Friday, August 15, 2008

தங்கமணிக்கு ரங்கமணியின் பயந்த கடிதம்!!!

அன்புள்ள தங்கமணி!


நலம். நாடலும் அஃதே!


கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டு நீ செய்த வாழைக்காய் பஜ்ஜியையும், கெட்டி சட்னியையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.


தங்களின் சமையல் புளி(ப்பு) குழம்பாக இருந்தபோதிலிருந்து சாப்பிட்டுத் தொலைக்கவில்லை! மெள்ள நகர்ந்து, வேகமெடுத்து விருந்து மழையாகப் பொழியும் இன்னேரம், உங்களது சமையலை வேறு வழியில்லாமல் சாப்பிட்டு வருகிறேன்.


அவ்வப்போது எனது கருத்துக்களை நேரடியாகவும், குத்திக்காட்டியும், கொட்டிக் காட்டியும் தெரிவித்து வருகிறேன். இருப்பினும் தற்போது ஒரு கடிதம் - அதுவும் பயந்த கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏன் வந்தது? சொல்கிறேன். மேலே படியுங்கள்.


மேலே என்றால் என் தலை மேல் அல்ல, பதிவின் கீழே!!!


நேற்றுப் பார்த்த தொலைக்காட்சி சமைத்துப்பார் நிகழ்ச்சி. அதில் ஓரன்பர் குறிப்பிட்டார். 50%க்கும் மேல், காரக்குழம்பில் காரம் இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்படுமென்று!


ஆம். தங்கமணி! அது மட்டுமல்ல! இந்த சமைப்பது என்பது ஒண்ணாம் நெம்பர் கெடுதலான பழக்கம். எந்தப் பழக்கமும் கெட்ட பழக்கம் அல்ல என்பது எனது சித்தாந்தம். ஆனால் எப்பழக்கத்திற்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருப்பேன்.


ஆனால் நீங்கள் சமையல் என்னும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.


உங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. குடும்பத்தில் அக்கறை மிகக் காட்ட வேண்டிய வயது. தொழிலில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது.


உங்களுடைய உண்மையான ஓய்வு வேளையில், எப்போதாவது குழம்பு, ரசம் மற்ற எல்லா ஐட்டங்களையும் செய்யுங்கள். நல்ல வெளி நாட்டு ஐட்டங்களையும் நாடுங்கள். உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு நல்ல சமையல்காரியாகவும்கூட வரமுடியும். (மல்லிகா பத்ரிநாத் அல்லது ரேவதி ஷண்முகம் அமெரிக்கா வரும்போது உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். அறிமுகப் படுத்தியும் வைக்கிறேன்.)


சமையலுலகம் ஒரு மிரேஜ். சில சாப்பாட்டு ராமன்கள் இருப்பார்கள். ஒருத்தன் வெந்நீர் வைத்தாலும் அவனை ஓஹோ என்று புகழுவார்கள். அவன் சொதப்பினால், தங்கள் பசிக்கு அடுத்த உணவகத்தைத் தேடிப் போய் விடுவார்கள். அதைப் போல எல்லா வீட்டிலும் கொம்புசீவிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் முதன் முதலில் உப்புமா சாப்பிட்ட போதே வடகரை வேலன் இதுபற்றி என்னை எச்சரித்தார்.


சில கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.


1) காலையில் எழுந்தது முதல் இன்று என்ன சமைப்பது? தொட்டுக் கொள்ள என்ன செய்வது என்ற சிந்தனையுடனே இருக்கிறீர்களா?


2) எத்தனை பேர் நமது ரெசிப்பீயைக் கேட்டு வாங்குகிறார்கள் என அறியும் ஆர்வத்தோடேயே இருக்கிறீர்களா?


3) தூங்கும் நேரம் நீங்கலாக மற்ற அனைத்து நேரமும் சமையலறையிலேயே இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?


4) குடும்பத்தோடு ஆற அமர்ந்து பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா?


5) புதுசு புதுசா ஐட்டங்களைக் கற்றுக்கொள்ளப் போகிறோம் எனக் காலை முதல் இரவு வரை துடிப்பாயிருக்கிறதா?


இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனச் சான்றின் படி பதில் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது.


இரவில் நெடு நேரம் உங்களை சமையலறையில் காண முடிகிறது.


(“அப்ப நீ மட்டும் அர்த்த ராத்திரியில் சமையலறையில் என்ன செய்கிறாய்?” என்கிறீர்களா? உரிய பதில் இல்லை. இருந்தாலும் சொல்ல முடியாது.)


இரவு என்பது இறைவன் கொடுத்த வரம். இளைஞியான உங்கள் குடும்பத்துக்குத்தான் அந்த நேரம் சொந்த நேரமே தவிர unproductive, un remunerative, time consuming, tiresome, lengthy and tedious மேட்டரல்ல.


பகல் பூராவும் சின்னப்பாப்பாவின் பின்னே ஓடிவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு இரவிலும் இந்த சமையலறையில் நடமாடுவது நியாயமா?


எனக்குத் தெரிந்து சமையலறையில் மோர் கலந்துகொண்டிருந்த எவனோ ஒருத்தன் சமையலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு, இப்போது நியூயார்க் பீச்சில் நீர்மோர் விற்றுக்கொண்டிருக்கிறான்.


ஒரு பெண் தேவதையைக் குழந்தையாயும் பெற்றிருக்கிறீர்கள். அவளுக்கு உன்னதமான கல்வி அளிக்க வேண்டுமல்லவா? தலை சிறந்த முதல் நிலை அதிகாரியாக அவள் ஆனால் எவ்வளவு நன்றாயிருக்கும்?


வெளிநாட்டில் படித்துப் பணிபுரிந்தால் எப்படியிருக்கும்? அதற்காக உழையுங்கள்.


அவ்வப்போது சமையல் செய்யுங்கள். அதிகமா சமைப்பவர்களைச் சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.


வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. சமைக்க கேஸும், சாப்பிட என்னை மாதிரி ஒரு இ.வாவும் கிடைத்தால் சர்வ சதா காலமும் எதையாவது சமைத்துக்கொண்டே இருப்பார்கள்.


சமைப்பதைத் தவிர வேறு வேலை இல்லாதவர்கள். எதையாவது சமைக்கா விட்டால்… (சரி வேண்டாம்.)


இன்னும் சிலர் உணவகத்திலேயே பணிபுரிபவர்கள்... இவர்களுக்கு கரண்டியும், ஸ்பூனும் ஒரு வரமாக இருந்து கொஞ்ச காலத்துக்குப் பின் சாபமாக மாறியிருக்கும். அவர்கள் தங்களின் சுயத்தை முழுதும் இழந்துவிடாதிருக்க என்னேரமும் எதையாவது சமைத்துக் கொண்டே இருப்பார்கள்.

இன்னும் சிலர் பலவித மன நெகிழ்வுகளுக்கு ஆளானவர்கள். தங்களை மற்றவர்கள் கேவலமாக திட்ட வேண்டும் என விரும்புவார்கள். ஏன் காரக்குழம்புக்கு மிளகாய்ப்பொடி தொட்டுக்கொள்ள வேண்டும் எனவும் விரும்புவார்கள்.

இன்னும் சிலர் மேல்தட்டு சமையல்காரர்கள்.

இன்னும் சிலர் என்னை மாதிரி. பரபரப்பில்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கும்போது ஒரு Maggi.
When time warrants we wear an entirely different mask. இது ஒரு விளையாட்டு மாதிரி. வேடிக்கை பார்க்கிற feeling! சமைப்பதைவிட சமையல்காரனை அவதானிப்பவர்கள்.

Kindly be a balanced man. Don’t get excited!

எல்லாருக்குமே தான் தொப்பையும் தொந்தியுமாக இருக்க வேண்டுமென்ற உந்துதல் இருக்கும். குழந்தைகள் தேவையில்லாமல் அழுவதும் குமரிகள் அங்கங்கள் பிதுங்க ஆடை அணிவதும் தொப்புள் தெரியச் சேலை கட்டுவதும் எதற்காக என்று நினக்கிறீர்கள்? Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்படுதான் இவை.

தாமஸ் ஹார்டி சொன்னது போல “far from the madding crowd” ஆக இருக்க வேண்டாமா நீங்கள்?
ஒரு முறை சர்வர் சுந்தரத்திடம் கேட்டேன்.

“ஐயா! இட்லியும், தோசையும் இவ்வளவு சூடா கொடுக்கிறீர்கள். காபி ஆற்றியும் கொடுக்கிறீர்கள்.. நீங்கள் ஏன் ஒரு உணவகம் ஆரம்பித்து அதில் சமைத்துக் கொண்டேயிருக்கக்கூடாது?”

“அதிகம் டிப்ஸ் கிடைக்காத உணவக சர்வர் தனது இல்லக் கிழத்தியை வைத்து உப்புமா கிண்டும் பணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை” என்றார்.

கடும் சினம் வந்தது எனக்கு. முதல் முறையாகக் கடுமையான வார்த்தைகளால் அவரைக் கடிந்துவிட்டுக் காப்பி குவளையைப் பாதியிலேயே வைத்துவிட்டு எழுந்து வந்துவிட்டேன்.
அன்றிலிருந்து 4 நாட்களாய் அவருடன் பேசுவதைத் தவிர்த்தும் விட்டேன்.

தங்கமணி! மீண்டும் சொல்கிறேன். மயக்கத்திலிருந்து உடனடியாக மீளுங்கள். நல்லா தொப்பை வருவதைத் தவிர வேறெந்த முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் சமையல் உலகம்!

பின் - 1: இந்த ஐடியா கொடுத்த எல்லோருக்கும், குறிப்பாக வடகரை வேலனுக்கும் நன்றி... நன்றி... நன்றி...


39 comments:

Anonymous,  August 15, 2008 at 4:54 AM  

சாச்சுப்புட்டீகளே.

Anonymous,  August 15, 2008 at 5:06 AM  

அப்ப இன்னும் இதெல்லாம் எழுதப் போறீங்களா?

வைரமுத்துவுக்குக் கலைஞர்.
ஓட்டுனருக்கு நடத்துனர் .
கம்பெளண்டருக்கு டாக்டர்.
உதவி ஆசிரியருக்குத் தலைமை ஆசிரியர்.
வாகன ஓட்டுனருக்கு உரிமையாளர்
மாணவருக்கு ஆசிரியர்.
சர்வருக்கு சரக்கு மாஸ்டர்.
சித்தாளுக்குக் கொத்தனார்.
சால்னா விறபவருக்கு சரக்கு விறபவர்.
பின்னுட்டமிடுபவருக்கு பதிவர்
குடியிருப்பவருக்கு வீட்டு உரிமையாளர்

இராம்/Raam August 15, 2008 at 5:49 AM  

இந்த பதிவு ஒவ்வொரு வரியிலும் உங்களுடைய ஆணாத்திக்க மனப்போக்கு தெறிக்கிறது.

பெண் என்பவள் சமையலறையில் உழைக்க வைக்கவேண்டியவள் என உங்களின் ஆணாதிக்க நுண்ணரசியல் நன்றாகவே பட்டவர்த்தனமாக இங்கே பல்லுளிக்கிறது.

இராம்/Raam August 15, 2008 at 5:52 AM  

இப்பிடிக்கு கொத்ஸ் வாரிசு...


போன பின்னூட்டத்திலே இந்த ஸிக்னேசர் மிஸ் ஆகிடுச்சு.... :)

ஸிக்னேசர்'க்கு சோடா நல்லாயீல்லை, ஸ்ப்ரேட் or 7Up தான் நல்லாயிருக்கு.... :)

ஜோசப் பால்ராஜ் August 15, 2008 at 5:55 AM  

நீங்க எழுதுற கடிதத்தை எல்லா தங்கமணியும் படிச்சுபோட்டு, ரங்கமணிங்கள சமைக்க சொன்னா என்ன செய்யிறது? ஏனுங்க இப்டியெல்லாம் எழுதி ரங்கமணிகளோட சாபத்துக்கு ஆளாகுறீங்க?

சின்னப் பையன் August 15, 2008 at 6:20 AM  

வாங்க வேலன் -> ஹிஹி. ஏதோ நம்மால ஆனது...

இந்த மாதிரியெல்லாம் எழுதணும்னு காலத்தோட கட்டாயம்னா, கட்டாயமா எழுதுவேன்... அப்படி எழுதறத தடுக்கறவங்கள உதைக்க வேணாமா?

வாங்க இராம் -> ஐயய்யோ... நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க..... இந்த கடிதமே இனி நீ சமைக்க வேண்டாம்.. ரொம்ப கொடுமையா இருக்குன்னு எழுதியதாச்சே... அப்படி தெரியலேன்னா சொல்லுங்க... கன்னடத்துலே ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிடறேன்.... அவ்வ்வ்வ்...

வாங்க ஜோசப் பால்ராஜ் -> அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தா, கவலைப்படாதீங்க, ரங்கமணிக்கு தங்கமணி தங்கமான கடிதம் அப்படின்னு ஒரு கடிதம் எழுதிடறேன்... ஹிஹி....

Veera August 15, 2008 at 6:33 AM  

ஒரு பகிரங்கக் கடிதத்துக்கு இவ்ளோ பதில் கடிதங்களா!?

:)

இராம்/Raam August 15, 2008 at 6:35 AM  

//இந்த கடிதமே இனி நீ சமைக்க வேண்டாம்.. ரொம்ப கொடுமையா இருக்குன்னு எழுதியதாச்சே... //


என்ன தைரியமிங்க ஒங்களுக்கு..... எப்பவும் விழுற அடியிலே சேர்த்து ரெண்டுதானே சேர்த்து விழும்... :)


நேயர்விருப்பம்:-

"ரங்கமணிக்கு தங்கமணியின் அதிகார கடிதம்!!" பதிவு கிடைக்குமா?? :)

Thamiz Priyan August 15, 2008 at 7:10 AM  

கடிதத்தின் தலைப்பில் தவறி நிகழ்ந்துள்ளது... ரங்கமணிக்கு கவலையுடன் தங்கமணியின் கடிதம் என்று இருக்க வேண்டும்

வால்பையன் August 15, 2008 at 7:12 AM  

"உங்கள் தங்கமணி உங்களிடம் கொடுக்க சொல்லி அனுப்பிய கடிதம்"

இதைப் படிச்சுட்டு உங்களை இனி காப்பாத்துவா-ன்னு நீங்க வருத்தப்பட்டுக்க வேண்டாம்!

என்மீது அக்கறை கொண்டுள்ள உங்கள் அறிவுரைக்கேற்ப சமையலறையில் இவ்வளவு சமையல் தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்!

நான் கடவுள்(தலைஎழுத்து) ஸ்தானத்தில் மதிக்கும், நீங்கள் தங்கமணிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் என்று ஒரு பதிவு போட்டு என் அகக்கண்ணைத் திறந்து விட்டீர்கள் !

என் மீது அக்கறை கொண்டு என் சமையலை சாப்பிட்டு , ஏப்பம் விட்ட எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் என் மரியாதையான நன்றி! என்ன செய்தாலும் உங்களுக்கு கைமாறு செய்துவிட என்னால் முடியாது.


அவ்வப்போது மட்டும்தான் இனி சமைப்பேன். (இங்கே கூட அவ்வப்போது என்றால் 24 மணிநேரத்துக்கு ஒன்றா? என்று அரைமணிநேரம் முன்புவரை எனக்குள்ளிருந்த சமையல்காரி கேட்கிறாள்!)

இதற்கு இடப்படும் ஏப்பங்களை நான் பார்ப்பேனா என்று தெரியவில்லை!

என் டிபன் பாக்ஸை மட்டுமே இனி பார்ப்பேன் என நினைக்கிறேன்.

சின்னப் பையன் August 15, 2008 at 7:28 AM  

வாங்க வீரசுந்தர் -> அட.. வாரமலர்லே வர்ற அந்தரங்க கடிதத்துக்கே பதில் போடறவங்க இதுக்கு பதில் போடமாட்டாங்களா.... அவ்வ்வ்...

வாங்க இராம் -> ஹிஹி.. எனக்கு அந்த மாதிரி யோசிக்கவே முடியலே... அவ்வ்வ்....

வாங்க தமிழ் பிரியன் -> ஹிஹி.. வழக்கம்போல நீங்க பதிவையே படிக்கலியா... இது ரங்கமணி எழுதிய கடிதம்தாங்க........:-))

வாங்க வால் -> ஹாஹா... வாய் விட்டு சிரித்தேன்......:-)))))

Kanchana Radhakrishnan August 15, 2008 at 7:36 AM  

பதிவை படித்துவிட்டு..ரங்கமணியின் தங்கமணி வேலைநிறுத்தம் செய்வதாக தகவல்.
மேலும்..அவர் கூறுகையில்..என்னைப்பற்றி முழுவதும் அறிந்தவர் அவர்..அதனால் அவர் சொல்வதில்
உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது.அதனால் இனி சமைப்பது இல்லை என தீர்மானித்து விட்டேன்.
(கடைசி செய்தி; இனி தினமும் 45 நிமிடம் சமையல் செய்ய நேரம் ஒதுக்கப்போகிறேன்..அதற்கு
ரங்கமணி ஒப்புதல் அளித்திருக்கிறார்)

புதுகை.அப்துல்லா August 15, 2008 at 8:07 AM  

அண்ணே! இந்த கடிதம் தொல்ல தாங்க முடியாம நான் புதுகை.அப்துல்லாவுக்கு ஓரு பகிரங்கக் கடிதம்னு எழுதுனேன்(அடுத்தவங்க நம்மள கேவலப்படுத்துறதுக்கு முன்னாடி நம்மளே நம்மள கேவலப் படுத்திக்குவோமேனுதான்). அதுல கடைசியா டிஸ்கில கண்ட ஆளுங்களுக்கு கடிதம் எழுதாம முடிஞ்சாப் போயி தங்கமணிக்கு எழுதுங்க..ஏதாவது பிரயோஜனப்படும்னு முடிச்சேன். அதை பப்ளிஷ் பண்றதுக்குள்ள உங்க பதிவு வந்துருச்சு. :))

சின்னப் பையன் August 15, 2008 at 8:26 AM  

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் ஐயா -> இதிலேந்து என்ன தெரியுதுன்னா, 'அந்த' 2 ஒரிஜினல் கடிதங்களை எல்லாரும் மனப்பாடம் செய்திருக்காங்க.... சொல்றது சரிதானே?

வாங்க அப்துல்லா -> ஹிஹி... நீங்க மனசில் நினைச்சதெல்லாம் நான் பதிவு போட வேண்டும்.. ம்ம்... ம்ம்ம்....

வால்பையன் August 15, 2008 at 8:29 AM  

//நீங்க மனசில் நினைச்சதெல்லாம் நான் பதிவு போட வேண்டும்.. ம்ம்... ம்ம்ம்.... //

நேத்து நான் சொன்னது ஞாபகம் இருக்கா

வால்பையன் August 15, 2008 at 8:43 AM  

கும்மிக்கு நான் ரெடி
நீங்க ரெடியா

Selva Kumar August 15, 2008 at 4:58 PM  

தலை பின்னிட்டீங்க..

இந்த பதிவு எழுதறக்கு 2 நாள் ஆச்சா ?

2 நாளா மொக்கை போட்டீங்களே..அதுக்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்.

சரி..சரி. இதுதான் உங்க பதிவுல "பெரிய" பதிவுனு நினைக்கிறேன்.

Selva Kumar August 15, 2008 at 5:03 PM  

==வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. சமைக்க கேஸும், சாப்பிட என்னை மாதிரி ஒரு இ.வாவும் கிடைத்தால் சர்வ சதா காலமும் எதையாவது சமைத்துக்கொண்டே இருப்பார்கள்.
==


இத உங்களுக்கு சமைச்சு போடறவங்க படிச்சாங்களா ??

பின்விளைவு:

நாளைல இருந்து நீங்க பதிவு எழுதற நிறுத்தீட்டு சமையல் பண்ண போறதா BBCல சொன்னாங்களே ? நிஜமா ?

பதிவெழுத வேண்டியதுதான் அதுக்காக இப்படியா "சோத்துக்கே" ஆப்பு வைக்கிற மாதிரி ரிஸ்க் எடுக்கிறது ??

ஐய்யோ பாவம்..:((((

Anonymous,  August 16, 2008 at 12:54 AM  

போதுங்க ம்முடியலே.....

மங்களூர் சிவா August 16, 2008 at 1:43 AM  

பதிவெழுத வேண்டியதுதான் அதுக்காக இப்படியா "சோத்துக்கே" ஆப்பு வைக்கிற மாதிரி ரிஸ்க் எடுக்கிறது ??

ஐய்யோ பாவம்..:((((

மங்களூர் சிவா August 16, 2008 at 1:44 AM  

நீங்க வீரந்தான் ஒத்துக்கறேன் அடிவாங்குறதுல வீரந்தான்!!

Anonymous,  August 16, 2008 at 2:51 AM  

Hi Mr.Chinna,

I couldnt understand anything in that, but I wont miss to read your blog regularly. In Web, your blog is giving much of interesting laughter. Dont mistake me for, just to know your original name.

Entrum Anbudan
Raja - Bangalore.

வெண்பூ August 16, 2008 at 3:00 AM  

கலக்குங்க ச்சின்னப்பையன்..

கும்மி பதிவர்களுக்கு,,,, ச்சின்னப்பையனுக்கு இன்று பூசை அளவுக்கு அதிகமாக நடந்துள்ளதால் அவர் இன்னும் ஒரு வாரத்துக்கு கும்மிக்கு வர முடியாது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கயல்விழி August 16, 2008 at 4:47 AM  

உங்க தங்க மணி இந்த பதிவை படிச்சாங்களா? அந்த எதிர் வினையையும் பதித்தால் படித்து மனம்மகிழுவோம் :)

நாமக்கல் சிபி August 16, 2008 at 5:01 AM  

//உங்க தங்க மணி இந்த பதிவை படிச்சாங்களா? அந்த எதிர் வினையையும் பதித்தால் படித்து மனம்மகிழுவோம் :)//

ஆவலுடன் காத்திருக்கிறோம்!

சின்னப் பையன் August 16, 2008 at 9:55 AM  

வாங்க வால் -> இன்னிக்கு கும்மி இங்கே இல்லே. :-))

வாங்க வழிப்போக்கன் -> அட.. இது வெறும் Find & replace தாங்க. ரெண்டு நாளெல்லாம் இல்லே.

வாங்க பிரேம்ஜி -> நன்றி...

வாங்க அனானி -> மொதல்லே அவங்கள நிறுத்தச் சொல்லுங்க. நானும் நிறுத்தறேன்.

வாங்க சிவா -> இதுக்கெல்லாம் பயப்பட்டா ஆகுமா???

சின்னப் பையன் August 16, 2008 at 9:55 AM  

Hello Raja,

I hope you are watching thamizmanam.com - where this letter is a trend this week. I have just copy/pasted that letter format - and find & replace words to look like this letter. My original name is Sathya TV.

ஏங்க வெண்பூ -> ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு.. மக்களே... எந்த வசந்தியையும் ச்சீ வதந்தியையும் நம்பாதீங்க. இன்னிக்கு சாயங்காலம் நான் எங்க வீட்டு பால்கனியில் தோன்றி அனைவருக்கும் தரிசனம் தருகிறேன்... எல்லோரும் வந்துடுங்க...

வாங்க சிபி, கயல்விழி -> வெண்பூக்கு சொன்னதேதான் உங்களுக்கும்... ஏன் இந்த கொலவெறி.....

Anonymous,  August 16, 2008 at 5:32 PM  

எங்க ரங்கமணியும் இப்படி ஒரு கடிதம் எனக்கு எழுதமாட்டாரான்னு ஏங்கிகிட்டு இருக்கப்ப இப்படி வயத்தெரிச்சல கிளப்பறீங்களே

Yogi August 18, 2008 at 6:48 AM  

:))))

சூப்பர் கடிதம் :)

VIKNESHWARAN ADAKKALAM August 18, 2008 at 10:53 AM  

அண்ணா ,

நிச்சயமாக இக்கடிதம் தங்கமணிக்கு மட்டுமல்ல என்னைப் போல சமையலுக்கு அலைகின்ற பலருக்குமான ஒரு கடிதமாகவே பார்க்கிறேன் .

நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்குமே பதில் இல்லைதான் ,

பொட்டில் அடித்தது போல் அனுபவமிக்க உங்களைத்தவிர வேறு யாரும் இவ்விசயத்தை அணுகியிருக்க முடியாது ( உங்கள் அனுபவம் அப்படி )

நிச்சயமாக இப்பதிவு என்னுள் பல மாற்றங்களை நிகழ்த்தும் .

VIKNESHWARAN ADAKKALAM August 18, 2008 at 10:54 AM  

எளிமையான தெளிவான அறிவுரை.! அவ்வளவு மோசமில்லை அவ்வப்போது சாப்பாடு என்றாலும் ( நான் தங்கமணியை சொல்லவில்லை, கட்டுரையில் கூறப்பட்டதை கூறுகிறேன்) சரியான நேரத்தில் கிடைத்த உலக அறிவுரையாகவும் கொள்கிறேன். நன்றி.!

VIKNESHWARAN ADAKKALAM August 18, 2008 at 10:56 AM  

ச்சின்ன பையன் அவர்களுக்கு....

உங்களின் கடிதம் சமையல் போதையில் இருக்கும் பலரின் கண்களை திறக்கும் நான் உள்பட...

நன்றி

VIKNESHWARAN ADAKKALAM August 18, 2008 at 10:57 AM  

மொத்த பதிவும் சூப்பர்.நந்து மட்டுமில்லாமல், எல்லோரும் இந்த பதிவை நகலெடுத்து தங்கள் சமையல்லறையில் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்...

VIKNESHWARAN ADAKKALAM August 18, 2008 at 10:58 AM  

தங்களது கேள்வி வரிசையில் ஒரு சிலவற்றுக்கு ஆம் என்று தான் சொல்ல வேண்டியிருந்தது. முடிந்த வரை திருத்திக் கொள்கிறேன். ஏண்டா அந்த சனியன் (கரண்டியும்) கையுமா உக்காந்திருக்கேன்னு தங்கமணிய பாத்து என் ரங்கமணி கேக்கறதுக்கு முன்னாடி சரியான நேரத்தில சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM August 18, 2008 at 10:59 AM  

நல்லா இருந்திச்சி.. இது எல்லோருக்கும் பொருந்தும். தக்க சமயத்தில் வந்த சிறந்த கடிதம்..

VIKNESHWARAN ADAKKALAM August 18, 2008 at 11:00 AM  

சொல்ல வந்தத ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க.... இது தங்கமணிக்கு மட்டும் அல்ல பலருக்கும் தான்.

சமீப காலத்தில் பலரும் பலருக்கு கடிதம் எழுதுகீறார்கள், அதில் உருப்படியான கடிதம் இதுதான்...

வலைப்பூவில் சிறந்த இடுக்கைகள் என பின்னாளில் யாரேனும் சேகரித்தால் நிச்சயம் இந்த இடுக்கையும் அதில் இடம்பெறும். இடம்பெறவேண்டும்.

சின்னப் பையன் August 18, 2008 at 11:17 AM  

வாங்க சின்ன அம்மிணி, பொன்வண்டு -> நன்றி...

வாங்க விக்னேஸ்வரன் -> இனிமே இந்த கமெண்ட்களைப் போடறதுக்கு நீங்க கஷ்டப்பட்டு வரவேண்டாம். நானே என்னோட ஒவ்வொரு பதிவிலும் காபி/பேஸ்ட் செய்துவிடுகிறேன்... நீங்க எதுக்கு உங்க டயத்தை வீணாக்கிக்கிட்டு.... அவ்வ்வ்வ்.....

Unknown February 15, 2010 at 12:17 AM  

எங்க ஹவுஸ் PROBLEM என்னன்னா தங்கமணி வேலைக்கு போகுது . நான் என் அம்மாவுக்கு ஹெல்ப் ஆ இருக்குறேன் . எங்க அம்மா என்ன பண்றங்கான யோசிகேரிங்க்ள அவங்க சும்மாதான் இருங்காங்க.

PISSASU

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP