Monday, August 18, 2008

தங்ஸ் Vs ரங்ஸ்!!!

முன் - 1: ஒரு நீள(!!) நகைச்சுவை கதை எழுதலாம்னு ரொம்ப நாளா ஐடியா இருந்துச்சு. ஆனா எதுவும் சரிவராததாலே, அந்த கதைக்காக சேத்து வெச்ச ஜோக்ஸை இங்கே போட்டிருக்கேன்.

முன் - 2: அப்பாடா, சொந்தக்கதை இல்லேன்னு சொல்ல எவ்ளோ பில்டப்பு கொடுக்கவேண்டியிருக்கு? அவ்வ்வ்வ்...

-------

இங்கே அமெரிக்காவிலே மின்சாரத்தடையே இருக்கறதில்லையே.. அத மாதிரி நம்ம இந்தியாவிலேயும் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்?

ஆமாம்மா. அதுக்கு நாம என்ன பண்ணலாம் சொல்லு.

நம்ம அமைச்சர்கள், இங்கத்திய ஆட்கள கேட்டு அது மாதிரி அங்கேயும் செயல்படுத்த சொல்லலாமில்லே?

செய்யலாம்மா. ஆனா, அதிலே ஒரு சின்ன பிரச்சினையிருக்கு.

என்ன?

நம்ம அமைச்சர்கள் அலுவலகத்திற்கு வந்து இங்கே போன் பண்றதுக்குள்ளே இவங்க தூங்கப்போயிருப்பாங்க. இவங்க அலுவலகத்திற்கு வரும்போது அவங்க ஏதாவது ஒரு திரைப்பட விழாவில் கலந்துக்கறதுக்கோ அல்லது தூங்கறதுக்கோ போயிருப்பாங்க...

ஓ... அப்படியா?

------

ஏங்க இந்த கடலுக்கடியிலே பாலம்லாம் கட்றாங்களே, அதெல்லாம் துறு (துரு?) பிடிக்காமே எப்படி ரொம்ப நாளைக்கு இருக்கு?

எனக்கு எப்படிம்மா தெரியும்? ஒரு மனுசனாலே உலகத்திலே எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்க முடியாதும்மா...

எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்க வேணாம்.. அதுக்காக ஒண்ணுமே தெரியாமே எப்படி இருக்கமுடியும்னுதான் நான் கேக்கறேன்...

ஙே...

-------

ஒரு தடவை இந்த ராக்கெட்லே சந்திரனுக்குப் போய் அங்கேர்ந்து நம்ம இந்தியாவிலே, சென்னையை பாக்கணும்.

நான் வேணா ஒரு ஃபேர் ஏற்பாடு பண்ணி அனுப்பி வைக்கிறேன். திரும்பி வர்றது உன்னோட பொறுப்பு..

-----

ஒரு பெரிய நந்தவனத்திலே இருக்கக்கூடிய பல்வேறு பூச்செடிகளில் ஒன்றான ஒரு ரோஜாச்செடியில் அமர்ந்திருக்கக்கூடியதாகிய ஒரு வண்டின் படபடக்கும் இறக்கைகளைப் போல இமைகளைக் கொண்ட தலைவியே...

செகண்ட் டோஸ் காபி வேணும்னா, நேரே கேக்கவேண்டியதுதானே... எதுக்கு இப்படி சுத்தி வளைச்சி பேசறீங்க...

-----

தங்ஸ், இனிமே உன்கிட்டே சின்னச்சின்ன விஷயங்களைக்கூட மறைக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.

அப்பாடா, இப்போதான் நீங்க திருந்தியிருக்கீங்க..

இன்னிக்கு கார்த்தாலே உப்புமா சாப்பிடும்போது 5 கடுகு கீழே விழுந்துடுச்சு. அதை அப்படியே தூக்கி குப்பையிலே போட்டுட்டேன்!!!.

25 comments:

வெண்பூ August 18, 2008 at 5:12 AM  

//எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்க வேணாம்.. அதுக்காக ஒண்ணுமே தெரியாமே எப்படி இருக்கமுடியும்னுதான் நான் கேக்கறேன்//

ஹி...ஹி.. அங்கயும் அப்படித்தானா???

