ஒரு கவுஜ எழுதியிருக்கிறார்
அவரை கும்மி குத்தி ஊக்க படுத்தலாமா
எவ்வளவாச்சு? 50 போட்டாச்சா?
50
50
என்னாச்சு... வெண்பூவுக்கு? எனக்கு விட்டுக் குடுத்துட்டாரா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment