சென்னையில் GPS பயன்படுத்தினால்!!!
1. காலை 7 மணிக்கு அறிவுகெட்டவர்கள்தான் சிகப்பு விளக்கில் நிற்பார்கள். அதனால் நிற்காமல் நேராக 1 கிமீ. செல்லவும்.
2. காலை வணக்கம். புறப்படும் முன் பத்து ரூபாய் தாள்கள் சுமார் இருபதை எடுத்துக் கொள்ளவும். அங்கங்கே நிற்கும் 'உறவினர்களுக்குக்' கொடுக்க உதவும்.
3. வலப்பக்கம் திரும்பவேண்டுமென்று நான் சொன்னால், உடனே திரும்பவேண்டும். நீங்க எந்த 'Lane'ல் இருந்தாலும் எனக்கு கவலையில்லை.
4. தங்களின் பயனுக்காக, சென்னைச் சாலைகளில் நெடுங்காலமாக இருக்கும் மேடு, பள்ளங்களையும் எங்கள் 'ஊர்சுற்றி' GPS-இல் சேர்த்துள்ளோம்.
5. உங்கள் வலப்பக்கத்தில் 'மாநகரப் பேருந்து'க்கு இடம் கொடுக்காதீர்கள். பேருந்து நிறுத்தம் வரும் வரையில் சாலையின் வலப்பக்கம் செல்லும் அவர்கள், சட்டென்று உங்களை அணைத்து இடதுபக்கம் கொண்டு போய், பேருந்து நிறுத்தத்தில் உங்களையும் ஏற்றி விடுவார்கள்.
6. பாதசாரிகள் சாலையை கடக்குமிடம் வருகிறது. அவர்கள் வருகிறார்களென்றால், சற்று வேகமாக செல்லவும். அவர்கள் தங்கள் 'வீட்டில் சொல்லிவிட்டு வந்தார்களா' என்று கேட்கவும்.
7. நாந்தான் அப்பவே வலது பக்கம் திரும்பவேண்டுமென்று சொன்னேனே. என்னால் 'மாற்றுப்பாதை'யெல்லாம் கணிக்க முடியாது. உடனே ஒரு U-turn அடிக்கவும். ஒரு வழிச்சாலையாக இருந்தாலும் பரவாயில்லை.
8. உங்களுக்கு ஏதேனும் அவசர வேலையிருந்தால், சிகப்பு விளக்குக்கு அந்தப் பக்கம், யாராவது 'மாமா' இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, இல்லையென்றால் போய்க்கொண்டே இருக்கவும்.
9. போக வேண்டிய இடம் இன்னும் இரண்டு கி.மீ. தூரம் இருக்கும்போது - ஏன் வண்டியை நிறுத்தி கதவை திறந்தீர்கள், திரு.வெண்ணெய்?
10.கடந்த 5 நிமிடமாக நீங்கள் 'ஒலிப்பான்' பயன்படுத்தவில்லை. தேவையேயில்லை என்றாலும், உடனடியாக 'ஒலிப்பானை' நீளமாக அழுத்தவும்.
32 comments:
:))
Soooper!!!
haa haa
நிறைய தொகுத்திருக்கீங்க ஆனாலும் ஏகப்பட்டது விடுபட்ட மாதிரி இருக்கு!!!!
நல்லா இருக்கு ச்சின்னப்பையன்.
நாம ஒரு அடிஷன் பண்ணாம போனதா சரித்திரமோ பூகோளமோ இல்லைன்றதால:
10. மழை பெய்து தெருவெல்லாம் சகதி நிறைந்திருப்பதால் தெருவின் ஓரத்தில் மட்டுமே ஓட்டவும். நடுவில் எந்த இடத்தில் குழியின் சரிவு ஆரம்பிக்கிறது என்று யாருக்கும் தெரியாது. மேலும் இவ்வாறு ஓட்டுவதால், தெருவின் ஓரத்தில் செல்லும் வெள்ளுடை அணிந்த பாதசாரிகள், ஈருளியாளர்களுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனையும் வாங்கிக்கொள்வது நல்ல பொழுதுபோக்காக அமையும்.
:)))
//பாதசாரிகள் சாலையை கடக்குமிடம் வருகிறது. அவர்கள் வருகிறார்களென்றால், சற்று வேகமாக செல்லவும். அவர்கள் தங்கள் 'வீட்டில் சொல்லிவிட்டு வந்தார்களா' என்று கேட்கவும்//
:-)))))))))))
அசத்தலான நையாண்டி
ஹி...ஹி...ஹி..இந்த GPS எங்க கிடைக்கும்?
வாங்க இளா, பெத்த ராயுடு -> நன்றி..
வாங்க சிவா -> எனக்குத் தோண்றதுலே டாப்- 10 (எனக்கு பிடித்தது) மட்டும்தான் என் பதிவுகளில் கொடுத்து வருகிறேன். அதுக்கென்ன, நீங்க உங்களுக்குத் தோண்றதை இங்கேயோ, நீங்களே ஒரு பதிவாவோ போடுங்களேன்.
வாங்க சுரேஷ் -> இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். நன்றி..
வாங்க கப்பி, பிரேம்ஜி -> நன்றி..
வாங்க வெண்பூ -> தெரியலியேப்பா ( நாயகன் கமல் பாணியில் படிக்கவும்)...
இந்த GPS australiaவில கிடைக்குமா??
ஹைய்யோ.. ஹைய்யோ.. இன்னும் என்னவெல்லாம் யோசிக்கப்போறீங்க மிஸ்டர். ச்சின்னப்பையன்?
அவ்வ்வ்....
ஏதோ கோடுனு சொன்னிங்களே அந்த பதிவு இல்லையா இது....
ஹிஹி, செம நையாண்டி டாப் டென்.
One more:
எந்த ஒரு தருணத்திலும் லைசன்ஸ், ஆர்சி புக், இன்ஷூரன்ஸ் போன்ற தேவையற்றவைகளை சுமந்து திரிய வேண்டாம்.
சென்னை சாலைகள்ள ‘Lane'ஆ?? அப்படியே இருந்தாலும் அதயெல்லாம் யாரு ஃபாலோ பண்றாங்க! பள்ளம் வேணும்னா இருக்கலாம்!
:))
வாங்க இவன் -> ஹாஹா. முன்னாடி வெண்பூக்கு சொன்ன பதிலைப் பாருங்க...
ச்சீ போங்க பரிசல், வெக்க வெக்கமா வருது...
வாங்க விக்னேஸ்வரன் -> அதேதான் இது...
வாங்க அம்பி -> நன்றி.. ஆமாங்க. ரொம்ப முக்கியமான விஷயம் நீங்க சொன்னது....:-))
வாங்க வீரசுந்தர் -> அதைத்தாங்க நம்ம ஜிபிஎஸ்சும் சொல்லிச்சு. லேன் -லாம் பத்தி கவலைப்படாதேன்னு...:-)))
வாங்க பாலா -> நீங்க ஒரு சிரிப்பான் போட்டா, நூறு சிரிப்பான் போட்டா மாதிரி....:-)))
அட்டகாசமான கற்பனை..
எனக்கு மிகவும் பிடித்தது..
”போக வேண்டிய இடம் இன்னும் இரண்டு கி.மீ. தூரம் இருக்கும்போது - ஏன் வண்டியை நிறுத்தி கதவை திறந்தீர்கள், திரு.வெண்ணெய்?”
Excellent. Thanks for a laugh.
ஹி ஹி ஹி, இந்த பதிவை சிறந்தப் பதிவாகத் தேர்ந்தெடுத்து கானல்நீர், குருவி, திருப்பதி, பழனி பட dvdக்கள் பரிசளிக்கப் படுகின்றன.
டிஸ்கி : விலாசமோ, ஊரோ மாற்ற முயன்றால் நாங்கள் வைத்துள்ள ஒரு மார்கமான gps வைத்து கண்டுப்பிடிக்கப்பட்டு, ஒரு நாள் முழுக்க இந்தப் படங்களை பார்க்க பணிக்கப்படுவீர்கள்.
//9. போக வேண்டிய இடம் இன்னும் இரண்டு கி.மீ. தூரம் இருக்கும்போது - ஏன் வண்டியை நிறுத்தி கதவை திறந்தீர்கள், திரு.வெண்ணெய்?
//
அதென்ன திரு.??...ரொம்ப மரியாதையான GPS...
:-))))
// rapp said...
ஹி ஹி ஹி, இந்த பதிவை சிறந்தப் பதிவாகத் தேர்ந்தெடுத்து கானல்நீர், குருவி, திருப்பதி, பழனி பட dvdக்கள் பரிசளிக்கப் படுகின்றன.
டிஸ்கி : விலாசமோ, ஊரோ மாற்ற முயன்றால் நாங்கள் வைத்துள்ள ஒரு மார்கமான gps வைத்து கண்டுப்பிடிக்கப்பட்டு, ஒரு நாள் முழுக்க இந்தப் படங்களை பார்க்க பணிக்கப்படுவீர்கள்.
//
நான் இதை கண்டிக்கிறேன்!!..
கானல்நீர் ஒன்னு மட்டுமே
போதும்...அதுவே அயுள் தண்டனை...:-))))
வாங்க சூர்யா -> ரொம்ப நன்றி. எனக்கும் அது பிடித்திருந்தது. எழுதும்போதே சிரித்துக்கொண்டேதான் எழுதினேன்....:-)))
வாங்க அனானி -> நன்றி...
வாங்க ராப் -> அவ்வ்வ்வ்... ஏன் இந்த கொலை வெறி?...
வாங்க வழிப்போக்கன் -> ஹிஹி... ஏங்க? ஏங்க இப்படி?... என்னுடைய 'ப்ரொபைல்' படத்தை பாத்தீங்களா?... கானல் நீர் படத்தை தொடர்ந்து 100 தடவை கூட பாப்போம்ல... அவ்வ்வ்வ்...
சூப்பரு.... :))
வாங்க இராம் -> நன்றி...
//பாதசாரிகள் சாலையை கடக்குமிடம் வருகிறது. அவர்கள் வருகிறார்களென்றால், சற்று வேகமாக செல்லவும். அவர்கள் தங்கள் 'வீட்டில் சொல்லிவிட்டு வந்தார்களா' என்று கேட்கவும்.//
சூப்பரு...
டூ-வீலர்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டீங்க... இங்க வந்து ரொம்ப நாளாச்சோ :-))
எத சொல்றதுனே தெரியல எல்லாமே...ROTFL :-)))
*****************************
வலப்பக்கம் திரும்பவேண்டுமென்று நான் சொன்னால் உடனே வலது லேன்க்கு போக வேண்டாம், இடது புற லேன்க்கு வந்து வலது பக்கத்தில் நிற்கும் எல்லோருக்கும் முன்னாள் போய் லேசாக வலதுபுறம் திருப்பி நடு சிக்னலில் வண்டியை நிறுத்தி பச்சை விளக்கு எறிவதற்குள் வண்டியை நகர்த்தவும்
அவ்வ்வ். வெட்டி. எப்படி சரியா சொன்னீங்க?... இந்தியா வந்து 2+ வருசமாயிடுச்சு... அவ்வ்வ்வ்.....
நன்றிங்க ஸ்யாம்.. நல்லா சிரிச்சீங்கல்லே.. அது போதும் எனக்கு..
நன்றி சரவணகுமரன்...
LPG,CNG மாதிரி பெட்ரோல் தட்டுபாட்டுக்கு GPS ன்னு புதுசா ஏதாவது சொல்றீங்களோன்னு வந்து பார்த்தா....
இன்றைய வாகனம் ஓடுபவர்களின் தன்மையை மிகவும் சரியாக எழுதி இருக்கிறீர்கள்.மஞ்சள் கோட்டினை நம்மவர்கள் மதிப்பதை (!!) யும் எழுதி இருக்கலாமோ?
இங்கு அனைவரும் வாகனம் ஓட்ட பழகுவதே தனியார் பஸ் ஓட்டுபவர்களை பார்த்து தான் என்னும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா ?
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க.
வாங்க ராஜ நடராஜன் -> என்ன வாக்கியத்தை முடிக்காமெ விட்டுட்டீங்க... அவ்வ்வ்...
வாங்க பாஸ்கர் -> ஹிஹி. சென்னையில் சில பல வருஷங்கள் என் இரு சக்கர வண்டியில் சுத்தியிருக்கிறேன். குப்பை லாரி பின்னாடியும், தண்ணி லாரி சைடிலேயும் போய் குளித்திருக்கிறேன்.
வாங்க ராப் -> பாக்கறேங்க.
சூப்பரப்பூ.. இதோ என்னோடது சில
1. இது அவங்க ஏரியா. உள்ளே போகாதே.
2. பயணம் துவங்கும் முன் தயவு செய்து வீட்டில் சொல்லிவிட்டு வரவும்.
3. இந்தப் பகுதியில் முனியாண்டி விலாஸ் எதுவும் இல்லை.
4. வலப்பக்கத்தில் சின்ன வீடு வந்து விட்டது.
5. மறித்து நிற்கும் மாட்டு வண்டிக்காரரை திட்ட கீழ்கண்ட வார்த்தைகளில் ஒன்றை பயன்படுத்தவும்.
ஹாஹா... நன்றி சிறில்ஜி...
Post a Comment