//ஒரு பெரிய நந்தவனத்திலே இருக்கக்கூடிய பல்வேறு பூச்செடிகளில் ஒன்றான ஒரு ரோஜாச்செடியில் அமர்ந்திருக்கக்கூடியதாகிய ஒரு வண்டின் படபடக்கும் இறக்கைகளைப் போல இமைகளைக் கொண்ட தலைவியே...//

டோய்... அண்ணன் பின்நவீனத்துவவாதி ஆயிட்டாரு டோய்...

வெண்பூ August 18, 2008 at 5:12 AM  

ஹை.. மீ த ப்ஷ்டூ..

விஜய் ஆனந்த் August 18, 2008 at 5:34 AM  

// வெண்பூ said...
//எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்க வேணாம்.. அதுக்காக ஒண்ணுமே தெரியாமே எப்படி இருக்கமுடியும்னுதான் நான் கேக்கறேன்//

ஹி...ஹி.. அங்கயும் அப்படித்தானா??? //

அங்க மட்டுமா...இங்கவுந்தான்...

விஜய் ஆனந்த் August 18, 2008 at 5:37 AM  

// முன் - 2: அப்பாடா, சொந்தக்கதை இல்லேன்னு சொல்ல எவ்ளோ பில்டப்பு கொடுக்கவேண்டியிருக்கு? அவ்வ்வ்வ்... //

அப்ப இது மெய்யாலுமே நொந்த ச்ச்ச்சே சொந்தக்கதை இல்லியா????

வடகரை வேலன் August 18, 2008 at 5:58 AM  

//அப்பாடா, இப்போதான் நீங்க திருந்தியிருக்கீங்க..//

அவ்வளவு சீக்கிரம் திருந்தீருவமா என்ன?

புதுகை.எம்.எம்.அப்துல்லா August 18, 2008 at 6:21 AM  

விஜய் ஆனந்த் said...
// வெண்பூ said...
//எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்க வேணாம்.. அதுக்காக ஒண்ணுமே தெரியாமே எப்படி இருக்கமுடியும்னுதான் நான் கேக்கறேன்//

ஹி...ஹி.. அங்கயும் அப்படித்தானா??? //

அங்க மட்டுமா...இங்கவுந்தான்...

//

அங்க இங்கன்னெல்லாம் இல்ல. எல்லா இடத்துலயும் இதே கதைதான். :)

விஜய் ஆனந்த் August 18, 2008 at 6:32 AM  

// புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அங்க இங்கன்னெல்லாம் இல்ல. எல்லா இடத்துலயும் இதே கதைதான். :) //

ஒய் ப்ளட்??? ம்ம்ம்ம்.. சேம் ப்ளட்!!!!

பிரேம்ஜி August 18, 2008 at 6:52 AM  

//ஒரு பெரிய நந்தவனத்திலே இருக்கக்கூடிய பல்வேறு பூச்செடிகளில் ஒன்றான ஒரு ரோஜாச்செடியில் அமர்ந்திருக்கக்கூடியதாகிய ஒரு வண்டின் படபடக்கும் இறக்கைகளைப் போல இமைகளைக் கொண்ட தலைவியே...

செகண்ட் டோஸ் காபி வேணும்னா, நேரே கேக்கவேண்டியதுதானே... எதுக்கு இப்படி சுத்தி வளைச்சி பேசறீங்க...
//

படிக்கிற காலத்தில தமிழ் செய்யுள் ஆழமா படிச்சிருக்கீங்கன்னு தெரியுது.
:-)))))))

முரளிகண்ணன் August 18, 2008 at 7:16 AM  

என்னத்த சொல்ல, நீங்க பரவாயில்லை

பரிசல்காரன் August 18, 2008 at 7:54 AM  

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvv!

(No tamil font here.. So I'm crying in English...!)

மங்களூர் சிவா August 18, 2008 at 9:00 AM  

/
சொந்தக்கதை இல்லேன்னு சொல்ல எவ்ளோ பில்டப்பு கொடுக்கவேண்டியிருக்கு? அவ்வ்வ்வ்...
/

:))

மங்களூர் சிவா August 18, 2008 at 9:01 AM  

/
எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்க வேணாம்.. அதுக்காக ஒண்ணுமே தெரியாமே எப்படி இருக்கமுடியும்னுதான் நான் கேக்கறேன்...
/

:))))

மங்களூர் சிவா August 18, 2008 at 9:01 AM  

/
ஒரு தடவை இந்த ராக்கெட்லே சந்திரனுக்குப் போய் அங்கேர்ந்து நம்ம இந்தியாவிலே, சென்னையை பாக்கணும்.

நான் வேணா ஒரு ஃபேர் ஏற்பாடு பண்ணி அனுப்பி வைக்கிறேன். திரும்பி வர்றது உன்னோட பொறுப்பு..
/

ஒரு முடிவோடதான்யா இருக்கீரு!!
:)))

மங்களூர் சிவா August 18, 2008 at 9:02 AM  

மொத்தத்துல ஜூப்பரோ ஜூப்பரு

ச்சின்னப் பையன் August 18, 2008 at 9:26 AM  

வாங்க வெண்பூ -> பின்னாடி நிறைய பேர் ஒத்துக்கிட்டாங்க பாருங்க... எல்லா இடத்திலேயும் அப்படித்தான்.. ஆனா யாரும் வெளிப்படையா சொல்லமாட்டாய்ங்க... அவ்வ்வ்..

வாங்க விஜய் ஆனந்த் -> ஆமாங்க சேம் ப்ளட்தாங்க...:-))

வாங்க வேலன் 'ஐயா' -> ஆமா. ஆமா. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...

வாங்க அப்துல்லா -> நன்றி...

ச்சின்னப் பையன் August 18, 2008 at 9:26 AM  

வாங்க பிரேம்ஜி -> ஹிஹி....

வாங்க முரளி கண்ணன் -> அவ்வ்வ். அங்கே இதைவிட மோசமா????

வாங்க பரிசல் -> அழுதாலும் தமிழ்லேதான் அழணும், சரியா?

வாங்க சிவா -> ரொம்ப நன்றிங்க....:-))

VIKNESHWARAN August 18, 2008 at 11:16 AM  

இதெல்லாம் கல்யாணமானவங்க இடம் நான் ஓடுகிறேன் பை பை...

வெட்டிப்பயல் August 18, 2008 at 11:45 AM  

//ஒரு பெரிய நந்தவனத்திலே இருக்கக்கூடிய பல்வேறு பூச்செடிகளில் ஒன்றான ஒரு ரோஜாச்செடியில் அமர்ந்திருக்கக்கூடியதாகிய ஒரு வண்டின் படபடக்கும் இறக்கைகளைப் போல இமைகளைக் கொண்ட தலைவியே...//

இப்படி பேசினா காப்பி வராது.. கத்தி வேணா வரலாம் :-)

குடுகுடுப்பை August 18, 2008 at 2:14 PM  

இப்படி பேசினா காப்பி வராது.. கத்தி வேணா வரலாம் :-)

அண்ணன் அட்டை துப்பாக்கி வெச்சுருக்கார்ல.

ச்சின்னப் பையன் August 18, 2008 at 3:00 PM  

வாங்க விக்கி -> இன்னும் எவ்ளோ நாளுக்குத்தான் இப்படி ஓடி ஒளியறது?.....

வாங்க வெட்டி -> கத்திக்கிட்டே கத்தியோட வந்தா?

வாங்க குடுகுடுப்பை -> அவ்வ்வ்வ்..... அதாலேதான் சுடமுடியாதே.....

M.Saravana Kumar August 18, 2008 at 3:16 PM  

//ஒரு பெரிய நந்தவனத்திலே இருக்கக்கூடிய பல்வேறு பூச்செடிகளில் ஒன்றான ஒரு ரோஜாச்செடியில் அமர்ந்திருக்கக்கூடியதாகிய ஒரு வண்டின் படபடக்கும் இறக்கைகளைப் போல இமைகளைக் கொண்ட தலைவியே...

செகண்ட் டோஸ் காபி வேணும்னா, நேரே கேக்கவேண்டியதுதானே... எதுக்கு இப்படி சுத்தி வளைச்சி பேசறீங்க...
//

ஹி...ஹி.. ஹி...

ச்சின்னப் பையன் August 18, 2008 at 8:42 PM  

வாங்க சரவண குமார், காஞ்சனா ராதாகிருஷ்ணன், கயல்விழி -> :-)))) நன்றி...

தாமிரா August 19, 2008 at 10:39 AM  

ரொம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிரமாதம் ச்சின்னப்பையன்.!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP