Wednesday, August 13, 2008

நான் எடுக்கலே.. நான் எடுக்கலே - அரைபக்கக் கதை

ஒரு வாரமாயிடுச்சு அந்த பெரியவர் இந்த வீட்டுக்கு வந்து. தனியாக இருக்கும் எனக்கு கூடமாட எல்லா வேலையிலும் ஒத்தாசையாக இருந்தாலும், தன் பேரைக்கூட சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். முதல் நாள், அவரது ஊர், பேர், ஏதாவது பிரச்சினையா - என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்டாலும் - அவரிடமிருந்து பதில் ஒன்றுமில்லை. அவராக வாய் திறந்து பேசட்டும் என்று நான் விட்டுவிட்டேன்.


' நான் எடுக்கலே.. நான் எடுக்கலே.' என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டு போன வாரம் கோயில் வாசலில் உட்கார்ந்திருந்த அந்த பெரியவரைப் பார்த்தபோது எனக்குப் பாவமாக இருந்தது. பல நாட்களாய் மழிக்கப்படாத தாடியுடன் எங்கேயோ வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த அவர், ' நான் எடுக்கலே'யைத் தவிர வேறெதுவும் பேசத்தயாராக இல்லை.


அவரை அப்படியே விட்டுவிட மனமில்லாமல், நான் தனியாக இருக்கும் இந்த அறைக்கு கூட்டிவந்துவிட்டேன். முதல் நாள் சும்மா உட்கார்ந்திருந்த அவர், அடுத்த நாளிலிருந்து வீட்டுவேலை செய்ய ஆரம்பித்துவிட்டார் - ஆனால், எதுவும் பேசாமல். கேட்ட கேள்விகளுக்குக்கூட பதிலில்லை.


ஒரு வாரம் கழித்து இன்று பளிச்சென்று தாடியை மழித்துக்கொண்டு, குளித்து கோவிலுக்குப் போய் வந்த அவர், வழக்கம்போல் ஒன்றும் பேசாமல் விபூதியை என்முன் நீட்டினார். நானும் எதுவும் பேசாமல் அதை எடுத்துக்கொண்டவுடன், சமைப்பதற்கு நகர்ந்து சென்று விட்டார்.


அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. என் மணிபர்ஸைக் காணவில்லை. என் கால்சட்டையை துவைக்க எடுக்கும்போது பர்ஸை வேறெங்கும் வைத்துவிட்டாரா?... "அண்ணாச்சி, என் பர்ஸை பாத்தீங்களா?.. இங்கேதான் இருந்துச்சு...."


அன்று மாலையிலிருந்து அந்தப் பெரியவரைக் காணவில்லை.

61 comments:

Anonymous,  August 13, 2008 at 6:47 AM  

Hi Chinna,

Me is the first to post comments...
Im a regular reader of your blog, and getting more energy when complete.

by

raja - bangalore.

பரிசல்காரன் August 13, 2008 at 6:55 AM  

கலக்குங்க ச்சின்னவரே!

உருப்புடாதது_அணிமா August 13, 2008 at 7:04 AM  

நான் படிக்கல ..
நான் படிக்கல ..

Kanchana Radhakrishnan August 13, 2008 at 7:49 AM  

சரி பொகட்டும்..வேற யார் பர்சை நம்ம பர்சா ஆக்கிக்கலாம்

ராஜ நடராஜன் August 13, 2008 at 7:58 AM  

எனக்கு பதிவு அனுபவமா ஏதாவது துணைக்கதையான்னு ஒண்ணும் பிரியல.போதாத குறைக்கு இதுவரை வந்த பின்னூட்டங்களைப் பார்க்கணுமே:)))

அட பின்னூட்டங்களைப் பார்க்கும்போதுதான் கலக்குங்க ச்சின்னவரேனு பரிசல்காரன்.இந்த லட்சணத்தில விரதமிருப்பவர்களை என்ன சொல்வது:)

சின்னப் பையன் August 13, 2008 at 8:24 AM  

Thanks Raja - Bangalore:
Just to confirm - before reading my blog - whether you had more more energy - which came down to more energy after reading my blog.... :-)))

வாங்க பரிசல் -> நன்றி...

வாங்க உருப்படாதது -> அவ்வ்வ்வ்...

வாங்க விஜய் ஆனந்த் -> ஊர்லேந்து வந்தாச்சுங்களா... நன்றி...

சின்னப் பையன் August 13, 2008 at 8:26 AM  

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> அதானே... அப்ப சரி...

வாங்க ராஜ நடராஜன் -> இது கதைதாங்க. ஊடகத்து அனுப்புங்க, ஊடகத்து அனுப்புங்கன்னு பல குரல்கள் கேட்கையில், அந்த ஊடகத்துக்காக ஒரு கதையை எழுதலாமேன்னு... ஹிஹி...

அட... ஒரு :-))) மட்டும் போதுங்க... திட்டறதுக்கு இது எவ்வளவோ மேல்... என்ன சொல்றீங்க...

வால்பையன் August 13, 2008 at 10:32 AM  

//அவராக வாய் திறந்து பேசட்டும் என்று நான் விட்டுவிட்டேன். //

அதான சம்பளம் ஏதாவது கேட்டா தாவு தீருமே

வால்பையன் August 13, 2008 at 10:33 AM  

//நான் எடுக்கலே.. நான் எடுக்கலே.' என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டு போன வாரம் கோயில் வாசலில் உட்கார்ந்திருந்த அந்த பெரியவரைப் பார்த்தபோது எனக்குப் பாவமாக இருந்தது. //

பரிசல்காரன்:நான் எழுதல நான் எழுதல

வால்பையன்:நான் குடிக்கல நான் குடிக்கல

வால்பையன் August 13, 2008 at 10:39 AM  

சீரியசான பின்னூட்டம்
சித்தன் போக்கு என்ற சிறுகதை தொகுப்பில் இந்த கதையை படித்திருக்கிறேன்.
இறுதியில் தலையணைக்கு கீழே அந்த பர்ஸ் இருக்கும். அருமையான சிறுகதை தொகுப்பு அது

பரிசல்காரன் August 13, 2008 at 10:44 AM  

சீரியஸாவா? பின்னூட்டமா? இங்க வந்தா?

வாலு... வேணாம்... அழுதுடுவேன்

பரிசல்காரன் August 13, 2008 at 10:46 AM  

வால்பையன்

இருக்கீங்களா?

பார்ட்னர் வெண்பூ எங்க?

பரிசல்காரன் August 13, 2008 at 10:51 AM  

இங்க நான் ஒருத்தன் மட்டும் இப்படி கரடியாக் கத்தறேனே...

யாரும் இல்லையா?

வால்பையன் August 13, 2008 at 10:52 AM  

//இங்க நான் ஒருத்தன் மட்டும் இப்படி கரடியாக் கத்தறேனே...//

சாரி கரடி பாசை எங்களுக்கு தெரியாது

பரிசல்காரன் August 13, 2008 at 10:54 AM  

@ ராஜநடராஜன்

//அட பின்னூட்டங்களைப் பார்க்கும்போதுதான் கலக்குங்க ச்சின்னவரேனு பரிசல்காரன்.இந்த லட்சணத்தில விரதமிருப்பவர்களை என்ன சொல்வது:)//

இவரு நான் எப்படா ஒழிவேன்னே எதிர்பார்த்துட்டிருப்பாரு போல!

வெண்பூ August 13, 2008 at 10:55 AM  

யாரெல்லாம்பா இருக்கீங்க?????

வெண்பூ August 13, 2008 at 10:56 AM  

// பரிசல்காரன் said...
@ ராஜநடராஜன்
இவரு நான் எப்படா ஒழிவேன்னே எதிர்பார்த்துட்டிருப்பாரு போல!
//

ஹி...ஹி...நான் கூடத்தான்..

வால்பையன் August 13, 2008 at 10:56 AM  

//யாரெல்லாம்பா இருக்கீங்க?????//

நீங்க, நான் .நம்ம பேக்பைப்பர்

வெண்பூ August 13, 2008 at 10:56 AM  

//வால்பையன் said...
சாரி கரடி பாசை எங்களுக்கு தெரியாது
//

நாய் பாசை வேணா தெரியும்...டிரை பண்ணுங்க பரிசல்..

பரிசல்காரன் August 13, 2008 at 10:57 AM  

பரிசல்காரன்:நான் எழுதல நான் எழுதல

வால்பையன்:நான் குடிக்கல நான் குடிக்கல

அங்கிள்: நான் லெட்டர்போடல.. லெட்டர் போடல...

வால்பையன் August 13, 2008 at 10:58 AM  

ச்சின்னப்பையன் வர வர ஓவரா மொக்கை போடுறார்
அவருக்கு கொஞ்சம் புத்தி சொல்லணும்

வெண்பூ August 13, 2008 at 10:58 AM  

// வால்பையன் said...
//யாரெல்லாம்பா இருக்கீங்க?????//

நீங்க, நான் .நம்ம பேக்பைப்பர்
//

அடப்பாவி உதாரணத்துக்கு கூட உங்களுக்கு டாஸ்மாக் ஐட்டம்தானா?? உங்களையெல்லாம் 1000 பரிசல் பகிரங்க கடிதம் எழுதுனா கூட திருத்தமுடியாது

வெண்பூ August 13, 2008 at 10:58 AM  

// வால்பையன் said...
ச்சின்னப்பையன் வர வர ஓவரா மொக்கை போடுறார்
அவருக்கு கொஞ்சம் புத்தி சொல்லணும்
//

அவரு பேரை ம்மொக்கப்பையன் அப்படின்னு வேணா மாத்திடுவமா?

வெண்பூ August 13, 2008 at 10:59 AM  

// பரிசல்காரன் said...
பரிசல்காரன்:நான் எழுதல நான் எழுதல

வால்பையன்:நான் குடிக்கல நான் குடிக்கல

அங்கிள்: நான் லெட்டர்போடல.. லெட்டர் போடல...
//

வெண்பூ: நான் கும்மல.. கும்மல..

பரிசல்காரன் August 13, 2008 at 11:00 AM  

//வால்பையன் said...

//யாரெல்லாம்பா இருக்கீங்க?????//

நீங்க, நான் .நம்ம பேக்பைப்பர்//

இன்னும் திருந்தலியா நீ?

பரிசல்காரன் August 13, 2008 at 11:02 AM  

இன்னும் எத்தனை அரைப்பக்க கடை இருக்கு ச்சின்னவரே?

பரிசல்காரன் August 13, 2008 at 11:02 AM  

//வெண்பூ: நான் கும்மல.. கும்மல..//

அப்புறம் ச்சின்னப்பையனை யாரு காப்பாத்தறது?

வால்பையன் August 13, 2008 at 11:03 AM  

//அவரு பேரை ம்மொக்கப்பையன் அப்படின்னு வேணா மாத்திடுவமா? //

அட இது நல்லாருக்கே

பரிசல்காரன் August 13, 2008 at 11:04 AM  

எங்கப்பா போனீங்க?

தனியா பயமா இருக்கு..

போஸ்ட்மேனைப் பாத்தாக் கூட பயமா இருக்குங்க.. லெட்டர் குடுப்பாங்களே..

வால்பையன் August 13, 2008 at 11:04 AM  

//அப்புறம் ச்சின்னப்பையனை யாரு காப்பாத்தறது?/

அவர் அனுப்புற செக்குக்கு இது கூட செய்யலைனா எப்படி

பரிசல்காரன் August 13, 2008 at 11:05 AM  

//வால்பையன் said...

//அவரு பேரை ம்மொக்கப்பையன் அப்படின்னு வேணா மாத்திடுவமா? //

அட இது நல்லாருக்கே//

வ்வெண்பூ சொன்னது கரெக்ட்தான் வ்வால்பையன்!

-ப்பரிசல்காரன்!

வால்பையன் August 13, 2008 at 11:05 AM  

வெண்பூ கிட்கேட் சாப்பிட போயிருக்கார்

பரிசல்காரன் August 13, 2008 at 11:06 AM  

//வால்பையன் said...

வெண்பூ கிட்கேட் சாப்பிட போயிருக்கார்//

சொல்லவேல்ல?

வால்பையன் August 13, 2008 at 11:06 AM  

//வ்வெண்பூ சொன்னது கரெக்ட்தான் வ்வால்பையன்!
-ப்பரிசல்காரன்! //

இது நல்லால
வாய் வரைக்கும் வந்துட்டு முத்தம் கொடுக்காம போன மாதிரி இருக்கு

பரிசல்காரன் August 13, 2008 at 11:07 AM  

//உருப்புடாதது said...

நான் படிக்கல ..
நான் படிக்கல ..//

நீங்க படிக்கலங்கறது உங்க பேரைப் பாத்தாலே தெரியுதே!

வால்பையன் August 13, 2008 at 11:08 AM  

//நீங்க படிக்கலங்கறது உங்க பேரைப் பாத்தாலே தெரியுதே! //

நிறைய ஆளுங்களே இங்க உருப்படாம தான் திரியுறாங்க

சின்னப் பையன் August 13, 2008 at 11:59 AM  

அட்றா. இன்னிக்கும் மூணு பேரும் சேந்துட்டீங்களா...

வால், நிஜமா.... அந்த சிறுகதைத் தொகுப்பு இணையத்திலே இருக்கா?.... யார் எழுதியது... யப்பா.. நான் அதைப் படித்ததில்லை.. இது என் கற்பனைதான்...

வால்பையன் August 13, 2008 at 12:08 PM  

இணையத்தில் இல்லை, அது புத்தகமாக உள்ளது.
பெயர் சித்தன் போக்கு
எழுதியவர் பெயர் :பிரபஞ்சன்

அருமையான தொகுப்பு

சின்னப் பையன் August 13, 2008 at 12:31 PM  

ஓ. அப்போ நான் பிரபஞ்சன் மாதிரி கற்பனை பண்றேனா??? ஆஆஆ...

வால்பையன் August 13, 2008 at 12:33 PM  

//அப்போ நான் பிரபஞ்சன் மாதிரி கற்பனை பண்றேனா??? ஆஆஆ... //

அப்படியும் சொல்லலாம்
அல்லது
பிரபஞ்சனும் உங்களை போலவே கற்பனை செய்திருப்பார்
என்றும் சொல்லலாம்.
இல்லை
உங்கள் இருவருக்கும் இதன் தொடர்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம்
எது எப்படியோ நல்ல கதை மக்களிடம் சேர்ந்தால் சரி

சின்னப் பையன் August 13, 2008 at 12:37 PM  

என்ன இருந்தாலும் அவர் முதல்லே எழுதிட்டாரில்லையா??? எனக்கு இந்த கதை ஒரு வாரம் முன்னால்தான் தோன்றியது.

வால்பையன் August 13, 2008 at 12:42 PM  

காலம் நாம் வரையுருத்து கொண்டது,
அண்ட பிரபஞ்சத்தில் காலம் என்பதே கிடையாது.
சில நூற்றாண்டுகள் சில நொடிகள் ஆகலாம்.
சேக்ஸ்பியரை படிக்காதவன் அதே போல் கதை உருவாக்க முடியும்

சின்னப் பையன் August 13, 2008 at 12:46 PM  

ஆச்சரியமாக உள்ளது.

அது சரி. யார் என்ன நினைத்தாலும் - நான் காப்பி அடிக்கவில்லை என்பது எனக்கு (உங்களுக்கும்) தெரியும்... அது போதும்.... நன்றி வால்... ( நான் அடுத்த சொற்பொழிவு கேட்கப்போகிறேன்... அதனால் இன்னிக்குக்கு குட் நைட்....)....:-)))

வால்பையன் August 13, 2008 at 12:57 PM  

உங்களையே மொக்க போட்டு கொட்டாவி விட வச்சுட்டேன் பார்த்திங்களா

பிரேம்ஜி August 13, 2008 at 1:09 PM  

மிக சிறப்பான அரை பக்க கதை.வர வர சீரியஸ் ஆகவும் எழுதி கலக்குறீங்க.

Anonymous,  August 13, 2008 at 1:56 PM  

நல்லாரிக்கு.
:))))))))))
(இதுவே போதும்னுதானே சொன்னீங்க ???)

Selva Kumar August 13, 2008 at 4:07 PM  

(தற்காலிக) தலைவருக்கு ஒர பகிரங்க கடிதம்.

இது போல் மொக்கை பதிவு போட்டால் (தற்காலிக) தலைவர்மேல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவான் கொ.ப.செ.

அன்புடன்

கொ.ப.செ

Selva Kumar August 13, 2008 at 4:09 PM  

//Hi Chinna,

Me is the first to post comments...
Im a regular reader of your blog, and getting more energy when complete.

by

raja - bangalore.//

பாத்துக்ங்க தலைவரெ ஒருநாளைக்கு சாத்து சாத்துனு சாத்தீர போறாரு..

நாளைக்காவது நல்ல பதிவு போடுங்க ப்ளீஸ்.

Selva Kumar August 13, 2008 at 4:11 PM  

நான் (உங்கள இன்னும்) மன்னிக்கல..
நான் (உங்கள இன்னும்) மன்னிக்கல..
நான் (உங்கள இன்னும்) மன்னிக்கல..
நான் (உங்கள இன்னும்) மன்னிக்கல..
நான் (உங்கள இன்னும்) மன்னிக்கல..
நான் (உங்கள இன்னும்) மன்னிக்கல..
நான் (உங்கள இன்னும்) மன்னிக்கல..
நான் (உங்கள இன்னும்) மன்னிக்கல..
நான் (உங்கள இன்னும்) மன்னிக்கல..
நான் (உங்கள இன்னும்) மன்னிக்கல..
நான் (உங்கள இன்னும்) மன்னிக்கல..

சின்னப் பையன் August 13, 2008 at 7:23 PM  

வாங்க பிரேம்ஜி -> 'வீட்லே' தினமும் என்ன மூடோ அதே மூடுலேதான் பதிவு வருது....ஹிஹி...

வாங்க பரிசல் -> என்ன கொடுமை இது சரவணன்?... ஆளே இல்லாத மைதானத்துலே 50 போட்டுட்டீங்க?.... அவ்வ்வ்...

வாங்க ஹைசுபாஷ் -> அது சரி... அப்போ மனசிலே திட்டிக்கிட்டேதான் எழுதினீங்களா?????

வாங்க வழிப்போக்கன் -> ஏன் இந்த கொலவெறி? தலைமைக்கு எதிராகவே புரட்சியா?

அவ்வ்வ்வ்... மன்னிச்சிடுங்க... மன்னிச்சிடுங்க....

ராஜ நடராஜன் August 14, 2008 at 6:48 AM  

//இவரு நான் எப்படா ஒழிவேன்னே எதிர்பார்த்துட்டிருப்பாரு போல!//

பரிசல்காரன்!சும்மா மூலையில கிடந்தவனை ஊதிக் கெடுத்தா இப்படி எதிர்பார்ப்பு நியாயம்தானே:)

குடுகுடுப்பை August 14, 2008 at 10:13 AM  

//அன்று மாலையிலிருந்து அந்தப் பெரியவரைக் காணவில்லை.//
நான் கூட்டிட்டு போகலை! நான் கூட்டிட்டு போகலை!

Selva Kumar August 14, 2008 at 1:51 PM  

கொஞ்ச நேரம் முன்னாடி

"தீட்டாதீங்க" அப்படின லேபிலுடன் (அவசரக்கடிதம் ?? )ஒரு காலி பதிவு தமிழ்மணத்துல பாத்தனே ???



வீட்டுக்கு வந்து திட்டலாம்னு நினச்சேன் காணலியே ??

தப்பிச்சிட்டீங்க

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP