முறை தவறி நடந்துகொண்டேன்!!!
நான் அமெரிக்கா வந்து இப்படி செய்வேன்னு கொஞ்சம்கூட எதிர்ப்பார்க்கவேயில்லை.
நானா இப்படி 'முறை தவறி' நடந்துக்கிட்டேன்? நினைத்துப் பார்த்தால் எனக்கே என்மேல் வெறுப்பாய் வருகிறது. ஒரு நிமிடம் நிதானமாக யோசித்திருந்தாலும் இப்படி நடந்திருக்க வாய்ப்பேயில்லை. மேலும் இப்படி காலம் பூராவும் நினைத்து வேதனைப்பட்டிருக்கவும் தேவையில்லை.
எனக்கு 'அந்த' அனுபவம் முதல்முறையாக இருந்ததால், மிகவும் நடுக்கமாக இருந்தது. படபடப்பாகவும் இருந்தது. நிறைய தண்ணீர் குடித்துவிட்டு, ஒரு ஐந்து நிமிடம் சாலையோரமாகவே உட்கார்ந்துவிட்டேன்.
கணிணியில் இருக்கும் 'பின்னோக்கி' பொத்தானைப் போல், வாழ்க்கையிலும் ஒரு 'பின்னோக்கி' இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
நான் 'முறை தவறியதை' யாரும் பார்க்காமல் இருந்திருந்தாலாவது நல்லாயிருந்திருக்கும். ஆனால், பல பேர் அதைப் பார்த்துவிட்டார்கள். அவர்களில் சிலர் என்மேல் காறி உமிழவும், பலபேர் என்னைப் பார்த்து பயந்து ஒதுங்கிப்போவதற்கும் தயாராக இருந்தனர். நல்லவேளை யாரும் காவல்துறையினருக்கு தெரிவிப்பதற்கு முன் அந்த இடத்தைவிட்டு நான் வந்துவிட்டேன்.
ஆண்களுக்கு இந்த விஷயம் ரொம்ப சாதாரணமென்றாலும், மிகவும் சென்சிடிவான பெண்கள் இதை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதற்கு என் தங்கமணியே சாட்சி.
இனிமேல் என் வாழ்நாளில் இப்படி தவறு செய்யமாட்டேன் என்று தங்கமணியிடம் சத்தியம் செய்தும், அவர் என்னை நம்பத்தயாராக இல்லை. 'எப்போ இப்படிப்பட்ட அசிங்கத்தை ஒரு முறை செய்தீர்களோ, மறுபடியும் செய்யமாட்டீர்களென்று என்ன நிச்சயம்?' என்று என்னை காய்ச்சி எடுத்துவிட்டார்.
அந்த சம்பவம் நடந்து ஒரு வருடமாயிருந்ததாலும், அதற்கு பிறகு அப்படி நான் முறை தவறாததாலும், தற்போது தங்கமணியின் கோபம் சற்றே குறைந்திருக்கிறது.
சரி. யாரும் தப்பா நினைத்துக் கொள்வதற்குள் 'அந்த' விஷயம் என்னவென்று சொல்லிவிடுகிறேன்.
அமெரிக்காவில் வண்டியை சாலையின் வலதுபுறமாக ஓட்டவேண்டும். ஆனால், நான் ஏதோ டென்ஷனில் ஒரு நிமிடத்திற்கு 'முறை தவறி' இடது புறமாக (இந்தியாவில் ஓட்டுவதுபோல்) ஓட்டிவிட்டேன்.
சென்ற வருடம் ஒரு கோவிலுக்குப் போயிருந்தபோது, ஒரு இடத்தில் சரியாக திரும்பாததால், வண்டியை ஒரு வீட்டினுள் விட்டு, பின்னோக்கித் திருப்பி, மறுபடி அதே பாதையில் வரவேண்டியிருந்தது. அப்படித் திரும்பியபோது, 'பின்னோக்கி' கியரை 'முன்னோக்கி' மாற்றாமல் ஓட்டியதால், வண்டி வேகமாக பின்னால் சென்றது. சற்று தள்ளி நின்றிருந்த வண்டிகள் 'சத்தம்' போடவும், நான் டென்ஷனாகி, வேகமாக 'கியரை' மாற்றி, அதே டென்ஷனில் முறை தவறி இடதுபக்கம் ஓட்ட ஆரம்பித்துவிட்டேன்.
பின்னால் அமர்ந்திருந்த தங்கமணி, தப்பான சைடில் போறீங்க போலிருக்கே என்றவுடந்தான், அது புரிந்து, சடாரென்று பாதையை மாற்றி ஓட்ட ஆரம்பித்தேன்.
பின் - 1: ஆண்டவா, நாளைக்காவது ஒரு சூடான பதிவுக்கான ஐடியா கொடுப்பா. இப்படி மொக்கை போடவெக்கறியே!!!
பின் - 2: நம்ம மன்றத்தலைவி ராப் அவர்களின் லீவ் லெட்டர் கிடைத்தது. கொஞ்சம் பிஸியாக இருப்பதாகவும், சில நாட்கள் பதிவுகள் எதுவும் பார்க்கமுடியாதென்றும்/பின்னூட்டங்கள் போட முடியாதென்றும் கூறியிருக்கிறார். எதுவாகயிருந்தாலும், மன்றத்தின் பொதுக்குழு கூடித்தான் முடிவு செய்வோம் என்று கூறிவிட்டேன்.
22 comments:
மொத போனி ஆஜர் ஸார்....
இன்னும் முழுசா படிக்கல
படிச்சுட்டு வந்து பின்நூட்டம் போடுறேன்...
2வது போனி ஆஜர் ஸார்
தன்மான சிங்கம் தானாகவே இது மொக்கை பதிவுன்னு ஒத்துகிட்டார் பாருங்க!
இருந்தாலும் வழக்கம் போல் கும்மி தொடரும்
வால்பையன்
///எனக்கு 'அந்த' அனுபவம் முதல்முறையாக இருந்ததால், மிகவும் நடுக்கமாக இருந்தது. படபடப்பாகவும் இருந்தது. நிறைய தண்ணீர் குடித்துவிட்டு, ஒரு ஐந்து நிமிடம் சாலையோரமாகவே உட்கார்ந்துவிட்டேன்.//
நான் கூட வேற என்னமோன்னு நினைசுட்டேன்..
///நான் 'முறை தவறியதை' யாரும் பார்க்காமல் இருந்திருந்தாலாவது நல்லாயிருந்திருக்கும். ஆனால், பல பேர் அதைப் பார்த்துவிட்டார்கள///
இப்போ மட்டும் என்ன 'வாலு'தாம் ??
நீங்க பரவாயில்லைன்னுதான் சொல்லுவேன்.இந்த ஊர்க்காரனுங்க முறை தவறி நடக்குறதைப் பார்க்கணும் நீங்க.அப்ப இந்த பதிவுக்குப் பதிலா படமே புடிச்சு பதிவு போட்டுடீவீங்க.அந்த ஊர் சினிமாவிலேயெல்லாம் நிறைய முறை தவறுவதைக் காட்டுறாங்களே!மெய்யாலுமே அந்த மாதிரி ஆட்களும் இருக்குறாங்களே இல்லை வெறுமனே நம்ம ஊரு விட்டாலாச்சார்யா வேலையா?
வாங்க உருப்புடாதது -> முதல் வருகைக்கும், போணிக்கும் நன்றி.... வேறே என்ன நினைச்சீங்க... எனக்குப் புரியல....
வாங்க வால் -> வேணாம். விட்ருங்க... அவ்வ்வ்வ்... (உங்க வாலில்லாத படம் பாத்துட்டேன்!!!!).
வாங்க ராஜ நடராஜன் -> ஹிஹி... சினிமாவிலெல்லாம் அந்த மாதிரி முறை தவறி நடந்துகிட்டே, நான் 50 பைசா நாணயத்தை கீழே போட்டுட்டு, நானே தேட ஆரம்பிச்சிடுவேன்.....:-)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
இது வருகைப் பதிவு.சிறிது நேரம் கழித்து வருகிறேன்.
இன்னாபா..எனக்கு அப்புறம் யாருமே வரலயா?
முறைதவறி நடந்துக்கிட்டேன் என்றவுடன் நான் கூட சரக்கு ஊத்திட்டு தன்ணி ஊத்துறதுக்கு பதிலா தண்ணிய ஊத்திட்டு அதுக்கு மேல சரக்க ஊத்திட்டீங்களோன்னு நினைச்சேன்.
வாங்க சரவண குமார் -> இதுக்கெல்லாம் அழுவாங்களா?.... (அங்கே சிரிச்சே சிரிச்சே 150 போட்டுட்டீங்களே!!!)..
வாங்க அப்துல்லா -> நல்லவேளை, போத்திண்டு படுக்கறதுக்கு பதிலா, படுத்துண்டு போத்திண்டேன்னு நினைக்கலியா????
உண்மையிலேயே ரொம்ப சீரியஸ் ஆனா விஷயம் தான்.High way இல்லையே அந்த ரோடு?
வர்ற சனிக்கிழமை எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் புறப்படறேன். :-))))
வாங்க சரவண குமார் -> இதுக்கெல்லாம் அழுவாங்களா?.... (அங்கே சிரிச்சே சிரிச்சே 150 போட்டுட்டீங்களே!!!)..
வாங்க அப்துல்லா -> நல்லவேளை, போத்திண்டு படுக்கறதுக்கு பதிலா, படுத்துண்டு போத்திண்டேன்னு நினைக்கலியா????
//
சரக்கப் போட்டு படுத்ததுக்கப்புறம் அதெல்லாம் எப்படி தெரியும்?
முறை தவறி நடந்த து.தலைவரை மன்றத்தின் சார்பாக கண்டிக்கிறேன்.
//பின் - 2: நம்ம மன்றத்தலைவி ராப் அவர்களின் லீவ் லெட்டர் கிடைத்தது. கொஞ்சம் பிஸியாக இருப்பதாகவும், சில நாட்கள் பதிவுகள் எதுவும் பார்க்கமுடியாதென்றும்/பின்னூட்டங்கள் போட முடியாதென்றும் கூறியிருக்கிறார்.//
தற்காலிக தலைவர் ச்சின்னப்பையன் வாழ்க.
தற்காலிக துணைத்தலைவர் அப்துல்லா வாழ்க
தற்காலிக முன்னாள் பொருளாளர் அப்துல்லா,
மன்ற கஜானாவை உடனடியாக கொ.ப.செ'விடம் ஒப்படைக்கவும்.
இது பொதுக்குழு முடிவு.
//படபடப்பாகவும் இருந்தது. நிறைய தண்ணீர் குடித்துவிட்டு, ஒரு ஐந்து நிமிடம் சாலையோரமாகவே உட்கார்ந்துவிட்டேன்.
//
வண்டிய விட்டு இறங்கி உக்காந்தீங்களா ..
நம்ப முடியலயே..
வாங்க பிரேம்ஜி -> அவ்வ்வ்வ். அதான் ஒரு வருஷமாயிடுச்சுன்னு சொன்னேனே..... அட. அது நெடுஞ்சாலைல்லாம் இல்லீங்க.. ஒரு சின்ன சந்துதான்...
வாங்க அப்துல்லா -> அது எப்படி எனக்குத் தெரியும்?????
வாங்க வழிப்போக்கன் -> மன்றத்தின் சார்பாக என்ன தண்டனை கொடுத்தாலும் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்....
அட்றா சக்கை... அட்றா சக்கை... நான் தலைவர்.. நான் தலைவர்.. ( நான் வாத்து மாதிரி படிக்காதீங்க...)
அட.. நம்புங்க.. .இறங்க வேண்டிய இடம் பக்கத்துலே இருந்தது... அதான் இறங்கிட்டேன்...
முறை தவறியதை வன்மையாகக்கண்டிக்கிறேன். வழி மாறின்னு சரியாப்போடச்சொல்லி வெண்டிக்கொள்கிறேன்.
தற்காலிக தலைவர் ச்சின்னப்பையன் வாழ்க.
தற்காலிக துணைத்தலைவர் அப்துல்லா வாழ்க
தற்காலிக முன்னாள் பொருளாளர் அப்துல்லா,
மன்ற கஜானாவை உடனடியாக கொ.ப.செ'விடம் ஒப்படைக்கவும்.
இது பொதுக்குழு முடிவு.
//
ayyoo ithukku accept panna maatten.
maatten.maatten.
வாங்க சின்ன அம்மிணி -> நல்லவேளை. வழிமாறி-ன்னீங்க... *மாறின்னு சொல்லாமெ இருந்தீங்களே....
வாங்க அப்துல்லா -> ஏங்க, மன்றத்திலே ஏதாவது ஸ்ட்ரைக் பண்றீங்களா?????
உசிரே போனாலும் கஜானா மட்டும் என்கிட்டதான்..ஆங்ங்ங்
Post a Comment