Tuesday, August 26, 2008

மணிரத்னம் - மென்பொருள் நிபுணரானால்!!!

கணிணித்திரையை கொஞ்சம் வெளிச்சமா வெச்சிக்கோங்க.. கண்ணு 'டொக்'காயிடப் போகுது.
-----
எதுக்கு அருமையான மென்பொருள் பண்ணிட்டு, லாகின் திரையிலே 'இந்த மென்பொருளில் வரும் அனைத்து திரையும் கற்பனையே' அப்படின்னு போட்டிருக்கீங்க?
-----
100 வரிகள்லே எழுதவேண்டிய கோடிங்கை, எதுக்கு சின்னசின்னதா எழுதி 1000 வரி வரைக்கும் இழுத்திருக்கீங்க?
-----
எதுக்கு அடிக்கடி கூகிள்லே 'பழைய அமெரிக்க மென்பொருள்' அல்லது 'பழைய உலக மென்பொருள்' அப்படின்னு தேடிக்கிட்டிருக்கீங்க?
-----
உங்க மென்பொருள் வேலையே செய்யாமே சுத்தமா படுத்துடுச்சுன்னா, உக்காந்து அந்த பிரச்சினையை தீர்க்கப் பாருங்க. அதை விட்டுட்டு கணிணி பக்கத்துலே போய் 'ஏந்திரு (எழுந்திரு) மென்பொருள் ஏந்திரு'ன்னா, பிரச்சினை எப்படி சால்வாகும்?
-----
நீங்க எதுக்கு அந்த மீட்டிங்குக்குப் போனீங்க? க்ளையண்ட் நீங்க மேனேஜரா,இல்லையான்னதுக்கு 'தெரியலியேப்பா'ன்னு வேறே சொல்லியிருக்கீங்க...
-----
உங்க மென்பொருளோட பயன்பாட்டைப் பாத்துதான் எல்லோரும் எழுந்து நின்னு கைதட்டணும். நடு நடுவே தேசிய கீதத்தைப் ஒலிபரப்பி எல்லோரையும் எழுப்பி நிக்க வெக்காதீங்க...

-----
மீட்டிங்லேயும் சரி.. உங்க அறையிலேயும் சரி... எப்பவும் விளக்கை அணைச்சியே வெச்சிருக்கீங்க. போற வர்றவங்கல்லாம் அடிக்கடி எதிலேயாவது இடிச்சிக்கறாங்க... எதுக்கு இப்படி இருக்கீங்க?

-----
நீங்க செய்யற எந்த மென்பொருள பாத்தாலும் - அதை முன்னாடியே வேறே எங்கேயோ பாத்தா மாதிரியே இருக்கே? ஏன் அப்படி?

29 comments:

நல்லதந்தி August 26, 2008 at 7:17 AM  

//நீங்க செய்யற எந்த மென்பொருள பாத்தாலும் - அதை முன்னாடியே வேறே எங்கேயோ பாத்தா மாதிரியே இருக்கே? ஏன் அப்படி?//

இதுதான் உண்மையான பஞ்ச்! :)

இவன் August 26, 2008 at 7:17 AM  

நான்தான் firstஆ??

இவன் August 26, 2008 at 7:18 AM  

ஒரு 2 செக்கன் wait பண்ணி இருக்க கூடாதா நல்லதந்தி.... நீங்க நல்லதந்தி இல்ல கெட்டதந்தி

இவன் August 26, 2008 at 7:20 AM  

ஏன்?? எதுக்கு இப்படி?

ராஜ நடராஜன் August 26, 2008 at 7:58 AM  

//மீட்டிங்லேயும் சரி.. உங்க அறையிலேயும் சரி... எப்பவும் விளக்கை அணைச்சியே வெச்சிருக்கீங்க.//

:)))))

Anonymous,  August 26, 2008 at 8:31 AM  

//நீங்க எதுக்கு அந்த மீட்டிங்குக்குப் போனீங்க? க்ளையண்ட் நீங்க மேனேஜரா,இல்லையான்னதுக்கு 'தெரியலியேப்பா'ன்னு வேறே சொல்லியிருக்கீங்க...//

சூப்பர்

அருப்புக்கோட்டை பாஸ்கர் August 26, 2008 at 8:44 AM  

//கணிணித்திரையை கொஞ்சம் வெளிச்சமா வெச்சிக்கோங்க.. கண்ணு 'டொக்'காயிடப் போகுது.//
எனக்கு பிடிச்சது இதுதான் !

சின்னப் பையன் August 26, 2008 at 9:09 AM  

வாங்க நல்லதந்தி, இவன், கடைசி பக்கம், ராஜ நடராஜன் -> நன்றி...

வாங்க காஞ்சனா ராதாகிருஷணன், வேலன், பாஸ்கர் -> நன்றி...

விஜய் ஆனந்த் August 26, 2008 at 9:12 AM  

:-)))

காமெடியோ காமெடி!!!!

எனக்கு எல்லாமே புடிச்சிருக்கு!!!

" ச்சின்னப்பையன் திரைப்பட இயக்குனரானால் " அப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன்...

பரிசல்காரன் August 26, 2008 at 9:52 AM  

//" ச்சின்னப்பையன் திரைப்பட இயக்குனரானால் " அப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன்.//

இதை நான் ரிசர்வ் செய்கிறேன்!

(சத்யா.. இருக்குடி ஒனக்கு..)

Karthik August 26, 2008 at 9:53 AM  

Wow...

Cant stop laughing...

:)))

பரிசல்காரன் August 26, 2008 at 9:55 AM  

இத விட்டுட்டீங்களே தல..

”தமிழ்நாட்டுல மெய்ன் ப்ராஜக்ட்ஸ் பண்ணீட்டிருந்த நீங்க இப்போ, மும்பைலதான் பண்ணுவேன்னு அடம் பிடிக்கறீங்களே... ஏன்?”

கரெக்டா சொல்ல வர்ல... மே பி யு கேன் மோல்ட் திஸ்... (மணி பத்தின பதிவில்ல.. அதான் இங்கிலிபீசு வர்து)

சின்னப் பையன் August 26, 2008 at 10:06 AM  

வாங்க விஜய் ஆனந்த் -> நல்லாவேயிருங்க... இப்படி பரிசலுக்கு ஐடியாவா அள்ளித் தர்றீங்களே?????...:-)))

வாங்க பரிசல் -> அவ்வ்வ்...

வாங்க கார்த்திக், ஸ்யாம் -> நன்றி...

குடுகுடுப்பை August 26, 2008 at 10:54 AM  

2ம் ஜே.கே.ரித்தீஷ், நல்லா இருக்கு

புதுகை.அப்துல்லா August 26, 2008 at 11:16 AM  

////நீங்க செய்யற எந்த மென்பொருள பாத்தாலும் - அதை முன்னாடியே வேறே எங்கேயோ பாத்தா மாதிரியே இருக்கே? ஏன் அப்படி?//
//

வச்சாருயா சரியான நேரத்துல சரியான இடத்துல ஆப்பு :)))

சரவணகுமரன் August 26, 2008 at 11:25 AM  

நல்லா இருந்திச்சி ச்சின்னப்பையன் :-)

"நீங்க ஏன் எப்பவும் ஒரே design pattern யூஸ் பண்ணுறீங்க?"

புதுகை.அப்துல்லா August 26, 2008 at 11:31 AM  

//"நீங்க ஏன் எப்பவும் ஒரே design pattern யூஸ் பண்ணுறீங்க?"
//

வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாரு. தெரிஞ்சா செய்ய மாட்டாரா?

சின்னப் பையன் August 26, 2008 at 11:53 AM  

வாங்க குடுகுடுப்பை -> அவ்வ்வ்.. முடியல...

வாங்க அப்துல்லா -> நன்றி.... சரியா சொன்னீங்க...

வாங்க சரவணகுமரன் -> நன்றி...

MSK / Saravana August 26, 2008 at 7:19 PM  

//அதை விட்டுட்டு கணிணி பக்கத்துலே போய் 'ஏந்திரு (எழுந்திரு) மென்பொருள் ஏந்திரு'ன்னா, பிரச்சினை எப்படி சால்வாகும்?//

காமெடியோ காமெடி..:))

கயல்விழி August 26, 2008 at 8:42 PM  

//எதுக்கு அடிக்கடி கூகிள்லே 'பழைய அமெரிக்க மென்பொருள்' அல்லது 'பழைய உலக மென்பொருள்' அப்படின்னு தேடிக்கிட்டிருக்கீங்க?//

Classic!!! :) :)

வால்பையன் August 27, 2008 at 3:30 AM  

ரொம்ப நாளா காணாம போன ச்சின்னப்பையன் திரும்பி வந்துட்டாருப்பா

சின்னப் பையன் August 27, 2008 at 6:24 AM  

வாங்க சரவண குமார் எம்.எஸ்.கே, கயல்விழி, தமிழ்நெஞ்சம், சிவா -> நன்றிங்க...

வாங்க வால் -> அவ்வ்வ்.. நான் இங்கேயேதான் இருக்கேன்......

Aruna August 27, 2008 at 10:05 AM  

//அதை விட்டுட்டு கணிணி பக்கத்துலே போய் 'ஏந்திரு (எழுந்திரு) மென்பொருள் ஏந்திரு'ன்னா, பிரச்சினை எப்படி சால்வாகும்?//

great fun...hahahahahaha.lol
anbudan aruNa

Mahesh August 28, 2008 at 12:57 AM  

நம்மளோட ரெண்டு பைசா...

ஏன் மென்பொருள் லான்ச் அன்னிக்கு ப்ரசன்ட் பண்ணும்போது 'நல்லாத்தான் எழுதியிருக்கு, ஒடுமான்னு தெரியாது, ஆனா உக்காந்துருமோன்னு பயமா இருக்கு' அப்பிடின்னு சொல்றீங்க?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP